Search This Blog

17.6.09

இங்கே ஏது இந்துஸ்தான்?


இந்து மகா சமுத்திரமா?


இந்தியா என்று இந்நாட்டின் பெயரை வைத்து, உருவாக்கி, அழைத்து, அடிமைப்படுத்தி, ஆண்டனர் ஆங்கிலேயர்கள். நமக்கு நாமே எழுதி வைத்துக் கடைப்பிடிப்பதாக அறிவிக்கப் பட்டுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்தியா அதாவது பாரதம் என்று நாட்டுக்குப் பெயர் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முட்டாள்தனமான ஒரு புராணக் கதையின் கதாபாத்திரமான பரதன் ஆண்டான் என்று புளுகி வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவுக்கு இப்பெயரைச் சூட்டிக் கொண்டுள்ளனர். இந்தப் பெயரைப் பிரபலப் படுத்துவதற்காகப் பலவித முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றால், பாரதீய ஸ்டேட் வங்கி எனத் தமிழில், இந்தியில், மற்ற மொழிகளில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிலீசில் எழுதும்போது ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா என்று தான் உள்ளது. இந்திய மொழிகளில் பாரதம் வருகிறது.

அதுமட்டுமல்ல, அரசுத்துறையின் பெரும் நிறுவனங்களின் பெயர்களில் கூட பாரதத்தைத் திணித்திருக்கிறார்கள். பாரத் ஹெவி எலெக்டிரிகல்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் என்றெல்லாம் திணிப்பு வேலைகள் ஏராளம்.

ஏற்கெனவே இதைவிட மோசமான செயல்களையெல்லாம் செய்திருக்கிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அதன் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக ஒரு மதத்தின் பெயரை அரசு நிறுவனங்களுக்குச் சூட்டியிருக்கிறார்கள்.


ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், ஹிந்துஸ்தான் டெலிபிரின்டர், ஹிந் துஸ்தான் கப்பல் கட்டும் தளம் என்றெல்லாம் இந்தியாவின் பெயரை இந்து மதத்தின் பெயராக்கும் முயற்சிகள். இங்கே ஏது இந்துஸ்தான்? பாகிஸ்தான் இருக்கிறதே தவிர, இந்துஸ்தான் கிடையாதே எனக் கூறினார் தமிழர் தலைவர் வீரமணி.

இதுபோலவே மற்றுமொரு திட்டமிட்ட சதிச்செயல் நீண்டநாளாக நடக்கிறது. இந்தியாவின் தெற்கே இருக்கும் பெருங்கடல் இண்டியன் ஓஷன் என்று இங்கிலீசில் அழைக்கப்படுகிறது. இந்திய மாக்கடல் என்று இதனைத் தமிழில் அழைக்க வேண்டும். ஆனால், இந்து மகா சமுத்திரம் என்று வேண்டும் என்றே விஷமத்தனமாக எழுதிக் கொண்டு வருகிறார்கள். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களிலும் இந்து மகா சமுத்திரம் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.

திட்டமிட்ட வகையில் இந்துமதக் கருத்துகள், இந்துமதப் பெயர்கள் ஆகியவற்றைத் திணித்திடும் முயற்சி 60 ஆண்டுகளாக நடந்துவருகிறது. மெல்லக் கொல்லும் நஞ்சு ஏற்றப்படுகிறது. இது ஏதோ, பாஜ கட்சி ஆட்சியில் நடந்தது அல்ல. காங்கிரசுக் கட்சி ஆட்சியில் நடந்தவை. சாட்சாத் நேரு காலத்திலிருந்தே வழி வழியாகக் கடைப்பிடிக்கப்படும் மென்மையான மதவெறி - மென்மை, இந்துத்வா!

இது நீக்கப் படவேண்டும். இது எதிர்க்கப் படவேண்டும். இந்தத் தத்துவம் ஒழிக்கப் படவேண்டும். இல்லையேல் இதன் விளைவு வெட்டப்பட முடியாத அளவுக்கு வளர்ந்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டுவது பகுத்தறிவாளர்களின் கடமை.

*******************************************************************************


இணைவது எதற்காக?

மதவெறியர்கள் இரண்டுபேர் ஒன்றாகி இருக்கிறார்கள். ஜனதா கட்சியின் சு.சாமியும், பாரதீய ஜனதா கட்சியின் இல.கணேசனும் சேர்ந்திருக்கிறார்கள். சு.சாமி ஜனசங்கம் கட்சியைச் சேர்ந்தவர். இல.கணேசன் ஆர்.எஸ். எஸ்.அய்ச் சார்ந்தவர். ஜனசங்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கூறு. எனவே, இரண்டுபேரும் இணைந்ததில் எந்த வியப்பும் இல்லை.

இணைந்து என்ன செய்யப் போகிறார்கள்? எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இருவரில் சு.சாமி வைகைக்கரை (சோழவந்தான்)ப் பார்ப்பனர். மற்றவரான இல.கணேசன் காவேரிக்கரை (மயிலாடுதுறை) பார்ப்பனர். இந்த இரண்டு பார்ப்பனர்கள் அல்லாமல், 20 லட்சம் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்தால்கூட என்ன செய்யமுடியும்?
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்
என்பது குறள். கோடி எலிகள் கூடினாலும் பாம்பின் சீற்றத்தின் முன் காணாமற் போய்விடும் என்பதைப் போன்று எல்லாம் ஓடிவிடும். காரணம் - இது பெரியார் மண்.
100 ஆண்டுக் காலத்திற்கு முன்னேயே பார்ப்பனர் அல்லாதார் எழுச்சிக்கு வடிவம் கொடுத்துச் செயல்பட்ட, இயக்கம் தொடங்கிய மண். இங்கே பார்ப்பனர்கள் என்ன செய்துவிடத் துடிக்கிறார்கள்?

இவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் கிடைக்கும். பார்ப்பன ஏடுகள் பூதாகாரமாக்கிச் செய்திகள் போட்டுப் பெரிதுபடுத்தப் பார்க்கலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்கள் கையாண்ட யுக்தி அடியோடு தோற்றுப்போனதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்துத்வா கொள்கையைத் தமிழ்நாட்டில் பிரசங்கம் செய்ய இந்த இரண்டு தர்ப்பைப் புல்லர்களும் முன் வந்திருக்கிறார்களாம்! இந்து என்றால் திருடன் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிற மக்களிடம் இவர்கள் மாற்றிச் சொல்வார்களா?

இந்து என்ற பெயரே வெள்ளைக்காரன் வைத்தது என்பதை இறந்துவிட்ட சங்கரமடத் தலைவரே எழுதியிருக்கும் நிலையில், அதை இல்லை என மறுக்கப் போகிறார்களா?
ஆணாகிய பிரமனின் உடலில் நான்கு யோனிகள், அவற்றிலிருந்து ஜனித்தவர்கள் நான்கு வருண மக்கள் என்கிற நாற்றமடிக்கும் கதையை நம்பும்படிப் பிரச்சாரம் செய்வார்களா?
மதச்சார்பற்ற நாடு இந்தியா, எனப் பெருமை பேசும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக, நாட்டை இந்து மதச் சார்பான நாடாக ஆக்கிடப் பிரச்சாரம் செய்வார்களா?
இந்தப் பீடைகளே இங்கு சாத்திரங்கள் என்று கூறும் அளவுக்கு அசிங்கமான, ஆபாசக் களஞ்சியங்களை வழிகாட்டும் நெறிமுறைகள் கூறும் நன்னெறி இலக்கியங்கள் என்று பரப்புவார்களா?

ஆரியப் பார்ப்பனர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்ற பொய் கூறுவார்களா? அய்ந்தாயிரம் ஆண்டுக் காலமாக இந்நாட்டு மக்களை ஜாதியின் பேரால் அழுத்தி வைத்த கொடுமையை மறைத்து விடுவார்களா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம், பதில் ஆம், என்றால் சந்திக்கத் தயார்!
இல்லை என்பது பதிலாக இருக்குமானால் இரண்டுபேரும் சேர்ந்து கிழிக்கப் போவது என்கிற காமெடிக் கூத்தைப் பார்க்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்!

******************************************************************************

பாண்டவர்கள் கதைபற்றிப் பேசும் பாரதமும், ராமன் பற்றிப் பேசும் ராமாயணமும் இரண்டு இதிகாசங்கள் என்று இந்துத்வா கூறுகிறது. அதைத் தமிழ்நாட்டில் பரப்பிட இரண்டு பார்ப்பனர்கள் வருகிறார்கள் என்றால்.....

பாண்டவர்களின் விசுவாசத்தைச் சோதிக்க வந்த துர்வாச முனிவன் அவனது சீடர்கள் நூற்றுக்கணக் கானோர் ஆகியோரின் வயிற்றுப் பசியைத் தணிக்க ஒரே ஒரு சோற்றுப் பருக்கை தான் பயன்பட்டது என்ற புருடா அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதைப் பிரச்சாரம் செய்வார்களா?

பசியை அடக்குவதற்கு ஆண்டவன் அவதாரமான ராமனுக்கே ஒரு மந்திரம் கற்றுத்தரப்பட்டது என்கிற புளுகைப் புளுகித் தள்ளியிருக்கிறார்கள். இந்தப் புளுகைப் பிரச்சாரம் செய்வார்களா?
தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் (ஹார்டுவேர் ஸ்டோர் - என இரும்புக் கடையை நினைத்துக் கொள்ள வேண்டா) வேலை பார்த்தாகக் கூறப்படும் சு.சாமி யும் அவர் பார்ட்னரும், பாமர மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவார்கள்?

வரட்டும் இந்துத்துவாப் பிரச்சாரகர்கள்!

---------------------"விடுதலை"ஞாயிறுமலர் 13-6-2009

3 comments:

Unknown said...

then what you want call your country?fuck in you ass hole.son of pitch.

தமிழ் ஓவியா said...

அறிவூபூர்வமாக, நாகரிகமாக பின்னூட்டம் இடத்தரியாத sam என்பவருக்கு மறு பெயர் son of pitch என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தயவுசெய்து son of pitch என்ற உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யவும் sam .

அசுரன் திராவிடன் said...

எமுடைய நாடு திராவிட நாடடா சவுண்டி பார்பனர்களே ...இந்து என்றால் திருடன் ....நாங்கள் எதை திருடினோம் இந்துவாக இருக்க .....கொள்ளையடிக்கும் பார்ப்பர்னர்கள் தான் இந்துக்கள் ...அவர்களுக்கு தான் இந்துஸ்தான் .....எங்களுடை நாடு திராவிடஸ்தான் ....