Search This Blog

24.6.09

சிங்களனுக்கு தமிழ்ப் பெண்கள் விருந்தா?




தமிழக எம்.பி.க்கள் இலங்கை சென்று தமிழர்களை காப்பாற்றிட வேண்டும்
வணங்காமண் கப்பல் பிரச்சினை - மத்திய அரசை எதிர்த்து மாபெரும் போராட்டம்
திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை


சிங்கள இராணுவத்தானுக்கு தமிழ் இனப் பெண்களை விருந்தாக்குங்கள்; தமிழ் ஆண்களைக் கொன்று கடலில் வீசுங்கள் என்று கோத்தபயா ராஜபக்சே சொல்லுவதா? தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு உடனடியாக இலங்கை சென்று அங்குள்ள தமிழர்கள் முகாமில் உள்ள தமிழர்களை காப்பாற்றிட வேண்டும். வணங்காமண் கப்பல் பற்றி தமிழக முதலமைச்சர் கேட்கிறார். மத்திய அரசு மனித நேயத்தோடு நடந்து கொள்ளவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் மத்திய அசுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை பற்றிய சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று (23.6.2009) திருச்சியில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் முக்கியச் செய்தி வருமாறு:

தனி ஈழத்தினை கேட்டது பிரபாகரன் அல்ல; தந்தை செல்வா! அதை அடைவதற்காக பிரபாகரன் ஆயுத போராட்டத்தை நடத்தினார். இலங்கையை தமிழ் மன்னர்கள் ஆண்டனர்
ஒரு காலத்தில இலங்கையில் மூன்றில் இரண்டு பகுதிதமிழ் மன்னர்களின் ஆளுகையில் தான் இருந்தது. பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னரே ஒரே இலங்கை ஆகியது.

1948 க்கு முன்பு இரு தேசிய இனங்களின் தாயகம் இலங்கை. சுதந்திரம் பெற்ற பின் பெரும் பான்மை சிங்களர். சிறுபான்மை தமிழர்களை நசுக்கத் தொடங்கினர். இலங்கை ஒரே நாடு என்றனர். இதன் ஆட்சி மொழி சிங்களம் தான் ஒரே ஆட்சி மொழி என்றனர். 1972 ஆம் ஆண்டுவரை 25 ஆண்டுகள் வரை தங்களுக்கென தனி நாடு கேட்டவர்கள் அல்லர்.

ஈழத்தமிழர்கள் வேறு வழி இல்லாததால் 1976 இல் தமிழ் அரசுக்கட்சியும் (தந்தை செல்வா) மலையகத் தமிழர்களும் சேர்ந்த தமிழர்களுக்குத் தனி நாடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினர். இக்கோரிக்கையை மக்களிடம் வைத்து 19 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது.

மொழி, இனம், நாடு இம்மூன்றும் அவர்களுடையது. அந்நிலையில் மாற்றம் இல்லாததனால்தானே தமிழ் ஈழப்-பிரச்சினை வெடித்தது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்

போர் முடிவுற்று, விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம் என்று சொல்லப்படும் நிலையில் அங்கு எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை நிலை என்ன? ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாயிற்றே! விடுதலைப்புலிகள் இயக்கப் பயம் _- அச்சம் இருக்கும் வரை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று தானே இராஜபக்சே சிங்கள அரசு கருதி இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

முகாம்களில் முள்வேலிகள், மின்சாரக் கம்பிகளுக்குள் அடிமைகளாக, ஒரு வேளை சோற்றுக்கும், குடிக்கத் தண்ணீருக்கும் கூட அல்லற்பட்டு ஆற்றாமலும், அழுத கண்ணீரோடு வாழும் அவலம் தொடர்கிறதே இது நியாயந்தானா? சிங்கள ராஜபக்சே அரசிடம் துளி அளவும் மனிதாபிமானம் இல்லையே. அகதி முகாமில் ஆடு மாடுகளைப் போல்
சொந்த மண்ணிலே எம் தமிழர்கள் அகதிகள் முகாமிலே ஆடுமாடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலை தொடரலாமா? பட்டினியால் சாகலாமா?

பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதும், இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி வந்த தமிழ் இளைஞர்கள் காணாமற்போவதும் சான்றுகளுடன் வெளியிடுகின்றன _ -உலக நாட்டு ஊடகங்கள்.

சிங்களனுக்கு தமிழ்ப் பெண்கள் விருந்தா?

இலங்கை இராணுவ அமைச்சர் கோத்தபயா இராஜபக்சே வெளிப்படையாகவே தமிழ் இளம்பெண்களை சிங்கள இராணுவ வீரர்களுக்கு விருந்தாக்குங்கள்; தமிழ் ஆண்களைக் கொன்று கடலில் வீசுங்கள் என்று சொன்னதாக செய்திகள் வருகின்றன.
போரின் இறுதிக் கட்டத்தில் ஈவு இரக்கமின்றி 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்றது.

வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த நடுநிலையாளர்களையும் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனே செல்ல வேண்டும்
தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், கனிமொழி போன்றோர் அடங்கிய குழுவொன்று மிக விரைவில் இலங்கைத் தமிழரின் முகாம்களுக்கு தங்குதடையின்றி சென்று பார்த்து உண்மை நிலை அறிந்து அங்கு சாவின் விளிம்பிலிருக்கும் மீதியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் பட்டினியாலும் நோய்நொடிகளாலும் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை சாவினின்று மீட்கத் தேவையான உணவு மருந்துகளை பன்னாட்டு அமைப்பின் மூலம் அனுப்பவேண்டும்.

இந்திய அரசு தமிழ் தெரிந்தவர்களை அனுப்ப வேண்டும்

இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழத்தமிழர்களில் இலங்கைக்கு திரும்பச் செல்ல விரும்-பாதவர்களை இந்திய குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யவும், சிரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய 2 லட்சம் தேயிலைத் தோட்ட மலையகத் தொழிலா-ளர்களுக்கு முன்பு கலைஞர் வேலை வழங்கியதைப் போல, வேலை வழங்க முன்வர வேண்டும். இலங்கையில் பேசுவதற்கு தமிழர்-அதிகாரிகளை இந்திராகாந்தி அனுப்பியது போல இந்திய அரசு தமிழ் தெரிந்த அதிகாரிகளை அனுப்ப முன்வர வேண்டும்.
மிகப்பெரிய போராட்டம்

வணங்காமண் கப்பலியே இருக்கக்கூடிய உதவிப்பொருள் வீணாக போய்விடக்கூடாது என ஆறரை கோடி மக்களின் பிரநிதியாக தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசுக்கு அனுப்பிய கோரிக்கைகளை மறுக்கிறார்கள். இந்த பிரச்சினைகளை முன்வைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் இனத்தின் தலைவர் கேட்கிறார் மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டாமா மத்திய அரசு?

தமிழர் பிரச்சினையைப் புரிந்து தமிழர்களையே இந்தியாவின் தூதுவராக இலங்கையில் நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்திய அரசின் வெளி உறவுகொள்கை இலங்கையில் தமிழின அழிப்புக்குத் துணைபோகும் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறிட வேண்டும்.
அரசியல் தீர்வு என்பது அவ்வளவு எளிதல்ல. ஆட்குக்குட்டியை விழுங்கும் ஓநாய் _ அதுபற்றிக் கேட்டால், அதனைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் என்பது போன்றதே!

இந்திய அரசு இலங்கையிடம் கேள்வி கேட்க வேண்டாமா?

ராஜீவ் _ ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லையே? அதுபற்றி இந்திய அரசு இலங்கை இராஜபக்சே அரசினைக் கேள்வி கேட்க வேண்டாமா?

நம் மக்களுக்கு நல்லவர் யார், கெட்டவர் யார் என தெரியாமல் வீழ்கிறார்கள். கலைஞர் ஆட்சியில் இருந்தால்தான் நாமெல்லாம் சாதிக்க முடியும்.

பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா, என்பதல்ல; போராட்ட வீரர்கள் ஒருபோதும் மறைவதில்லை. உணர்வு, இலட்சியம் தாகங்கள் மறையாது என தமது உரையில் குறிப்பிட்டு விளக்கவுரையாற்றினார்.

திருச்சி மாநகர் பகுதி கோகினூர் திரையரங்கம் அருகே இருந்து புறப்பட்ட பேரணியை தமிழ் தேசிய விடுதலை பேரவை நீலவானத்து நிலவன் துவக்கி வைத்தார். சாலைரோடு உறையூர் பாளையம் பஜார் வழியாக புத்தூர் கூட்ட மேடை வந்தடைந்த மாபெரும் பேரணியில் கருஞ்சட்டை தொண்டர்கள், விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தொண்டர்களுடன் ஏராளமான பொதுமக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

திராவிடர் கழக மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் கட்டட தொழிலாளர் சங்க தலைவர் பொன்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் தே.வால்ட்டர், ப.ஆல்பர்ட், சா.கணேசன் அ.செயராசு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை வை.சரவணன், த. புதியவன், கட்டட தொழிலாளர் சங்க சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் தமிழாதன், விவேகானந்தன், அமுதா இனியன், பெ.திருமாவளவன், பகலவன், எரிச்சி கலைமுரசு, குணவேந்தன், இரா.கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


--------------------"விடுதலை" 24-6-2009

7 comments:

குழலி / Kuzhali said...

அய்யய்யோ தமிழர் தலைவருக்கு நான்கு மாதம் கழித்து தான் கோத்தபாய ராஜபக்சே சொன்னது உரைத்ததோ? இல்லை கோபாலபுரத்திலிருந்து இப்போதுதான் உத்தரவு கிடைத்ததோ?

தமிழ் ஓவியா said...

//கோபாலபுரத்திலிருந்து இப்போதுதான் உத்தரவு கிடைத்ததோ?//

எனக்குத் தெரிந்து யாருடைய உத்திரவுக்கும் கட்டுப்பட்டவர் அல்ல தமிழர் தலைவர். சொந்தப்புத்தியை விட பெரியார் தந்த புத்தியால் செயல்படுபவர் அவர். சொந்தபுத்தி கூட கொஞ்சம் தடுமாறும் ஆனால் பெரியார் தந்த புத்தியில் செயல்படும் போது அதுக்கு வாய்ப்பில்லை தோழர் குழலி.

friend said...

தமிழ் மனத்தில் கள்ள ஓட்டுப் போட்டு தமிழை கேவலப் படுத்த வேண்டாம்

தமிழ் ஓவியா said...

தமிழ்மணம் விதிகளின் படியே வாக்களிக்கப்படுகிறது. ராமதாசையும் விஞ்சிவிட்டீர்களே நண்பா

Anonymous said...

kosuththollai thaangka mudiyala.

தமிழ் ஓவியா said...

அண்ட புளுகினி ஆகாச புளுகினிகள் புகழினியின் புளுகுக்கு முன் எம்மாத்திரம்

அஹோரி said...

பெரியார் இப்ப உசுரோடு இருந்தா ரொம்ப பீ பீ பீ ல் ல் ல் பண்ணுவார். கோபாலபுரத்துக்கு ஜிங் ஜாக் போடுறதே பொழப்பா நினைக்கும் ஜென்மங்கள். வெங்காயம் ...