Search This Blog

16.6.09

"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" - 9

ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------அரிவாளைத் தூக்கியவர்கள் யார்?

அரசியலில் கோபம் வரும்போது அவ்வப்போது முதல்வர் கருணாநிதி மட்டும் ஆரிய - திராவிடத்தைத் தோண்டிக் கொண்டிருப்பார் - இன்று யார் மேல் கோபமோ, என்ன கோபமா!
மீண்டும் ஆரிய திராவிட போராட்டம் என்கிறார். இல்லாத ஒரு விஷயத்திற்காக வெட்ட வெளியில் ஒற்றையாளாக நின்று வாள் வீசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி
இதுபோன்ற கடிதங்களை தினமலர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

தினமலர் சொல்வதைப் பார்த்தால் ஆரியர் - திராவிடர் என்ற ஒன்று கிடையாது; பார்ப்பனர் தமிழர் என்கிற சர்ச்சைக்கு இங்கு இடம் இல்லை; வீணாக இந்தக் கருணாநிதி குழிப் பிணத்தைத் தோண்டி எடுக்கிறார் என்பதுபோல ஒன்றைக் காட்ட விரும்புகிறது ஒரு கூட்டம்.
இல்லாத ஒன்றைப் பற்றி தானே கருணாநிதி சொல்கிறார்; பேசாமல் விட்டு விட்டுப் போக வேண்டியது தானே!

எதற்காக வரிந்து கட்டிக் கொண்டு அநாமதேயங்களின் பெயர்களில் கடிதம் எழுத வேண்டும்.
தினமலர் குத்தகை எடுத்த ஆவடி டாக்டர் அசோகனை இப்பொழுது அண்ணா திமுகவின் நாளேடான நமது எம்.ஜி.ஆர். குத்தகைக்கு எடுத்துக் கொண்டு விட்டது.

யார் பெற்ற பிள்ளையோ அந்த ஆவடி அசோகன் - நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கலைஞர் சொன்னால் கடுகடுக்கிறதே இந்தக் கூட்டம் - சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 1967 தேர்தலின்போது பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக் கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னபோது, குழிப்பிணத்தைத் தோண்டும் வேலையில் ஏன் இந்தப் பெரிய மனுஷர் இறங்குகிறார் என்று எந்த அக்ரகார ஏடுகளும் எழுதவில்லையே!

1971-இல் சேலத்தில் (ஜனவரி 23) திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் இராமனை செருப்பால் அடித்தார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தைக் கிளப்பி விட்டு, ஆஸ்திகம் என்ற போர்வையில் ஆரியர் - திராவிடர் என்ற சர்ச்சை நெருப்புக்கு நெய்யூற்றி வளர்த்தவர்கள் யார்?

ஆஸ்திகரான தவத்திரு குன்றக்குடி அடிகளார் அன்று ஓர் அறிக்கை வெளியிட்டாரே நினைவிருக்கிறதா?

இன்று ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியாரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்; உங்களுக்கு இதில் எது வேண்டும்? (விடுதலை 18.2.1971) என்று கேட்கும் அளவுக்கு ஆஸ்திகத் தின் போர்வையில் ஆச்சாரியாரும் துக்ளக்கும் தினமணியும் இந்துவும் நிர்வாண ஆட்டம் போட வில்லையா?

இதன் விளைவாக திமுக அபாரமான வெற்றியைப் பெற்றதே - 1967 தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்றிட திமுக இந்தத் தேர்தலில் 183 இடங்களில் வெற்றி வாகை சூடி ஆரிய திராவிடப் போரில் திராவிடம் வென்று காட்டியதே!

தேர்தலின்போது முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அழகாகத் தேர்தலில் உள்ள ஒரு வித்தியாசத்தை குஞ்சம் கட்டி சொன்னார் (3.3.1971).

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை முன்பு தந்தை பெரியார் துவக்கினார். இப்போது ஆச்சாரியார் துவக்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே புதிய அம்சம் இதுதான் என்றாரே!

தேர்தல் முடிந்ததும் அதே ராஜாஜி இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது (கல்கி 4.4.1971) என்று கையொப்பமிட்டு ஒப்புக் கொண்டாரே!

இந்த வரலாறெல்லாம் தினமலருக்குத் தெரியுமா? பூணூல் போட்ட ஒவ்வொரு பார்ப்பனனுமே ஆரியர் - திராவிடர் பேதத்தை வெளிப்படுத்தும் நடமாடும் வாகனம்தானே!

ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் பார்ப்பனர் சங்கம் தன் முடிவை வெளியிடுவதில்லையா?

அதற்கான தேர்தல் விளம்பரங்கள். இதே தினமலரில் தானே வந்திருக்கின்றன.
எடுத்துக்காட்டு: தினமலர் 26.4.2006 - 1.5.2006.

அப்போதெல்லாம் பார்ப்பானாவது - தமிழனாவது என்ற வகையில் புத்தி வேலை செய்யவில்லையே - ஏன்?

பார்ப்பான், தமிழன் என்பதெல்லாம் கிடையாது என்றால் தாம்ப்ராஸ் (பார்ப்பனர் சங்கம்) அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் என்று தனியாகப் பிரித்து தொகுதி தொகுதிகளாக நூல்களை ஏன் வெளியிட வேண்டும்? அதற்கு சங்கராச்சாரியாரை ஏன் அழைக்க வேண்டும்? அந்த வெளியீட்டு விழாவில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்? கடவுளுக்குமேலே பிராமணர் என்று அரட்டை அடிக்க வில்லையா?

ஆரியன் - திராவிடன் பொய் யென்றால் மத்தியில் பிஜேபி ஆட்சி நடைபெற்ற காலத்தில் வரலாற்றைத் திரித்து கணினி வித்தை மூலம் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஆய்வில் எருதைக் குதிரையாக்கிக் காட்டி அது ஆரியர் நாகரிகம் என்று சாதிக்க முனைந்தது எந்த அடிப் படையில்?

வெகு நாள்களுக்குமுன் கூடப் போக வேண்டாம். சென்னை அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணா கார்டனில் இதே பார்ப்பனர்கள் (தாம்ப்ராஸ்) மாநாடு கூட்டி எப்படியெல்லாம் வெறிக் கூச்சல் போட்டார்கள்? (டிசம்பர் 24,25 (2005)

அரிவாளைத் தூக்கிக் காட்டி மாநாட்டு மேடையிலே எப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் பூணூல் திருமேனிகள்!

வெட்டுவோம்! குத்துவோம் என்று கொலைத் தாண்டவம் ஆட வில்லையா?

இதே தினமலர் தானே முழுப் பக்கம் செய்தி வெளியிட்டது?

இதே தினமலரில் இது உங்கள் இடம் பகுதியில் எஸ். அனந்தராமன், அண்ணாநகர், சென்னையிலிருந்து எழுதுகிறார் என்பதில்,

ஆரியன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கிட்டதட்ட ஜென்டில்மேன் என்பதே அர்த்தம் என்று புதுவிளக்கம் கொடுக்கப்பட்டதே!

பார்ப்பான் மட்டும்தான் ஜென்டில் மேனா? ஜென்டில்மேன் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கதைதான் நாடே நாறியதே!

தங்களுக்கு வசதிப்படும்போது ஆரியர் - திராவிடர்; தங்களுக்கு அது பாதகமாக வரும்போது ஆரியராவது - திராவிடராவது? எல்லாம் வெள்ளைக்காரனின் கட்டுக்கதை என்று பேசும் இரட்டை நாக்குதான் பார்ப்பனர்களுடையது.

ஆரியர் - திராவிடர் என்று கலைஞர் பேசியதோ, பேராசிரியர் பேசியதோ ஏதோ ஒரு வெறுப்பில் அல்ல.

நடந்து முடிந்த தேர்தலில் எப்படியெல்லாம் பார்ப்பன ஊடகங்கள் நடந்து கொண்டன. தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள்கூட 39 இடங் களிலும் அதிமுக அமோக வெற்றி என்று தொலைக்காட்சிப் பீடங்களில் அமர்ந்து கொண்டு அக்கிரகாரத்து ஆசாமிகள் - ஆரியர்கள் தங்களின் நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஆசை தீரப் பேசித் தீர்க்கவில்லையா?
வெற்றி வீராங்கனையாக டில்லி மாநகரத்தில் பவனி வருகிறார் அந்தப்புரத்து மகாராணி ஜெயலலிதா என்று பராக்குப்பாடவில்லையா?

வாக்குச் சாவடிக்கு வந்த ஜெயலலிதாவை சந்தித்து இந்துராம், 39 இடங்களும் உங்களுக்குத்தான் என்று ஆசை வெட்கமறியாது என்ற பாணியில் அருள்வாக்குக் கூறவில் லையா?

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாகயிருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்றாரே, லாலாலஜபதி - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.


--------------மின்சாரம் அவர்கள் 13-6-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

Anonymous said...

எதன் அடிப்படியில் ஆரியர், திராவிடர் என்ற இனங்கள் உள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளேன். மேக்ஸ் முல்லரின் ஆரியர் invasion theory பொய் என நிருபித்து ஆண்டு பல ஆகிறது. வேறு theory இருந்தால் சொல்லவும், தெரிந்து கொள்கிறேன்.

மூடநம்பிக்கைக்கு காரணம் பார்ப்பான் மட்டும் தான் என்பது தவறு. இங்கே பெருமாள் கோவில் மட்டும் இல்லை. அய்யனார் கோவிலும் இருக்கிறது.

நீங்கள் கூறும் ரிக் வேதம் 62 வது பிரிவு எல்லாம், இன்றைக்கி பார்பானுக்கே தெரிவதில்லை.மனு சாஸ்திரமும் அவனுக்கு தெரியாது. நாம்தான் சும்மா கூவிக்கொண்டே இருக்கிறோம். நாம் கூவுவது எத்தனை பாமர மக்களுக்கு போய் சேருகிறது என்று பார்க்க வேண்டும்.

திராவிடர் கழகம் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் திருப்பதியிலும், பழனியிலும் வசூல் அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. எந்த பார்ப்பானும் கோவிலுக்கு வா என்று விளம்பரம் செய்வதில்லை. ஆனாலும் நம்மால் கட்டி ஏறி மலைக்கு செல்கிறான்.

அவர்கள் ஆரியர்கள் என்று கூறிக்கொண்டு, அங்கே போய் கூட்டணி வைப்பது. சாதி இல்லை என்று கூறிக் கொண்டு , எல்லா தொகுதிகளிலும், சாதியை கொண்டு வேட்பாளரை நிறுத்துவது.

தமிழ் வாழ்க என்று கூறிக்கொண்டு, தன் சந்ததிகளையே ஆங்கில வழி கல்வியில் படிக்க வைப்பது.

சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு இட ஒதுக்கீட்டுக்காக சண்டை போடுவது.

போராடுவது அவசியம்தான், போராடும் நோக்கம், வழிமுறை ,அதன் பலன் அதைவிட மிக அவசியம்.

இன்றும் பெரியாரின் போராட்ட முறையை பின்பற்றுவது தவறு.(நான் கூறுவது பார்ப்பனிய எதிர்ப்பை மட்டும்). அதில் ஏதும் பலன் இருக்காது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இந்த வலைப்பூவில் உங்களின் எல்லாக் கேள்விக்கும் விடை உள்ளது.
அருள்கூர்ந்து ஒரு முறை பொறுமையாக பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டுகிறேன்.

நன்றி