Search This Blog

16.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- எகிப்து




எகிப்து

உலகின் மூத்த நாகரிகம் தவழ்ந்த நாடு எகிப்து. பொது ஆண்டுக் கணக்கு தொடங்குவதற்கு முன்பாக, 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நைல் நதிக்கரையில் மக்கள் வசித்து வந்தனர். சிறந்த எகிப்திய நாகரிகத்திற்குச் சொந்தமான நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என வரலாறு கூறுகிறது. பல அரச வழிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்த நாடாக இருந்த போதிலும் எகிப்தில் வணிகம் சிறந்திருந்தது. நாகரிகமும் கலாச்சார மும் பெருமையுடன் ஓங்கி உயர்ந்திருந்தது.

அந்நாட்டை ஆண்ட 18, 19ஆம் அரச வழியைச் சேர்ந்தவர்கள் பொது ஆண்டு கணக்குக்கு முன் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். அக்காலம் எகிப் தின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. பாரோ (PHARAOHS) மன்னர்கள் ஆட்சி செய்த காலம். அக் காலத்தில்தான் பிரமிடு கள் கட்டப்பட்டன. சித்திர எழுத்துகளைக் கொண்டு கமுக்கமான செய்திகளை எழுதும் பழக்கமும் (HIEROGLYPHICS) இந்தக் காலத்தில் விளங்கின. இன்றைக் குச் சுமார் 4500 ஆண்டு களுக்கு முன்பு கட்டப் பட்ட பிரமிடுகள், இன்றைக்கும் கட்டடப் பொறியியல் துறையில் பிரமிப்பை அளிக்கக் கூடியனவாக உள்ளன.

பொது ஆண்டுக்கு 669 ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியா விலிருந்து படையெ டுத்து வந்த அஸ்ஸிரி யர்கள், எகிப்தை வென்று ஆட்சி செய்தனர். 144 ஆண்டுகள் கழிந்தபின் 525ஆம் ஆண்டில், பாரசீகர்களின் படை யெடுப்பு நடந்து அவர் களின் ஆட்சி நடந்தது. பொது ஆண்டுக்கு முன் 332ஆம் ஆண்டில், மாசிடோனியாவிலிருந்து மகா அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்து எகிப்தை வென்றார். அலெக்சாண்டிரியா எனும் துறைமுக நகரைத் தம் வெற்றியின் சின்னமாக அமைத்தார்.

பொது ஆண்டுக் கணக்குக்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் அரசி கிளியோபாட்ரா இறந்த பிறகு, ரோமா னியப் படைத் தளபதி ஆக்டாவியா எகிப்தியப் படைகளைத் தோற்கடித்த பிறகு, ரோமப் பேரரசு எகிப்தின் மீது சொந்தம் கொண்டாடியது.

பொது ஆண்டுக் கணக்குக்குப்பின், 642ஆம் ஆண்டில், அரபியர்கள் எகிப்தை வென்றனர். பின்னர் 1250ஆம் ஆண்டு முதல் 267 ஆண்டுகளுக்கு மாம்லுக் அல்லது மாமெலுக் எனப்படும் அடிமை வமிசத்தினர் எகிப்தை ஆண்டனர். 1517இல் எகிப்து துருக்கியை ஆண்ட ஓட்டோ மான் வமிச ஆட்சியில் சேர்க்கப்பட்டது.

1798இல் பிரான்சின் நெப்போலியன் எகிப்தை வென்று மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் 1801இல் பிரிட் டிஷாரும் துருக்கியர் களும் சேர்ந்து தாக்குதல் நடத்திப் பிரெஞ்சுப் படைகளை எகிப்தை விட்டு விரட்டி அடித்தனர். மீண்டும் எகிப்து ஓட்டோமான் பேரரசில் நீடித்தது.

எகிப்தின் வரலாற்றில் சிறந்த நிகழ்வாகவும் திருப்பு முனையாகவும் அமைந்தது சூயஸ் கால்வாய் வெட்டப் பட்ட நிகழ்ச்சியாகும். 1859 முதல் பத்தாண்டுகள் உழைத்து இக் கால்வாய் 1869இல் வெட்டி முடிக்கப்பட்டது. 1882இல் இந்த வாய்க்காலின் கட்டுப் பாட்டைக் கைப்பற்றிக் கொண்டது பிரிட்டன். அத்துடன் எகிப்தையும் கைப்பற்றியது. 1914இல் எகிப்து நாடு பிரிட் டனின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டு எட்டு ஆண்டுக்காலம் நீடித்தது.

1922இல் எகிப்துக்கு விடுதலை வழங்கப் பட்டு பாத் எகிப்தின் மன்னரானார்.
14.5.1948இல் இசுரேல் என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டதற்கான அறிவிப்பு டெல் அவிவ் நகரில் இருந்து வெளியிடப்பட்டது. மறுநாளே, எகிப்து உள்ளிட்ட அய்ந்து அரபு நாடுகளின் படைகள் இசுரேல் நாட்டின்மீது படையெடுத்தன. ஆனால் தோற்கடிக்கப் பட்டன. போர் நிறுத் தத்திற்குப் பின்னர், நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப்பின் இசுரேல் நாட்டின் எல்லை வரையறுக்கப்பட்டது. ஆனாலும் காஜா (GAZA STRIP) எகிப்திடமே தங்கிவிட்டது.
1952இல் ராணுவப் புரட்சியைத் தலைமை யேற்று, கமால் அப் தெல் நாசர் நடத்தினார். அதன் விளைவாக முகமது நகீப் அதிபராகவும் பிரதமராகவும் ஆனார். 1953 நவம்பர் மாதத்தில் எகிப்தைக் குடியரசு நாடாக அறிவித்து முடியாட்சி முறையை ஒழித்தார். 1954இல் கமால் அப்தெல் நாசர் எகிப்தின் பிரதமர் ஆனார். 1956இல் அதிபரானார்.

26.7.1956இல் நாசர் எடுத்த நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தையும் கண்டனத்தையும் ஒருங்கே கவர்ந்தது. சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி ஆணையிட்டார். அதன் வருமானத்தின் மூலம் அஸ்வான் அணையைக் கட்டத் திட்டமிட்டார். கால்வாயை மூடி, பெட் ரோல் ஏற்றி வந்த கப்பல்களைச் சிறைப் பிடிக்கும் செயல் நடக்கும் என பிரிட்டனும் பிரான்சும் பயந்தன. அதனால் 1956 அக்டோபரில் பிரிட்டன், பிரான்சு, மற்றும் இசு ரேல் ஆகிய நாடுகள் சேர்ந்து எகிப்தின்மீது போர் தொடுத்தன. 22.12.1956இல் அய்.நா. படைகள் தலையிட்டு பிரிட்டன், பிரான்சு நாடுகளின் படைகளைத் திருப்பி அனுப்பின. இதனால், எகிப் துக்கும் அதன் அதிபர் நாசருக்கும் பெருமையும் புழும் கூடியது.

1970 செப்டம்பரில் அதிபர் நாசர் மறைந்தார். துணை அதிபராக இருந்த அன்வர் அல் சதாத் அதிபரானார். 1971இல் எகிப்து நட்புறவு ஒப்பந்தம் ஒன்று சோவியத் நாட்டுடன் செய்து கொண்டார் சதாத். அதே ஆண்டில் மிக உயரமான அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது. அதன் வாயிலாக எகிப்தின் பாசனம், வேளாண்மை, தொழில் வளம் எல்லாமே சிறந் திடும் நிலை உருவா னது. 1973 அக்டோபர் 6ஆம் நாள் யூதர்களுக்குப் புனித நாள். யோம் கிப்புர் எனும் நாள். அந்த நாளில் யூதர் களின் நாடான இசுரேல் மீது எகிப்தும் சிரியாவும் சேர்ந்து தாக்குதல் தொடுத்தன. போரின் முடிவாக இசுரேல் எகிப்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 18.1.1974இல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

1975 ஜூனில் சூயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது. 1967 சண்டையின்போது மூடப்பட்ட கால்வாய் 8 ஆண்டுகள் கழித்துத் திறக்கப்பட்டது. 1977இல் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்தன. யூத நாடான இசுரேலை அங்கீகரிக்கும் முதல் அரபு நாடாக, எகிப்து செயல்பட்டது. அதிபர் அன்வர் சதாத் இசு ரேல் நாட்டுக்குப் போனார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசித் திரும்பினார். 1978 செப்டம்பரில் இரு நாடுகளும் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இசுரேலுடன் அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொண்டதை விரும்பாத, ஏற்காத சக்திகள் அன்வர் சதாத்தைக் கொன்று விட்டனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப் பின் படி, ஹோஸ்னி முபாரக் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக் கப்பட்டுப் பதவியில் உள்ளார்.
10 லட்சத்து ஓராயிரத்து 450 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாடு பெரும்பாலும் பாலைவன மேடான பரப்புகளைக் கொண்டது. இதன் மக்கள் தொகை 7 கோடியே 90 லட்சம் ஆகும். சன்னி முசுலிம் கள் 94 விழுக்காடு உள்ளனர். கிறித்துவர்கள் முதலியோர் 6 விழுக்காடு உள்ளனர். ஆட்சி மொழியாக அரபி மொழி உள்ளது. இங்கிலீசு, பிரெஞ்ச் பேசினால் மக்கள் விளங்கிக் கொள்வார்கள். ஆண்களில் 68 விழுக்காடும் பெண்களில் 47 விழுக்காடும் படிப்பறிவு பெற்றவர்கள். நாட்டின் அதிபராக முகமது ஹோஸ் முபாரக்கும் பிரதம ராக அகமது நஜீபும் உள்ளனர்.

-------------------"விடுதலை" 15-6-2009

3 comments:

அக்னி பார்வை said...

நல்ல முயற்ச்சி சார், என்ன நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடிவதில்லை....

துபாய் ராஜா said...

Naan Vaalum Nalla Naadu Egypt.

Namathu Indiayavai Polavae Kalacharamum Kondathu.

Indiyargalai Polavae Uruva otrumai Konda Makkal.

Indiyargalai migavum mathippargal.

Indiya Cinimakkalai virumbi Parpaargal.Perumbanmaiyana Veedugalil Indian Movie channel thaan ( ZEE Avlan )24 mani neramum odum.

Amitabbachan Egypt Makkal anaivaralum virumbapadum oru Super Hero.Neengal oru egypthiarai Santhithaal Amithabai Patri kurainthathu arai mani neramavathu Paesuvargal.

Gandhiji,Nehruji,Indiraji ellam inghu miga Prabalamanavargal.

Indiyavai Polavae vivasayathai nambi vaalum Perumpanmai Makkal.

Egyptl irunthalum Indiyavil irupathai Ponrae ennam thonrum.

innum evalavo irukinrana Egyptai Patri eludha.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர் அக்னி

$
துபாய் ராஜா