Search This Blog

16.6.09

தன்னை யாரும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதீர் இயக்கத்தை முன்னிலைப்படுத்துங்கள்


தன்னை யாரும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதீர்
இயக்கத்தை முன்னிலைப்படுத்துங்கள்

கழக தோழர்களுக்கு தமிழர் தலைவர் அறிவுரை

தன்னை யாரும் முன்னிலைப்படுத்திக்கொள்ளக் கூடாது. இயக்கத்தை முன்னிலைப்படுத்துங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ராணிப்பேட்டையில் 5.6.2009 அன்று காஞ்சிபுரம் அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

தலைமைக் கழகம் யோசனை செய்து

ஏன் அரக்கோணம் மாவட்டத்தைப் பிரித்தோம்? வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கடைசி வரையில் இருக்கிறது. பிறகு தனியே திருப்பத்தூர் மாவட்டம் என்று தனியே பிரித்திருக்கின் றோம். நான்கு ஒன்றியம், அய்ந்து ஒன்றியங்கள்தான் இருக்கும். கிருஷ்ணகிரியில் இருந்து ஒரு ஒன்றியத்தைக் கொடுங்கள் என்று கேட்கின்றார்.

அது மாதிரி கழக மாவட்டங்கள் என்று வரும்பொழுது சிறுசிறு மாவட்டங்களாக இருந் தால்தான் பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் செய்வதற்கு, சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் - வசதியாக இருக்கும்.

அந்த வகையிலே திராவிடர் கழக தலைமையில் நாங்கள் யோசனை செய்து ஒரு கருத்தை வெளியிடுகிறோம். காஞ்சிபுரம் மாவட்டம் இன்று முதல் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக் கப்படுகிறது. (கைதட்டல்) செங்கல்பட்டு மாவட்டம் வேறு காஞ்சிபுரம் மாவட்டம் வேறு. காஞ்சிபுரத்துகாரர் அந்தக் கடைசிக்கு வரு வதற்கும் வாய்ப்பில்லை. செங்கல்பட்டுக்காரர் இந்தக் கடைசிக்கு வரு வதற்கும் வாய்ப்பில்லை.

அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. நகராட்சியைப் பொறுத்த வரையிலே காஞ்சிபுரம் செங்கல் பட்டு, மதுராந்தகம் மறைமலை நகர் சில ஒன்றியங்கள், சில நகராட்சிகள் இப்படி இருந்தாலே அமைப்பு ரீதியாக இன்னும் தீவிரமான ஆழமான பணி களை நம்மாலே எடுத்துக் செல்ல முடியும்.

அரசாங்கமே பிரித்திருக்கிறது

அரசாங்கமே ஈராடு மாவட்டம் வேறு, திருப்பூர் மாவட்டம் வேறு என்று சொல்லுகிறது. பழைய கோவை மாவட் டம் இன்றைக்கு எத் தனை மாவட்டமாகப் பிரிந்திருக்கிறது என்று பாருங்கள். அப்படி வரும் பொழுது நமது இயக்கப் பணி சிறப்பாக நடைபெற பிரிக்கப்பட வேண்டும். ஆகவே செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் என்று பிரிக்கப்படு கிறது. செங்கல்பட்டைத் தலைநகரமாகக் கொண்டு அந்த மாவட் டம் இயங்கும். செங் கல்பட்டு மாவட்டத் திற்குத் தலைவராக அ.கோ.கோபால்சாமி நியமிக்கப்படுகிறார். மாவட்டச் செயலாளராக துரை.முத்து இருப்பார்.

மாவட்ட தலைவர் வயதானவர்; மாவட்ட செயலாளர் இளைஞர். எல்லா மாவட்டங்களிலும் வயதானவர்களும் இருக்க வேண்டும். வயது குறைந்தவர்களும் இருக்க வேண்டும். இதில் வயது இடைவெளி இருக்க வேண்டிய அவ சியமில்லை. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். செங்கற்பட்டு நகரத்திற்கு கோவிந்த சாமி தலைவராக தொடர்ந்து இருப்பார்.
செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலை வராக மதுராந்தகம் ஏழுமலை. நீண்ட நெடுங் காலமாக இருக்கின்ற சுயமரியாதை வீரர். அவர் துணைத் தலைவராக இருப்பார்.
மறுபடியும் யார் யார் போடுவது என்று ஒரு கமிட்டியை இவர்கள் போட வேண்டும் இன்னொரு பகுதி கடற் கரை பகுதி. தலைமைக் கழகத்திலிருந்து வரச் சொல்லி கமிட்டியைப் போடலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் தனியாக பிரிக்கப் படுகிறது. மாவட்டச் செயலாளராக மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோ கன் விருப்பப்படியே முகிலன் நியமிக்கப்படுகிறார்.
நான் உத்திரமேரூர் உ.து.சிங்காரம் அவர்களுடைய படத்திறப் பிற்கு எனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அதற்கு ஒரு தேதி கொடுக்கின்றேன். கலந்துரையாடல் கூட்டங்கள் முடிந்தவுடன் நான் தேதி கொடுப்பேன்.

பிரச்சாரம் எங்கும் நடைபெற வேண்டும்

பிரச்சார கூட்டங்கள் எங்கும் நடைபெற வேண்டும். தயவு செய்து எல்லா ஒன்றியங்களின் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற வேண்டும். புது மாவட்டங்கள் அமைந்ததற்குப் பிறகு நீங்கள் தனியே ஒரு கமிட்டியைப் போட்டு விடுதலைக்கு செய்தியை எழுதி அனுப்புங்கள்.
அரக்கோணம் மாவட்டத்தினுடைய பணி ரொம்ப பாராட்டத் தக்க அளவிலே இருக்கிறது.
மாவட்டத்தில் ஏதா வது மாற்றங்கள் ஏற் பட்டால் தோழர்கள், இளைஞர்கள், மாண வர்கள், மாவட்ட தலை வர், செயலாளர் அனுமதியோடுதான் செயல் படவேண்டும்.
எனவே தோழர்கள் ஒருங்கிணைந்து நீங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதல் பயணமே உங்களுடைய மாவட்டத்திற்குத்தான் வந்திருக்கின்றேன்.

நான் வரும் பொழுது களைப்பாக, சோர்வாகத்தான் வந்தேன். உங் களைப் பார்க்கும் பொழுது எனக்கு உற்சாகமாக இருக்கிறது.

நீங்கள் ஒவ்வொரு வரும் ரொம்ப சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் சுற்றிப்பார்க்க வேண்டும். இன்னொன்று, எப்பொழுதும் நமது தோழர்களுக்கு தன் முனைப்பு என்பது எந்த இடத்திலும் வரக்கூடாது.

இயக்கத்தை முன்னி லைப்படுத்த வேண்டுமே தவிர, தன்னை யாரும் முன்னிலைப் படுத்திக் கொள்ளக் கூடாது. இயக்கத்தாலே நானே தவிர, என்னால் இயக்கம் அல்ல என்று சொல்லக்கூடிய அந்த உணர்வு ஒவ்வொரு வருக்கும் இருக்க வேண்டும். அந்த உணர்வோடு நீங்கள் எல்லோரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து தீர்மானங்களை இப் பொழுது படிப்பார்கள்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-------------------"விடுதலை" 14-6-2009

1 comments:

Madesh R said...

திருப்பத்தூர் மாவட்டம்,
http://www.facebook.com/TirupatturDistrict