Search This Blog
24.6.09
மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதார (சிங்கம்) மோசடி- 4
மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.
இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டி- காவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.
*****************************************************************************
4. நரசிம்ம அவதாரம் (சிங்கம்)
கதை: தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் விஷ்ணு என்று இரணியனின் மகன் பிரகலாதன் சொல்ல, `இந்தத் தூணிலும் இருப்பானா உன் விஷ்ணு?’ என்று கூறி இரணியன் தூணை உதைக்க, அதிலிருந்த நரசிம்ம அவதாரம் (சிங்கம்) எடுத்து விஷ்ணு இரணியனின் குடலைக் கிழித்தான்.
கேள்வி: தூணை உதைத்தபோது மகாவிஷ்ணு சிங்க ரூபமாக வந்து இரணியனைக் கொன்றதாகக் கதை சொல்லுகிறார்களே - பெரியார் தொண்டர்கள் ராமனைச் செருப்பால் அடித்தார்களே - அப்பொழுது எங்கே போனான் அந்த மகாவிஷ்ணு?
தூணுக்குப் பின்னாலே ஒளிந்திருந்து வஞ்சகமாக இரணியனைக் கொன்றிருக்கக் கூடும் என்பதுதானே அறிவார்ந்த கண்டுபிடிப்பாக இருக்க முடியும்?
தூணை உதைத்தால் விஷ்ணு வருவான் என்றால், விஷ்ணுவை உதைத்தால் யார் வருவானோ?
----------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment