Search This Blog

23.6.09

பூணூலை மறைத்துக்கொண்டு பசப்பும் பார்ப்பனர்கள்


கல்கி

கேள்வி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் மாநிலக் கட்சிகள் அழியும் என்று லாலுபிரசாத் யாதவ் கருத்து கூறியிருக்கிறாரே?

பதில்: உள் ஒதுக்கீடு இல்லாததால், பெண்கள் இட ஒதுக்கீடு மூலம் முற்பட்டவர்களின் செல்வாக்கு மறைமுகமாகக் கூடிவிடும் என்பதுதான் லாலுவினுடைய பேச்சுக்கான கோனார் உரை. ஆகமொத்தம் ஒதுக்கீடு என்றாலே மேலும் மேலும் ஒதுக்கீடு, மேலும் மேலும் குழப்பம்தான்!

(கல்கி, 28.6.2009, பக்கம் 6)

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்-கொள்ளமாட்டான் என்றார் திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்ட டாக்டர் டி.எம். நாயர்.

தினமலர் ஏடு லாலுபிரசாத் யாதவ் என்றதும், அவர் மாட்டுமேல் சவாரி செய்வதுபோல கார்ட்டூன் போடுகிறது.

கல்கியோ லாலுபிரசாத் யாதவ் என்பதற்காகக் கோனார் உரை என்று எழுதுகிறது.
இப்பொழுதெல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறா? என்று இட ஒதுக்கீடு வரும்போது மட்டும் காஸ்மாபாலிட்டன் ஆசாமி போல பூணூலை மறைத்துக்கொண்டு பார்ப்பனர்கள் பசப்புவார்கள்.

ஆனால், அவர்கள் புத்தி மட்டும் ஜாதிமீதுதான் மேயும்.. மறக்காமல் வருடந்தோறும் ஆவணி அவிட்டத்தன்று பழைய பூணூலை அவிழ்த்துப் போட்டுவிட்டு புதுப் பூணூலை எடுத்து மாட்டிக்கொண்டு, தங்களின் ஜாதிய உணர்வையும் புதுப்பித்துக் கொள்வார்கள். அடிக்கொருதடவை பூணூலை அவாள் உருவிக் கொள்வதெல்லாம் வேறு ஒன்றும் இல்லை; ஜாதிப் புத்தியை முறுக்கேற்றிக் கொள்வதுதான்.

உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் பெரும்பாலும் உயர்ஜாதி பார்ப்பனப் பெண்கள்தான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 181 இடங்களில் பெரும்பாலானவற்றை அக்கிரகாரத்து மாமிகள் (பாப் கட்டிங்) கபளீகரம் செய்துவிடுவார்கள். ஒட்டுமொத்தமாக பார்ப்பன ஆண்களையும் சேர்த்தால் பாதிக்குப் பாதி மாம்பலம், மயிலாப்பூர், மாதுங்கா வகையறாகவே இருக்கும்.

அந்த நிலை வராமல் லாலு, முலாயம், நிதிஷ்குமார், பஸ்வான் போன்றவர்கள் முட்டுக்கட்டைப் போடுகிறார்களே என்ற எரிச்சலில் கல்கி, லாலுவை ஜாதியைச் சுட்டிக்காட்டி கோனார் உரை என்று ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறது.

பார்ப்பான் எவ்வளவோ மாறிவிட்டான் என்று நுனிப்புல் மேயும் நமது சூத்திர, பஞ்சம மக்களுக்கு இதெல்லாம் எப்பொழுது புரியப் போகிறதோ!



------------ மயிலாடன் அவர்கள் 23-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

5 comments:

Unknown said...

//பார்ப்பான் எவ்வளவோ மாறிவிட்டான் என்று நுனிப்புல் மேயும் நமது சூத்திர, பஞ்சம மக்களுக்கு இதெல்லாம் எப்பொழுது புரியப் போகிறதோ!//

வழிமொழிகிறேன்.

ரங்குடு said...

இப்படியெல்லாம் எப்படி ரூம் போட்டு சிந்திக்கிறாங்களோன்னு தெரியலை.

கோனார் தமிழ் உரை எழுதிய ஐயன் பெருமாள் தன் பெயரின் இறுதியில் கோனார் என்று போட்டுக் கொண்டால் அது அவரது சாமானிய ஜாதிக்கு உயர்வு. அதையே 'கோனார் உரை நடை' என்று ( அப்படி யென்றால் கோனார் நோட்ஸ் மாதிரி தெள்ளத் தெளிவு என்பது தான் எனக்கு விளங்குகிறது) சொன்னால் உடனே அதுக்குப் (பார்ப்பன எதிர்ப்பான) புது விளக்கம் கொடுக்க உங்களால் தான் முடியும்.

hayyram said...

இன்றக்கு உங்கள் நாத்திக கோஷ்டியில் இருப்பவர்கள் எல்லாம் அல்லேலூயா கோஷ்டிடள் தான். மதம் மாறிய உடனே இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் கெட்ட வார்த்தையாலும் திட்டி அவமதிக்கவேண்டும் என்படு அவர்களது தொழில். அதை தனியே நின்று செய்தால் மதப்பிரச்சனை ஆகிவிடும் என்பதால் தி க வில் சேர்ந்து இந்து தெய்வ அவமதிப்பில் துனிச்சலாகவும் சுதந்திரமாகவும் செய்கிறார்கள். தி க வில் இப்பொழுது இருக்கும் நபர்களின் பெயர் விலாசப் பட்டியல் வெளியிடப்பட்டால் அதில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு பேர் என்பது தெரியும்

Robin said...

பார்ப்பான் கிறிஸ்தவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு காட்ட காரணம் அவனால் தாழ்ந்த ஜாதி என்று ஒதுக்கப்பட்டவன் கிறிஸ்தவனானதும் படிக்கத் தொடக்கி விடுகிறான். கிறிஸ்தவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இதற்குக் காரணம். படித்தவுடன் நல்ல வேலையும் அந்தஸ்தும் பெற்று பார்ப்பானுக்கு இணையாக, சில நேரங்களில் பார்ப்பானைவிட மேல் பதவியில் அமர்ந்தும் விடுகிறான். இதை எப்படி ஒரு பார்ப்பானால் சகித்துக் கொள்ள முடியும்? அதனால்தான் இந்தப் பதிவுக்கும் கிறிஸ்தவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாவிட்டாலும்கூட ஒரு பார்ப்பானால் அவனுக்கு எதிராக விஷம் கக்க முடிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கே இவ்வளவுதூரம் வெறுப்பை உமிழும் பார்ப்பான் கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் படித்துவிட்டு மேற்கத்திய நாடுகளுக்கு சென்று மானத்தைவிட்டு அங்குள்ள கிறிஸ்தவனின் காலை நக்கவும் தயங்கமாட்டான்.

பின்குறிப்பு: இந்த விமர்சனம் ஜாதி வெறி பிடித்த பார்ப்பனர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது. மற்றவர்களை சக மனிதர்களாக நினைக்கும் பார்ப்பனர்கள் இதை பொருட்படுத்தவேண்டாம்.

தமிழ் ஓவியா said...

//மதம் மாறிய உடனே இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் கெட்ட வார்த்தையாலும் திட்டி அவமதிக்கவேண்டும் என்படு அவர்களது தொழில். அதை தனியே நின்று செய்தால் மதப்பிரச்சனை ஆகிவிடும் என்பதால் தி க வில் சேர்ந்து இந்து தெய்வ அவமதிப்பில் துனிச்சலாகவும் சுதந்திரமாகவும் செய்கிறார்கள்.//

அய்யோ ராம் உங்க முட்டாள்தனத்திற்கு அளவேயில்லையா?

ஜாதி, மதம் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் தி.க.வில் இருக்க முடியும் என்ற குறைந்த பட்ச விபரம்கூட தெரிந்து கொள்ளாமல் பின்னூட்டம் போட்டு உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறீகள்.

ரூம் போட்டு யோசித்து வாங்கிக் கட்டிக் கொள்வது இதுதான் ரங்குடு.

அவன் போட்டான் நானும் போடுவேன் என்பது அயோக்கியத்தனம் ரங்குடு.