Search This Blog

18.6.09

பெரியாரை ஜாதியால் அடையாளப்படுத்திய குமுதம் இதழ் எரிந்து சாம்பலானது!
கிளர்ந்து எழுந்தது திராவிடர் கழக இளைஞரணி- மாணவரணி
தந்தை பெரியாரை ஜாதியால் அடையாளப்படுத்திய
குமுதம் இதழ் எரிந்தது! எரிந்து சாம்பலானது!

தடையை மீறிக் கழகத் தோழர்கள் கைது

ஜாதி ஒழிப்பு சரித்திர நாயகரான தந்தை பெரியாரை ஜாதியைக் கூறி அடையாளப்படுத்திய - கொச்சைப்படுத்திய குமுதம் இதழை, தடையை மீறிக் கொளுத்திய திராவிடர் கழக இளைஞரணி - மாணவரணி தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

குமுதம் இதழ் தொடர்ந்து ஜாதியை மய்யப்படுத்தி கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறது. இதுவே கண்டிக்கத்தக்க இழிவான செயலாகும்.

17.6.2009 நாளிட்ட குமுதம் வார இதழில் பெரியார் ஈ.வெ. ராமசாமி தமிழகத்திற்கு நாயக்கர் சமுதாயம் கொடுத்த மாபெரும் கொடை என்று எழுதியுள்ளது.

ஜாதி ஒழிப்பு வீரர் - பகுத்தறிவுப் பகலவன், பெண்ணடிமையை ஒழிக்க வந்த பெம்மான், சமூகநீதி காத்த சரித்திர நாயகர் என்று கொள்கை ரீதியாக அறிமுகப்படுத்த ஆயிரம் ஆயிரம் காரியங்கள் காரணங்கள் இருக்கின்றன.

நாட்டு மக்களும் தந்தை பெரியாரை அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள் - மதிக்கிறார்கள்.


ஆனால் அரைகுறை ஆடையில் பெண்களை அட்டைப் படமாகப் போட்டு காசு சம்பாதிக்கும் குமுதம் இதழோ, ஜாதி ஒழிப்பு நாயகரை ஜாதியைச் சொல்லி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், மன்னிப்புக் கோர வேண்டும் என்று வற்புறுத்தியும், நேற்று (17.6.2009) காலை 11 மணிக்கு சென்னை - புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குமுதம் இதழின் அலுவலகம்முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக இளை ஞரணி, மாணவரணி சார்பில் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறிக் கழகத் தோழர்கள், இளைஞரணி, மாணவரணி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது, காவல்துறையினர் கைது செய்தனர் - பொதுமக்களும் சேர்ந்து குமுதம் இதழைக் கொளுத்தினர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் அயனாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக் கப்பட்டனர்.

முழக்கங்கள்

இளைஞரணி தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார், கவிஞர் சிகாமணி ஆகியோர் கண்டன முழக்கங்களை முழங்கினர்.

ஜாதி ஒழிப்பு சரித்திர நாயகர் பெரியார் வாழ்க!

ஜாதி ஒழிப்பு நாயகரை ஜாதியின் பெயரால் அறிமுகப்படுத்திய கோணல் புத்தி குமுதத்தைக் கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!

ஒழிப்போம் - ஒழிப்போம்; ஜாதியை ஒழிப்போம்! படைப்போம் படைப்போம் சமத்துவம் படைப்போம்!

தமிழர்தலைவர் வீரமணி தலைமையிலே ஒழிப்போம், ஒழிப்போம் ஜாதியை ஒழிப்போம்! என்ற முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன.


கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ் தலைமை வகித்தார். மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் நம்பியூர் சென்னியப்பன் முன்னிலை வகித்தார்.

கண்டன ஆர்ப்பாட்டம் புரசைவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

-------------------"விடுதலை"18-6-2009

5 comments:

அக்னி பார்வை said...

ரா மணிகண்டன் எழுதும் அந்த தொடர் என்னை கொஞ்ச நாட்களாகவெ நெளிய வைத்தது, இன்று கொஞ்சம் உணர்ச்சிவசபடவே வைத்துவிட்டது..

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அறம் செய விரும்பு said...

தோழர் மதிமாறன் (http://mathimaran.wordpress.com/2009/04/06/article-184/)ஏற்கனவே இந்த தொடரை நீக்க சொல்லி பதிவிட்டு இருந்தார் . அப்போதே எல்லோரும் ஓங்கி குரல் எழுப்பிஇருந்தால் இந்த விளைவு இருந்திருக்காது. தமிழனுக்கு பட்டால் தான் புத்தி வரும்போல !!!

hayyram said...

”தமிழ் காட்டுமிராண்டிக் காலத்துமொழி”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) குமுக எதிரிகள்”
(நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்)

”தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?”

”இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

இதுதான் தமிழைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கணிப்பு. இன்று தமிழுக்காக போராடுகின்ற தமிழறிஞர்கள் முதலில் எதிர்க்க வேண்டியவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(இதிலே இன்னொரு விஷயம் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.)

தமிழைப் பற்றி இவ்வளவு தரக்குறைவுடன் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழியைப் பற்றி பெருமையாக கூறிய கருத்துக்களைப் பற்றி பார்ப்போம்.

- தொடரும்

சில குறிப்புகள்:

01. ஈ.வே. ராமசாமி நாயக்கர் கன்னடர்…

பெரியார் ஈ.வே.ரா நாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம் அவரது வீட்டு மொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டார்.

டாக்டர் ம.பொ. சிவஞானம்
நூல்: தமிழகத்தில் பிறமொழியினர்

02. கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதியா?

சிலர் இலக்கிய ஆராய்ச்சி முறைக்கு மாறாகக் குறுக்கு வழியிலே புகுந்து கம்பனைப் பற்றி ஏதேதோ எழுதுகின்றனர். பேசுகின்றனர். அரசியல் கொள்கை, இன வெறுப்பு, பண்பாட்டு வெறுப்பு இவைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கம்பன் மீது காய்ந்து விழுகின்றனர்.

‘கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதி: தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி. தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. நாட்டுப்பற்றில்லாதவன். மொழிப்பற்றில்லாதவன். கலாசாரப் பற்றில்லாதவன்’ என்றெல்லாம் ஒரு சிலர் ஓங்கிப் பேசுகின்றனர். இது உண்மைக்கு மாறான பேச்சென்பதே கம்பனை நடுநிலையிலிருந்து கற்றவர்களின் கருத்து.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்.

03. கம்பன் காவியத்தைக் கொளுத்தலாமா?

கம்பன் மீது இன்று சிலர் காய்ந்து விழுகின்றனர். தமிழின் சிறப்பைத் தரணியிலே விளக்கி நிற்கும் இக்காவியத்தை கொளுத்த வேண்டும் என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். கம்பன் காவியத்தைக் கையினால் தொடக்கூடாது என்றும் பேசுகின்றனர்.

சிறந்த காவியங்கள் - உயர்ந்த இலக்கியங்கள் - எந்தக் காலத்திலும் மக்கள் உள்ளத்திலிருந்து ஓடிப் போய்விடமாட்டா. அவைகளை அழிக்க முயன்றவர்கள் யாராயினும் வெற்றி காணமாட்டார்கள். இந்த உண்மையை நாம் தமிழ் இலக்கிய வரலாற்றிலே காணலாம்.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்

அறம் செய விரும்பு said...

அய்யா "ஹேராம்"!!! பெரியாரின் வார்த்தைகளை மட்டும் ஆதாரங்களில் இருந்து எடுத்துக்கொண்டு விளக்கம் சொல்லும் முன்னர் நீங்கள் அவர் சொல்ல வந்த முழுபொருளையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தமிழை சரியாகப் படிக்காமல் சுயமரியாதை தெரியாமல் மாட்டு மந்தைகளைப் போல "மட்டமான கருத்துகளை உள்வாங்கிப்" படிக்காமல் வர்ணாசிரமக் கருத்தும், இந்து மடக் கொள்கையும் படிக்கும் மக்களை எண்ணி வேதனை பட்டுக் கூறியது. ”தமிழ் காட்டுமிராண்டிக் காலத்துமொழி” என்று சொன்னார்.

கம்பனின் மொழி அவன் கையாண்ட விதம் அனைத்தும் அழகுதான் ஆனால் அவன் கருத்துதான் ( இந்து மதம் ) கவலைக்கு உரியது.

தமிழே தனது மூச்சாக கொண்டு கடைசி வரை வாழ்ந்து தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொன்ன " பாரதி தாசனை " சந்தேகிக்கும்
உமது கருத்துக்கு கண்டனம்.

பெரியார் கன்னடனாக இருந்தாலும் அவரின் தமிழ்பற்றை பற்றி ஆரியர் சொல்வது "ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்" என்று நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை.