Search This Blog

9.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- வெர்டே முனை-மத்திய ஆப்ரிகக் குடியரசு - சாட் - சிலி
வெர்டே முனை(Cape Verde)


மேற்கு அய்ரோப்பியாவுக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் செனகல் நாட்டுக்கு மேற்கே உள்ள தீவுகள் வெர்டே முனை என்பவை. இத் தீவுகள் 1495-இல் போர்த்துகீசிய நாட்டின் ஆதிக்கத்திற்குள் வந்தன. 1975 இல்தான் இத் தீவுகளுக்கு விடுதலை வழங் கப்பட்டது.

அதிபர் 22-3-2001 முதல் பெட்ரோடி வெரோனா ரோட் ரிக்ஸ் பியர்ஸ் என்பார் உள்ளார். 2006 இல் நடந்த தேர்தலிலும் இவரே வென்றார். பிரதமர் மரிய பெனாரா நீவ்ஸ் என்பார் 1-2-2001 முதல் உள்ளார்.

4033 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டில், 4 லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின்றனர். ரோமன் கத்தோலிக்க, புரொடஸ்டன்ட் கிறித்துவ மதங்களைச் சேர்ந்தவர்கள். ஆண்களில் 86 விழுக்காடும், பெண்களில் 70 விழுக்காடும் படித்துள்ளனர். ரயில் தடமே இல்லாத நாடு.

மத்திய ஆப்ரிகக் குடியரசு

பிரான்சு நாடு 1880 இல் பிடித்து தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்ட நாடு 1894 இல் உபாங்கி ஷெரி எனும் குடியேற்றப் பகுதியாகியது. 1960 இல் விடுதலை பெற்றது. காங்கோவுக்கு வடக்கே அமைந்துள்ள இந்நாடு 6 லட்சத்து 22 ஆயிரத்து 984 சதுர கி.மீ. பரப்புள்ளது. 43 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆட்சி மொழியாக பிரெஞ்ச் உள்ளது. புரொடஸ்டன்ட் மதத்தை 25 விழுக்காடு, கத்தோலிக்க மதத்தை 25 விழுக்காடு மக்களும், உள்நாட்டு மத நம்பிக் கைகளைக் கொண் டோர் 35 விழுக்காடும் உள்ளனர்.
புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த பிராங்கோ பொனசஸ் என்பவர் தேர்தலில் நின்று 64 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிரதமரும் உண்டு.
வைரம், யுரேனியம், தங்கம் கிடைக்கிறது.

சாட் (CHAD)

சாட் ஏரிப் பகுதிக்கு பெர்பெர் இன மக்கள் 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் வந்தனர். 1085 ஆம் ஆண்டில் இசுலாமிய மதம் வேரூன்றத் தொடங்கியது. 1913 இல் பிரான்சு நாடு இந் நாட்டைப் பிடித்தது. 1960-இல் விடுதலை பெற்றது.

30 ஆண்டுகளில் பல்வேறு உள்நாட்டுப் போர்கள். அண்டை நாடான லிபியாவின் படையெடுப்புகள். ஒரு வழியாக 1990-இல் அமைதி ஏற்பட்டது.

நாடு புதிய அரசமைப்புச் சட்டத்தை எழுதிக் கொண்டது. 1996,2001 ஆண்டுகளில் நடந்த அதிபர் தேர்தல்களில் ஒருமித்த முடிவு கிடைக்கவில்லை. 1998 இல் கலகக்காரர்களின் கை ஓங்கியது. ஆங்காங்கே மீண்டும் கலவரங்கள். எவ்வித அமைதிப் பேச்சும் வெற்றி பெறமுடிய வில்லை. சூடான் நாட்டின் மேற்குப் பகுதியில் பதுங்கிக் கொண்டு சாட் நாட்டின்கிழக்குப் பகுதியைத் தாக்கினர். சிறுபான்மை இனக் குழுவினரின் கையில் ஆட்சி உள்ளது. 2005 ஜூன் மாதத்தில் பொது வாக்கெடுப்பை நடத்திய அதிபர் இதிரிஸ் டெபி, அதிகார வரம்புக் காலத்தை அரசமைப்புச் சட்டத்திலிருந்து எடுத்துவிட்டார்.

இதிரிஸ் டெபி அதிபராகவும், பாஸ்கல் யெடிம்நாட்ஜி என்பவர் பிரதமராகவும் உள்ளனர்.
12 லட்சத்து 84 ஆயி ரம் சதுர கி.மீ. பரப்புள்ள நாடு. சுமார் ஒரு கோடி பேர் வாழ்கிறார் கள். முசுலிம்கள் 51 விழுக்காடு கிறித்துவர்கள் 35 விழுக்காடு வாழ்கின்றனர். பிரெஞ்ச் மொழியும் அரபி மொழியும் ஆட்சி மொழிகள். பாதிப்பேர் தான் படிப்பறிவு உள்ளவர்கள்.

சிலி

16-ஆம் நூற்றாண்டின் மத்தியில் சிலி நாட்டை ஸ்பெயின் நாடு கைப்பற்றியது. அந்தக் காலத்தில் சிலியில் 5 லட்சம் பூர்வகுடிகள் வசித்து வந்தனர். அராகேனியன் இந்திய இனம் இதில் பெரும் பான்மையானது. 1880 வரை கடும் எதிர்ப்பை இம்மக்கள் ஸ்பெயின் வீரர்களுக்குக் கொடுத்தனர்.

இங்கிலாந்து, டச்சு நாடுகளைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் இந்நாட்டின் நீண்ட கடற்கரையை அடிக்கடி தாக்கிக் கொள்ளை அடிக்க முற்பட்டனர். உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ராணுவத் தலைமை சந்தியாகோவில் சிலி நாட்டுக்குச் சுயாட்சி வழங்கிக் கொண்டது. 1818-இல் சுதந்திர நாடாகியது. அதன் தலைமை இயக்குநராக பெர்னார்டோ ஹிக் கின்ஸ் என்பார் ஆனார்.

1970 இல் உலகில் முதன் முதல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிய அதிபராக சால்வடர் அலந் தெசிலியில் பதவியில் அமர்ந்தார். சமூக சீர்திருத்தங்களைச் செய்திடவும் தொழில்களை நாட்டுடைமை ஆக்கிடவும் முனைந்தார்.

1973இல் அமெரிக்கா திடீர்ப்புரட்சியைத் தூண்டி ஊக்கு வித்து அலந்தெவைக் கவிழ்த்து அகஸ்டோ பினோசெட் எனும் ராணுவத் தளபதியைப் பதவியில் அமர்த்தியது. அவர் எதேச்சாதிகாரியாகவே விளங்கினார். 1988 இல் நடந்த பொது வாக்கெடுப்பில் அவர் தோற்றதைய டுத்து பாட்ரிசியோ அய்ல் வின் என்பார் புதிய அதிபராக 1989-90 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பினோசெட் அதிபர் பதவியை விட்டாரே தவிர ராணுவத்தின் தலைவராக நீடித்தார்.

தற்போது 11-3-2006 முதல் மிஷெல் பாக்லெட் என்பார் அதிபராக உள்ளார்.
7 லட்சத்து 56 ஆயிரத்து 950 சதுர கி.மீ. பரப்புள்ள இந்த நாட்டில் ஒரு கோடியே62 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். கத்தோலிக்க மதம் 89 விழுக்காடும், புரொடஸ்டன்ட் மதம் 11 விழுக்காடும் மக்களின் மதங்களாகும். ஸ்பெயின் நாட்டு மொழி ஸ்பானிஷ் தான் ஆட்சிமொழி. இந் நாட்டுக் கவிஞர் பாப்லோ நெரூடா கம்யூனிஸ்ட் ஆவார். சிலி நாட்டின் தூதுவராக பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் பணியாற்றியவர். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற சிறந்த கவிஞர். பதவி பறிக்கப் பட்ட அலந்தெவின் நெருங்கிய நண்பராக விளங்கியவர்.


-------------------"விடுதலை" 6-6-2009

2 comments:

ttpian said...

India is country being ruled by malayalees+Sardargis+Benkalees:But,Tamilnadu politicians will be busy in filling up their "KAZAANA"
Both DMK+ADMK will fight with each other in full circle...they never die!....
Only Tamil community which died in between their fights!

ttpian said...

எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்க்கிரானோ,
அவனும் அவன் குடும்பமும், விரைவில் கல்லடி படும்...இது உருதி....
தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...
கலயும்போது?