Search This Blog

17.6.09

ஈழத்தமிழர்களுக்கு உடனடித் தேவை! அரசியல், சம உரிமையே!


ஈழத்தமிழர்களுக்கு உடனடித் தேவை!
அரசியல், சம உரிமையே!

விளம்பர வெளிச்சத்துக்கும்,
அவாள் நுழைவுக்கும் இந்து ஏடு முயற்சி
தமிழர் தலைவர் அறிக்கை


ஈழத்தில் தமிழர்களுக்கு உடனடியாகத் தேவை அரசியல் தீர்வும் - சம உரிமையும்தானே தவிர, அதனைத் திசை திருப்பிட, விவசாயப் பணிகள் தொடரப்படவேண்டும் என்று இந்து ஏடு எழுதுவது வெறும் விளம்பர வெளிச்சத்துக்கே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:-

இலங்கைவாழ் தமிழர்களுக்கு அடிப்படையான வாழ்வுரிமை, கொல்லப்பட்டவர்களைத் தவிர எஞ்சியுள்ள தமிழர்களுக்கு சுதந்திரக் காற்றுகூட சுவாசிக்கக் கிடைக்கவில்லை இன்னமும்!

கொடுமையான முகாம்கள்!

சொந்த நாட்டிலேயே ஆடு, மாடுகளைவிடக் கேவலமான நிலையில், இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் மின்சார முள்வேலி அமைத்து அதற்குள் வைக்கப்பட்டு, உண்ண உணவு, குடிக்கத் தூய தண்ணீர்கூட தராததோடு, இயற்கை உபாதைகளைத் தீர்க்க போதிய கழிப்பறை வசதிகள்கூட இல்லாத நாசி இட்லரின் கொடுமை முகாம் (Concentration Camp) கள் போல நடத்தி வருவதோடு, தமிழச்சியின் கற்புகூட சூறையாடப்படுகிறது என்பதை அறியும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது; நெருப்பில் புரளுவதுபோன்ற உணர்வு நம்மைத் தாக்குகிறது!
மற்ற நாடுகளின் அரசியல் உரிமை, சம உரிமை என்ற பிரச்சாரம் பற்றி சிறிதுகூட இராஜபக்சே அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

நிதி உதவி - எச்சரிக்கை தேவை!

இலங்கை அரசுக்கு நிதி உதவி எதையும் இப்போது இந்திய அரசோ, தமிழ்நாடு அரசின் உதவிகள் எதுவானாலும் உலக நாடுகளின் பிரதிநிதிகள், பன்னாட்டு செஞ்சிலுவை சங்க மேற்பார்வை - கண்காணிப்பின்கீழ் செயல்பட்டாலொழிய, மற்றபடி அது சிங்களர்களுக்கு வசதியாக, தமிழர் பகுதிகளில் குடியேறிட, உதவியதாகத்தான் ஆகும்!

மலை வீட்டில் ஈழத்தமிழர்பற்றி ஆராய்கிறாரா ஜெயலலிதா!

இந்நிலையில், சொந்த நாட்டு மக்கள்மீதே குண்டு மழை பொழிந்து, செஞ்சோலை போன்ற (அனாதைக்) குழந்தைகள் இல்லம், சர்ச்சுகள், மசூதிகள், கோயில்கள்மீதும் அங்கே தமிழர்கள் சரணடைந்தால், குண்டு வீசியபோதும் வாய் திறவாத பார்ப்பனர்களில் சிலர் விளம்பரம் பெறவும், வேறு வகை இலாபங்களைப் பெறவும் சந்தடி சாக்கில் கந்தகப் பொடி தூவுவது போல், பாபநாசம் பார்ப்பனரான ரவி அய்யர் பூஜ்யஸ்ரீ ரவிசங்கர் என்ற ஆன்மீக வியாபாரம் பார்ப்பனர், செல்வி ஜெயலலிதாவிடம் சொன்னதால்தான் அந்த அம்மையார் தனி ஈழம்பற்றி அறிவிப்புச் செய்து, இப்போது தேர்தல் முடிந்து விட்டதோடு, அவர் எதிர்பாராத தோல்வியையும் சந்தித்ததால், அதைப்பற்றி பேசாமல் மலைவீட்டில் தங்கி ஈழம் வேண்டி ஆவன செய்து வருகிறார் போலும்!

இந்து ஏட்டின் தந்திரம்

இந்து ஏடு இப்போது எம்.எஸ். சாமிநாத அய்யர் மூலம் இலங்கையில் விவசாயப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று இதுவரை இல்லாத கவலையோடு, உருக்கத்தோடு கட்டுரை வெளியிட்டு ஈழத்தமிழர் மறுவாழ்வுக்காக மிகவும் கசிந்துருகி கண்ணீர் விடுகிறது!
இதன் சூட்சமத்தைப் புரியாது சில அப்பாவித் தமிழர்கள்கூட, ஆகா உலக விவசாய நிபுணர்(?) எம்.எஸ். சாமிநாதனே இப்படி கூறி, இலங்கை அரசுக்கு ஆலோசனை கூற முன்வந்துவிட்டார் என்று ஏமாறக்கூடும்.

இந்தியா 500 கோடி ரூபாய்க்குமேல் உதவிட முன்வரும் நிலையில், இவரும் இவரது குழுவும் இலங்கையில் ஆஸ்தான நிபுணர்களாக கூடாரம் அடித்து அங்கே அந்த அரசுக்கும் ஆலோசகராகவும் நுழையவே இந்த அரிய அவசரக் கட்டுரைகள் ஹிந்து ஏடுமூலம்!

விளம்பர வெளிச்சத்துக்காகத்தானே!
அவாளின் நரித் தந்திரம்தான் என்னே!


விவசாயம் ஒரு பாவகரமானது என்பது மனு நீதி, பரம்பரையாக ஏர் பிடிக்காத இனத்திலிருந்துதான் வேளாண்மை விஞ்ஞானி எல்லாம் வருகிறார்கள் என்பது, அப்பட்டமான விளம்பர வெளிச்சத்தினால்தான் தொடர்ந்து நடந்துவரும் வித்தைகள்!
அதனால் மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் இவர்கள் இந்திராணி போல நிரந்தரச் செல்வாக் குடன் ராஜகுரு போல இருப்பார்கள்!

விவசாயம் இப்பொழுது சாத்தியமா?

ஈழத் தமிழர்கள், தங்கள் வீடுகளுக்குக்கூடத் திரும்பி, சுதந்திரக் குடிமக்களாக நடமாடக்கூட முடியாத நிலையில் விவசாயப் பணிகள் உடனடியாகத் தொடங்குவது சாத்தியமான ஒன்றா?
கடவுளைக்காட்டி, அர்ச்சகர்கள் கொழுப்பது போல, அப்படி ஏதாவது திட்டமிட்டால் அது இத் தகைய பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் தட்சணையாகுமே தவிர, உருப்படியான பலன் வராது என்பது கசப்பான உண்மையாகும்.


-------------------- "விடுதலை" 17.6.2009

3 comments:

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

unearth.com said...

unearth.com said...
Ilankai thamilarai pattri vaay kiliyakkatthum Veeramani ayyar veeramullavaraaha, kolhai patrullavaraha thunivullavaraaha irunthaal, Ramasami Periyarin thamil, thamilar patriya karutthukkalai thaam eatkavillai enavum atai unkal Thiravida Kalahatthilirunthe ahatrividavum mudivedutthathan pinnar kural kodukkalalaam.

Rajapakse vendumaayin ilankaiyin vadapahuthi thamilarukku aniyayam seythaaarenru edutthukondaalum, ulaha thamilarukku entha apakeerthiyaium eatpadutthi vidavillaiye.

Aanaal Veeramai Ayyarin Thanthai Ramasami Periyaaro thamilai kaattumirandi moli enrum, thamilarai ottu motthamaaha kaattumirandihalenrum aayiran thadavai koori avamariyathaippadutthi,apa keerthiyaium undaakiyullar enpathai Veeramani puriyaamal irunthaal avarukku Ilankai thamilarukkaha eppadi pesamudium. Ithu aadu nanaihinrathenru oanaay aluthathai poanrathe. Parithaapaththukkuriyavaraahi irukkum veeramanikku enanuthaapankal.

Iniyaavathu intha irattai vedatthai avar vidavendum inrel kalahath thoalarhale avarai orunaal naiyap pudaippaarhal enpathai ippothe sollivaikiren.

Anonymous said...

அண்ணா நீங்களும் அறிக்கை போராட்டமெல்லாம் நடத்தி பாக்குறீங்க ஏதாவது பிரோயோசனம் உண்டா? எவன் கேக்குறான் போராட்டமெல்லாம் நடத்தினா ?டெல்லிக்காரன் கேக்குறானா? செவுள்ள நாலு உட்டாத்தான் கேட்பான் ..உங்க தலைவர நாளைக்கே ஈழத்திற்கு உரிய உதவிகளை செய்யலின்னா தமிழ்நாடு தனிநாடு என அறிவிப்பு செய்ய சொல்லுங்கள் மறுநாளே டில்லி வாலாக்கள் வீட்டு வாசப்படியில் படுத்திறுப்பான்.. அண்ணே அறிக்கை அறிக்கைனு எங்கள கொல்லாதீங்க உருப்படியா எதாவது ரூம் போட்டு யோசிங்க!