Search This Blog
9.6.09
அரசியல் கட்சிக்கும் திராவிடர்கழகத்திற்குமுள்ள வேறுபாடு என்ன?
மகாராட்டிரத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இயக்கம் இன்றைக்கு இல்லையே ஏன்?
பழைய வரலாற்றை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை
மகாராட்டிரத்தில் ஜோதி பாஃபுலே இயக்கம் 300 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இயக்கம் இன்றைக்கு இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
ராணிப்பேட்டையில் 5.6.2009 அன்று காஞ்சிபுரம் அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
தேர்தலில் நமது பணி
கடந்த தேர்தலிலே நம்முடைய இயக்கத்தின் பணி என்பது மிக முக்கியமாக ஒரு நல்ல பணியாக தமிழ்நாடு முழுவதும் அமைந்தது.
அதுவும் மிகச் சிறப்பாக அமைந்தது. எல்லா இடங்களிலும் எழுச்சியாக இருந்தது. நல்ல அளவிற்கு மற்றவர்கள் எல்லோரும் வியக்கத்தக்க அளவுக்கு திராவிடர் கழகத்தின் பணி அடக்கமாக, ஆழமாக, பயனுள்ளதாக அமைந்தது என்பது நாடறிந்த உண்மையாகும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் - உங்களுக்கெல்லாம் தெரியும். நம்முடைய இயக்கம் சார்பாக தேர்தலுக்காக வெளியிடப்பட்ட இரண்டு நூல்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றிக்கு சிறப்பாக பயன்பட்டி ருக்கின்றன.
இடையிலே நம்முடைய பிரச்சாரம் நம்முடைய தோழர்களுடைய நன்றி பாராட்டாத ஒரு அற்புதமான பணி - இவைகள் எல்லாம் நல்ல வெற்றியைத் தந்திருக்கின்றன.
அரசியல் கட்சிக்கும் நமக்குமுள்ள வேறுபாடு
நம்முடைய இயக்கம் என்பது எண்ணிக்கையிலே குறைந்த எண்ணிக்கை கொண்டவர் கள்தான். அரசியல் கட்சியைப் போல ஆரவாரம் கொண்ட ஓர் இயக்கமல்ல. எண்ணிக்கை யிலே குறைந்த கொள்கைபூர்வமான ஓர் இயக்கம். மற்ற அரசியல் கட்சிகளுக்கும், நமக்கும் உள்ள ஒரு வேறுபாடு என்ன என்று சொன்னால், மற்ற அரசியல் கட்சிகளிலே யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்; பிரியலாம்.
இன்னொரு கட்சிக்குப் போய் சேரலாம். ஆனால் திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே அப்படி யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியாது.
எப்பொழுது வேண்டுமானாலும் வந்து சேர முடியாது. காரணம், யார் கொள்கையை வாழ்க்கை முறையாக ஏற்றிருக்கின்றார்களோ, யார் சுயமரியாதைக் கொள்கையை வாழ்க்கை முறையாக ஏற்றிருக்கின்றார்களோ, யார் தந்தைபெரியார் அவர்களுடைய பகுத்தறிவு நெறியை வாழ்க்கை முறையாக ஏற்றிருக்கின்றார்களோ அவர்கள் மட்டும்தான் இந்த இயக்கத்தவர்களாக, கறுப்புச் சட்டை போடக் கூடிய அந்த உரிமை உடையவர்களாக இருக் கக் கூடிய நிலை இந்த இயக்கத்திற்கு உண்டு.
ரூபாய் கொடுத்தால் உறுப்பினர்
மற்ற கட்சிகளை நான் குறை சொல்லுவதாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அங்கே அய்ந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுத்தால் கட்டணச் சீட்டு உண்டு. உடனே அனுமதி வழங்கி விடுவார்கள். இன்னும் சில கட்சிகளில் தீவிர உறுப்பினர்கள்.
அதிகம் பணம் கொடுத்தால் தீவிர உறுப்பினர்கள் என்று சொல்லக் கூடிய அளவிலே வைத் திருக்கின்றார்கள். ஆனால் நமது இயக்கத்தில் சாதாரண உறுப்பினர், தீவிர உறுப்பினர் என்பதெல்லாம் கிடையாது.
எல்லா உறுப்பினர்களும் கட்டுப்பாடு மிகுந்த உறுப்பினர்களே தவிர, யாரும் தீவிரம் இல்லாத உறுப்பினரும் இல்லை. ஆகவே குடும்பம் குடும்பமாக இருப்பார்கள்.
மற்ற அமைப்புகளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்று சொன்னால், நாம் தேர்தலுக்கு நிற்காதவர்கள். எல்லோருக்கும் இது தெரிந்த உண்மைதான்.
நமக்கிருக்கின்ற மிகப் பெரிய பலம் எங்கேயிருக்கிறதென்று சொன்னால், நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் தேர்தலுக்கு நிற்காத ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம்.
இந்தியாவில் சக்தி வாய்ந்த இயக்கம்
இந்தியாவிலேயே இப்படி ஒரு சக்தி வாய்ந்த மக்கள் இயக்கம் தேர்தலிலே நிற்காமல், பத விக்குப் போகாமல், எந்த விதமான பலனையும் கருதாமல் - எதிர்பார்க்காமல் இருக்கக் கூடிய ஓர் இயக்கம்.
புதிய சமுதாயம் மலர வேண்டும். ஜாதியற்ற சமுதாயம் உருவாக வேண்டும். மூட நம் பிக்கையற்ற சமுதாயம் உருவாக வேண்டும். பெண்ணடிமை நீங்கிய ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். அறிவியல் மனப்பான்மையுள்ள ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். புதியதோர் உலகு செய்ய வேண்டும்.
பேதமிலா பெரு வாழ்வு வாழ வேண்டும் என்பதை மய்யப்படுத்தி இருக்கக்கூடிய ஓர் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு இரண்டு முறைகள் உண்டு. நம்முடைய இயக்கம் வன்முறையை நாடாத இயக்கம்.
இரண்டாவதாக நம் முடைய இயக்கம் வெளிப்படையான இயக்கம். ஒரு திறந்த புத்தகம் போல இருக்கக்கூடிய ஓர் இயக்கம். இங்கே ரகசியமெல்லாம் கிடையாது.
நம்மிடம் ரகசியம் இல்லை
இப்பொழுது கூட்டம் நடத்துகின்றோம். காவல் துறையிலிருந்து உளவுப் பிரிவினர் கூட உள்ளே உட்கார்ந்திருப்பார்கள்.
அல்லது தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். குறிப்பெடுப்பார்கள். நாம் இது ரகசிய கூட்டம், கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று கூட அவர்களை அனுப்புவதில்லை. தெரிந்தும் கூட நாம் அனுமதிக்கிறோம்.
காரணம் நம்மிடம் எந்த ரகசியமும் இல்லை. எழுதிக் கொண்டு போகட்டுமே. அவர்களும் நம் முடைய கொள்கையைக் கேட்டால் நம்முடைய இயக்கத்திற்கு வருவதற்கு வாய்ப்பு இருக் குமே என்றுதான் நாம் கருதக் கூடியவர்கள்.
ஆகவே நம்மிடம் ரகசியம் எதுவும் கிடையாது. இந்த இயக்கம் திறந்த புத்தகம்.
அதோடு நம்முடைய பிரச்சார முறைகள் என்பதிருக்கிறதே இது கடிகாரத்தினுடைய பெண்டுலம் மாதிரி. ஒரு பக்கம் பிரச்சாரம்; இன்னொரு பக்கம் போராட்டம்.
இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தால் முதலில் நாம் பகுத்தறிவாளர்களாக ஆகிறோம். மானமுள்ள சுயமரியாதை வாழ்க்கை சுகவாழ்வு என்ற வாழ்க்கையை நாம் கடைப் பிடிக்கின்றோம்.
இந்த இயக்கத்தில் இருப்பது நம்முடைய சுயநலம் கருதி. சுயநலம் என்றால் பதவி நல மல்ல, அல்லது புகழ் பெற வேண்டும் என்பதல்ல. நம்முடைய இயக்கம் என்று சொன்னால் நாம் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மக்கள். நம் சாதாரண ஒரு தொண்டர் முன்னாலே நம்முடைய தோழர்கள் முன்னாலே மற்றவர்கள் நிற்க முடியாது. அவ்வளவு விசயம் தெரிந்த வர்கள்.
நாள் தவறாமல் படித்தால்
நம்முடைய விடுதலை ஏட்டை நாள் தவறாமல் உண்மை இதழை நாள் தவறாமல் படித்தால், சிறு குழந்தைகள் பெரியார் பிஞ்சு இதழைப் படித்தால், ஆங்கிலம் தெரிந்தவர்கள் மாடர்ன் ரேசன லிஸ்ட் இதழைப் படித்தால் நம்முடைய கொள்கைகள் என்ன என்பதை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இந்தியா பூராவும் அல்ல, உலகம் பூராவும் நம்முடைய இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
மகாராட்டிர மாநிலம் புனேவிலிருந்து ஓர் அம்மையார் வந்திருந்தார். அவர் அரசியல் துறையிலே டாக்டரேட் வாங்கியவர். அவருடைய பெயர் சாந்தி ஸ்ரீ டி.பண்டிட் என்பது.
அதே மாதிரி இன்னொரு அம்மையார் வங்காளத்திலிருந்து வந்திருந்தார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னாலே பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிக்கு.
28ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார்கள்.
அவர்கள் வியப்பாக சொன்ன செய்தி என்ன வென்றால் ஒரு நாத்திக இயக்கம், சமூக நீதியைப் பரப்பக்கூடிய ஓர் இயக்கம், பெண்ணடிமையை ஒழிக்கக்கூடிய ஓர் இயக்கம், தீவிரமாக மக்கள் இயக்கமாக mass movment ஆக இருக்கக்கூடிய இயக்கம் இந்தியாவிலேயே ஏன், உலகத்திலேயே பெரியார் இயக்கத்தைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர, வேறு கிடையாது.
இன்னொரு கருத் தையும் எடுத்துச் சொன்னார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னாலே மகாராட்டிரத்திலே ஜோதி பாஃபுலே அவர்கள் தந்தை பெரியார் மாதிரி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.
இன்றைக்கு அங்கே ஜோதி பாஃபுலே இயக்கம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போனது. அவர்கள் அரசியலுக்குப் போனார்கள். பிறகு அந்த அமைப்பு மறைந்தே போனது.
அடுத்து இரண்டாவது மூன்றாவது வரிசை உருவாகாததால் இன்றைக்கு அந்த இயக்கமே இல்லை. நாங்கள் அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்கின்றோம். அதிலே ஜோதி பாஃபுலேவைப் பற்றி பேசுகிறோம். யார் என்று கேட்கிறார்கள். முதன் முதலில் மகா ராட்டிரத்தில் பள்ளிக் கூடத்தை வைத்ததே அவருடைய மனைவி சாவித்ரி பாஃபுலே.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆண்களுக்கு, பெண்களுக்கு பள்ளிக் கூடம் எழுதப்படிக்க பள்ளிக் கூடம் நூறாண்டுகளுக்கு முன்னாலே ஆரம்பித்தவர் அவர்.
ஏனென்றால் நாமெல்லாம் படிக்கக் கூடாது என்று வைத்திருந்தான். அந்தப் பள்ளிக் கூடத்தை அந்த அம்மையார் வைத்து நடத்தியதால் உயர் ஜாதிக்காரர்கள் எதிர்த்தார்கள்.
நீ பள்ளிக்கூடம் நடத்துவதாலே எல்லோரும் வருகிறார்கள். இங்கே ஜாதி கெட்டுப் போகி றது. சமூகக் கட்டுப் பாட்டை நீ உடைக் கிறாய் என்று சொன்னார்கள்.
புனேயில் மேல் ஜாதிக் காரர்கள், வைதீகர்கள் அதிகம். ஆர்.எஸ்.எஸ். சிற்கு அதுதான் தலைமையிடம். அப்படிப் பட்ட நிலையிலே இந்தப் பள்ளிக் கூடத்தை மூட வேண்டும். இல்லை என்றால் நடப்பதே வேறு என்று ஜோதி பாஃபுலே அப்பாவையே மிரட்டினார்கள். அவருடைய அப்பாவுக்கும் வேறு வழியில்லை. அவர் தனது மகனை அழைத்து நாம் இந்த எதிர்ப்பை எல்லாம் சந்திக்க முடியாது என்று சொல்லி விட்டார்.
சாவித்ரி பாஃபுலே அம்மையார் அவர்கள் தான் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு, பெண்களுக்கு என்று பள்ளிக்கூடத்தை புனேயில் ஆரம்பித்த வர்.
அதற்காக நாட்டு பிரதிஷ்டம் என்று சொல்லி நாட்டை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். அவர் கஷ்டப்பட்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயக்கத்தை வளர்க்க கஷ்டப்பட்டார்.
பார்ப்பனர்கள் நம்மை அடிமை ஜாதிகள் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். 300 வருடத் திற்கு முன்பு மகாராட்டிரத்தில் தோன்றிய இயக்கம், இந்தியா முழுக்கப் பரவியிருந்தால் மிகப்பெரிய அளவுக்கு வடபுலத்திலே பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் புனேயில் இருந்து வந்த பேராசிரியை என்ன சொன்னார்கள் என்றால், இன்றைக்கு நாங்கள் கல் லூரியில் கேட்கிறோம். ஜோதி பாஃபுலே என்றால் யார் என்று தெரியவில்லை. வரலாற்றில் ஒருவரை குறிப்பிட்டுச் சொல்லுகிற மாதிரியான சூழ்நிலை இருக்கிறது என்று சொன்னார்.
அதே மாதிரி நான் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, இங்கர்சால் பிறந்த மாநிலத்திற்குச் சென்றிருந்தேன். அந்த மாநிலத்தில் நான் ஒரு பகுத்தறிவாளர் - பெரியாரிஸ்ட் என்பதை வைத்து ஒரு பிரபலமான வழக்கறிஞர் அவரிடம் பத்து, பதினைந்து வழக்கறிஞர்கள் உடன் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.
என்னை வரவேற்று அங்கு தேநீர் விருந்தெல்லாம் அளித்தார்கள்.
-----------------------தொடரும் ..."விடுதலை" 8-6-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//அரசியல் கட்சிக்கும்,திராவிடர் கழகத்துக்குமுள்ள வேறுபாடு என்ன?//
ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருபொஉ சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
ப்பு,இது ஒரு கேள்வியா?திராவிட அரசியல் கட்சி(அதான் தி மு க),காங்கிரசுக்கு ஜல்லி அடித்து,மஞ்ச துண்டு அய்யாவின் குடும்பம் செழிக்க பாடுபடும் கட்சி.சூரமணியின் தி க மஞ்ச துண்டுக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்து தாடிக்கார தீவிரவாதி கொள்ளை அடித்து விட்டுச் சென்ற சொத்துக்களை மேலும் மேலும் பெருக்க கச்சிதமாக வேலையை செய்யும் கீழ்த்தரமான கழகம்.
இது கூட தெரியாத நீயெல்லாம் சூரமணியின் பாசறை நாயாக கூட இருக்க அருகதையற்ற கேவலமான பிறவி தான்.
பாலா
வீரமணி தலைமையிலான தி.க.-வில் இருந்து கொண்டு கொள்கை பற்றியோ, பகுத்தறிவு பற்றியோ, தமிழர் நலன் பற்றியோ, சுயமரியாதை பற்றியோ, பொதுவாக அரசியல் பற்றியோ பேசுபவர்கள் அனைவரும் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது அடிமைகளாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.
பெரியாரின் பெயரை உச்சரிப்பதற்கே தகுதியற்றவர்தான் மானங்கெட்ட வீரமணி அவர்கள்...
நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழனை கொன்றுகுவித்த காங்கிரசு கட்சிக்கும் அதற்கு துணைநின்ற தி.மு.க.விற்கும் வாக்கு பொறுக்கும் வேலையை செய்துவிட்டு இனமானத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு வெட்டகமாக இல்லையா?
தி.க.-ஒளிவு மறைவு அற்ற இயக்கமா???????????
உங்களுடைய அண்டப்புளுகு ஆகாசா புளுகுக்கு அளவே இல்லையா?
Post a Comment