Search This Blog

12.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-டொமினிசியா-டொமினிகன் குடியரசு-ஈக்வடார்-எல் கால்வடார்


டொமினிசியா

கிறிஸ்டபர் கொலம் பசால் பெயர் சூட்டப்பட்ட இந்நாட்டில் 1632இல் முதலில் குடி யேறியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். 1748ஆம் ஆண்டிலிருந்து 1805 வரை பிரான்சும் பிரிட் டனும் இந்நாட்டில் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின. அப்போதெல்லாம் டொமினிகா, லீவார்டு தீவுகளின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. 1771இல் தான் தனிக் குடியேற்ற நாடாகியது.

1969இல் அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட சுதந்திர நாடாகியது. கரிபியன் தீவுக் கூட்டத் தைச் சேர்ந்த இத்தீவின் பரப்பு 754 சதுர கி.மீ. மட்டுமே. மக்கள் தொகை 69 ஆயிரம். இவர்களில் 77 விழுக்காடு ரோமன் கத்தோலிக்க மதத்தினர். மீதிப்பேர் புரொடஸ் டன்ட் பிரிவினர். 94 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள்.

3.11.1978இல் விடுதலை அடைந்த இந்நாடு காமன்வெல்த் அமைப்பில் சேர்ந்தது. இதன் அதிபர் நிக்கோலஸ் லிவர்பூல். பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் என்பவர்.

டொமினிகன் குடியரசு

இந்நாட்டைக் கண்டு பிடித்த கொலம்பஸ் இதற்கு லாஎஸ்பனோலா என்ற பெயரை வைத் தான். இதன் முதல் வைஸ்ராய் ஆக கொலம்பசின் மகன் டீகோ நியமிக்கப்பட்டான். 1967இல் இந்நாட்டின் கிழக்குப் பகுதித் தீவு பிரான்சு நாட்டுக்கு அளிக்கப்பட்டது. ஹைட்டி என்று அழைக்கப்படும் பகுதியாகும் இது. 1809இல் கிழக்குப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஸ்பெயின் நாட்டுக்குத் தரப்பட்டது. 1821இல் இந்தப் பகுதி சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது.

ஹைட்டி நாட்டுத் துருப்புகள் படையெடுத்துக் கைப்பற்றி 1844 வரை ஆட்சி செய்தது. ஆனாலும் கலவரங் களும் குழப்பங்களும் ஓயாமல் இருக்கவே, அமெரிக்கா நுழைந்தது. தன் படையை அனுப்பி 1934 வரை ஆதிக்கம் செலுத்தியது.

ஆனாலும், தற்போது அந்நாட்டு மக்களாலே ஆளப்படும் பிரதிநிதித்துவக் குடியரசாக இருக் கிறது. லியோனல் பெர்னான்டஸ் ரெய்னா என்பவர் அதிபராக இருக்கிறார். பிரதமர் பதவி கிடையாது.

48 ஆயிரத்து 730 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 92 லட்சம். இவர்களின் 95 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிகர். ஸ்பானிஷ் மொழி பேசுகின்றனர். 85 விழுக்காடு படிப்பறிவு பெற்றவர்.

கிழக்கு திமோர்

கிழக்கு திமோரில் போர்த்துகீசியர்கள் 1520இல் குடியேறினர். இரண்டு ஆண்டுகள் கழித்து ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் வந்தனர். 1975 வரை போர்த்து கீசியர்களின் ஆட்சியில் தான் இருந்தது. 1975இல் கிழக்கு திமோர் ஜனநாயகக் குடியரசு ஆட்சி ஏற்பட்டது.

ஆனாலும் பெற்ற சுதந்திரத்தின் ஆயுள் குறைவாகவே இருந்தது. இந்தோனேசியப் படைகள் தாக்கி நாட்டைப் பிடித்துக் கொண்டது. தன் நாட்டின் ஒரு பகுதி எனக் கிழக்கு திமோரை அறிவித்தது. இதனை உலக நாடுகள் ஏற்க மறுத்துவிட்ட நிலையில் உலக நாடுகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து பொது வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்தது. தம் எதிர்காலத்தை அந் நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றது. பெரும்பான்மை மக்கள் சுதந்திர நாடாகவே இருக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தனர். இறுதியில், ஒருவாறாக 2002இல் கிழக்கு திமோர் மீண்டும் விடுதலை அடைந்தது.

15 ஆயிரத்து 7 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டின் மக்கள் தொகை 10 லட்சத்து 63 ஆயிரம். 90 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிகர். முசுலிம்கள் 4 விழுக் காடும் புரொடஸ்டன்ட் கிறித்துவர் 3 விழுக்காடும் உள்ளனர். இந்துக்கள், பவுத்தர்களும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். 69 விழுக்காடு மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்.
தங்கம், பெட்ரோல், இயற்கை வாயு, மாங்கனீசு, சலவைக்கற்கள் கிடைக்கும் இயற்கை வளம் உடைய மலைப் பாங்கான நாடு. இதன் அதிபர் ஜோஸ் அலெக்சாண்டர் குஸ்மாவோ. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களைக் கூட ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் படைத்தவர். பிரதமராக மரிபின் அமுடே அல்காடிரி என்பார் உள்ளார். இந்தோனேசிய நாட்டுச் சட்டங்களைத் தழுவி அய்.நா. சபை வடித்துக் கொடுத்த சட்டமுறை பின்பற்றப்படுகிறது.

டெடும் மொழியும் போர்த்துகீசிய மொழியும் ஆட்சி மொழிகள். இந்தோனேசிய மொழியும் இங்கிலீசும் பேச்சு வழக்கில் உள்ளன.

ஈக்வடார்

ஈக்வடார் நாட்டை இன்கா இனத்தவர் 15ஆம் நூற்றாண்டில் வெற்றி கொண்டனர். அது வரை அந்நாட்டைப் பூர்வகுடிகளே ஆண்டு வந்தனர். 16ஆம் நூற் றாண்டில் ஸ்பெயின் நாட்டினர் படையெடுத்து இன்கா வமிசத்தை விரட்டிவிட்டு, தங்கள் ஆளுகைக்குள்பட்ட பெருநாட்டோடு இணைத்துவிட்டனர்.

1822இல் ஈக்வடார், ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது. பின்னர் கிரான் கொலம்பியா நாட்டுடன் இணைந்தது. தற்போதைய கொலம்பியா, பனாமா, வெனிசுலா ஆகிய நாடுகளும் கூட கிரான் கொலம்பியாவுடன் இணைந்து தான் இருந்தன. 1830 இல் கிரான் கொலம்பியாவிடமிருந்து ஈக்வடார் பிரிந்தது. ஈக் வடார் நாட்டுக்கும் பெரு நாட்டுக்கும் சுமார் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்புப் பகுதி பற்றித் தகராறு இருந்து வந்தது. அந்தப் பகுதியை 1942இல் ஈக்வடார் அரசு பெருநாட்டுக்குத் தந்துவிட்டது.

தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நாடு 2 லட்சத்து 83 ஆயிரத்து 560 சதுர கி.மீ. பரப்புள்ளது. இங்கு ஒரு கோடியே 36 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 95 விழுக் காடு ரோமன் கத்தோலி கர்கள். ஸ்பானிஷ் மொழி ஆட்சி மொழியாகும். சுமார் 93 விழுக்காடு மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.
24.5.1822இல் விடு தலை பெற்ற இந்நாட் டின் அதிபராக ஆல்பிரடோ பலாசியோ உள்ளார். இவர்தான் ஆட்சியின் தலைவரும் ஆவார்.

எல் கால்வடார்

11ஆம் நுற்றாண்டில், அஸ்டெக் இனவழியைச் சேர்ந்த பிபில் இந்தியர்கள் எல்சால்வடார் நாட்டில் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1520இல் இந்நாட்டிற்கு ஸ்பெயின் நாட்டவர் வந்தார்கள்.
1821இல் எல்சால்வடார் நாடு ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது. ஆனாலும் 1931 முதல் 1979 வரை ராணுவத் தலைவர்கள் தொடர்ச்சியாக இந் நாட்டை ஆண்டு வந்தனர்.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 21 ஆயிரத்து 40 சதுர கி.மீ. மட்டுமே. இதன் மக்கள் தொகை 69 லட்சம். மக்களில் கத்தோலிக்க கிறித்துவ மத நம்பிக்கை கொண்டவர்கள் 83 விழுக்காடு, 80 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றோர்.
குடியரசு நாடான எல் சால்வடாரின் அதிபராக எலியாஸ் அன்டோனியோ சாகா கான்ஸ் லாஸ் 2004 முதல் இருக்கிறார். இவரே ஆட்சியின் தலைவரும் ஆவார்.

------------------நன்றி:-"விடுதலை" 12-6-2009

0 comments: