Search This Blog

9.6.09

பிரபாகரன் இறந்தாரா- இல்லையா? உண்மையா? பொய்யா?


இந்தியா இலங்கைக்கு செய்ததென்ன?
இந்தியா இலங்கைக்கு அளித்த 500 கோடி ரூபாய் என்ன ஆனது?

ஈழத்தமிழர்களை காப்போம் பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் கேள்வி


இலங்கையிலே போர் முடிந் துவிட்டது என்று ராஜ பக்சே அறிவித்தாலும்,
தமிழர்களின் மரணத்திற்கு முடிவு ஏற்பட வில்லை என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டி யன் கூறினார். இந்திய அரசு இலங்கைக்கு செய்தது என்ன? இலங்கைக்கு இந்தியா அளித்த 500 கோடி ரூபாய் என்னானது? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வினா எழுப்பி
னார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:

ஈழத்தமிழர்கள் பிரச்சினையை மக்களிடையே விளக்க வேண்டும். நாடு தழுவிய விழிப் புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பிலே நாம் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

அடுத்த பொதுக் கூட்டம் வரும் ஜூன் 13 ஆம் தேதி மதுரையிலே நடைபெறும். இப்படி நாடு தழுவிய அளவிலே இந்த பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். அதன் மூலம் நம் உள் ளத்தில் கனன்று கொண்டிருக்கின்ற எண்ணங்களை எடுத்துச் சொல்லி மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தத் தான் இந்த சைதை பகுதியிலே முதல் பொதுக் கூட்டம் நடைபெறு கின்றது.

அடுத்தகட்ட பணி

ஈழவிடுதலைக்கான போர்முனை மழுங்கி விடக்கூடாது. அடுத்த கட்டப் பணிகளில் நம்மை ஆயத்தபடுத்தத் தான் நாம் கூடியிருக்கின்றோம். சிலர் ஈழத்தமிழர் பிரச்சினையை அரசி யலில் பயன்படுத்தி அந்த உணர்வு சிதைந்து போகக்கூடிய அளவுக்கு பலிகடா வாக்கியிருக் கிறார்கள். ராஜபக்சே தான் நமக்கு முதல் எதிரி ராஜபக்சேவுக்கு துணை நிற்கின்றவர்கள் நமக்குப் பகைவர்கள். 25 ஆண்டுகளாக ஈழ விடுதலை களத்திலே நின்று பிரச்சாரம் செய்த திருமாவளவனை ஒதுக்குகிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக ஒரு நாள் நாடகம் ஆடிய ஜெயல லிதாவை நம்புகிறார்கள். நமது ஆசிரியர் மீது நம்பிக்கை இல்லை. அம்மா மீது நம்பிக்கை வைக்கிறார்கள். பெரியார் திடல் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் போயஸ் தோட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது அவர்களுக்கு. இலங்கையிலே 3 இலட்சம் அப்பாவித் தமிழர்கள் அகதிகள் முகாமிலே சிக்கித் தவிக்கிறார்கள் அவர்களைப் பாதுகாப்பது மனிதாபிமானக் கடமை அல்லவா? உலக நாடுகள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த கருத்துகளை எல்லாம் எடுத்துச் சொல்லத் தான் வாழ்வுரிமை இயக்கம் இன்றைக்குத் தேவைப்படுகிறது.

இலங்கைக்கு ஆதரவாக இந்திய ரா

இந்தியாவினுடைய உளவு நிறுவனமான ரா (Raw) என்ற அமைப்பு இன்றைக்கு தமிழ் சமூகங்களுக்கிடையே ஊடுருவி சிதைவை ஏற்படுத்துகின்ற பிளவை ஏற்படுத்துகின்ற காரியத்தை துணிந்து செய்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். மறைந்தார் என்ற செய்தியை நிர்பந்தப்படுத்தி அச்சுறுத்தி வெளியிட வைத்திருக் கிறது. ராஜபக்சேவின் செயல் பாட்டிற்கு ரா பின்னணியாக இருந்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கும்

மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழவிடுதலை போர் மீண்டும் வெடிக்கும். ஒற்றைத் துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் விடுதலை புலிகளினுடைய இயக்கம். 10 பேர் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது தான் விடுதலைப் புலிகளினுடைய இயக்கம். ஆக மீண்டும் அதே எழுச்சி ஏற்பட்டு மேதகு பிரபாகரன் தலைமையில் விடுதலைப் போர் தொடரும். மகத்தான வீரம் செறிந்த மாமனிதர் தான் மேதகு பிரபாகரன்.

விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுதங்கள் பறிபோயிருக்கலாம். களங்கள் பறி போறி யிருக்கலாம். ஆனால் அவர்களுடைய வீரம் உலகத்தை வியக்க வைத்திருக்கிறது.
தமிழினத்தை அழிக்கின்ற சிங்களவனை எண்ணும் பொழுது நமது அடிவயிறு பற்றி எரிகிறது.
உலகில் பத்துகோடி தமிழர்கள் இருந்தும் தமிழருக்கென்று ஒரு நாடு இல்லையே!

பான் கீ மூன் கண்டித்திருக்க வேண்டாமா?

அய்.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வந்து தமிழர்கள் அகதிகள் முகா மில் அடைக்கப்பட்ட கொடுமையை நேரில் பார்த்துவிட்டுச் சென்றவர் ஆயிற்றே. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஆனால் அய்.நா பேரவை இந்தக் கொடுமையை கண்டித்திருக்க வேண்டாமா?

பாகிஸ்தான் நாடு சொல்லுகிறது - நாங்கள் கொடுத்த ஆயுதங்களால் தான் இலங்கை வெற்றி பெற்றது என்று.

அதே போல சீன நாடு சொல்லுகிறது - நாங்கள் கொடுத்த ஆயுதங்களால்தான் இலங்கை வெற்றி பெற்றிருக்கிறது என்று.

ஆனால் இந்தியாவும் சொல்லுகிறது எங்களுடைய உதவியால் தான் இலங்கை வெற்றி பெற்றிருக்கிறது என்று.


தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைந்திருந்தால் ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டிருக்குமே. எம் தமிழர்களை காப்பாற்ற முடியவில்லையே என்று மனம் வேதனைப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்ன சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது?

ஒரு தளபதி உடலையாவது காட்டமுடிந்ததா?

இனி உலகத்தமிழர்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான். அதற்கான போர் இன்னும் முடிய வில்லை.

ராஜபக்சே தற்காலிகமாக வெற்றி பெற்றி ருக்கலாம். ஆனால் மீண்டும் விடுதலைப்புலிகள் அந்தப் போரை முன்னெடுத்துச் செல்வார்கள்.

பிரபாகரன் இறந்ததாகக் காட்டிய சிங்களவனே! பிரபாகரன் குடும்பம் இறந்ததாக உன்னால் காட்ட முடிய வில்லையே ஏன்? மேதகு பிரபாகரன் படைகளைச் சேர்ந்த ஒரு தளபதியின் உடலையாவது உங்களால் அடையாளம் காண முடிந் ததா? காட்டியிருக்கின்றீர்களா? இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


பிரபாகரனின் தளபதிகள் அடுத்த கட்டப் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் உறுதியாக நம்புகின்றோம்.

இந்தியா இலங்கை அரசுடன் நடத்திய அனைத்து செயல்களைப் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை மூலமாக வெளிப்படுத்த வேண்டும். இந்தியா எடுத்த முயற்சி என்ன என்பதை அந்த அறிக்கை மூலம் கொண்டு வர வேண்டும்.

பிரபாகரன் இறந்தாரா- இல்லையா? உண்மையா? பொய்யா? என்பது பற்றி இந்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அய்.நா செயலாளர் பான் கீ மூன் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டது பற்றி வாய்திறக்கவே இல்லையே.

இந்தியா இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு கொடுத்த உதவி 500 கோடி ரூபாய் என்ன ஆனது? இது பற்றி விளக்க வேண்டும்.


இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


--------------------"விடுதலை" 9-6-2009

0 comments: