Search This Blog

27.6.09

நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன் - பெரியார்


ம.வெங்கடேசன் என்ற நண்பர் ஒருவர் 2004 ஆம் ஆண்டு எழுதிய நூல் ஒன்றை (‘ஈ.வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’)தற்போது பார்ப்பன வலைதளத்தில் வலையேற்றியுள்ளனர். ம.வெங்கடேசன் என்ற அந்த நண்பர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவராம்.தாழ்த்தப்பட நண்பர் ஒருவரை வைத்து நூல் எழுதி பெரியாரை இழிவுபடுத்த வேண்டும் என்பது பார்ப்பனர்களின் சாம,தான,பேத தண்ட வழிமுறைகளில் இதுவும் ஒரு வழியாக அவர்கள் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த “வழி” பார்ப்பனர்களுக்கு “வலி”யாய் முடிந்தது என்பதே வரலாறு காட்டும் உண்மை. தன் கையைக் கொண்டே தன் கண்னைக் குத்திக் கொண்ட நண்பர் ம.வேங்கடேசனுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

“தாழ்த்தப்பட்ட சமூகத்தவனாகிய நான் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப்பற்றி எழுதலாமா என்ற கேள்வி எழும்பினால் அந்தக் கேள்வி வெறுப்பினால் எழுப்பப்பட்ட கேள்வியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தக் கேள்வியை விட்டுவிட்டு நான் ஆதாரம் இல்லாமல் எழுதியதாக யாராவது கருதினால் அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.” என்கிறார் வெங்கடேசன்.

தாழ்த்தப்பட்ட தோழர்கள் மட்டுமல்ல பார்ப்பனர்கள் உள்பட உலகில் உள்ள யார் வேண்டுமானலும் பெரியாரை விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனம் நேர்மையாக, நாணயமாக, சான்றுகளுடன் கூடியதாக உண்மையின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதே பொதுவான விதி. ஆனால் தாழ்த்தப்பட்டவன் என்கிற அறிமுகத்துடன் வெங்கடேசன் ஆகிய நீங்கள் எழுதிய இந்த நூலில் உண்மையிலேயே அப்படி நாணயமான கருத்துக்கள் உள்ளதா?நேர்மையாக எழுதியுள்ளீர்களா? அல்லது பார்ப்பனர்களின் கைக்கூலியாக செயல் பட்டுள்ளீர்களா என்பதை பார்த்து விடலாம். முடிவை படிக்கும் வாசகர்களிடமே விட்டு விடலாம். இனி நூலினுள் சென்று விவாதிப்போம்.


“ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள, கிட்டதட்ட 90 சதவீத புத்தகங்களைப் படித்தேன்.”
என்று பெருமையடித்துக் கொள்கிற வெங்கடேசன் அல்லது இவரை தூண்டிவிட்ட பார்ப்பனர்கள் முதலில் நமது கேள்விக்கு பதில் சொல்லட்டும்.

பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள எந்த நூலில் “ஈ வே.ராமசாமி” என்று உள்ளது? முதலில் அதைப் பட்டியலிடுங்கள். 90 விழுக்காடு நூலைப் படித்த லட்சணம் இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறதே. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதாக ஆகிவிட்டது உங்கள் நிலை.

ஈ.வே.ரா – ஈ.வெ.ரா. எது சரி

“பெரியார் அவர்களின் தந்தையார் பெயர் வெங்கட்டநாயக்கர் என்பதே சரியானது.வேங்கட்டப்ப நாயக்கர் என்பது தவறானது.”

இந்த விபரத்தைக்கூட சரியாக எழுதாத ம.வெங்கடேசன் பெரியாரைப் பற்றி நூல் எழுத வந்தது வேதனையானது. அந்த நூலைப் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்ள நினைப்பது வெட்கக்கேடு. அயோக்கியத்தனம். பார்ப்பனருக்குத்தான் எபோதும் முன் புத்தியே கிடையாதே.

“தாழத்தப்பட்டவர்களுக்கு 1 சதவீதம்கூட ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததில்லை என்பதுதான் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.” என்று நூலின் முன்னுரையில் எழுதியுளீர்களே இதில் எள்மூக்கு அளவு உண்மை உண்மையுண்டா?

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளிட்ட “தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்” என்ற ஒரு நூல் போதுமே உண்மையை எடுத்துரைக்க. தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் பாடுப்பட்டதை சான்றுகளுடன் பலர் பல நூல்களை எழுதியுள்ளனர். அந்த நூல்கள் எல்லாம் உங்கள் கண்னில் படவில்லையா? நூல்களை வாங்கிக் கொடுத்தவர்கள் திட்டமிட்டே அந்த ஆதாரபூர்வமான நூல்களை வாங்கிக் கொடுக்காமல் விட்டுவிட்டார்களா?. சரி பரவாயில்லை. இதற்குப் பிறகாவது அந்த நூல்களை வாங்கிப்படித்து உண்மையை உணர கீழே அந்த நூல்களின் பட்ட்டியலைத் தருகிறேன்.

1.தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்
2.பெரியார் சுயமரியாதை சமதர்மம்
3.பெரியார் ஆகஸ்ட் 15
4.பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு
5.திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?
6.இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
7.பெரியார்களஞ்சியம் ஜாதி-தீண்டாமை 1-17 பாகங்கள்
8.பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்


இன்னும் பல நூல்கள் இருக்கின்றன வெங்கடேசன். இப்போதைக்கு இதை மட்டுமாவது படித்து தெளிவடைய வேண்டுகிறேன்.
*************************ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா? என்ற தலைப்பில் கீழ் கண்டவாறு எழுதியுள்ளார் மா.வெங்கடேசன்.

“ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே - அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?
”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் - முதல் தொகுதி)
என்றும்,
”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)
என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.”

பெரியார் தன்னை சரியாகவே அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். எதையும் மறைக்க வில்லை. நேர்மையாகவும் நாணயமாகவும், உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளார். இதில் எங்கிருந்து வந்தது பெரியாருக்கு மறுபக்கம்?

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் எதையும் வெளிப்படையாக தன் மனதில் பட்ட கருத்தை யாருக்காகவும்,எதற்காகவும் மாற்றிக்கொள்ளமால் உழைத்த தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது பெரியார் மட்டுமே. சுருக்கமாகச் சொன்னால் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறது. ஒருசில வெங்கி- சொங்கிகள் பெரியாரின் மறுபக்கத்தை காட்டுகிறேன் என்று கூறிக் கொண்டு தங்களின் பார்ப்பனிய அடிமை முக சுயரூபத்தை அம்பலப்படுத்திக் கொள்கின்றனர்.

“”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” என்று பெரியார் எந்தப் பொருளில் எந்தச் சூழலில் கூறினார் என்பதை உணர்ந்து கொண்டால் வெங்கடேசனின் தில்லுமுல்லுகள் அமபலமாகிவிடும்
.

இது குறித்து பெரியார் குறிப்பிட்டதை அப்படியே தருகிறேன்.

“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஸ்டமாயிருக்கும் போது-தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஸ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர்,நான் கன்னடியன்,தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் ஜாதிப் பிரிவுகள்.என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டர்கள்.தெலுங்கரும் அப்படியே. எனவே,”திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம்;நம் நாடு திராவிட நாடு” என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்.”

--------------------சேலம் செவ்வாய்பேட்டையில் சொற்பொழிவு,16-1-1944—“குடிஅரசு” 29-1-1944 (ஈவெராசி -550).


மேற்கண்ட பெரியாரின் சொற்பொழிவில் பெரியார் எந்த இடத்தில் ‘நான் கன்னடியன்’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார் ?

பிரிந்து கிடக்கும் தோழர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும் நோக்கோடு கருத்துச் சொல்லிய பெரியாரை வேண்டுமென்றே விசமத்தனமாக எழுதி கொச்சைப் படுத்தியிருக்கும் இந்த பார்ப்பன அடிவருடி வெங்கடேசனுக்கு இப்படி ஒரு ஈனப்பிழைப்பு தேவையா? வரலாற்றை சொல்லும் போது உண்மைத் தன்மையுடன் சொல்லவேண்டும் அதுதான் அறிவு நாணயம். அந்த நாணயம் பெரியாருக்கு இருந்தது. அதனால்தான் பெரியார் பெருமை பொங்க குறிப்பிடுகிறார் “என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன்.” என்று

பெரியாருக்கு இருந்த இந்த நாணயம் கிஞ்சிற்றும் பார்ப்பனர்களுக்கு கிடையாது. தாழ்த்தப்பட சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பனருடன் சேர்ந்த காரணத்தினால் வெங்கடேசனுக்கும் இல்லை என்று இதன் மூலம் உணரலாம். பெரியாரைப் பற்றி கொச்சைப்படுத்தி ஒரு நூல் எழுத வேண்டும் என்று வெங்கடேசனிடம் வந்த பார்ப்பனர்/பார்ப்பன அடிவருடிகளின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்க வேண்டாமா? இந்த வெங்கடேசன். அப்படிச்செய்திருந்தால் தானே இவன் உண்மைத்தமிழன். அப்படிச் செய்திருந்தால் இப்போது வெங்கி- சொங்கியாக ஆகியிருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது.

ஆக பெரியார் எந்த இடத்திலும் தன்னை பெருமையோடு கன்னடர் என்று சொல்லிக் கொண்டதில்லை. அதுபோல் எந்த தகவலையும் மறைத்ததில்லை.உண்மைத்தகவல்களையே கூறியுள்ளார். பெரியாருக்கு என்று மறுபக்கம் இருந்ததில்லை. எப்போதும் திறந்த புத்தகமாக சொல்லிலும் செயலிலும் நடந்து காட்டியுள்ளார் என்பதை அவரின் கருத்துக்களும் செயல்பாடுகளும் உறுதி செய்கிறது. பெரியார் பிறப்பால் தான் ஒரு கன்னடர் என்பதை எங்கேயும் எப்போதும் மறைத்தது இல்லை.அப்படி மறைத்திருந்தால் இந்த சொங்கிகள் வைக்கும் குற்றச்சாட்டில் ஏதாவது பொருளிருக்கும். ஆனால் வெளிப்படையாக உண்மையை சொல்லியுள்ள பெரியாரை வேண்டுமென்றே திட்டமிட்டே கொச்சைப்படுத்தியுள்ளார்கள் இந்த வீணர்கள். இதற்கு முன்கூட இப்படி பல பேர் சொல்லி மூக்குடைபட்டுப் போய் உள்ளார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை.

இது குறித்த இன்னொமொரு பெரியார் அவர்களின் கருத்தை தருகிறேன்.

“என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதனை நான் தினசரிப் பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை.எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத்தான் பயன் படுத்தி வருகிறேன். எனக்கு கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும்.இருந்தாலும் தமிழ் மொழியில்தான் என்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்”
-------“விடுதலை” 21-5-1959
ஆக எந்த இடத்திலும் பெரியார் தான் ஒரு கன்னடர் என்று பெருமைப்பட்டுக் கொண்டதில்லை என்பதோடு அவருடைய ஒவ்வொரு செயலும் தமிழனின் நலத்துக்கும் உயர்வுக்குமானதகாவே இருந்தது என்பது தான் உண்மையிலும் உண்மை.

--------------தொடரும்

15 comments:

Unknown said...

//பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள எந்த நூலில் “ஈ வே.ராமசாமி” என்று உள்ளது? முதலில் அதைப் பட்டியலிடுங்கள். 90 விழுக்காடு நூலைப் படித்த லட்சணம் இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறதே. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதாக ஆகிவிட்டது உங்கள் நிலை.//

முதல் அடியே பலத்த அடி. பெரியாரைக் குறை கூறியவர்களுக்கு அவர்கள் சுட்டிக்காட்டிய ஆதாரங்களைக் கொண்டே மறுத்தது சிறப்பான ஒன்று.

சரியான பதிலடி

Unknown said...

//பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளிட்ட “தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்” என்ற ஒரு நூல் போதுமே உண்மையை எடுத்துரைக்க. தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் பாடுப்பட்டதை சான்றுகளுடன் பலர் பல நூல்களை எழுதியுள்ளனர். அந்த நூல்கள் எல்லாம் உங்கள் கண்னில் படவில்லையா? நூல்களை வாங்கிக் கொடுத்தவர்கள் திட்டமிட்டே அந்த ஆதாரபூர்வமான நூல்களை வாங்கிக் கொடுக்காமல் விட்டுவிட்டார்களா?. சரி பரவாயில்லை. இதற்குப் பிறகாவது அந்த நூல்களை வாங்கிப்படித்து உண்மையை உணர கீழே அந்த நூல்களின் பட்ட்டியலைத் தருகிறேன்.

1.தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்
2.பெரியார் சுயமரியாதை சமதர்மம்
3.பெரியார் ஆகஸ்ட் 15
4.பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு
5.திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?
6.இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
7.பெரியார்களஞ்சியம் ஜாதி-தீண்டாமை 1-17 பாகங்கள்
8.பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்//

இத்தனை நூல்கள் வந்தபின்பும் பெரியார் ஈ.வெ.ரா. வைப் பற்றி திரிபுவாதம் செய்வது அறிவுடைமையாகது. பெரியார் இன்னும் சிம்மசொப்பனமாகவே அவரின் எதிரிகளுக்கு விளங்கிவருகிறார் .

த மி ழ் இ னி யா said...

//ஈ.வே.ரா – ஈ.வெ.ரா. எது சரி

“பெரியார் அவர்களின் தந்தையார் பெயர் வெங்கட்டநாயக்கர் என்பதே சரியானது.வேங்கட்டப்ப நாயக்கர் என்பது தவறானது.”//

சரியான தகவலுக்கு நன்றி அண்ணே.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு

Thamizhan said...

இந்தப் புத்தகம் வந்து நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டது.திண்ணை போன்ற பார்ப்பன அடிவருடிகளும் இதைப் பற்றி எழுதி வந்தனர்.
இப்போது கிளம்பியிருக்கும் இந்தக் கும்பலுக்கும்,பொய் முகம் போன்ற பதிவர்களுக்கும் அவ்வப்போது சரியாகக் கொடுக்க வேண்டும்.
தெரு நாய் அசிங்கத்தில் வாய் வைப்பது போன்று பெரியாரைப் பற்றி எழுதிய அசிங்கத்தில் அங்கங்கே வாய் வைத்து விட்டு வாரிக் கொட்டியிருக்கும் இந்த அசிங்கங்களுக்குச் சரியாக பதில் கொடுப்ப்போம்.

செந்திலான் said...
This comment has been removed by the author.
செந்திலான் said...

வெங்கடேசன் பார்ப்பன கைக்கூலி என்றால் வீரமணி முன்பு பார்ப்பன (ஜெ) கைக்கூலி இப்பொழுது கருணாநிதியின் கைக்கூலி இதில் ஓவியாவின் பதில் என்ன..?

தமிழ் ஓவியா said...

வீரமணி அவர்கள் கொள்கை அடைப்படையில் முடிவு எடுத்து செயல்படும்போது செந்திலைப் போன்ற காமாலைக் கணனன்களுக்கு குறையாகத்தான் தெரியும்.

பெரியார் கொள்கைப் பார்வையில் மிக சரியான முடிவைத்தான் வீரமணி எடுத்து வருகிறார்.

பொதுவுடமை தோழர்கள் செயற்குழுவைக்கூட்டி போன வருடம் எடுத்த முடிவு தவறானது என்று இந்த வருடம் அறிவிப்பார்கள்.

ஆனால் தி.க. இது வரை எந்த முடிவையும் தவறாக எடுத்ததில்லை என்பது வரலாறு.

அதன் நிலைப்பாட்டை விருப்பு
வெறுப்பின்றி ஆய்வு செய்து பாருங்கள் செந்தில். இந்த உண்மை புலப்படும்.

செந்திலான் said...

// வீரமணி அவர்கள் கொள்கை அடைப்படையில் முடிவு எடுத்து செயல்படும்போது //

என்ன "கொள்கை" ? எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அதற்கு "ஆதரவு" தருவதா? தங்களது கல்வி வணிகம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இனப்படுகொலை புரிந்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதா ? அல்லது ஜெ.க்கு "சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்ததா ?

//செந்திலைப் போன்ற காமாலைக் கணனன்களுக்கு குறையாகத்தான் தெரியும்.//

யாராவது விமர்சனம் செய்ய முனைந்தால் உடனே பார்ப்பன கைக்கூலி,காமாலை கண்ணன் என்று விளாசுவது அப்பட்டமான பாசிசம் அல்லாமல் வேறென்ன ..? முடிந்தால் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்.வெங்கடேசன் பார்ப்பன கைக்கூலி என்கிறீர்களே அவர் கூலி வாங்கும்போது உடன் இருந்தீர்களா? எந்த ஆதாரம்,தரவின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள்? பெரியார் எவ்வாறு விமர்சனங்களை பக்குவத்தோடு எதிர் கொண்டார் இப்படித்தானா ?

// பெரியார் கொள்கைப் பார்வையில் மிக சரியான முடிவைத்தான் வீரமணி எடுத்து வருகிறார். //
இதை தமிழ் வாழ்வின் கசப்பான நகைச்சுவைகளில் ஒன்றாக கருதினால் போதும்.மேலும் இதை பெரியாரின் உண்மையான தொண்டர்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன் ..!

//பொதுவுடமை தோழர்கள் செயற்குழுவைக்கூட்டி போன வருடம் எடுத்த முடிவு தவறானது என்று இந்த வருடம் அறிவிப்பார்கள்.//

ஆம் அவர்களிடம் குறைந்த பட்ச நேர்மை இருப்பதால் தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.நிறுவன மயப்படுத்தப்பட்ட பாசிச அமைப்புகளில் இது போன்ற சுய விமர்சனங்களோ,ஆய்வுகளோ,மதிப்பீடுகளோ வருவதற்கான சாத்தியம் இல்லை தான்.

//ஆனால் தி.க. இது வரை எந்த முடிவையும் தவறாக எடுத்ததில்லை என்பது வரலாறு.//

உண்மை தான்,யாருக்கும் பதில் சொல்லத் தேவை இல்லையென்றால் எல்லாம் சரி என்று உங்களுக்கு நீங்களே முடிவு செய்தால் அது சரியான முடிவுகள் என்பதுதானே வரலாறாக இருக்க முடியும்

//அதன் நிலைப்பாட்டை விருப்பு
வெறுப்பின்றி ஆய்வு செய்து பாருங்கள் செந்தில். இந்த உண்மை புலப்படும்.//
இதைதான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.யாரவது விமர்சனம் செய்ய முனைந்தாலே உடனே அவரின் சாதி,பின்புலம் என்று குழாயடிச் சண்டை அளவிற்கு கீழிறங்கி சண்டை போடாதீர்கள்.பெரியார் அவ்வாறு ஒரு பொழுதும் செய்யவில்லை.இன்றும பெரியாரின் தொண்டர்கள் மீது சமூகம் மரியாதை வைத்திருக்கிறது என்றால் அது "பெரியார் .தி.க வினால் தான்.

தமிழ் ஓவியா said...

எந்தக்கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் அதற்கு ஆதரவு தருகிறாராம் வீரமணி சொல்கிறார் செந்தில்.

இது போன்ற குற்றசாட்டுக்கள் பெரியாரும் மீதும் வந்ததுண்டு. அதே குற்றச் சாட்டை திரும்ப வாந்தியெடுத்துள்ளார்கள் செந்தில்கள்.

இதற்கு முன் தி.மு.க ஆட்சியில் இருந்த போது கடுமையாக வீரமணி அவர்கள் எதிர்த்ததை வசதியாக மறந்து விட்டாரா செந்தில்.

கொள்கைக்கு மாறாக பி.ஜே .பி யுடன் கூட்டு வைத்துக் கொண்டதுதான் காரணம்.

காங்கிரஸுக்கு ஆதரவு தருவது பி.ஜே. பி. என்னும் மதவெறி கட்சி ஆட்சிக்கு வந்து விடகூடாது என்பதற்குதானே தவிர அது நல்ல கட்சி என்பதற்காக அல்ல.

இந்தப் இடுகையில் வீரமணி அவர்களைப்பற்றி எந்தப் பதிவும் இல்லாத போது தொடர்பில்லாமல் அவர் பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பது எந்த வகை விமர்சனமோ?

செந்திலான் said...

பார்ப்பன கைக்கூலி,காமாலை கண்ணன்கள் ,இப்பொழுது வாந்தி எடுக்கும் செந்தில்கள்.அற்புதமான சொல் பிரயோகங்கள்.
எதையும் வார்த்தை ஜாலங்களின் மூலம் மூடி மறைக்க முடியாது.

// இதற்கு முன் தி.மு.க ஆட்சியில் இருந்த போது கடுமையாக வீரமணி அவர்கள் எதிர்த்ததை வசதியாக மறந்து விட்டாரா செந்தில்

கொள்கைக்கு மாறாக பி.ஜே .பி யுடன் கூட்டு வைத்துக் கொண்டதுதான் காரணம்.
.//

ஆம் அதற்குமுன்பு ஜெயலலிதா பி ஜெ பி உடன் கூட்டணி வைத்த பொது கள்ள மௌனம் சாதித்ததை நீங்கள் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை.கலைஞரை மட்டும் "கடுமையாக" எதிர்த்தீர்கள் அதுவே ஜெயலலிதா என்றபோது "மென்மையாக" எதிர்த்தீர்கள் ஏனென்றால் உங்கள் அமைப்பு அப்பொழுது ஜெ.அணிக்கு ஆதரவு தந்தது.தமிழனுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று எல்லா தமிழரையும் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்
இந்த இடத்தில்தான் உங்களது selective amnesia வேலை செய்கிறதோ ?

//காங்கிரஸுக்கு ஆதரவு தருவது பி.ஜே. பி. என்னும் மதவெறி கட்சி ஆட்சிக்கு வந்து விடகூடாது என்பதற்குதானே தவிர அது நல்ல கட்சி என்பதற்காக அல்ல.//

ஆஹா என்னே ஒரு "கொள்கை முடிவு". நீங்கள் எதிர்த்து பி.ஜெ.பி யைத் தடுக்க வேண்டியதில்லை எனும்போது ஏன் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் ? இதில் ஒளிந்து இருக்கும் நுண்ணரசியல் என்ன ?(மருத்துவக்கல்லூரி அனுமதியோ) திருமா மாதிரி தி.மு.கவை மட்டும் ஆதரிக்கலாமே

// இந்தப் இடுகையில் வீரமணி அவர்களைப்பற்றி எந்தப் பதிவும் இல்லாத போது தொடர்பில்லாமல் அவர் பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பது எந்த வகை விமர்சனமோ? //

மீண்டும் சொல்கிறேன் உங்களின் தனி மனித தாக்குதலுக்கு பதிலாக கேட்கப்பட்டது தான் அந்த கேள்வியே தவிர அவரை விமர்சனம் செய்வதற்காக அல்ல.இயக்கம் எடுக்கின்ற "கொள்கை" முடிவுகளுக்கு தலைவர் என்ற முறையில் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனாலும் "தலைவர்தான் தி.க" ,"தி.க தான் தலைவர் " (இந்திராதான் இந்தியா போல்) என்று தான் பொதுவான கருத்தாக இருக்கிறதே

தமிழ் ஓவியா said...

//ஜெயலலிதா பி ஜெ பி உடன் கூட்டணி வைத்த பொது கள்ள மௌனம் சாதித்ததை நீங்கள் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை.கலைஞரை மட்டும் "கடுமையாக" எதிர்த்தீர்கள் அதுவே ஜெயலலிதா என்றபோது "மென்மையாக" எதிர்த்தீர்கள் ஏனென்றால் உங்கள் அமைப்பு அப்பொழுது ஜெ.அணிக்கு ஆதரவு தந்தது.தமிழனுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று எல்லா தமிழரையும் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்
இந்த இடத்தில்தான் உங்களது selective amnesia வேலை செய்கிறதோ ?//

எதிர்ப்பதில் என்னையா மென்மையாக, கடுமையாக. கொள்கைக்கு யார் எதிராப் போறாங்களோ அவர்கள் யாராயிருந்தாலும் எதிர்க்க வேண்டியதுதான். அந்த வகையில்தாம் ஜெயலலிதா எதிர்ப்பும் இருந்தது. அதே போல்தான் கலைஞர் எதிர்ப்பும் இருந்தது.நீங்களே எதையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு மற்றவர்கள் பொறுப்பல்ல.

நுண்ணரசியல் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் இங்கு யாருக்கும் தேவையில்லை. அதிலும் குறிப்பாக பெரியார் தொண்டர்கள் யாருக்கும் அது தேவையில்லை. எதிலும் திறந்த புத்தகமாகத்தான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரைப்போவே இன்னொருவர் ஆதரிக்க வெண்டிய அவசியமில்லை.

பெரியார் கொள்கைப்பார்வையில் யாரை ஆதரிக்க வேண்டுமோ அவர்களை திராவிடர் கழகம் ஆதரிக்கும். அதற்கு பெரியாரின் வழிகாட்டும் தத்துவம் உயிர்ப்புடன் இருக்கிறது. இதில் மற்றவர்களின் ஆலோசனை தேவையில்லை.

எந்த தனிமனிதரையும் தாக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது தேவையுமில்லை.வெங்கடேசன் அவர்கள் எழுதிய கருத்துக்கு கருத்து மூலம் பதில் சொல்லப்பட்டது. பார்ப்பனக் கைக்கூலி என்று சொன்னது கூட அவரின் கருத்துக்கள் எந்த வலைப்பக்கத்தில் யாருக்கு ஆதரவாக வருகிறது என்ற அடிப்படையில்தான் சொல்லப்பட்டதே தவிர, அவர் கருப்பா,சிவப்பா என்பது கூட எனக்கு தெரியாது.நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையைப் படித்தால் நான் அப்படி எழுதியதற்கான காரணம் புரியும்

பெரியார் பற்றி தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் என்று சொல்லப்படும் முக்கியமானவர்கள் சொன்ன கருத்தை எனது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறேன். பெரியார்-தலித் என்ற சுட்டியை சுட்டி தெரிந்து கொள்ள வேணுகிறேன்.

அதேபோல் காமராஜரை ஏன் பெரியார் ஆதரித்தார்? தி.மு.க.வை எதிர்த்த பெரியார் பின்பு ஏன் ஆதரித்தார்? என்பன போன்ற செய்திகளை தெரிந்து கொண்டால் தி.க. அரசியலில் எடுக்க்கும் நிலைப்பாடுகளில் குழப்பம் வராது.

அருள்கூர்ந்து இந்த வலைபூவில் ஓரளவுக்கு செய்திகளை தொகுத்துக் கொடுத்துள்ளேன் (இதற்கு எனது பெரியாரியக்க தோழர்கள் பலர் உதவிசெய்து வருகிறார்கள்) ஒரு முறை முழுமையாகப் படியுங்கள்.

வணிக நோக்கு, நுண்னரசியல் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த தவறான எண்னத்தைப் போக்கி விட்டு நடுநிலையுடன் சிந்திக்கவும்.

நன்றி.

செந்திலான் said...

நன்றி.
பெரியார் இயக்கத்துக்கெல்லாம் ஆலோசனை எதுவும் சொல்லலீங்க.மேலும் எதற்கும்,யாருக்கும் "ஆலோசனை" சொல்லும் தகுதியோ அல்லது "ஆலோசகர்" ஆகும் தகுதியோ எனக்கு இல்லை.கலைஞர் பாணியில் சொன்னால் அந்த "தகுதி" ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது.
உங்களது பதிவுகளை நீண்ட நாட்களாக படித்து வருகிறேன்.என் மனதில் எழுந்த கேள்விகள் எல்லாம் ஒரு எளிய வாசகனின் கேள்விகள் தான்.இதெல்லாம் கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஒரு எண்ணவோட்டம் இருந்தது.அதனால் தான் கேட்டேன்.பொறுமையாக பதில் சொன்னதுக்கும்,உங்களது பயனுள்ள நேரத்தை ஒதுக்கியதுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி

மீண்டும் சந்திப்போம் ..!

தமிழ் ஓவியா said...

//உங்களது பதிவுகளை நீண்ட நாட்களாக படித்து வருகிறேன்.//

மிக்க நன்றி செந்தில்.

உங்களுடைய சுய விபரக் குறிப்பைப் பார்த்தேன். மிக்க மகிழ்சி. அதில் பெரியார் பற்றிய நூல்களை குறிப்பிட்டிருந்தீர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மரியாதைக்குறைவாகவோ, யாரையும் குறைத்து மதிப்பிட எப்போதும் முயன்றதில்லை.

அவரவர்கள் அவரவர்களால் முடிந்த அளவு செய்து வருகிறார்கள் இதில் குறை கூற வெண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து.

அந்த செயல்களைச் செய்யும் போது உண்மைத்தன்மையுடன், நாணயமாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும் என்பதே எனது எதிர் பார்ப்பு. அதற்கு மாறக இருக்கும் போது சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்ற அளவில் தான் அதில் தலையிடுகிறோம்.

மற்றபடி இன்னார்-இனியார் என்ற வேறுபாடின்றித்தான் செயல்பட்டு வருகிறோம்.

பெரியார் பற்றிய நூல்களைத் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

மிக்க நன்றி செந்தில்.

--தொடர்வோம்--இணைவோம்.

Unknown said...

//செந்திலைப் போன்ற காமாலைக் கணனன்களுக்கு குறையாகத்தான் தெரியும்.// விமர்சனம் செய்பவர்களை எல்லாம் பார்ப்பனர்களாகவே காண்பதும் ஈவெராவை விமர்சனம் செய்யும் பதிப்புக்கள் எல்லாம் பார்ப்பனப் பதிப்புக்கள் என்றும் “காமாலைக்” கண் உள்ளது உங்களுக்குத்தான் என்று தோன்றுகிறது.

அவர்கள் விமர்சனம் செய்வது தவறென்றால் அதை அங்கேயே எடுத்து வைத்து வாதிடுவது தானே? அவர்கள் நீங்கள் இடும் பதிவுகளை பதிப்பிக்க மறுக்கிறார்களா என்ன?

-CJ