Search This Blog

16.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- எதியோப்பியா


எதியோப்பியா

மனித குலத்தின் ஆதி மிகப் பழைமையான மிச்சங்கள் உலகில் எத்தியோப்பியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டவை. எத்தியோப்பியாவின் பழைய பெயர் அபி சீனியா என்பதாகும். கிறித்துவப் பழங்கதைகளில் வரும் சாலமன் மன்னரும் ஷீபா அரசியும் இந்நாட்டை ஆண் டார்கள் என வரலாறு கூறுகிறது. இந்த அரசவமிசம் சோலோமோனிக் வமிசம் ஆகும்.
ஒரு குழந்தைக்கு இரு பெண்கள் தாய் என உரிமை கொண்டாடிய போது, அறிவார்ந்த சாலமன் மன்னன், இரண்டாக அரிந்து ஆளுக்கு ஒரு பகுதியைத் தந்துவிடலாம் என்று அறிவித்தார்; ஒரு பெண் ஏற்றுக் கொண்டாள், மற்றவளோ, வேண்டாம் என் குழந்தையைக் கூறு போட வேண்டாம், முழுவதுமாக அவளிடமே தந்து விடுங்கள் எனக் கூறினாள் என்றும் கதை. அந்த வகையில் இரண்டாமவள் தான் உண்மையான தாய் எனக் கண்டு பொய்த் தாய்க்குத் தண்டனை தந்தவன்தான் மன்னன் சாலமன். அவன் ஆண்ட நாடு எதியோப்பியா.


பொதுக்கணக்கு ஆண்டுக்கு முன் 7ஆம் நூற்றாண்டில், கீஸ் மொழி பேசும் மக்கள் டாமாட் பேரரசை எதியோப்பியாவின் வட பகுதியில் அமைத்தனர்.

இதே காலத்தில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு செமிட்டிக் இன மக்கள் அரேபியா பகுதியி லிருந்து படையெடுத்து வந்து அக்சும் இனப் பேரரசை எதியோப்பியாவில் நிறுவினர்.
1530இல் எதியோப் பியாவின் பெரும் பகு தியை முசுலிம் தளபதி அகமது கிரான் கைப் பற்றினார். 1868இல் பிரிட்டன் நாட்டுப் படைகள் எதியோப்பியாவை வெற்றி கொள்ள வேண் டும் என்ற நோக்கோடு படையெடுத்து வந்து தாக்கி டெவோட்ரோஸ் பேரரசை வென்று விட் டனர். அவரைப் பிரிட்டிஷ் படைகள் சிறைப் பிடித்து விடக் கூடாது என்கிற வைராக்கியத் தில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் 1889இல் ஷோயா நாட்டு மன்னர் சக்ரவர்த்தி மெனலிக் ஐஐ என்று முடிசூடிக் கொண்டார். இரண்டு நாடுகளும் நட்புடன் விளங்கும் என்ற உறுதிப்பாட்டை இத்தாலி நாட்டுடன் இவர் செய்து கொண்டார். இதற்கு மாறாக, இத்தாலி 1895 இல் எதியோப்பியா மீது படையெடுத்தது. அட்வா என்ற இடத்தில் நடந்த போரில், இத்தாலியை எதியோப்பியா தோற் கடித்தது. முன்பு செய்து கொண்ட நட்புறவு ஒப்பந்தத்தை எதியோப்பியர்கள் முறித்துக் கொண்டனர்.

மீண்டும் 1936இல் இத்தாலியர்கள் எதியோப்பியா மீது படை யெடுத்தனர்.
எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவைப் பிடித்துவிட்டனர். தலைநகரிலிருந்த பேரரசர் ஹெய்லி சலாசி ஓடிப்போக நேர்ந்தது. இத்தாலியின் மன்னர் எதியோப்பியாவின் மன்னராக முடிசூடிக் கொண்டார். பின்னர் எதியோப்பியா, எரித்ரியா, மற்றும் இத்தாலி வசம் இருந்த சோமாலிலாந்து ஆகியவற்றை ஒன்றாக்கி இத்தாலியக் கிழக்கு ஆப்ரிக்கா எனும் புதிய நாட்டை உருவாக்கினார்.

1941இல் பிரிட்டிஷ் படையினரும் நேச நாட்டுப் படையினரும் இணைந்து எதியோப்பிய மக்களுடன் சேர்ந்து சண்டையிட்டு இத்தாலியப் படைகளைத் தோற்கடித்து ஹெய்லி சலாசியை அரியணையில் மீண்டும் அமர்த்தினர்.

1952இல் அய்.நா. மன்றம் எரித்ரியாவை எதியோப்பியாவுடன் இணைத்தது. 1962இல் எரித்ரியாவை எதி யோப்பியாவுடன் இணைத்து எதியோப்பியப் பெருநாடு என ஆக்கினார். 1973இல் எழுந்த பஞ்சத்தால் அந்த ஆண்டும் மறு ஆண்டும் 2 லட்சம் மக்களுக்கு மேல் பட்டினியால் செத்துப் போனார்கள். 1974 செம்படம்பர் மாதத்தில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஹெய்லி சலாசி பதவி நீக்கம் செய்யப்பட்டு, ராணுவத் தளபதி டெபரி பென்டி என்பவர் அதிபர் ஆனார்.

அதைத் தொடர்ந்து அரசமைப்புச் சட்டம் முடக்கப்பட்டது. எதியோப்பியா சமதர்ம நாடாக அறிவிக்கப்பட்டது. தற்காலிக ராணுவ ஆட்சிக் குழு அமைக்கப்பட்டு நிருவாகம் நடைபெற்றது. இந்தக் குழு டெர்க் என்றழைக்கப்பட்டது. சிறையில் வைக்கப்பட்டிருந்த மன்னர் ஹெய்லி சலாசி 1975இல் கமுக்கமான காரணங்களினால் இறந்து போனார். ராணு வத் தளபதி பென்டியும் 1977இல் கொல்லப்பட்டு விட்டார்.

1990இல் எதியோப்பியாவுக்கும் எரித்ரியாவுக்கும் எல்லைத் தகராறு எழுந்தது. முழு அளவிலான போராக இப்பிரச்சினை வெடித்தது. 2000இல் இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்து அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான எதியோப்பியா 11 லட்சத்து 27 ஆயிரத்து 127 சதுர கி.மீ. பரப்பு உள்ளது. இதன் பகுதிகளில் தங்கம், பிளாட்டினம், செம்பு போன்ற உலோகக் கனிவளம் மிகுந்துள்ளது. இயற்கை வாயு, நீர்மின் வளம் உற்பத்திப் பொருள்களாகும்.
ஏழரைக் கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. பாதிப்பேர் இசுலாமியர்கள். எதியோப்பியப் பழைமைவாத மதம் மீதிப்பேர் எனலாம்.

அரபி, இங்கிலீஷ் தவிர நிறைய மொழிகள் பேசுகின்றனர். 43 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். அதிபராக கிர்மா ஓல்ட்குளோஜிஸ் என்பார் 2001 முதல் உள்ளார் பிரதமராக மெலிஸ் ஜெனவி என்பார் 1995 முதல் இருக்கிறார்.

மக்களில் பாதிக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். இந்த நாட்டில் ரயில் பாதை 681 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே உள்ளது. 34 ஆயிரம் கி.மீ. தூரம் மட்டுமே சாலைகள் போடப் பட்டுள்ளன. நான்கரை லட்சம் தொலைபேசிகள் மட்டுமே உள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் நாட்டின் வறுமை நிலையை விளக்கும்.

ஆனாலும் எதியோப்பியா, பெருமைப் படத்தக்க ஒன்று உண்டு. உலகின் வேகமான ஓட்டப் பந்தயக்காரர்களாகவும் தொலை தூர ஓட்டப்பந்தயங்களில், 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் தூரங் களில், மராத்தான் ஓட் டங்களில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் இந்த நாட்டுக்காரர்கள். வெறுங்காலுடன் ஓடும் வீரர்கள், நாட்டின் வறுமையை வெளிப்படுத்தினாலும், திறமையைக் காட்டும் வீரர்கள்.

---------------------"விடுதலை" 14-6-2009

0 comments: