Search This Blog

22.6.09

பெரியாரின் "விடுதலை" ஏடு சாதித்தது என்ன?


தஞ்சையில் சந்திப்போம் வாருங்கள்!விடுதலை ஏட்டுக்குப் பவள விழா! வணிகநோக்கு இல்லாமல் இலட்சிய வெறியை மட்டும் முன்வைத்து நடைபோடுவது என்பது பனிமலையில் தலைகீழாக ஏறுவது போன்றதுதான்.
விடுதலைக்காக தந்தைபெரியார் பெற்ற உளைச்சல்கள், வேண்டுகோள்கள், விண்ணப்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

பிரபல பொருளாதார நிபுணரும், நீதிக்கட்சியின் முன்னணித் தலைவருமானஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களுக்கு தந்தை பெரியார் எழுதிய கடிதத்தில் (2.9.1937) குறிப்பிடுகிறார். விடுதலை - தினசரிப் பத்திரிகை தினம் 5000 பிரதி வெளியாகின்றது. பத்திரிகை நடத்துவதில் எவ்வளவு சிக்கனமாக நடத்தியும், மாதம் 500 வீதம் நஷ்டமாகிறது. இனி நஷ்டம் அதிகமாகுமே தவிர, குறையாது. காலை ஏழரை மணிக்குஆபிசுக்கு வந்தால் இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். இதன் மத்தியில் சுற்றுப் பிரயாணம். இந்த நிலைமையில் ரோஷம் என்னை அடிமையாக்கிக் கொண்டு, இந்த மாதிரித் தொல்லையில் இறக்கி விட்டது. காசு பணம் எதிர்பார்த்து இவற்றை நான் எழுதவில்லை என்று குறிப்பிடுகிறார்.

வளமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வசீகரமாக வாழ வேண்டிய ஒருவர் பாழாய்ப் போன இந்தத் தமிழனுக்காக ஒரு ஏடு நடத்துவதற்காக இவ்வளவு வேதனைகளையும் சுமைகளையும் முதுகொடிய சுமந்திருக்கிறாரே என்று எண்ணும் எவருக்கும் இதயம் கனக்கவே செய்யும்.
அதே நேரத்தில் அய்யா அவர்கள் பெரும்சுமைகளுக்கிடையே விடுதலை ஏட்டை நடத்திடாமல் கைவிட்டிருந்தால் இந்தத் தமிழன் நாதியற்று முட்டுச் சந்தில்தானே முடங்கிப் போயிருப்பான்.

முழங்காலுக்குக் கீழே வேட்டிகட்டியிருப்பானா? காசிருந்தும் அவனுக்குத்தான் செருப்பு வாங்கிப் போட்டுக் கொள்ள முடியுமா? கல்விகொடு, கல்வி கொடு என்று எவ்வளவு கதறல் கதறியிருக்கும் இந்த விடுதலை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்தியோகம் கொடு, உத்தியோகம் கொடு என்று குரல் கொடுத்து குரல் கொடுத்து எந்த அளவுக்கு உதிரம் சிந்தியிருக்கும்!

இரகசியக் குறிப்பேடு என்று கூறி உத்தியோகத் தமிழன் கழுத்தில் எல்லாம் சுருக்கு மாட்டிய அந்த ஆரியத் தாம்பினை அறுத்தெறிய இந்த விடுதலை எவ்வளவு பாடுபட்டு இருக்கிறது!
அதனால்தானே முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் இரகசியக் குறிப்பேடு முறையை நீக்கி ஆணை பிறப்பித்தபோது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (என்.ஜி.ஜி.ஓ.) தந்தை பெரியார் அவர்களையும் முதல்வர் கலைஞர் அவர்களையும் அழைத்துப் பாராட்டு விழா நடத்தியது. (6.4.1972).

ஆச்சாரியார் கொண்டு வந்த அந்தக் குலக் கல்வித் திட்டத்தைத் தீர்த்துக் கட்ட விடுதலை என்னும் வேங்கை சீறிப் பாய்ந்ததே - தந்தை பெரியார் அவர்களின் கை வாளாகச் சுழன்றதே!
ஆச்சாரியாரே, ஆச்சாரியாரே! குலக் கல்வித் திட்டத்தை ரத்து செய், அல்லது நடையைக் கட்டு! என்று போர்க் குரல் கொடுத்ததே! தீப்பந்தமும் பெட்ரோலும் தயாராகட்டும் - நாள் குறிப்பிடப்படும், அக்ரகாரத்துக்குத் தீ வைக்க! என்று அரிமா குரல் கொடுத்ததே - அதன் காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு ஓட்டம் பிடித்தாரே - விடுதலையின் சாதனைச் சாகசத்திற்கு வேறு என்ன சான்று வேண்டும்? அன்று அந்தக் குலக் கல்வித் திட்டம் ஒழிக்கப்பட வில்லையென்றால் இன்று நம் சமூகத்தில் இத்தனை டாக்டர்கள் ஏது? இத்தனை வழக்கறிஞர்கள் ஏது? இத்தனைப் பொறியாளர்கள் ஏது? இத்தனை நீதிபதிகள் தான் ஏது?
இடஒதுக்கீடு கேட்டு பார்ப்பனர்கள் வீதிக்கு வரும் ஒரு நிலைக்கு அவர்களை நெட்டித் தள்ளிய நெம்புகோல் அல்லவா அய்யாவின் விடுதலை?

ஒரு சேதி தெரியுமா?
எஸ்.எஸ்.எல்.சி. என்ற பதினோறாம் வகுப்புக்கு அரசுத் தேர்வை எழுதுவதற்கு முன் பள்ளியளவிலே ஒரு தேர்வு வைத்து (selection) வடி கட்டுவர்.

இதில் போதிய மதிப்பெண்கள் வாங்கினால்தான் அரசு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் தலைமுறையாக தத்தித் தாவி, உயர்நிலைப் பள்ளியின் படிக்கட்டுகளை மிதிக்கும் பார்ப்பனர் அல்லாத மக்களின் முழங்காலை முறிக்கும் பார்ப்பனர் மூளை இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை உணர்ந்த தந்தைபெரியார் எரிமலையாக எழுந்தார். அனல் கக்கும் அறிக்கைகளை விட்டார் விடுதலையில்.

பன்னாடை முறை என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. கருப்புச் சட்டைத் தொண்டர்கள் வீதிக்கு வீதி ஊர்வலம் போனார்கள்.

ஒழிக ஒழிக! பன்னாடை முறை ஒழிக! ஒழிக!! என்று முழக்கமிட்டுச் சென்றனர்.

பார்ப்பனர் அல்லாத மக்களின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்கும் இந்தக் கருப்புச் சட்டைகளும் விடுதலையும் தானே காரணம்!

எத்தனையோ எழுதலாம் - எழுதிக் கொண்டே இருக்கலாம்; ஏடு கொள்ளாது.
இவ்வளவுக்கும் காரணமான அந்த விடுதலை ஏட்டை அனுதினமும் வாங்கிப் படிக்க வேண்டும், போற்ற வேண்டும் அடுத்த தலைமுறைக்கும் வழி கூட்டிக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தால் தானே நம் தமிழன் சரியாக இருக்கிறான் என்று பொருள் - அவனுடைய எதிர்காலத்திற்கும் உத்திரவாதம் இருக்கிறது என்று பொருள்!

தமிழன் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல் விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டி லும் இருக்க வேண்டும் (விடுதலை 2.11.1965) என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் அருள் வாக்குதானே தமிழர்களின் திருக்குறளாக இருக்க வேண்டும்.


விடுதலையின் பவள விழா ஆண்டில் புதுப்பொலி வுடன் 8 பக்கங்களோடு கமழ்ந்து வெளிவந்து கொண்டி ருக்கும் விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்று 75 ஆண்டு விடுதலையின் வயதில் 47 ஆண்டைக் கழித்திருக்கும் அதன் ஆசிரியர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலையின் இலாபத்திற்காக அல்ல ; தமிழர்களின் இலாபத்திற்காக - அதன் சந்ததிக்காக!

இயக்கத்திற்கும் சரி; விடுதலைக்கும் சரி -இவற்றின் கர்த்தாவான தந்தை பெரியார் அவர்களுக்கும் சரி -அன்று முதல் இன்று வரை தாய்ச்சுவராக இருந்து முதுகைக் கொடுத்துக் கொண்டிருப்பது தஞ்சை மாவட்டம் தானே - இது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடி வீட்டிலே வரும் சனியன்று (27.6.2009) விடுதலையின் பவள விழா கோலாகலம்!

பல்வேறு சிறப்பு அம்சங்கள் பன்மணித் திரளாக மிளிரயிருக்கின்றன. விடுதலையின் சாதனைகளைக் காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்திகளுடன் உணர்ச்சிமிக்க பட்டிமன்றம், விருது வழங்கல், கருத்துரைகள் என்று விழாவின் அம்சங்கள் நீளும். விடுதலையை வியக்கத்தக்க முறையில் வளர்ச்சிப் பாதையில் வீறு நடைபோடச் செய்து வரும் அதன் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், தன்மானக் கொள்கை வீரரும், மூத்த அமைச்சருமான மாண்புமிகு கோ.சி. மணி, மாணவர் பருவந்தொட்டு அய்யாவின் கொள்கையில் அழுத்தம் கொண்ட மத்திய இணை அமைச்சர் மானமிகு பழநிமாணிக்கம், புத்தகத் தேனீயாக உலாவரும் தஞ்சை அமைச்சர் உபயதுல்லா முதலியோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

தஞ்சை திலகர் திடலில் கழகம் எத்தனை எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறது. தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்ததும் அங்குதானே!
தங்கமான ஒரு உணர்ச்சி விழா - தமிழர்களின் - அடையாள விழா விடுதலையின் பவள விழா நடை பெற உள்ளது. இந்தக் கால கட்டத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு ஒர் அடையாளம் வேண்டாமா?

வாருங்கள் தமிழர்களே, வாழ்விணையரோடு - குழந்தைச் செல்வங்களோடு!
கூடுங்கள்! கருஞ்சட்டை குடும்பத்தினரே - சுற்றத் தோடு!

2009-இல் தமிழர்களின் சிலிர்ப்பு - பிரவாகம் எத்த கையது என்பதைக் காட்ட வேண்டாமா? விடுதலை அந்த வாய்ப்பைத் தந்திருக்கிறது. சந்திப்போம் வாருங்கள்.

-----------மின்சாரம் அவர்கள் 21-6-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

7 comments:

Unknown said...

இவ்வளவு சாதனைகளா? மலைப்பாக இருக்கிறது?

hayyram said...

பார்ப்பன ஒழிப்பைத்தவிர ராமசாமி நாயக்கரும் அவரை மூடத்தனமாக தொடர்பவர்களும் எதையும் சாதிக்கவில்லை. கடவுளுக்கு அறிவியல் ஆதாரம் கேட்கும் ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் யார் வீட்டிலாவது தான் பெற்ற தந்தை இன்னார் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் டி என் ஏ பரிசோதனைச் சான்றிதழ் ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறார்களா? பிறந்தது முதல் தாய் சொல்லியதால் மட்டுமே ஒருவனை தந்தை என்று நம்பிக்கொண்டிருக்கும் நாத்திகப் பேர்வழிகள் , தனக்கு சிந்திக்கும் வயது வந்தவுடன் தன் அம்மாவிடம் அம்மா எனக்கு பகுத்தறிவு வந்தவிட்டது. அதனால் அப்பாவை என்கூட அனுப்பு, ஆஸ்பத்திரி போய் இவன் தான் என் அப்பாவா என்று நான் டி என் ஏ பரிசோதனை செய்து தெரிந்து கொள்வேன் என்று எந்த பகுத்தரிவு வாதியாவது கூறியிருப்பானா இதுவரை. எத்தனை பகுத்தறிவு பேசும் பன்டாரங்கள் தன் அப்பன் இவந்தான் என்பதற்க்கு அறிவியல் ஆதாரம் வைத்திருக்கிறான் என்பதை பெயர் விலாசத்துடன் நிரூபியுங்கள் பார்க்கலாம். கூட இருக்கும் அப்பனை அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் கொள்ள தன் அடிவருடி மூடர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் எங்கோ கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு சர்டிபிகேட் கேட்கும் கிறுக்குத்தனத்தை கற்றுக் கொடுத்த ராமசாமி எதையுமே சாதித்ததாக ஆகமுடியாது.

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

அய்யோராம் உனது முட்டாள்தனத்தை நினைக்கும்போது பரிதாபப் படத்தான் முடிகிறது.

எங்களுக்கு எங்க அம்மா மேல் நம்பிக்கை இருக்கிறது.அதனால் எந்த டெஸ்ட்டும் எங்களுக்கு தேவைப் படாது. உங்க அம்மா மீது நம்பிக்கை இல்லாவிட்டால் நீ எந்த டெஸ்ட் வேண்டுமானாலும் எடுத்துக் கொள். அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.

முட்டாள் தனமாக பின்னூட்டம் போட்டு ஒரு தாயை அசிங்கப்படுத்தாதே. உங்கம்மாவாக இருந்தாலும் ஒரு தாய்தான்.

அசுரன் திராவிடன் said...

காந்தி சொன்னார் ---- "கோயில் என்பது குச்சிகாரிகளின் விடுதி ".

அந்த குச்சி காரிகளின் விடுதியில் புரோக்கர்கள் இந்த பார்ப்பனர்கள் .
மாமா வேலை பார்க்கும் இந்த பார்ப்பனர்கள் தான் தான் மகளை ,மனைவியை அடுத்தவனுக்கு கூட்டி கொடுப்பார்கள் .

வெள்ளைகாரனிடம் இப்படி கூட்டி கொடுத்துதான் அணைத்து துறைகளையும் கைப்பற்றினார்கள்.

ஆகையால் பார்ப்பனர்கள் உண்மையான் தேவேடியால் மகன்கள் .இதற்க்கு ஒன்றும் டீ.என்.ஏ சோதனை தேவை இல்லை.மாறாக சோதனை செய்தால் ஒரு பார்ப்பன் கூட அவன் அப்பனுக்கு பிறந்திர்ருக்க மாட்டன்.உதாரணத்துக்கு இந்த கெழட்டு ஊத்தவாயன் சுப்பிரமணி சங்கராச்சாரிய எடுத்துகங்க அவன் இந்த கெழவி அனுராதா ரமணன் போட்டு அவன் கூட படுக்க சொல்லி மல்லுகட்டி இருக்கான் .அந்த பொம்பள இவன சந்திக்க வரும்போதெல்லாம் இவன் சொல்வானாம் "இவ செம கட்டடா ன்னு".நம் கண்ணனுக்கு தெரிந்து ஒரு அனுராதா ரமணன்.கண்ணுக்கு தெரியாமல் எத்தனை அனுராதா ரமணன்களோ ?
கண்ணுக்கு தெரியாத அந்த அனுராதாக்களுக்கு பிறந்தது தான் இந்த heyram களோ ?

Gokul said...

அய்யா,

நீங்கள் எழுதியதை மறுக்க முடியவில்லை , ஆனால் சில வாக்கியங்களை படிக்கும்போது அதற்கான ஆதாரங்களையும் எழுதினால் படிக்கும்போது எந்த சந்தேகமும் இன்றி படிக்க முடியும் , உதாரணமாக,

//முதல் தலைமுறையாக தத்தித் தாவி, உயர்நிலைப் பள்ளியின் படிக்கட்டுகளை மிதிக்கும் பார்ப்பனர் அல்லாத மக்களின் முழங்காலை முறிக்கும் பார்ப்பனர் மூளை இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை உணர்ந்த தந்தைபெரியார் எரிமலையாக எழுந்தார். //

இந்த கூற்றில் எந்த ஆதாரத்தில் பார்பனர் மற்றவர்களை வடிகட்டினர் என்று பெரியார் கூறினார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். முதல் தலைமுறையில் கல்விகற்க சென்றவர் இதன் மூலம் பாதிக்கப்பட்டது என்பது சரி, ஆனால் இதனை சதி என்று சொல்லும்முன் அதற்கான ஆதாரம் வேண்டுமல்லவா? எனவே அதற்கான சம்பவங்களையும் பத்திரிக்கை ஆதாரங்களையும் காட்டினால் நன்றாக இருக்கும் , மேலும் வேதத்தையோ, புராண இதிகாசத்தையோ நாம் எதிர்க்கும்போது நாம் காட்டும் வரிக்கு வரி ஆதாரம் , இதிலும் இருக்க வேண்டும், அப்போதுதான் அது நல்ல கட்டுரை என்பது எனது தாழ்மையான கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

தமிழ் ஓவியா said...

கோகுல் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இந்த வலைப்பூவில் உள்ளது தேடிப்பிடித்து படிக்க வேண்டுகிறேன்