Search This Blog

25.6.09

"வணங்காமண்" கப்பல்பிரச்சினை -இலங்கை அரசு ஏற்பு!


பலநாள்களாகஅலைக்கழிக்கப்பட்டவணங்காமண்கப்பல்பிரச்சினை:
முதல்வர் கலைஞர் எடுத்த தொடர் முயற்சி வெற்றி! பாராட்டத்தக்கவெற்றிக்குஅனைவருக்கும்பாராட்டுகள்
ஒருமித்தமுறையில்அழுத்தம்கொடுக்கஅனைவரும்வாரீர்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


அய்ரோப்பிய நாடுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் அடங்கிய வணங்காமண் கப்பல் பிரச்சினை சுமுகமான ஒரு முடிவை எட்டுவதற்குக் காரணமான முதல் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடந்த போரினால் அங்குள்ள ஈழத் தமிழர்கள் உண்ண உணவும், காயங்களை ஆற்றிடவும், நோய்களிலிருந்து விடுபடவும் போதிய அளவுக்கு மருந்துகள் வசதியும் கிடைக்காமல் அவதிப்படும் நிலை கண்டு நம் நெஞ்சங்கள் மனிதநேயம் உள்ள அனைவரது உள்ளங்களோடு சேர்ந்து பதறிக் கதறிடும் நிலையே உள்ளன.

வணங்காமண் கப்பல் பட்டபாடு!

இந்நிலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றிட, அய்ரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களும் மனிதநேயர்களும், 884 டன் எடை கொண்ட உணவு, மருந்து மற்றும் நிவாரணப் பொருள்களைத் திரட்டி, வணங்காமண் என்று பெயரிடப்பட்ட கேப்டன் அலி என்ற கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்தக் கப்பலை தங்கள் நாட்டின் கடல் பகுதிக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதனால் வேறு எங்கும் செல்ல முடியாமல் அக்கப்பல் சென்னையை நோக்கி வந்தது! உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சென்னை துறைமுகத்துக்குள் அனுமதிக்க, சென்னை துறைமுக அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனவே அது கடந்த 12-ஆம் தேதி முதல் நேற்று வரை நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் வணங்காமண் கப்பலில் இருக்கும் ஊழியர்களுக்கு குடிநீர் தேவைப்படவே மனிதநேயத்துடன் சென்னை துறைமுகத்திலிருந்து போதிய தண்ணீர் அனுப்பப்பட்டு அவர்களைக் காப்பாற்றினர்.

முதல் அமைச்சரின் முயற்சி வெற்றி

இது தொடர்பாக நமது முதல்வர் கலைஞர் அவர்கள் வெளிஉறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களுக்கு தனியே கடிதம் எழுதி, இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண இலங்கை அரசினை வலியுறுத்தி, அங்கே அவதிப்படும் தமிழர்களுக்கு இந்த நிவாரண உதவிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கிடைத்திட ஆவன செய்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இதற்காகவே தமிழ்நாடு உயர்கல்வி, அமைச்சர் டாக்டர் க. பொன்முடி அவர்களை கடிதத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசுமாறு அனுப்பி வைத்தார்கள்.
மீண்டும் ஒரு கடிதம் எழுதியதோடு அக்கடிதத்தினை மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ. இராசா அவர்களை அனுப்பி திரு. கிருஷ்ணா அவர்களிடம் மீண்டும் வலியுறுத்திப் பேசும்படி ஆணையிட்டார்கள்.

இலங்கை அரசு ஏற்பு!

இந்நிலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்தும், தமிழர்களுக்கு சம அரசியல் அதிகாரங்களை வழங்குவது குறித்தும் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதற்காக, அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களான கோதபய இராஜபக்சே (இராணுவ அமைச்சர்), பசில் இராஜபக்சே (அரசியல் ஆலோசகர்) மற்றும் அதிபரின் செயலாளர் லலித்வீரதுங்கா ஆகியோர் அடங்கிய இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்து, நேற்று மாலை 5 மணியளவில் (24.6.2009) விவாதித்ததின்போது தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கையை வெளிஉறவுத்துறை, அமைச்சர் திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் அக்குழுவினரிடம் வற்புறுத்தியதன் விளைவாக வணங்காமண் கப்பலை இலங்கைக் கடலில் அனுமதித்து, இலங்கையின் வடபகுதியில் புலம் பெயர்ந்த மக்களுக்கு வினியோகிக்குமாறு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்திய அரசு தெரிவித்த யோசனையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். கப்பல் இலங்கை சென்றுவிட்டது!

நெஞ்சம் நிறைந்த பாராட்டு - நன்றி!

இம்முயற்சியின் வெற்றிக்குக் காரணமான தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய அரசின் வெளிஉறவுத்துறை அமைச்சர் திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்களுக்கும் நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

கடந்த பல வாரங்களாக நடுக்கடலில் தவித்த வணங்காமண் கப்பலின் மனிதநேயப் பணி, கலைஞர்தம் அரிய முயற்சியால் வெற்றியடைந்தது. நடுக்கடலில் தவித்த அக்கப்பலின் கேப்டன், ஒரு கட்டத்தில் விரக்தியும் அடைந்து, அவ்வளவு பொருள்களையும் நடுக்கடலில் கொட்டி விட்டுத் திரும்புவதைத் தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்குத் தள்ளப்பட்டார்; முதல்வரின் இடைவிடாத முயற்சி கைமேல் பலன் தந்தது!
இதற்காக முயன்ற மத்திய அமைச்சர் ஆ. இராசா, மாநில அமைச்சர் க. பொன்முடி ஆகியோர்க்கு உலகத் தமிழர்களின் நன்றி உரியதாகும்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பேரணி, பொதுக் கூட்டம் 23.6.2009 அன்று திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றபோதுகூட நானும் தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன் மற்றும் பலரும் வற்புறுத்திப் பேசினோம்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமையை இவ்வாறு மீட்டெடுக்க வேண்டுமானால், அது முதல்வர் கலைஞர் அவர்களின் இனவுணர்வும், மனிதநேயமும் பொங்கும் முயற்சிகளால் தான் முடியும்.

அவர் அரசில், முதல்வராக இருந்து, அவரது சகாக்கள், மத்தியிலும் மாநிலத்திலும் அமைச்சராக ஆட்சியில் இருப்பதால்தானே இது சாத்தியமாயிற்று? இதைப் புரிந்து கொள்ளத் தவறலாமா?


தேர்தல் நேரத்தில் ஈழத் தமிழர்களுக்காகப் பெரிதாக முழங்கியவர்கள் இப்போது பேசுவதில்லையே ஏன்?

ஒரே குரலில் அழுத்தம் கொடுப்பீர்!

உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் விடியலைக் காண வேண்டும் என்றால், அதற்கு தமிழ்நாட்டில் ஒரு சரியான இன உணர்வுள்ள ஒரு முதல்வர் நிலையில் கலைஞர் இருப்பதுதானே வாய்ப்பாக அமையும்?

அதைவிட்டு அவரை விமர்சிக்கும் விவஸ்தையற்று அரசியல் தூண்டிலைத் தூக்கித் திரியும் எதிர்க்கட்சி நண்பர்கள் இனியாவது பாடம் பெற வேண்டும்! தம் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவரவர் தனித்த அரசியல் செய்யட்டும்; நாம் வேண்டாமென்று கூறவில்லை.
குறைந்த பட்சம் ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, பாலாற்று நீர் அணைத் தடுப்புப் பிரச்சினை போன்றவற்றிலாவது, மற்ற மாநிலத்தவர் காட்டும் ஒற்றுமையை இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் காட்ட வேண்டாமா?

இனிமேலாவது தேவையின்றி கலைஞர்மீது பழி சுமத்தும் போக்கைக் கைவிட்டு, மத்திய மாநில அரசுகள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடியலை ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் அழுத்தம் கொடுக்கும் போக்கு திரும்பட்டும்! ஒன்றுபட்டால் உண்டு ஈழத் தமிழர்க்கு வாழ்வு.

தமிழர் உரிமைகளும், நல்வாழ்வும் காப்பாற்றப்பட அதுவேவழி.

உலகத் தமிழர்களும் இதை உணர்ந்து, தங்களின் மாயையிலிருந்து விடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

------------------------"விடுதலை"25-6-2009

5 comments:

Unknown said...

//அவரவர் தனித்த அரசியல் செய்யட்டும்; நாம் வேண்டாமென்று கூறவில்லை.
குறைந்த பட்சம் ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, பாலாற்று நீர் அணைத் தடுப்புப் பிரச்சினை போன்றவற்றிலாவது, மற்ற மாநிலத்தவர் காட்டும் ஒற்றுமையை இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் காட்ட வேண்டாமா?//

ஏன் தமிழர்கள் மட்டும் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

இதை தீர்ப்பது எப்படி

அக்னி பார்வை said...

நல்ல விஷ்யம்

வெண்காட்டான் said...

intha vettirlil karunnathiyen thurookathai marakkiavendam. ithuvum poor nirutham poola than. pls ippadiyana chinna saithikalai viathu arasiyal panna vendam.
A good country must allow the ships. some one did it. but now u say we have to thank karunanithi. avar saitha paavathuku ithu myrika kooda varathu

முல்லை மயூரன் said...

என்ன புண்டை என்றாலும் எழுதுங்க தமிழர் தலைவர் என்று மட்டும் மூத்திரம் பெய்ய வேண்டாம்


ஈழத்தான்

தமிழ் ஓவியா said...

உலகில் யாரும் யாரையும் விமர்சிக்க உரிமை உண்டு.ஆனால் யரையும் கொச்சைப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை ஈழத்தான்கள் உணர்ந்து கொள்ளட்டும்