Search This Blog

29.6.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - இஸ்ரேல்




இஸ்ரேல்

ஆரியப் பார்ப்பனர்களைப் போலவே நாடற்ற இனம் யூத இனம். பைபிள் கதைகளின் படி எகிப்தில் இருந்த இவர்கள், பாரோ மன்னனால் கொல்லப்பட இருந்தார்கள். அவர்களைத் தப்புவிக்க மோசே முயற்சி செய்து காப்பாற்றினார் என பலவித மூட நம்பிக்கைகளுடன் கதை நீளும்.

இவர்களுக்கென்று ஒரு நாடு தரப்பட வேண்டும் என்று 1896இல் பத்திரிகையாளர் தியோடர் ஹெர்கல் என்பார் எழுதினார். 1903இல் இன்றைய இசுரேலியப் பகுதிகளில்; 25 ஆயிரம் யூதர்கள் திரண்டனர். அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 40 ஆயிரம் யூதர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். துருக்கியின் ஒட்டோமான் பேரரசைச் சார்ந்த அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே 5 லட்சம் அரபியர்கள் வாழ்ந்து வந்தனர்.

1917இல் யூதர்களுக்கென பாலஸ்தீன நாடு அமைக்கப்படும் எனும் உறுதி மொழியை இங்கிலாந்து அயலுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் போல்போர் வழங்கினார். யூதர்களின் தலைவராக விளங்கிய பாரன் ரோத்ஸ்சைல்டு என்பாருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் 1939 இல் இம்முடிவு மாற்றிக் கொள்ளப் பட்டது. வந்தேறுபவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் எண்ணிக்கைக்குள் இருக்க வேண்டும் எனவும் எனவே 1944 க்குப் பிறகு இனிமேல் யாரும் குடியேறக்கூடாது எனவும் கூறப்பட்டது. இதை யூதர்கள் கண்டனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கில் யூதர்கள் பாலஸ்தீனத்துக்குள் நுழைந்து குடியேறிவிட்டனர்.

14-.5-.1948இல் இசுரேல் நாடு என்பதை யூதர்களே டெல் அவிவ் நகரில் அறிவித்துக் கொண்டனர். மறு நாளே எகிப்து, ஜோர்டான், ஈராக், லெபனான், சிரியா ஆகிய 5 அரபு நாடுகளின் படைகள் இசுரேலைத் தாக்கின. ஆனாலும் வெற்றி பெறவில்லை. அதன்பின் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இசுரேல் நாட்டின் எல்லை வரையறுக்கப்பட்டது. அது ஏறத்தாழ பிரிட்டன் நாடு குறிப்பிட்ட பாலஸ்தீனப் பகுதியளவுக்கு இருந்தது. எனினும் காஜா எல்லைப் பகுதியை எகிப்து தன் வசமே வைத்துக் கொண்டது. கிழக்கு ஜெருசலப் பகுதியை ஜோர்டான் தக்க வைத்துக் கொண்டது; தற்போதைய அப்பகுதி மேற்குக்கரை எனப்படுகிறது.

1956இல் இசுரேல், சினாய் தீபகற்பத்தின் மீது படையெடுத்தது. காஜா பகுதியை 5 நாள்களில் மீட்டு எடுத்துக் கொண்டது.அத்துடன் ராஃபா, அர்அரிஷ் ஆகிய பகுதிகளும் இசுரேல் வசம் வந்தன. சூயஸ் கால்வாய்க்குக் கிழக்கே உள்ள தீப-கற்பத்தின் பெரும் பகுதியை இசுரேல் ஆக்ரமித்துக் கொண்டதுடன், ஆயிரக்கணக்கானவர்களைச் சிறைப் பிடித்தனர்.

1964இல் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் (PLO) என்கிற அமைப்பினைத் தொடங்க எல்லா அரபு நாடுகளும் முடிவு செய்தன. அந்த இயக்கத்தின் சார்பாக பாலஸ்தீன விடுதலைப் படை (றிலிகி) ஒன்றும் 1968இல் அமைக்கப்பட்டது.

1967இல் கனன்றுகொண்டிருந்த பகைநெருப்பு வெடித்தது. இசுரேலுக்கும் பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகளுக்கும் போர் மூண்டது. 5-.6.-1967இல் தொடங்கி 11.-6.-1967இல் முடிந்த இந்தப் போரில் எகிப்திடமிருந்து சினாய் பகுதியையும், சிரியாவிடம் இருந்து கோலான் உச்சிகளையும் இசுரேல் கைப்பற்றியது; ஜோர்டான் வசமிருந்த மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகளிலிருந்து அந்நாட்டுப் படைகளைத் துரத்தியது. தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எகிப்திய போர் வானூர்தியை இசுரேல் போரின் முதல் நாளிலேயே தாக்கி அழித்துவிட்டது.

யூதர்களின் புனித நாள் எனக் கூறப்படும் யோம் கிப்புர் நாளான 1973 அக்டோபர் 6இல் எகிப்தும் சிரியாவும் இசுரேலைத் தாக்கின. போருக்குப் பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாடுகள் நவம்பர் மாதத்தில் ஏற்றுக் கொண்டன. உடன்படிக்கை 18-1-1974இல் கையெழுத்தானது.

1970களில் உலகெங்கும் யூதர்களைக் குறி வைத்து பாலஸ்தீனியர்கள் தாக்கினர். மூனிச் நகரில் 1972 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது நடத்தப் பட்டதுதான் மிகவும்-மோசமான தாக்குதல்.இதில் 11 இசுரேல் நாட்டு விளையாட்டு வீரர்கள் இறந்து பட்டனர்.

உலகெங்கும் தேடப்பட்டு வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்1974 இல் அய்.நா. மன்றத்தில் திடீர் எனத் தோன்றினார்.

1977இல் இசுரேல் நாட்டுக்குப் பறந்து சென்ற எகிப்து அதிபர் அன்வர் சதத் இசுரேல் நாட்டு நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 1978இல் இசுரேலும் எகிப்தும் கேம்ப் டேவிட் எனுமிடத்தில் கூடிப் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சம்பவமும் நடந்தது. இவையெல்லாம் அரபு நாடுகள் எகிப்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலையை உருவாக்கின. அமைதிப் பேச்சுக்கு எதிர்ப்பானவர்கள் 1981இல் எகிப்து அதிபர் அன்வர் சதத்தைக் கொன்றுவிட்டனர்.

இசுரேலில் 1992 ஜூன் மாதத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இடதுசாரிக் கொள்கை உடைய தொழிலாளர் கட்சியின் ஆட்சி அமைந்தது. பிரதமராக யிட்ஜெக் ராபின் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் காலத்தில் அமெரிக்க வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் ராபினும் யாசர் அராபத்தும் சந்தித்துப் பேசி இரு நாடுகளுக்குமான கொள்கைப் பிரகடனத்தை இறுதி செய்து வெளியிட்டனர்.இதன் விளைவு 1994 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபர் பரிசு யாசர் அராபத், யிட்ஜெக் ராபின் மற்றும் ஷிமொன் பெரஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு 24-.9.-1995இல் இரண்டாம் ஆஸ்லோ உடன்படிக்கை இசுரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் ஏற்பட்டது. எகிப்தில் கையெழுத்தான இந்த உடன்படிக்கையின்படி, மேற்குக் கரைப் பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனத்திற்கு ஒரு பகுதி, பாலஸ்தீன இசுரேலிய நாட்டுப் பொறுப்பில் ஒரு பகுதி, இசுரேலுக்கு ஒரு பகுதி என்றானது. இதனை ஏற்காத யூதர்கள் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி இசுரேல் பிரதமரைக் கொலை செய்தனர். அமைதிப் பேரணியில் இந்த அக்கிரமத்தைச் செய்தவர் மதத் தீவிரவாதிகள்.

இசுரேலின் அடுத்த பிரதமராக ஷிமோன் பெரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் 1996 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அமைதிப் பேச்சுகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த பிளைமின் நடான் யாஹூ என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் அடுத்த தேர்தலில் தோற்றுப் போனார். அவருக்கடுத்து வந்த பிரதமர் எகுத் பாரக் ஓராண்டில் பிரச்-சினைகளைத் தீர்ப்பதாக உறுதி கூறிப் பதவிக்கு வந்தார். ஆனால் அவருடைய பதவிக் காலத்தில், நாடெங்கும் வன்முறைகள் நடந்து அமைதிச் சூழ்நிலையைக் குலைத்தன. இறுதியில் 2001 இல் அவர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அவருக்குப் பின் ஏரியல் ஷாரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் வந்தாலும் மதவெறிக்கு ஆட்பட்ட யூதர்கள் அமைதிப் பேச்சுக்குத் தயாராக இல்லாத நிலைதான் இசுரேலில்!

எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையில் 20 ஆயிரத்து 770 சதுர கி.மீ. பரப்பில் அமைந்த இந்நாட்டின் மக்கள் தொகை 64 லட்சமாகும். இவர்களில் 77 விழுக்காட்டினர் யூத மதத்தினர். 16 விழுக்காட்டினர் இசுலாமிய சன்னி பிரிவைச் சேர்ந்தோர். கிறித்துவர்கள் மீதிப் பேர். யூத மொழியான ஹீப்ரு மொழிதான் ஆட்சி மொழி. அரபி, ஆங்கிலம் பேச்சு மொழிகள்.

96 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரிந்தோர். 21 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். 9 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதவர்கள்.

அதிபரும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்தும் பொறுப்பில் உள்ளனர். நாடற்ற யூத இனம் நாடு ஒன்றில் குடியேறி அரபு நாடுகளிடையே அமைதிக்குப் பங்கம் விளைவித்துக் கொண்டிருக்கிறது

---------------------நன்றி:-"விடுதலை" 28-6-2009

4 comments:

dondu(#11168674346665545885) said...

//1944 க்குப் பிறகு இனிமேல் யாரும் குடியேறக்கூடாது எனவும் கூறப்பட்டது. இதை யூதர்கள் கண்டனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கில் யூதர்கள் பாலஸ்தீனத்துக்குள் நுழைந்து குடியேறிவிட்டனர்.

14-.5-.1948இல் இசுரேல் நாடு என்பதை யூதர்களே டெல் அவிவ் நகரில் அறிவித்துக் கொண்டனர்.//
சரித்திர பிரக்ஞை இன்றி உளறக்கூடாது. 1947-ல் பாலஸ்தீனத்தை யூதப் பகுதியாகவும் அரபிப் பகுதியாகவும் பிரித்து ஐநா சபை மூன்றுக்கு இரண்டு என்ற பெரும்பான்மையில் தீர்மானம் போட்டதை சௌகரியமாக மறைக்கிறீர்கள். அதுவரை பாலஸ்தீனம் என்ற நாடே கிடையாது. அது ஒட்டோமான் துருக்கியின் ஒரு ஜில்லா மட்டுமே.

பாலஸ்தீனத்துக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளை கபளீகரம் செய்தது சக துலுக்க நாடுகளே என்ற உண்மையையும் மறக்கக் கூடாது.

இதெல்லாவற்றையும் உங்களது அர்த்தமற்ற பார்ப்பன வெறுப்பு மறைப்பது உங்களது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

oliyaithedi said...

டோண்டு ராகவன் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். நீங்கள் வரலாற்றை திரிக்கிறீர்கள். முழுவதும் இஸ்ரேலுக்கு எதிரான தவறான கருத்துக்கள்
raja-chennai

oliyaithedi said...
This comment has been removed by the author.
களப்பிரர் - jp said...

ஒரு எளிமையான வரைபடம் http://www.flickr.com/photos/39942781@N05/3672472099/