Search This Blog

9.6.09

இலங்கையில் பத்துப் பார்ப்பான் செத்திருந்தால் இந்தக் கல்கி பம்மாத்துக் கூட்டம் இப்படி எழுதுமா?


காகத்தையும் படைத்து...

கேள்வி: அய்.நா. சபையில், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து கொண்டுவரப் பட்ட தீர்மானத்தில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வோட்டளிக்கிறதே?

பதில்: விடுதலைப்புலிகளின் பயங்கர வன்முறைக்கு எதிரான வோட்டு அது.

-------------------கல்கி, 14.6.2009, பக்கம்-83

இலங்கை அரசு சிங்கள இனவெறித்தனத் தோடு தமிழர்களை வேட்டையாடிக் கொன்று இருக் கிறது என்ற உண்மைகள் மேலும் மேலும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. அய்.நா. செயலா ளர் பான்-கீ-மூன் அவர்களே கூட இலங்கையின் போர்க் குற்ற நடவடிக்கை கள் குறித்து விசாரிக்கப் படவேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியே கூட மனம் குமுறி, ஈழத்தில் அகதிகளாக அவதிப்படும் தமிழர்கள் நிலை குறித்து ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறார். ஆனால் பாழாய்ப்போன இந்தப் பார்ப்பனர்களுக்கு மட்டும் அது வேறுவிதமாகத் தோன்றுகிறது.
காகத்தையும் படைத்து கல் மனப்பார்ப்பானையும் ஏன் படைத்தாய்? என்ற பாடல் வரிதான் நினைவிற்கு வருகிறது.


After all thousonds boys என்று ஆணவமாக விடுதலைப்புலிகள்பற்றி எள்ளி நகையாடினார்கள்.

அந்த அற்ப ஆயிரம் பேர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் படு கொலை செய்யப்படவேண்டுமா?

காயம்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த மருத்துவமனைகள் மீது குண்டு மாரி பொழிவது மனித உரிமை மீறல் இல்லையா?

தஞ்சம் அடைந்த வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி மக்களோடு தரை மட்டமாக்கியதுதான் யுத் தத் தர்மமா?

சின்னஞ்சிறு குழந்தை மலர்கள் - போரில் மரண மடைந்த பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் அவர்களை வளர்த்து ஆளாக்கிய மாஞ்சோலை விடுதிமீது தாக்கியது - புலிகளை அழிக்கத்தானா?

தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதெல்லாம் பார்ப்பனத் தர்மத்தில் வேண்டுமானால் பாயாசம் சாப்பிட்டது மாதிரி இருக்கலாம்; மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கொண்ட தமிழச்சிகளின் துடிப்புகள் பார்ப்பன மாட்டுத் தோலுக்கு எங்கிருந்து உறைக்கப் போகிறது?

விடுதலைப்புலிகள் ஆனாலும் சரி, அவர்களை அழிப்பதாகக் கூறிக் கொண்டு அழிக்கப்பட்ட தமிழர்களானாலும் சரி, கல்கி கூட்டத்திற்கு - அந்தக் காகப்பட்டர் சந்ததியினருக்கு எல்லாம் ஒன்று தான். ஏனெனில், கொல்லப்பட்டவர்கள் இரு தரப்பினரும் தமிழர்கள்தானே!

இலங்கையில் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட நேரத்தில் அங்கு சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவ் திரும்புகையில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தைக் கையோடு கூட்டி வந்தாரே நினைவிருக்கிறதா?

ஆம், இலங்கையில் பத்துப் பார்ப்பான் செத்திருந்தால் இந்தக் கல்கி பம்மாத்துக் கூட்டம் இப்படி எழுதுமா? சிந்திப்பீர்!

------------ மயிலாடன் அவர்கள் 9-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

//இலங்கையில் பத்துப் பார்ப்பான் செத்திருந்தால் இந்தக் கல்கி பம்மாத்துக் கூட்டம் இப்படி எழுதுமா? சிந்திப்பீர்!//

ஈழவிடுதலைக்கு தடையாய் இருக்கும் முக்கிய சக்திகளில் பார்ப்பனர்களும் அடங்குவார்கள். அதற்கு உதாரணம் தான் கல்கி, சோ, இந்து ராம் கும்பலகளின் கூப்பாடுகள்.