Search This Blog
10.6.09
நம்நாட்டில் இரத்தம் சிந்தாமல் புரட்சி வருவதற்குக் காரணம் பெரியார்!!
மற்ற நாடுகளில் ரத்தம் சிந்தி புரட்சி ஏற்பட்டது நமது நாட்டில் ரத்தம் சிந்தாமல் புரட்சி ஏற்பட காரணம் பெரியார் தமிழர் தலைவர் தோழர்களுக்கு தெளிவான விளக்கம்
மற்ற நாடுகளில் ரத்தம் சிந்தித்தான் புரட்சி ஏற்பட்டிருக்கிறது.ஆனால் நம்முடைய நாட்டில் ரத்தம் சிந்தாமலே புரட்சி ஏற்பட்டதற்கான காரணம் தந்தை பெரியார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
ராணிப்பேட்டையில் 5.6.2009 அன்று காஞ்சிபுரம் அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-
இந்த இயக்கம் இருக்குமா?
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று பலபேர் நினைத்தார்கள். ஆனால் இன்றைக்கு என்ன சூழ்நிலை என்று சொன்னால் இந்த இயக்கம் இருக்கும் என்பது மட்டுமல்ல; இந்த இயக்கத்தைப் பார்த்து எதிரிகள் பயப்படுவதைப் போல வேறு எந்த இயக் கத்திலும் கிடையாது.
இந்தியாவிலேயே எங்களுடைய இயக்கம் பெரிய இயக்கம் என்று பி.ஜே.பி காரன் மார் தட்டினான். நாங்கள் தான் மீண்டும் பதவிக்கு வருவோம் என்று சொன்னார்கள்.
சென்ற முறை தமிழ்நாடு தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தமிழ்நாடு முற்றுப்புள்ளி வைத்தது என்றால் அதற்கு அடித்தளம் எங்கிருந்து வந்தது? பெரியாரிலிருந்து வந்தது. அதே மாதிரி இந்த முறையும் பார்த்தீர்களேயானால் மதச்சார் பற்ற மதவெறி அற்ற ஓர் ஆட்சியை உருவாக்கினோம். இடுப்பு உடைந்து போய் கிடக்கிற அளவுக்கு அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை.
ஆக அவர்களுடைய கனவெல்லாம் சிதைந்து போய் இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் - அவர்கள் தோற்றுப் போனபிற்பாடு பேசுகிறான்.
இனிமேல் இந்துத்துவா என்று பேசி இந்த அரசியல் கட்சிகளை எல்லாம் வளர்க்க முடியாது. அவர்கள் சொன்ன கொள்கையை மாற்றிச் சொன்னால் தான் நம்மால் வாழ முடியும் என்று சொன்னார்கள் பாருங்கள்; அந்த எண்ணத்திற்கு அடித்தளம் விதை எங்கேயிருக்கிற தென்றால் நம்முடைய இயக்கம் போட்ட விதை; பெரியார் போட்ட விதை. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகமாக, அதுதான் கலைஞராக கலைஞருடைய வீச்சாக அது தான் தேர்தல் வியூகமாக அமைந்திருக்கிறது.
ஆகவே நாம் எண்ணிக்கையில் ரொம்ப குறைச்சலாக இருப்போம். உடலிலேயே இருதயம் என்பது மிகச் சிறியது தான். ஆனால் அது இயங்கவில்லை என்றால் ஒன்றும் நடக்காது. அதுமாதிரி நம்முடைய இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஓர் இயக்கம் தெளிவாகத் தேவை.
மக்கள் மத்தியிலே இவ்வியக்கம்
மக்கள் மத்தியிலே இந்த இயக்கம் பரவியிருந்தால் இன்றைக்கு நம்நாட்டு மக்கள் உலக மக்களோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு வந்திருப்பார்கள். நாம் தான் முன்னணியில் இருக்கின்றோம். பொருளாதாரத் துறையில் அறிவாளியாக இருந்து பயனில்லை.
இன்னும் மூடத்தனம் இருக்கிறது. இன்னும் பெண்ணடிமை இருக்கிறது. நமது இயக்கம் பாடுபட்டதினுடைய விளைவுதான் சமுதாயத்திலே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் இன்றைக்கு சபாநாயகராக வந்து உட்காரக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார். அவர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுடைய மகள். உடனே பார்ப்பான் என்ன கேட்கிறான்? அவனுடைய ஆத்திரத்தை அவனால் காட்ட முடியவில்லை. எதையும் ரொம்ப கணக்காகச் செய்வான்.
ஜெகஜீவன்ராம் மகள் பற்றி
அவனுடைய பிரச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கே பெரியார் கண்ணாடி தேவை. பெரி யாருடைய நுண்ஆடி தேவை. இன்றைய பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதுகின்றான். ஜெக ஜீவன்ராம் அவர்களுடைய மகள் வந்திருக்கிறார் என்று சொன்னீர்கள்.அந்தம்மா இங்கிலிஷ் ஸ்கூலிலே படித்தார்கள். ஜெகஜீவன்ராம் அந்த அம்மாவை நன்றாகப் படிக்க வைத்தார். அந்த அம்மையார் வெளிநாட்டில் படித்தவர். அவர் என்ன சாலையில் போகிற சாதாரண தாழ்த்தப்பட்டவரா அந்த அம்மையார்! உடனே மேலே வந்து உட்காருவதற்கு என்று இப்படி எழுதி நட்டை கழற்றுகின்றான்.
அந்தப் பெருமை அவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக செய்கின்றான். நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் ஜெகஜீவன்ராம். அவர் பிகார் மாநிலத்தைச் சார்ந்தவர். அவரைப் பற்றி நாம் எல்லா கூட்டங்களிலும் பேசியிருக்கின்றோம். உத்தரபிர தேசத்தில் அங்கு முதலமைச்சராக இருந்து மறைந்தவர் - சம்பூர்ணானந்த் சிலையை ஜெகஜீவன்ராம் அவர்களால் திறக்க முடிய வில்லையே.
ஜெகஜீவன்ராம் வேதனைப்பட்டார்
சம்பூர்ணானந்த் சிலையை அன்றைய இந்திய இராணுவ அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களால் திறந்துவைக்க முடியவில்லையே! அங்கிருந்த பார்ப்பன மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். உடனே சென்னையில் வந்து பேசினாரே. பெரியாரின் மண்ணில் இருந்து நான் பேசுகிறேன். பார்ப்பனர்களுடைய முதுகெலும்பை முறிக்க வேண்டும் என்று சொன்னார்.
இந்த மண்தான் எனக்கு ஆறுதல் என்று சொன்னாரா, இல்லையா? ஆனால் இன்றைக்கு ஜெகஜீவன்ராம் அவர்களது மகள் மீராகுமார் சபாநாயகராக வந்து உட்கார்ந்து விட்டார். எவ்வளவு பெரிய உயர்ந்த பார்ப்பனராக இருந்தாலும் யோவ் உட்காரய்யா, பேசாதே என்று சொல்லக்கூடிய அதிகாரம் அந்த அம்மையாரிடம் இருக்கிறது.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு உயர்ந்த ஜாதிக்காரனை உட்காரச் சொல்லக் கூடிய அதிகாரம் வந்திருக்கிறது. அது மட்டுமல்ல; ஆண் எஜமானன். பெண் அடிமை என்று சொன்ன சமுதாயத்தில் இந்தியாவினுடைய சபாநாயகராக வந்திருக்கின்றார்.
மற்றநாடுகளில் ரத்தம் சிந்தி புரட்சி - இங்கோ....
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் சமுதாய மாற்றம் இருக்கிறது பாருங்கள். இதெல்லாம் வெளி நாடுகளில் இன்னொரு நாடுகளில் இரத்தம் சிந்தி தான் வந்திருக்கிறது. ஆனால் நம்முடைய நாட்டில் இரத்தம் சிந்தாமல் வருவதற்குக் காரணம் பெரியார்! பெரியார்! பெரியார்! (கைதட்டல்)
ஆக அப்படிப்பட்ட இந்த சமுதாயக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அந்தக் கொள்கைக்கு நல்ல அளவுக்கு ஆதாரத்தைப் பரப்ப வேண்டுமென்றால் மற்ற மற்ற வழிகளில் பரப்ப வேண்டும். அதற்கு நமது அய்யா அவர்கள் கொடுத்த வழி நல்ல வாய்ப்பாக விடுதலை ஏடுதான்.
விடுதலைக்கு 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாட இருக்கின்றோம். 75 ஆண்டுகள் விடுதலை தொடர்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம்.
மற்ற பத்திரிகைக்கும், விடுதலைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், விடுதலையில் அக்கப் போர் செய்திகள் இருக்காது. அங்கு குத்தினார்கள்; இங்கு குத்தினார்கள்; அங்கே கொன்றார்கள். என்றெல்லாம் இருக்காது. மற்ற பத்திரிகைகளில் 5 நிமிடத்தில் 10 நிமிடத் தில் 15 நிமிடத்தில் தலைப்பை மட்டும் படித்துவிட்டு கீழே போட்டு விடலாம். ஆனால் விடு தலையை அப்படி கீழே போட முடியாது. கிட்டதட்ட அதைப் படித்து முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும்.
விடுதலையில் செய்தி வந்தால்
மற்ற பத்திரிகைகளில் வருகின்ற செய்தியைப் பற்றி அரசாங்கங்கள் கவலைப் படாது. விடுதலையில் கட்டம் கட்டி ஒரு பெட்டிச் செய்தி வந்தால் அதன் மூலம் மறுவாழ்வு பெற் றவர்களும், புதுவாழ்வு பெற்றவர்களும் ஏராளம்.
காரணம் விடுதலைக்கு அந்த சக்தி உண்டு. ஒரு சிறு பொறி. ஒரு குண்டு எப்படி கோட்டையைத் தாக்குகிறதோ அது மாதிரியான அளவுக்கு விடுதலை ஒரு கணை. இந்த மாதிரி ஓர் அற்புதமான கருவி. எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறது.
அய்யா அவர்களிடம் மக்கள் கொடுத்த 101 காலணாவையும் பத்திரப்படுத்தி, நீங்கள் மாலைக்கு என்று கொடுத்த பணத்தை எல்லாம் பத்திரப்படுத்தி அதை முழுக்க அறக்கட் டளையாக்கி, அந்த அறக்கட்டளை சார்பாக விடுதலை எவ்வளவு நட்டமானாலும் அந்த நட்டத்தைத் தாங்கி நடத்தலாம் என்று சொன்ன பிற்பாடு இன்றைக்கு படிப்படியாக விடுதலை வளர்ந்து நல்ல அளவுக்கு முன்னேறியிருக்கிறது.
பல ஊர்களில் பல பதிப்புகள் வரும்
சென்னையில் மட்டுமல்ல திருச்சியில் பதிப்பை ஏற்படுத்தி நடத்திக் கொண்டு வருகின்ற சூழ் நிலையையும் நாம் காணுகின்றோம்.
இன்னும் அது வளர்ந்தது என்று சொன்னால் வேலூரில் வரலாம். கோவையில் வரலாம். மற்ற இடங்களில் வரலாம். இன்னும் பல இடங்களில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த பத்திரிகை மட்டும் வளர்ந்துவிட்டால் இந்தியாவிலேயே மூட நம்பிக்கை நோய் இருக்காது. தென்னாட்டில் அதற்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படும். மக்களிடம் நல்ல கருத்துகளை உருவாக்கக் கூடிய பத்திரிகை விடுதலை. மற்ற பத்திரிகைகள் எல்லாம் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பது - ஜோசியம், சினிமா அந்த மாதிரி.
ஒரு பக்கத்தை எடுத்துப் பார்த்தால் அரை நிர்வாணப்படம் இருக்கும். விடுதலையில் இந்த மாதிரி எந்தப் படமும் இருக்காது. ஆக இதனுடைய தனித்தன்மையை நாம் காப்பாற்றுகின் றோம்
நமக்கு நல்ல மரியாதை உண்டு
மருந்து சாப்பிடும் பொழுது அது கசப்பாக இருந்தாலும் மருந்து உடலுக்கு நன்மை செய்யும். ஆனால் இனிப்பை சாப்பிடும் பொழுது பல இடங்களில் சர்க்கரை வியாதியை உண்டாக்கும். ஆக வித்தியாசத்தை நல்ல அளவுக்குப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியிலே எடுத் துச் சொல்ல வேண்டும்.
நீங்கள் யாரை அணுக விரும்புகிறீர்களோ அவர்களை அணுகி ஒரு சந்தாவை வாங்க விரும் பினால் தருவார்கள். நாம் ரொம்ப எளிமை யாகவே அதை செய்யலாம்.
முதலில் நமது தோழர்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். நம்மைப் பற்றி பொது மக்கள் மத்தியிலே நல்ல மரியாதை இருக்கிறது. நமது தோழர்களைப் பற்றி மக்களிடம் தெளிவான எண்ணம் இருக்கிறது. இவர்களிடம் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட, அவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்; எதற்காகக் கொடுக்கிறோமோ அங்கேதான் போய்ச் சேரும் என்று நினைப்பார்களே தவிர மற்றவர்களிடம் அப்படி அல்ல.
அந்தஅளவுக்கு நமது தோழர்கள் நாணயமானவர்கள்; கட்டுப்பாடு மிகுந்தவர்கள். ஒருவர் ஒருமுறை படித்து விட்டால் சில அரசியல் கட்சிகள் மாதிரி போய் மிரட்டிப் பணம் வாங்குபவர்கள் அல்லர். நீ கடை வைத்திருக்க மாட்டாய். நீ வெளியே வரமாட்டாய் இவ்வளவு கொடு. இந்தா சீட்டைப் போட்டு விட்டேன் என்று சொல்லுகின்ற வேலை எல் லாம் கிடையாது. இனி மேல் அந்த வேலை எல்லாம் குறைந்து விடும்.
நீங்கள் பத்துப் பேரை அணுகுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒன்பது பேர் கொடுக்க வில்லை. ஒருத்தர்தான் கொடுத்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஒருவர் நம்மு டைய பத்திரிகையைப் படித்தார் என்றால், அதன் பிறகு அந்தப் பத்திரிகையைப் பார்க்காமல் இருக்க முடியாது. அது தான் நமது பத்திரிகையில் இருக்கின்ற தனி சிறப்பு.
ஒரு மாதம் தொடர்ந்து படிக்க வேண்டும். படிக்க வைக்க வேண்டும். ஒரு முறை வாங்கிவிட்டால் படிப்பார்கள். வாங்கி விட்டோமே என்பதாலே படிக்கக் கூடிய அந்தச் சிந்தனை தானே வரும். நமது இயக்கப் பிரச்சாரத்தை நாம் தீவிரமாக நடத்த வேண்டும்.
---------------தொடரும் ...."விடுதலை" 10-6-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment