Search This Blog

23.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-இந்தியா




இந்தியா

ஆய்வு முடிவுகளின் படி இந்திய மண்ணில் பொது ஆண்டுக்கணக்குக்கு சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் சிறப்பான நாகரிகத்துடன் வாழ்ந்திருந்தனர் எனத் தெரி கிறது. அம்மக்கள் திராவிடர்கள் எனவும் அவர்களின் நாகரிகம் திராவிடர் நாகரிகம் எனவும் அந்நாகரிகம் சிந்துச் சமவெளியில் சிறந்து விளங்கியது என்பதால் சிந்துவெளி நாகரிகம் என அழைக்கப்படுகிறது எனவும் ஆய்வாளர்கள் அறுதியிட்டுக்குறிப்பிட்டுள்ளனர். இந் நாகரிகத்தின் சிறப்புமிகு காலம் பொதுக்கணக் குக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் கணித்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகத்திற்குப் பின் வேத நாகரிகம் என ஒன்று தொடர்ந்தது. பொதுக் கணக்குக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கூறப்பட்டதாக ரிக் வேதம் என்ற நூலைக் குறிப்பிடுகின்றனர். இந்தக் காலத்தில் மனிதர்கள் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டனர். இதற்கு மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களே காரணம். இவர்கள் இந்தியாவின் வடபகுதியில் 700 ஆண்டுகள் ஆக்ரமித்திருந்தனர். அதன் பிறகு தெற்கே குடி பெயர்ந்தனர். அங்கிருந்த மக்களிடமிருந்து இரும்புக் கருவிகள் செய்யக் கற்றுக்கொண்டனர். கங்கைக்கரைப் பகுதியில் வாழ்ந்து பல ராஜ்யங்களை அமைத்துக் கொண்டனர்.

கங்கைக் கரையில் அவ்வாறு அமைக்கப் பட்ட 16 அரசுகளில் மகத அரசும் ஒன்று. இந்த அரசு மற்ற அரசுகளைக் காட்டிலும் சிறந்து விளங்கியது. இந்தக் காலக்கட்டத்தில் தான் இந்தியாவில் ஜைன மதமும் பவுத்தமும் தோன்றி வளரத் தொடங்கின. இவை இரண்டும் பார்ப்பனர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் பெரும் சவாலாக விளங்கி ஏராளமான மக்கள் செல்வாக்குடன் விளங்கின.

பொது ஆண்டுக் கணக்கு முன்பு 327 ஆம் ஆண்டு முதல் 325 ஆம் ஆண்டு வரை 3 ஆண்டு களில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பு நடந்தது. அதற்குப் பின் சந்திரகுப்த மவுரியர் என்பார் மவுரியப் பேரரசை நிறுவினார். பார்ப்பன ஆரியர்களால் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்ட மக்களில் நான்காம் வருணத்தாரின் முதல் ஆட்சிப் பேரரசு மவுரியப் பேரரசு எனலாம். இப்பேரரசின் புகழ்பெற்ற அரசன் அசோகர் காலத்தில், இந்தியாவின் தென் பகுதி தவிர ஏனைய பகுதிகள் முழுமையும், மவுரிய சாம்ராஜ்யத்திற்குள் இருந்தது. இந்நாட்டின் கலாச்சார வளர்ச்சிக்கும் சிறப்புறு நிலைக்கும் அசோகர் பெரிதும் பாடுபட்டார். கலிங்கத்தின் மீது (இன்றைய ஒரிசா) அசோகர் படை எதித்துப்போரிட்டு, வென்ற நிலையில் போரில் மாண்ட பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை நினைத்து மனதில் மறுகிய நிலையில் புத்தரின் கொள் கைகள் அவர் நெஞ்சில் நிழலாடி அவரைப் போரிடுவதற்கு எதிரான மன்னராக மாற்றி விட்டன. கொல்லாமைக் கொள்கையை அவரும் அவர் வழித் தோன்றல்களும் பின் பற்றினர்.

அதனாலே அவர்கள், வலுக்குறைவானவர்களாகக் கருதப் பட்டு இருந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்ட புஷ்யமித்திர சுங்கன் எனும் பார்ப்பனப் படைத்தளபதி அரசனைக் கொன்று அரியணையைக் கைப்பற்றி விட்டான். கடைசி மவுரிய மன்னர் பார்ப்பனரால் கொல்லப்பட்டதால் முதல் சூத்திரப் பேரரசு அழிந்தது.

அதன்பிறகு இம் மண்ணில் பிற நாட்டாரின் படையெடுப்புகள் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தன. பொதுக் கணக்குக்கு 180 ஆண்டுகள் முந்தைய காலத்திலிருந்து, மத்திய ஆசியாவிலிருந்து படையெடுப்புகள் நடந்து வடநாடு முழுவதும் பல சாம்ராஜ்யங்கள் எழுவ தும் வீழ்வதுமாக இருந்தன. கிரேக்கர்கள், பார்த்தியன்கள் என பல பேரரசுகளும் அதன்பின் குஷான் அரசும் வீழ்ந்து பட்டன.

மூன்றாம் நூற்றாண்டில் மீண்டும் ஆரிய வம்ச ஆட்சியாக குப்த அரசு தோன்றியது. அதுவும் அழிந்த பிறகு 606 ஆம் ஆண்டு முதல் 647 வரை ஆட்சி செலுத் திய ஹர்ஷவர்த்தன னின் ஆட்சிதான் தொல்லையின்றி நடந்த தொடர் ஆட்சி எனக்கூறலாம். அந்த ஆட்சி கூட சிற் றரசர்களுக்குள் நடந்த அதிகாரச் சண்டைகளினால் ஹர்ஷனின் மறைவுக்குப் பிறகு உடைந்துபோனது. 11 ஆம் நூற்றாண்டு வரை அரசு இல்லாத நிலை (அராஜகம் ANARCHY) நீடித்தது. (அராஜகம் என்றால் கொடுமை எனப்பொருள் கொள்ளப்படுவது சரியல்ல)
வடஇந்தியாவின் நிலை இதுவென்றால் தென் இந்திய நிலை வேறானது. சாளுக்கிய, பல்லவ, சோழ,சேர, பாண்டிய மன்னர்களின் பரம்பரை தென் இந்தியாவை பல்வேறு காலங் களில் ஆட்சி செலுத்தின. தென்னாட்டில் கலை, இலக்கியம், அறிவியல், கணிதம், வானவியல், பொறியி யல், தத்துவம் எனப் பல்துறையிலும் சிறந்து விளங்கிய விற்பன்னர் கள் வளர்ந்தனர். இவர்களை இம்மன்னர்களும் ஆதரித்தனர். வட இந்திய வரலாற்றில் இப் படிப்பட்ட அறிவு வளர்ச்சி ஏற்பட்டதாகச் சான்றுகள் கிடையாது. நடந்தவை முழுக்க யாகம், யக்ஞம், மந்த்ரம், தந்த்ரம் போன்றவை தானே தவிர வேறல்ல.

11 ஆம் நூற்றாண்டில், முகலாயர்களின் படையெடுப்பு முதன் முதலாக இந்தியாவில் ஏற்பட்டது. கஜினி எனும் நகரிலிருந்து முகம்மது என்பார் படையெடுத்து வந்து தாக்கினார். குஜராத் பகுதியில் சோம்நாத் எனும் ஊரில் இருந்த கோயிலில் அபரிமிதமான செல்வம் பதுக்கி வைக்கப் பட்டிருந்ததால் அதனைக் கொள்ளையடிக்கவே படையெடுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, மங்கோலியர்களின் படையெ டுப்பு நடந்தது. 1219 ஆம் ஆண்டில் ஜெங்கிஸ்கான் என்பானின் கொடூரப் படையெடுப்பும், 1397இல் தைமூர்லாங் என்பானின் படையெடுப்பும் நடந்தன.

முகலாயர்களின் வெற்றிக்குப் பிறகு அவர்களின் அடிமைகளான சுல்தான்களின் ஆட்சி நடந்தது. டில்லியில் 1206 ஆம் ஆண்டு முதல் 1290 ஆண்டு வரை இவர்களின் ஆட்சி இருந்தது. அதன்பின் 1526 ஆம் ஆண்டு வரை, பலமுகலாய மன்னர்களின் சுல்தான்கள் ஆண்டனர். கில்ஜி, துக்ளக், சய்யீத், லோடி எனப் பலரின் வமிசங்களைச் சேர்ந்தவர்கள் ஆண்டனர்.

1526 ஆம் ஆண்டு முகலாய மன்னர்களின் ஆட்சியை பாபர் ஏற்படுத்தினார். அவர் காலத்தில் இந்தியா ஒருங்கிணைக்கப்படும் நிலை உருவாகியது. இந்த வமிசத்தின் மிகப்பெரும் கீர்த்தி பெற்ற மன்னராக அக்பர் விளங்கினார். ஷாஜஹான் மன்னரின் காலத்தில் கலாச்சாரச் சிறப்பு உச்ச நிலையை எய்தியது. 1628 ஆம் ஆண்டு முதல் 1658 வரை நீண்ட அவரின் ஆட்சிக் காலத்தில் இந்திய சாரசெனிக் கட்டடக் கலையில் கூட்டுச் சிறப்புச் சின்னமாக விளங்கும் தாஜ்மகால் கட்டப்பட்டது. இதன் அழகும் அமைப்பும் உலகம் முழுமையும் பாராட்டப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.

இருப்பினும் என்ன? தாஜ்மகாலைக் கட்டிய மன்னர் ஷாஜஹானை அவரின் மகன் அவுரங்க சீப் 1658 ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்து துரத்தி விட்டார். அவர் 50 ஆண்டுகள் ஆண்டார். அவருக்குப் பின் வலுக்குறைந்த அரசாக ஆகி விட்டது....

-------------------"விடுதலை" 23-6-2009

0 comments: