Search This Blog

10.6.09

பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியம் என்பதைப் புரிந்து கொள்வதில் என்ன சிரமம்?


தடைக் கற்கள் இத்தனையா?

1996-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு - நூறு நாள்களில் சட்டமாக நிறைவேற்றப்படும் என்று இந்தியக் குடியரசு தலைவர் திருமதி பிரதீபா பாட்டில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார். காலக் கெடுவுடன் அறிவிப்புக் கொடுக்கப் பட்டதால் இது உறுதியாக நிறைவேற்றப்படும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

13 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட இன்றைக்கும் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதில் தெளிவான கருத்துகள் உள்ளவர்களாக, இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த மூத்த தலைவர்களே இல்லை என்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும்.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்குத் தனி ஒதுக்கீடும் உள்ளது.

அதேபோலவே, இந்தியாவில், இந்துத்துவா எனும் மனுதர்மம் ஆழமாக வேரூன்றிய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் பரிதாபகரமாகவே உள்ளது. குறிப்பிட்ட மேல்தட்டு வட்டாரத்தைச் சேர்ந்த பெண்களே முன்னேறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியம் என்ற கருத்தைப் புரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? அறவே இந்த இடஒதுக்கீடு கூடாது என்கிற ஆதிக்க மனப்பான்மையில் உள்ளவர்கள் சப்பைக் கட்டான காரணங்களைக் கூறி இந்தச் சட்டத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.

இதில் நியாயமாக சமூக நீதியின் அடிப்படையில் உள் ஒதுக்கீட்டை இருகரம் நீட்டி வரவேற்கக் கடமைப்பட்டுள்ள, சோசலிச சிந்தனையுடன் அணுக வேண்டிய இடதுசாரிகளே மேல்தட்டு மக்களின் குரலை எதிரொலிப்பது பரிதாபமானதே!

இந்த வகையில் பாரதீய ஜனதா கூறும் அதே கருத்தோடு இடதுசாரிகளின் முடிவுகளும் ஒத்துப் போவது எப்படி?

பிகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார், சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத், அய்க்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் ஆகியோர் இதில் உள்ஒதுக்கீடு தேவை என்று சொல்லுகிறார்கள்; அதிலும்கூட சில தேவையற்ற கருத்துகளை உதிர்க்கிறார்கள்.

இந்த சட்டம் வந்தால் மாநிலக் கட்சிகள் பாதிக்கப் படும், அரசியலில் மூத்த தலைவர்கள் ஒரேயடியாக ஓரங்கட்ட செய்யப்படும் ஏற்பாடு இது என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாத முட்டுக்கட்டைகளைக் கொண்டு வந்து குறுக்கே போடுகிறார்கள்.

பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகித இட ஒதுக்கீடு போக மீதி 67 சதவிகிதம் என்கிற அளவுக்கு ஆண்களுக்கு மிகவும் தாராளமான மைதானம் இருக்கத்தானே செய்கிறது? தங்கள் கட்சியின் சார்பில் பெண்கள் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றங்களுக்கோ தேர்வு செய்யப்பட்டால், எப்படி மாநிலக் கட்சிகள் ஓரங்கட்டப்படும்?

பெண்கள் அரசியலில் முன்னுக்கு வந்தால் தங்களின் இடங்கள் பாதிக்கப்படும் என்று கூறுவது - ஆண்களின் ஆதிக்க மனப்பான்மையினையும் பொறாமை உணர்வையும்தான் வெளிப்படுத்தும்.

இதில் மற்ற கட்சிகளைவிட, உண்மையான அக்கறையோடு சமூகநீதி பற்றிப் பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் சமூகநீதியுடன் கூடிய பெண்கள் இடஒதுக்கீடுக்கு ஆதரவாகப் பச்சைக் கொடி காட்டினால் ஒரு நொடிக்குள் இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டு விடும். இதன் மூலம் அரசியல் லாபமும் காங்கிரசுக்கு உண்டு என்பதையும் மறந்து விடக் கூடாது. மக்கள் தொகையில் சரிபகுதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கான ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதில் இவ்வளவு சங்கடங்கள், முட்டுக்கட்டைகள் இருப்பதிலிருந்தே பெண்கள் இன்னும் இந்தியாவில் எந்த அளவுக்கு நிராகரிக்கப்படும் நிலையில் உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இவ்வளவுப் பிரச்சினைகள், அலைகள் - எழுந்து நிற்கின்றன - நம் பெண்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு இல்லையே!

திராவிடர் கழக மகளிரணி மட்டுமே வீதிக்கு வந்து போராடுகிறது. 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஆவேசமாக வெடித்துக் கிளம்பட்டும்! கிளம்பட்டும்!!


----------------------"விடுதலை" தலையங்கம் 10-6-2009

1 comments:

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்