Search This Blog

10.12.08

எங்களால் செய்ய முடியாததை வீரமணியார் சாதித்திருக்கின்றார்



முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் உரையாடக்
கூடியவர்களில் முதலிடம் பெற்றிருப்பவர் வீரமணி
தமிழ்நாடு மின்துறை அமைச்சர்
ஆர்க்காடு நா.வீராசாமி விளக்கவுரை


தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் உரையாடக் கூடியவர்களில் முதலிடம் பெற்றிருக்கக்கூடியவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி அவர்கள் கூறி பாராட்டி விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை - பெரியார் திடலில் 2.12.2008 அன்று மாலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திராவிடர் கழகம் எப்படி தலைநிமிரச் செய்திருக்கிறதோ...

இந்த நிகழ்ச்சியிலே வரவேற்புரை முடிந்தது. அறிமுகவுரை முடிந்தது. தலைமை உரை ஆற்றியதற்குப் பின்னால்தான் நான் நூலை வெளியிட்டு உரையாற்றியிருக்க வேண்டும். ஆனால் திராவிடர் கழகம் என்பது எல்லாவற்றையும் திருப்பிப் பார்த்து, எல்லா சமுதாய, சடங்குகளை எல்லாம் ஒழித்துக்கட்டி எப்படி இந்த நாட்டைத் தலைநிமிரச் செய்திருக்கின்றதோ, அதைப் போல இந்த நிகழ்ச்சியிலே திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்கள் உரையாற்றுவதற்கு முன்னாலே நான் உரையாற்றுவதற்கு நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

நேற்றே வீரமணி பிறந்த நாளை நாங்கள் கொண்டாடிவிட்டோம்

நேற்றைய தினமே நாங்கள் நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் வீரமணி அவர்களுடைய பிறந்தநாளை முதல்வர் கலைஞர் அவர்களுடைய இல்லத்திலே கொண்டாடிவிட்டோம் (பலத்த கைதட்டல்).

தலைவர் கலைஞர் அவர்களுக்கு நான் நினைவுபடுத்தியதை நம்முடைய பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் இங்கே நினைவுபடுத்தினார்கள்.

முதலமைச்சர் கலைஞரிடம் உரையாடக் கூடியவர்களில் முதலிடம் வீரமணி அவர்களுக்கே
உங்களிலே பல பேருக்குத் தெரியாது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும், மாலை நேரத்தில் 7 மணியிலேயிருந்து இரவு 9.30 மணி வரையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களுடைய இல்லத்திலேயிருந்து அன்றாட அரசியல் நிகழ்வுகள் மற்றும் பல்வேறு உரையாடல்கள் மற்றும் தமிழ் நாட்டினுடைய நிலைமை, அகில இந்திய நிலைமை இவைகளைப் பற்றி எல்லாம் உரையாடக்கூடிய ஒரு அய்ந்தாறு பேர்களில், நம்முடைய அன்பிற்குரிய வீரமணி அவர்கள் முதலிடம் பெற்றிருக்கிறார்கள்
என்பதை (பலத்த கைதட்டல்) மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஒரு பாதி கலைஞர் - மீதி பாதி வீரமணி

நாங்கள் எல்லாம் கலைஞர் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம்.
ஆனால் வீரமணி அவர்கள் தான் கலைஞர் அவர்கள் சொல்லிக்கொண்டே வருகின்ற நேரத்தில் ஒரு பாதி வரலாற்றை அவர் சொல்லி முடித்தால் மீதி வரலாற்றை இவர் முடித்து வைப்பார்கள் (பலத்த கைதட்டல்).

திராவிடர் இயக்க வரலாறு தெரிந்த இரண்டு பேர் யார்?

நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. திராவிடர் இயக்க வரலாறுகளைத் தெரிந்தவர்கள் இரண்டு பேர்தான்.

ஒருவர் கலைஞர். அடுத்து நம்முடைய வீரமணியார் (பலத்த கைதட்டல்). இங்கே நம்முடைய பூங்குன்றன் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். 36 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம்

ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆர்க்காடு நகரத்தில் குப்பன் அவர்கள் ஏற்பாடு செய்த திராவிடர் கழகத்தினுடைய மாநாட்டுப் பந்தல் அன்றைய எதிரிகளாலே தீக்கிரையாக்கப்பட்டு, அந்த செய்தி இரவு 10 மணிக்கு எனக்குத் தொலைபேசி மூலம் கிடைத்தது.

10.05 மணிக்கு நம்முடைய வீரமணியார் அவர்களுக்கு அந்தச் செய்தி கிடைத்தது. ராணிப்பேட்டை தங்கும் விடுதியில் அய்யா இருக்கிறார்.

நம்முடைய பகுத்தறிவுப் பகலவன் அய்யா அவர்கள் தன்னந்தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். சோகமாக இருக்கிறார் என்ற செய்தி கேட்டு ராணிப்பேட்டையில் அய்யா அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குப் புறப்படத் தயாரானேன்.
அடுத்த முனையிலே தொலைபேசியிலே வீரமணியார் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டார்கள்.

உங்களுக்குச் செய்தி கிடைத்ததா? என்றார்கள். கிடைத்தது என்றேன். என்ன செய்யப் போகிறீர்கள்? என்றார்கள். நான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னேன். நானும் பின்னாலேயே வருகிறேன் என்று சொன்னார்.

நான் சரியாக - 12 மணிக்கெல்லாம் ராணிப்பேட்டை பயணியர் விடுதிக்குச் சென்றேன்.
இந்த நூற்றாண்டிலும் இப்படி இருக்கிறார்களே!

அந்த பயணியர் விடுதியிலே அய்யா அவர்கள் தன்னந்தனியாக உட்கார்ந்து கொண்டு சோகமாக - அதே நேரத்திலே இந்த நூற்றாண்டிலேயும் திராவிடர் கழகத்தினர் கட்டிய பந்தலை சில கயவர்கள் கொளுத்தி விட்டார்களே என்ற வேதனையோடு இருந்த நேரத்திலே - அய்யா, நான் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் வீராசாமி வந்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் உட்காருங்கள், உட்காருங்கள் என்று சொல்லி என்னை உட்காரச் சொன்னார்.

அய்யா அவர்கள்முன் நின்று கொண்டே பேசினேன்


நான் அய்யா அவர்களுடைய முன்னாலே உட்கார்ந்து பழக்கமில்லை. நின்று கொண்டே பேசினேன். அதற்குள்ளே வீரமணியாரும் வந்து விட்டார்கள். அப்பொழுது சொன்னார், இந்த அளவிற்குப் பெரிய பந்தல் போட்டு, எழுச்சியான ஒரு மாநாட்டை குப்பன் ஏற்பாடு செய்திருக்கின்ற நேரத்தில் நம்முடைய எதிரிகள் இப்படிக் கொளுத்தி விட்டார்களே.

மாநாட்டை ஒத்தி வைத்து விடலாமா?

இந்த மாநாட்டை ஒத்தி வைத்து விடலாம். அடுத்த மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று அய்யா சொன்னார்கள்.

நான் சொன்னேன். அய்யா மன்னித்துக் கொள்ள வேண்டும். நாளை மாலை 5 மணிக்குத்தான் நம்முடைய திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலம் தொடங்க இருக்கிறது.

பெரியார் கேட்டார் - இது என்ன மாயாஜாலமா?

இப்பொழுது மணி இரவு பன்னிரண்டரை. 5 மணிக்குப் புறப்பட்டு ஊர்வலம் மாநாட்டுத் திடலை அடைவதற்குள்ளாக எப்படி பந்தல் இருந்ததோ - முகப்பு உள்பட அத்துணையையும் அப்படியே புதிதாக அமைத்துவிடுவோம் என்று சொன்னேன் (பலத்த கைதட்டல்).
அய்யா அவர்கள் கேட்டார்கள். இது என்ன மாயாஜாலத்திலே செய்யக் கூடியதா? என்று கேட்டார்கள். அய்யா பந்தல் போடக்கூடிய மிகத் தகுதி படைத்தவர்கள் வேலூரிலே இருக்கிறார்கள்.

பந்தல் போட்டாக வேண்டும்


இந்தப் பக்கத்திலே ஆரணியிலே இருக்கிறார்கள். சிலர் ஆர்க்காட்டிலேயும் இருக்கிறார்கள். செய்யாறிலும் இருக் கிறார்கள்.
இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒவ்வொரு பகுதியாகப் பிரித்துக் கொடுத்து எப்படியும் மாநாட்டை நடத்தியே தீரவேண்டும். அப்பொழுதுதான் எதிரிகளினுடைய கொட்டம் இந்த ஆர்க்காடு நகரத்திலே ஒடுக்கப்படும் என்று சொன்னேன் (பலத்த கைதட்டல்).
அய்யா யோசித்தார். வீரமணி அவர்களிடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். அவர் நம்பிக்கையோடு சொல்லுகிறார்.

தோழர்களே தவறாக நினைக்கக்கூடாது

அவர் சொன்னால் செய்வார். எதற்கும் மாநாட்டை ஒத்தி வைக்க வேண்டாம். நாம் நடத்தி விடுவோம் என்று சொன்னார்.

நண்பர்களே! திராவிடர் கழகத் தோழர்கள் மேடையிலே இருக்கின்றவர்கள், எதிரிலே இருக்கின்றவர்கள் யாரும் தவறாக நினைக்கக் கூடாது.

வட ஆர்க்காடு முழுவதும் தமிழகம் முழுவதும் பரவியது

பந்தல் எரியாமல் இருந்திருக்குமேயானால் எவ்வளவு கூட்டம் வந்திருக்குமோ - இந்தச் செய்தி வட ஆர்க்காடு மாவட்டம் முழுவதும் பரவி, தமிழ்நாடு முழுவதும் பரவி அந்த மாநாட்டிற்கு வந்த மக்கள் திராவிடர் கழக வரலாற்றிலே பொன்னெழுத்துக்களிலே பொறிக்கப்பட வேண்டிய அளவிற்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் (பலத்த கைதட்டல்) அங்கே திரண்டார்கள்.

என்னுடைய வாழ்க்கையிலே மறக்க முடியாத நிகழ்ச்சி


மாபெரும் மாநாட்டை நடத்தக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறதே! அது என்னுடைய வாழ்நாளிலே மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி (பலத்த கைதட்டல்).
தந்தை பெரியார் அவர்கள் பேசுகிற நேரத்திலே சொன்னார். இந்தப் பந்தலை கொடியவர்கள் எரித்து விட்டார்கள். இந்த மாநாட்டைத் தள்ளி வைக்கலாம் என்று சொன்னேன்.
இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீராசாமி அவர்கள்தான். இல்லை மாநாட்டை நடத்தியே தீருவோம் என்று சொன்னார். அதற்கு ஏற்றாற்போல் முன்பு இருந்த அந்தப் பந்தலைவிட, எழிலார்ந்த முறையிலே அமைத்து இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

மாநாட்டுப் பந்தலுக்கு அதிகமாக செலவு செய்து


இது அவர் எடுத்துக்கொண்ட முயற்சி இருந்தாலும், என்று சொல்லிவிட்டு, எப்பொழுதும் அய்யா அவர்களுக்குரிய பாணியிலேயே சொன்னார்.

எவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு குறுகிய காலத்திலே சில மணி நேரங்களிலே இந்த மாநாட்டுப் பந்தலை அதிகமாகச் செலவு செய்து அமைத்து இந்த மாநாட்டை நடத்துவதற்குப் பதிலாக, நான் பயணம் செய்து கொண்டிருக்கின்ற வேன் இருக்கிறதே - அது பழுதாகியிருக்கிறது.

ஒரு புதிய வேன், வாங்கித்தந்திருப்பாரேயானால்


பழமையானதாக இருக்கிறது. இதற்குப் பதிலாக ஒரு புதிய வேன் வாங்கித் தந்திருப்பாரேயானால், நான் இதைவிட மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று அய்யா அவர்கள் சொன்னார் (பலத்த கைதட்டல் - சிரிப்பு).

நண்பர்களே அந்த மாநாட்டுப் பந்தலிலேயே உட்கார்ந்திருந்த நான் உடனடியாக அய்ந்தாயிரம் ரூபாய் என்று எழுதி, புலவர் கோவிந்தனிடத்திலே மூவாயிரம் ரூபாய் பெற்று, அதற்குப் பிறகு நம்முடைய கழகத் தோழர்களிடத்திலே எல்லாம் பணத்தை வசூலித்து அந்த ஒரு வேன் வாங்குவதற்கு அய்யா அவர்கள் பேசி முடிப்பதற்குள்ளாக அந்தப் பணத்தையும் அய்யா அவர்களிடத்திலே கொடுத்து - (நீண்ட பலத்த கைதட்டல்) அய்யா நீங்கள் கேட்டீர்களே ஒரு புதிய வேன்,

புதிய வேனுக்குரிய தொகையும் இதோ...

அந்தப் புதிய வேனுக்கான கட்டணத்தையும் இதோ தயாராக வைத்திருக்கின்றோம் - பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன பொழுது, என்னை அப்படியே ஏற இறங்கப் பார்த்து விட்டு, இந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறாயா? என்று சொல்லி என்னைத் தட்டிக் கொடுத்தவர் தந்தை பெரியார் (பலத்த கைதட்டல்).

தொடர்ந்து இரண்டு நாட்கள் நாங்கள் தூங்காமல் இருந்த காரணத்தால் நான் மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வருகின்ற நேரத்திலே என்னுடைய ஓட்டுநர் கொஞ்சம் தூங்கி விட்டார்.
அதனுடைய விளைவு அந்தக் கார் ஒரு மரத்தின் மீது மோதி என்னுடைய தோளிலே அடிபட்டது. கொஞ்சம் சிறு காயம் தான். அந்தச் செய்தி எப்படியோ பத்திரிகையிலே வந்துவிட்டது.

தந்தை பெரியார் அவர்கள் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பணம் செய்திருக்கின்றார். அவர் சென்று விட்டுத் திரும்புகின்ற நேரத்திலே நம்முடைய அய்யா வீரமணி அவர்களுக்கு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு -வீராசாமியின் வீட்டிற்கு நான் போக வேண்டும்.

பெரியார் என் வீட்டிற்கு வருகிறார்

நீங்கள் அங்கே வந்து விடுங்கள் என்று சொல்ல, சரியாக காலையிலே எட்டரை மணிக்கெல்லாம் நான் அவதான பாப்பய்யாரோட்டிலிருந்து குடிபெயர்ந்து கீழ்ப்பாக்கம் பகுதியிலே குடியேறிய காலம். நான் குடியிருந்த வீட்டைத் தேடிக்கண்டு பிடித்து உள்ளே நுழைந்தார். அய்யா நுழைந்த பொழுது என்னாலே நம்ப முடியவில்லை. அய்யாவா? நம்முடைய வீட்டிற்கு வருகிறார் என்று ஓடிப்போய் அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு நாற்காலியிலே உட்கார வைத்தேன்.

நண்பர்களே! அப்பொழுது அய்யா அவர்கள் கையிலே ஒரு தினத்தந்தி பத்திரிகையைக் கொண்டு வந்திருந்தார்கள்.

எதற்காகக் கொண்டு வந்திருக்கிறார்கள்? என்பது எனக்குத் தெரியாது.
என் தாயார் அழுது கொண்டிருக்கின்றார்

அய்யா ஏதாவது சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டேன். எது இருக்கிறதோ கொடுக்கச் சொல்லுங்கள் என்றார். உடனே என்னுடைய மனைவியிடத்திலே சொல்லி ஒரு ஹார்லிக்ஸ் கொடுக்கச் சொன்னேன். அதற்குப் பிறகு என்னுடைய தாயார் அழுது கொண்டிருந்தார் பெரியாரைப் பார்த்து.

ஏனென்றால் என்னுடைய தாயார் அதிகமாகப் படிக்காதவர். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய தாயார் ஒரு ஆத்திகர்.

என்னுடைய தந்தையாரும் அப்படித்தான். எனவே தனது மகன் இந்த மாநாட்டை நடத்தி இப்படி ஒரு விபத்துக்கு ஆளாகிவிட்டானே என்ற வேதனையிலே அவர்கள் உட்கார்ந்து கொண்டு, அய்யா அவர்களுடைய முன்னாலே அழுது கொண்டிருந்தார்.

என் தாயாரிடம் பெரியார் சொன்னார்

அய்யா அவர்கள் - அவரைப் பார்த்து - உங்களுடைய தாயாரா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னேன். அவரை அழைத்துப் பக்கத்திலே உட்கார வைத்துக் கொண்டு சொன்னார்.
என்னம்மா, தன்னுடைய மகன் ஆர்க்காட்டிலே ஒரு மாநாடு நடத்தி கடவுள் இல்லை; கடவுள் இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று பேசிய காரணத்தினால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று நீங்கள் அழுகிறீர்களா? என்று கேட்டார். என்னுடைய தாயாராலே ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

அடுத்த விநாடியே தினத்தந்தியிலே ஆறாவது பக்கத்தைப் பிரித்துப் பார்த்து ஒரு செய்தியைப் படிக்கிறேன்; அதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள் என்று சொல்லி, நேற்று திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கச் சென்ற கணவனும், மனைவியும் இரண்டு குழந்தைகளும் (பலத்த கைதட்டல்) வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு, கீழே அவர்கள் இறங்குகின்ற நேரத்திலே கார் விபத்துக்குள்ளாகி நான்கு பேருமே இறந்து விட்டார்கள் என்ற ஒரு சோகச் செய்தி பத்திரிகையிலே வந்திருக்கிறது.

அதைப் பார்த்து நீங்கள் ஆறுதல் அடையுங்கள். கடவுள் இல்லை என்று சொன்னதற்காக உங்கள் மகன் பிழைத்து விட்டான் (பலத்த கைதட்டல்).

கடவுள் இருக்கிறார் என்று நம்பிச் சென்றவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டார்கள். எனவே மன ஆறுதல் அடையுங்கள் என்று என் தாயாருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, அய்யா அவர்கள் வந்த அந்த நிகழ்ச்சியை என் வாழ்நாளிலே என்றுமே மறக்க மாட்டேன் (பலத்த கைதட்டல்).

---------"விடுதலை" 7-12-2008 - ...............தொடரும்



எங்களால் செய்ய முடியாததை தலைவர்
வீரமணியார் செய்து சாதித்திருக்கிறார்
தமிழக மின்துறை அமைச்சர் நா.வீராசாமி பாராட்டிப் பேச்சு


எங்களால் செய்ய முடியாததை வீரமணியார் செய்து சாதித்திருக்கின்றார் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார். தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி அவர்கள் 2.12.2008 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் .ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அய்யாவின் அடிச்சுவட்டில் 90 சதவிகிதம் படித்துவிட்டேன்


இன்று இந்த விழாவினுடைய நாயகரைப்பற்றி நான் சொல்லவேண்டும். நம்முடைய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் எழுதிய நூல் முதல் பாகம்தான் இங்கே குறிப்பிட்டதைப்போல 1933 ஆம் ஆண்டில் தொடங்கி 1971-ஆம் ஆண்டுவரையில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள், அவர் பள்ளியிலே படித்தது - கல்லூரியிலே படித்தது என்று ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி, அவ்வளவையும் ஏறக்குறைய 368 பக்கத்திலே கொண்டு வந்திருக்கின்றார்கள்.

நேற்று கொடுத்த புத்தகத்தை ஏறக்குறைய 90 சதவிகிதத்தை நான் படித்துமுடித்து விட்டேன். அதைப்பற்றி பேசுவதற்கென்று நம்முடைய அருள்மொழி அவர்கள் இருக்கின்ற காரணத் தினாலே அந்த செய்திக்குள்ளே நான் போகவிரும்பவில்லை. ஆனால், வீரமணியாருக்கு நாம் 76-ஆவது ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடுகின்றோம்.

1976 -ஆம் ஆண்டு நெருக்கடி காலத்தில்

என்னுடைய நினைவு எங்கே போகிறதென்றால் 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அவசர காலச் சட்டம் அமலில் இருந்தபொழுது தி.மு.க. ஆட்சிக் கலைக்கப்பட்டு அன்று இரவு முதன் முதலிலே தமிழ்நாட்டிலே கைது செய்யப்பட்டவன் நான்.
அதற்கு பிறகு பலபேர் கைது செய்யப்பட்டு சென்னை சிறைச்சாலையிலே 150 பேர் அடைக்கப்பட்டார்கள். அதிலே ஒருவர்தான் குணசீலன் என்பதை குறிப்பிட்டேன். அப்படி கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு உள்ளே வந்தவர்களிலே நம்முடைய அன்பிற்குரிய வீரமணியார் அவர்களும் ஒருவர். நம்முடைய அன்பிற்குரிய சம்பந்தம் அவர்களும் ஒருவர்.

நாங்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபொழுது

ஆக, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள், ஜனசங்கத்தைச் சார்ந்த தோழர்கள் எல்லாம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எங்களை மட்டும் தனியாகப் பிரித்து பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வித்யாசாகர் என்ற ஜெயில் சூப்பிரண்டெண்டு கைதிகளை விட்டு கடுமையாக ஒவ்வொரு அறையிலிருந்த ஏழு, எட்டு பேரையும் வெளியே வரச் சொல்லித் தாக்கினார்கள்.

வீரமணியாரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தான்

அதெல்லாம் பழைய கதை. நான் முழுவதும் சொல்ல விரும்பவில்லை.. ஆனால் நண்பர்களே உங்களில் பலபேருக்குத் தெரியாது. வீரமணியாரை ஒரு வார்டன் பூட்ஸ் காலால் உதைத்தபொழுது அவர் ஒரு பத்து அடி தள்ளி அங்கேபோய் விழுந்தார். சம்பந்தத்தை அடித்தபொழுது அப்படியே கீழே விழுந்தார். அந்தக் காட்சிகளை எல்லாம் கண்ணாலே கண்டவர்கள். நான் ஏன் இதைச் சுட்டிக்காட்டுகிறேன் என்றால், அந்த நிகழ்வு நடந்து 32 ஆண்டுகள் ஆகின்றன.

நாங்கள் இறந்து 32 ஆண்டுகள் ஆகியிருக்கும்

எங்களோடு இருந்த சிட்டிபாபு இறந்துவிட்டார். பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். அப்படி எங்களுக்கும் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டிருக்குமேயானால், வீரமணியாரோ, சம்பந்தமோ - சம்பந்தம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

நாங்கள் எல்லாம் இறந்து 32 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், அவர் வாழ்கிறார் என்று சொன்னால் பெரியார் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வதற்காகத்தான் வாழுகிறார் என்று நான் நினைக்கிறேனே தவிர வேறு ஒன்றும் நான் நினைக்கவில்லை (பலத்த கைதட்டல்).

இந்தக் கழகம் என்ன ஆகுமோ?

அய்யா நம்மை விட்டுப் பிரிந்தபொழுது நான் நினைத்தேன். இந்தக் கழகம் என்ன ஆகுமோ என்று. ஏனென்றால் நான் வெளிப்படையாக சில கருத்துகளை பேச இருக்கின்றேன். அய்யா மட்டும் இல்லையென்று சொன்னால் இன்றைய தினம் தமிழ்நாட்டிலே சூத்திரர்கள் என்று சொல்லக்கூடிய நாமெல்லாம் இந்த நிலைக்கு வந்திருப்போமேயானால், நான் ஓர் அமைச்சராக ஆகியிருப்பேனா? அல்லது தம்பி பரிதி ஓர் அமைச்சராக ஆகியிருப்பாரா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சிக்கு வந்திருக்குமா? என்பதெல்லாம் ஒரு கேள்விக் குறிதான்.


எந்தச் சூத்திரனைப் படிக்கக் கூடாது என்று சொன்னார்களோ?

ஏனென்றால் சூத்திரன் படிக்கக் கூடாது, சூத்திரனுக்கு படிப்பே வராது என்று இருந்த அந்தக் காலத்திலே அய்யா அவர்கள் தோன்றினார்கள். எந்தச் சூத்திரனுக்குப் படிப்பு வராது என்று சொல்லிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் தமிழகத்திலே எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பிலே 1100 இடங்களிலே ஒரு மாணவன் 300 மதிப்பெண்களுக்கு 299.19 மதிப்பெண் பெற்றான். அவன் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டால் - ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவன் (பலத்த கைதட்டல்).

இன்று பார்ப்பனர்களைவிட அறிவில் - ஆற்றலில்

நம்முடைய ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்னாலே கூட நான் இதைக் குறிப்பிட்டேன். இப்படி தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் இன்று பார்ப்பனர்களைவிட படிப்பிலே ஆற்றலிலே எல்லாத் துறைகளிலேலேயும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு விதை போட்ட ஒருவர்தான் தந்தை பெரியார் (பலத்த கைதட்டல்). அவர் இல்லையென்றால் நாம் யாரும் இல்லை நாம் இருக்கலாம் - மனிதர்களாக இருக்கமுடியாது.

அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு

மனித சமுதாயமாக நாம் நடமாடியிருக்க முடியாது. அடிமைகளாகத்தான் இருந்திருப்போம். எப்படி இன்றைக்கு நம்முடைய முதலமைச்சரே கூட அருந்ததியர் என்ற ஒரு இனத்தை அவர்களுக்கு ஆதிதிராவிடர்களில் இருக்கக் கூடிய இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்று ஒரு முடிவெடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அமைச்சரவையிலே விவாதித்து, நம்முடைய ஓய்வுபெற்ற நீதியரசர் அவர்களிடம் அந்தக் கோப்புகளை கொடுத்து இதற்குரியவைகளை ஆவன செய்யுங்கள் என்று கேட்டபொழுது அவர் அந்த மக்கள் தொகையை எல்லாம் கணக்கெடுத்து - ஆக எவ்வளவு பெரிய கடினமான வேலை என்பதை அவர் காட்டியபொழுது எங்களுக்கு புரிந்தது.

மூன்று சதவிகிதம் கொடுக்கலாம்

இந்த இனத்தைச் சேர்ந்த பதினாறு லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு 2.2 சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு வருகிறது. அவர்களுக்கு மூன்று சதவிகிதமாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று அறிவித்தவர் நம்முடைய நீதியரசர் ஜனார்த்தனம் அவர்கள் (கைதட்டல்).

இப்படிப்பட்ட ஆட்சியில்தான் புரட்சி

நான் கேட்கிறேன் - இப்படிப்பட்ட புரட்சிகள், இப்படிப் பட்ட சாதனைகள் இன்று கலைஞராலே நடத்த முடிகிறது. கழக ஆட்சிகளாலே செய்ய முடிகிறது என்று சொன்னால் அடிப்படையே தந்தை பெரியார் அவர்கள்தான்! (பலத்த கைதட்டல்).

அவர் விட்டுச் சென்ற பொழுது, இந்த இயக்கம் என்ன ஆகப் போகிறதோ என்று நினைத்தேன். நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான். இந்த இயக்கம் என்ன ஆகப்போகிறதோ - என்று எண்ணிய நேரத்தில் அன்னை மணியம்மை வந்தார்கள். இந்த இயக்கத்தை நான் காப்பாற்றுவேன் என்று சொன்னார்கள் - காப்பாற்றினார்கள்.

அண்ணா சாலையில் கலைஞருக்குச் சிலை

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு அண்ணா சாலையிலே ஒரு சிலை வைத்தார்கள். தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்தார்கள். அவர்களும் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு யார்?

அதற்குப் பிறகு யார்? என்ற கேள்வி எழுந்தபொழுதுதான் வீரமணி அவர்கள் இந்த இயக்கத்திற்குப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர் இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவார் என்று திராவிடர் கழகத்தாலே முடிவெடுக்கப் பட்டு அறிவிக்கப்பட்டது.

82 ஆயிரம் கிளைக் கழகங்கள்

நான் மகிழ்ச்சியோடு சொல்லுகின்றேன். நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்துகிறோம். ஒரு கோடியே மூன்று லட்சம்பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் . 82 ஆயிரம் கிளைக் கழகங்கள் இருக்கின்றன. அய்ந்து முறை கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்துவிட்டார்கள். நான்கூட மூன்றாவது முறையாக அமைச்சராக ஆகியிருக்கின்றேன்.

எங்களால் செய்ய முடியாததை வீரமணியார் சாதித்திருக்கின்றார்


ஆனால், வெட்கத்தோடு சொல்லுகின்றேன். எங்களால் செய்ய முடியாததை வீரமணியார் செய்து சாதித்திருக்கிறார் என்பதை நான் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட வேண்டும் (பலத்த கைதட்டல்).

பெரியார் பெயரால், மணியம்மை பெயரால் பல்வேறு கல்விக் கூடங்களை அமைத்து, கல்லூரிகளை அமைத்து, இன்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமே ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அது வீரமணியாருடைய சாதனையே தவிர, வேறு யாருடைய சாதனையும் அல்ல (பலத்த கைதட்டல்).

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்

பார்ப்பனர்களை எதிர்த்து ஓர் இயக்கத்தை நடத்தக் கூடிய இந்த கழகம் நடத்துகின்ற ஒரு நிறுவனத்திற்கு - ஓர் அமைப்புக்கு பல்கலைக் கழகம் என்ற ஓர் அந்தஸ்து கிடைத்தது என்று சொன்னால் நண்பர்களே, அதை இன்றைய தினம் மத்தியிலே இருக்கக் கூடிய அர்ஜூன் சிங் இருக்கின்ற காரணத்தினாலே நமக்குக் கிடைத்ததே தவிர, வேறு யாராவது அமைச்சர்களாக இருந்திருந்தால், அதுவும் நமக்குக் கிடைத்திருக்குமா? என்பது ஒரு கேள்விக்குறிதான்.

கலைஞர் பரிந்துரை - அர்ஜூன் சிங் செய்தார்

ஆக இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே கலைஞர் பரிந்துரை செய்ய, அர்ஜூன் சிங் அதை ஏற்றுக் கொள்ள இன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் நடத்துகின்றார்கள். நடத்துகிறார்கள் என்று சொன்னால், சென்னை பல்கலைக் கழகத்தினுடைய துணைவேந்தர் இங்கே வந்திருக்கிறார். என்னை மன்னித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் நடத்துவதுபோல் எல்லாம் அவர்கள் நடத்துவதில்லை.

ஒரு சூத்திரனுடைய ஆட்சி எப்படி நடக்கிறது?


அவர்கள் அங்கே இருக்கக் கூடிய மாணவர்களுக்குப் பகுத்தறிவை ஊட்டுகிறார்கள் (பலத்த கைதட்டல்). பகுத்தறிவு மட்டுமல்ல, ஒரு சூத்திரனுடைய ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை ஒரு கலை நிகழ்ச்சி மூலமாக அங்கே படிக்கின்ற மாணவர்களிலே சிறந்த மாணவிகளை நாட்டியம் மூலமாக கருத்துகளை சொல்லக்கூடிய அந்த மாணவிகளை தேர்ந்தெடுத்து கலைஞர் அரசின் சாதனைகளை கலைவாணர் அரங்கத்திலே அவர் நடத்திக் காட்டிய பொழுது நாங்கள் எல்லாம் பிரமித்துப் போனோம்.

பெரியார் கல்வி நிறுவன
மாணவச் செல்வங்களின் ஆற்றல்


பெரியார் கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற மாணவ - மாணவிகளுக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கின்றதா? இவ்வளவு திறமை இருக்கின்றதா? கலைஞர் அவர்களுடைய ஆட்சியின் சாதனைகளை இவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் இருப்பதைப் பார்த்து வியந்துபோனோம்.

அடுத்து செங்கல்பட்டிலே நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிலே அதே நிகழ்ச்சியைக் கண்டோம். அந்த நிகழ்ச் சியைக் கண்ட பிறகுதான் கலைஞர் சொன்னார்:

திருச்சி முப்பெரும் விழாவில் அரங்கேற்றவேண்டும்

எப்படியாவது நாம் திருச்சியிலே முப்பெரும் விழா நடத்த இருக்கின்ற நேரத்திலே இதே பெரியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவச் செல்வங்களை கொண்டு அந்த நாட்டிய நாட கத்தை அங்கேயும் அரங்கேற்ற வேண்டும் என்று சொன்னார்கள். அதை வீரமணி அவர்கள் நிறைவேற்றிக் காட்டினார்கள் (பலத்த கைதட்டல்). அதற்குப் பிறகு நண்பர்களே! ஒருநாள் பேசிக் கொண்டிருந்த பொழுது, என்னிடத்திலே கலைஞர் அவர்கள் சொன்னார்கள் - இந்த நிகழ்ச்சியைத் தமிழ் நாடெங்கும் நடத்தவேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும்? அதைப்பற்றி வீரமணியாரிடத்திலே பேசுங்கள் என்று சொன்னார்.
நான் அவரிடம் கேட்டேன். செலவைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். வாகனப் போக்குவரத்து செலவிற்கு மட்டும் கொடுங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்.
முதலில் விழுப்புரம்; அடுத்து திருவண்ணாமலை
மழைக்காலம். இந்த மழைக்காலம் முடிந்தவுடனே விழுப்புரத்திலே ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அடுத்து திருவண்ணா மலையிலே ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் எல்லா மாவட்டங்களிலேயும் அந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
ஏனென்றால் கலைஞருடைய சாதனைகளை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இருக்கக் கூடிய பெரியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவ - மாணவிகளால்தான் எடுத்துச் சொல்ல முடியுமே தவிர, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருக்கக் கூடிய மாணவர்களாலோ அல்லது வேறு எங்கேயும் படிக்கின்ற மாணவ மாணவிகளாலோ எடுத்துச் சொல்ல முடியாது.

கைகள் கட்டப்பட்டிருக்கும்

சொல்ல நினைத்தால்கூட, அவர்களுடைய கைகள் கட்டப் பட்டிருக்கும்- வேறு சில காரணங்களுக்காக. நம்முடைய சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் இராமச்சந்திரன் ஆற்றல் மிக்கவர்; நம்முடைய கொள்கையிலே பற்றுள்ளவர். என்றாலும் கூட, அவருக்குப் பின்னாலே இருக்கக் கூடியவர்கள்.

அவர் ஒரு அடி எடுத்து வைத்தால் மறு அடி எடுத்து வைப் பதற்கு முன்னாலே இழுத்துப் பிடிக்கக் கூடியவர்கள்தான். எல்லா பல்கலைக் கழகங்களிலும் இருக்கிறார்கள். நல்ல வேளையாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலே அப்படி யாரும் இல்லாத காரணத்தினாலே இந்தச் சாதனைகள் தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

---------------"விடுதலை"- 8-12-2008 .....தொடரும்




'அய்யாவின் அடிச்சுவட்டில்' நூலை உருவாக்கித்தந்த
வீரமணியார் நூறாண்டு காலம் வாழவேண்டும்
தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு நா.வீரசாமி வாழ்த்துரை


- அய்யாவின் அடிச்சுவட்டில் நூலை உருவாக்கித் தந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியார் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று தமிழக மின்துறை அமைச்சர் நா.வீராசாமி அவர்கள் பாராட்டி வாழ்த்திப் பேசினார்.

தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி 2.12.2008 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் கி.வீரமணி பிறந்த நாள் நிகழ்ச்சியில் .ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சுயமரியாதைத் திருமணம் அண்ணா சட்ட வடிவம் கொண்டு வந்தார்

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தார். தந்தை பெரியார் அவர்கள் 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடி யாக வேண்டுமென்று காங்கிரஸ் ஆட்சியிலே எத்தனையோ முறை அண்ணா தீர்மானம் கொண்டு வந்து பேசினார். கலைஞர் வலியுறுத்தினார்.

காமராஜருக்கு ஆர்வம் இருந்தாலும்

ஆனால் அப்பொழுது காமராஜருக்கு உள்ளூர ஆர்வம் இருந்தாலும் கூட அன்று இருந்த நிலையிலே காங்கிரஸ் கட்சியாலே அந்த சட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை. அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடனே எந்தத் தந்தை பெரியார் அவர்களாலே இந்த நாட்டிலே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்று ஒரு தீர்ப்புக் கிடைத்ததோ அதை உடைத்தெறிந்து விட்டு, ஒரு சட்டம் கொண்டு வந்து சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.

இப்பொழுது போல் அப்பொழுது சட்டமில்லை

இப்பொழுது நாம் நடத்துகின்றோமே இதுபோன்ற திருமணங்களை நடத்த அப்பொழுது சட்டத்தில் இடமில்லை.
கலைஞர்தான் வரவேண்டும். பேராசிரியர் தான் வரவேண்டும். வீராசாமி வரவேண்டும். வீரமணி வரவேண்டும் - அவர்கள் தான் வரவேண்டும் என்பதில்லை.

யாராவது ஒருவர் முன்னின்று கணவன், மனைவி என்று சொல்லக்கூடிய அந்த மணமக்கள் மத்தியிலே இரண்டு மாலைகள் எடுத்துக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டாலே அந்தத் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்ற ஒரு வடிவத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் கொடுத்தார்கள். அது நிறைவேறியது.

பெரியார் கனவு - பெண்களுக்கு சொத்திலே சம உரிமை

அடுத்து நண்பர்களே! தந்தை பெரியாருடைய கனவு, பெண்களுக்கு சொத்திலே சம உரிமை. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
1989ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழகத்தினுடைய முதலமைச்சராகிறார். அவர் நினைத்துப் பார்க்கிறார்.

பெரியாரின் தீர்மானத்தை கலைஞர் படித்தார்

அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலே தந்தை பெரியார் கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தை படித்துப் பார்க்கிறார். எப்படி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததோ, அந்த வாக்குறுதிகளை அமல்படுத்தவேண்டும் என்று நினைக்கின்றோமோ அதைப்போல பெரியார் நடத்திய மாநாட்டிலே நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களைப் படித்துப் பார்த்து யோசிக்கிறார்.

கலைஞர் - பெண்களுக்காக சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தார்

பெண்களுக்கு சொத்திலே சம உரிமை. விளைவு - அது சட்டமாக்கப்பட்டது. நான் இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன். இந்த சட்டம் வருவதற்கு முன்னாலே பல வீடுகளிலே கேஸ் ஸ்டவ் வெடித்து பற்றி எரிந்தது.
என்ன காரணம்? வருகின்ற மருமகள் சொத்தோடு வரவில்லை. சீதனத்தோடு வரவில்லை. எனவே மாமியார் மருமகளை சாடிக் கொண்டே இருப்பார்.

அதனுடைய விளைவு - வேறு வழி தெரியாமல் அந்த மணமகள் ஸ்டவ்வை பற்ற வைக்கிறார் - வெடிக்கிறது. இது அப்பொழுது இருந்த நிலைமை.

1989க்குப் பிறகு ஸ்டவ் வெடித்ததா?

ஆனால் 1989க்குப் பிறகு எங்கேயாவது தாய்மார்கள் ஸ்டவ் வெடித்து சாகிறார்களா? என்று பார்க்கிறேன். இதுவரை செய்தியில்லை. இன்னும் ஒன்று ஸ்டவ் வெடித்து மாமியார் செத்தாரா என்று பார்த்தால் அப்படிப்பட்ட செய்தியும் இல்லை.

ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டியது யார்? என்று கேட்டால் கலைஞர் அவர்கள்தான். முடிவு கட்டுவதற்கு முன்னாலே இப்படி ஒரு தீர்மானத்தை வடிப்பதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது (கை தட்டல்).
இப்படி சொல்லிக் கொண்டு போனால் எவ்வளவோ பேசலாம். ஆனால் எனக்குப் பின்னாலே பலபேர் பேச இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே நம்முடைய சத்யராஜே வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் எழுச்சியைத் தந்தவர்

பெரியாராகவே காட்சி அளித்தவர். இந்தச் சமுதாயத்திற்கு பெரியார் என்றால் யார் என்று தெரியாத ஒரு சூழல் இருந்தது. அதை மாற்றி இவர்தான் பெரியார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழகத்திலே தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் எழுச்சியை உருவாக்கித் தந்தவர்.
அவர்கள் எல்லாம் பேச இருக்கிறார்கள். எனவே நான் பேசிக்கொண்டிருப்பதைவிட நான் இன்னும் ஆசிரியரைப் பற்றி நிறைய பேச வேண்டும்; நேரமில்லை.
நான் எட்டு மணிக்குத் தலைவரை சந்திப்பதாக சொல்லியிருக்கின்றேன். அவரைப் போய் நான் சந்திக்க வேண்டும்.

பெரியார் நம்மை ஏமாற்றிவிட்டார்

ஒன்றை மட்டும் நான் கேட்டுக் கொள்கின்றேன். தந்தை பெரியார் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்வார்கள் என்று எதிர்பார்த்தோம். நம்மை ஏமாற்றிவிட்டார்.

அய்யாவின் அடிச்சுவட்டில் நூல்

ஆனால் எந்தப் பெரியார் நம்மை ஆளாக்கினாரோ. எந்தப் பெரியார் இந்த இன மக்களை வாழ வைத்தாரோ, எந்தப் பெரியார் சூத்திரர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கித் தந்தாரோ அந்தப் பெரியாருடைய வழியில் இன்றைய தினம் அவருடைய, அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூலை உருவாக்கித் தந்த வீரமணியார் அவர்கள் 76-வது பிறந்த நாளில் அவர் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகின்றேன். நன்றி. இவ்வாறு அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி உரையாற்றினார்.


-------------------- 'விடுதலை" - 9-12-2008

5 comments:

bala said...

ஒரு சொறி நாய் இன்னொரு வெறி நாய்க்கு ஜால்ரா அடிக்கிறது வியப்பில்லையே.இதெல்லாம் ஒரு பதிவு.ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை வெறி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா கீழ்த்தரத்தின் எல்லைக்கே போய் விட்டார்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாலாவின் உளறல்களில் இதுவும் ஒன்று.

கீதையே முட்டாளின் உளறல்தானே. பார்ப்பானின் உளறல்தான் கீதை என்றும் சொல்லலாம்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார்களின் சாதனைகளைப் பார்த்தாலே எப்போதும் பார்ப்பனர்களுக்கு பொறாமைதான்.

அந்த பொறாமையின் வெளிப்பாடுதான் பார்ப்பன கும்பலில் ஒருவரான பார்ப்பன பாலாவின் உளறல்.

அலட்சியப்படுத்தி அடுத்து அடுத்து முன்னேறுவோம்.

bala said...

//சாதனைகளைப் பார்த்தாலே எப்போதும் பார்ப்பனர்களுக்கு பொறாமைதான்//
ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு ச்ட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
என்னது மானமிகு முண்டத்தின் சாதனைகளா?அப்படி ஏதும் இந்த மூஞ்சி செய்ததா ஒன்றும் இல்லையே.தாடிக்காரன் அதிகார பிச்சை எடுத்து அப்பாவி தமிழர்களை ஏமாற்றி சொத்து குவித்து இந்த மூஞ்சிக்கு விட்டு சென்று புண்ணியம் கட்டிக் கொண்டது.இதில் மானமிகு முண்டத்தின் சாதனை என்ன இருக்கிறது.?ஜால்ராவிலும் கேடு கெட்ட ஜால்ரா இந்த தமிழ் ஓவியா முண்டம்.இந்த மூஞ்சிகளைப் பாத்தா பொறாமையா வரும்?வீண் பதர்கள் என்ற வெறுப்பல்லவா வரும்?

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பானயும் பாம்பயும் கண்டால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பான அடி என்று ஒரு வடநாட்டு பழமொழி உண்டு.
அதைச் செய்ய வேண்டிய நிலைக்கு பார்ப்பன பாலா உருவாக்கிவிடுவார்.

தமிழனின் சாதனைகளை கண்டு பொறாமைப் படாமல் புகழவா செய்திருக்கிறது பார்ப்பனக் கூட்டம்.

பார்ப்பனின் வண்ட வாளங்களைத்தான் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தண்டவாளத்தில் ஏற்றி உண்மையை உலாவரச் செய்து விட்டாரே.

பார்ப்பானுக்கு முன் புத்தியும் கிடையாது. பின் புத்தியும் கிடையாது என்பது சரியாகத்தான் இருக்கிறது.