Search This Blog

11.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- செக் குடியரசு-டென்மார்க்-டிஜிபவுட்டி


செக் குடியரசு

செக் குடியரசு எனத் தற்போது விளங்கும் நாட்டின் பூர்வகுடிகள் செல்டிக் இனத்தவர்கள். பின்னர் ஜெர்மனியர்கள் வந்து குடியேறினர். அதன் பின் ஸ்லாவிக் இன மக்களும் இங்கு வந்தனர். பொஹிமியா அரசும் பிரேமிஸ்லைட் வமிசமும் இந்நாட்டில் ஆட்சியை நிறுவினர். இந்த வமிசத்தின் ஆட்சியில் பொஹிமியாவும் மொராவிஸாவும் ஏற்கெனவே ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. 10 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை இந்த வமிசத்தின் ஆட்சி நிலவியது.

பிறகு ஜெர்மனியர்களின் ஆதிக்கத்தில் வந்த இந்நாட்டில் ஹஸ்ஸைட் இயக்கம் செக் தேசிய உணர்வைத் தூண்டியது. அன்றைய காலகட்டத்தில் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த ஜேன் ஹஸ் என்பார் இந்த உணர்வுக்குக் காரணம். 1618 இல் இந்த இயக்கத்தின் கிளர்ச்சி வலுப் பெற்று, 30 ஆண்டுகள் போர் என வரலாறு குறிப்பிடும் போர் 1648 வரை நீடித்தது. எனினும் போரில் செக் இயக்கத்தினர் தோற்றுப் போகவே, ஆஸ்திரிய அரசாட்சிக்கு 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

ஆஸ்திரிய, ஹங்கேரி நாடுகளின் அரசு முதல் உலகப் போருக்குப் பின் கலகலத்துப் போன பின்னர்தான் செக் நாடு மீண்டும் விடுதலை அடைந்தது. 1918 நவம்பர் மாதத்தில் பிரேக் நகரில்தான் செக் நாடும் ஸ்லோவேகியா நாடும் சேர்ந்து ஒரே நாடு என்ற அறிவிப்பு வெளி யானது. செகோஸ்லேவியக் குடியரசு என்ற நாடு உதயமானது. தாமஸ் மசாரிக் என்பவர் அதிபரானார்.

1939 இல் ஜெர்மனி இந்நாட்டைக்கைப் பற்றி தான் நாட்டைப் பாதுகாக்கப் போவதாக பசப்பியது.1945 இல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டு செகோஸ் லேவியா நாடு சுதந்திரம் அடைந்தது.

1960 இல் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் அடிப் படையில் நாட்டின் பெயர் செகோஸ்லாவாக் சமதர்மக் குடியரசு என மாற்றம் செய்யப் பட்டது. 1968 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் புதியதலைவர் அலெக்சாண்டர் டப்செக் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அதே ஆண்டில், சோவியத் நாடு தன்படைகளை ஏவிப் படையெடுத்தது. அதிபர் டப்செக், மாஸ்கோவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர் அறிவித்த சீர்திருத்த நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டார். குஸ்டாவ் ஹூகாக் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவராக 1975 இல் நியமிக்கப்பட்டு அவரே 1977 இல் அதிபராகிவிட்டார். ஆனாலும் இதனால் அதிருப்தி கொண்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு மக்களுக்கான உரிமைகள் மீண்டும் தரப்படவேண்டும் எனக் கோரினர். சார்ட்டர் 77 எனும் நாடகம் எழுதி வக்லாவ் ஹேவல் என்பார் போராட்ட உணர்வுகளைத் தூண்டினார்.
1988, 1989 ஆகிய ஆண்டுகளில் மக்களின் எழுச்சியும், போராட்ட மும் தீவிரமடைந்தது. 1989 இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பதவியை விட்டு ஓடினர். டிசம்பர் மாதத் தில் புதிய அரசு அமைந்தது. நாடக ஆசிரியர் வக்லாவ் ஹேவல் புதிய அதிபரானார். மரியன் கல்ஃபா பிரதமரானார். பழைய அதிபர் அலெக்சாண்டர் டப்செக், கூட்டாட்சிச் சட்டமன்றத் தலைவரானார்.

1993இல் செக் கோஸ்லோவேகியா இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. செக் குடியரசு என்றும் ஸ்லோவாகியா என்றும் பெயர் பெற்றன. வக்லாவ் ஹேவல் செக் குடியரசின் அதிபராகவும், வாக்லாவ் கிளாஸ் என்பவர் பிரதமராகவும் தோந்தெடுக்கப் பட்டனர்.

78 ஆயிரத்து866 சதுர கி.மீ. பரப்பு உள்ள செக்குடியரசு நாட்டின் மக்கள் தொகை ஒரு கோடியே 3 லட்சம் தான். மதம் ஏதுவுமற்ற மக்களாக 60 விழுக்காடு பேர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்க மதத்தை 27 விழுக்காட்டினர் ஏற்றுள்ளனர். செக் மொழி பேசுகின்றனர். அனைவரும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

டென்மார்க்


இந்நாட்டின் பூர்வகுடிகள் வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்ந்து வந்த நாகரிகம் அந்த நாடோடிக் கூட்டத்தினர். நாளடைவில் வேளாண் செய்து பிழைக்கத் தொடங்கினர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டிஷ் தீவுகள் மீது படையெடுத்தவர்களாக டேனிஷ்காரர்கள் இருந்தனர். 10ஆம் நூற் றாண்டில் ஒற்றுமைப்பட்ட டேனிஷ் அரசு தலையெடுத்தது, அந்தக் காலகட்டத்தில் கிறித்துவ மதம் நாட்டில் பரவத் தொடங்கியது.

1849இல் டென்மார்க் நாடு அரசமைப்புச் சட்டத்தை எழுதிக் குடிக் கோனாட்சியாக ஆனது. இரண்டு சட்டசபைகள் கொண்ட குடியாட்சியாகத் திகழ்ந்தது. 1944இல் டென்மார்க் நாட்டின் பகுதியான அய்ஸ்லாந்து சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து கொண்டது. 1953இல் அரசமைப்புச் சட்டத்தில் பெரிய மாறுதல் செய்யப்பட்டது. அதன்படி, இரு அவைகளுக்குப் பதில் ஒரு அவை கொண்ட நாடாளுமன்றம் ஏற்பட்டது. அதே ஆண்டில் கிரீன்லாந்து டென்மார்க் நாட்டின் பகுதியாக இணைந்தது. டென்மார்க் நாட்டில் இருபெரும் தீவுகள் ஸ்ஜாயில்லாண்டு, மற்றும் பின் ஆகியவை உள்ளன.

43 ஆயிரத்து 94 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம் ஆகும். மக் களில் 95 விழுக்காட்டினர் லுத்தரன் கிறித்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

அரசுத் தலைவராக அரசி மார்க்ரெட் ஐஐ இருக்கிறார். அவரின் பிரதிநிதியாகப் பட்டத்து இளவரசர் பிரெடெரிக் இருந்து வருகிறார். ஆட்சித் தலைவராகப் பிரதமர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசன் 2001 முதல் பதவி வகித்து வருகிறார்.

டிஜிபவுட்டி (DJIBOUTI)

பொது ஆண்டுக் கணக்குக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே அரபியர்கள் இந்த நாட்டுக்கு வந்தனர். டிஜிபவுட்டியின் முக்கிய இரு இனக் குழுக்களில் அபார் இனமும் ஒன்று. இவர்கள் இந்த அரபிய இனத்தின் வழித்தோன்றல்கள் தாம். இன்னொரு இனக்குழுவான சோமாலி ஈஸாக்கள் பின்னர் வந்தவர்கள். இந்நாட்டில் 825ஆம் ஆண்டில் இசுலாம் மதம் பரவத் தொடங்கியது.

19ஆம் நூற்றாண் டில், இந்நாட்டைப் பாதுகாக்கிறேன் எனக் கூறிக்கொண்டு உள் நாட்டில் ஆட்சி செலுத்தியவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரான்சு நாடு வந்தது. 1888இல் சோமாலிலாந்தில் பிரெஞ்சு குடியேற்றத்தை ஏற்படுத்தி 1892 இல் குடியேற்ற நாட்டின் தலைநராக டிஜி பவுட்டியை உருவாக்கினார்கள்.

1977இல் அபார் பகுதி யும் ஈகாஸ் பகுதியும் டிஜிபவுட்டியைப் போலவே விடுதலை பெற்ற நாடுகளாகின.

கிழக்கு ஆப்ரிக்காவில் ஏடன் வளைகுடா வுக்கும் செங்கடலுக்கும் ஓரத்தில் அமைந்துள்ள இந் நாட்டின் பரப்பு 23 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். இங்கே சுமார் 5 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களில் 94 விழுக் காடு முஸ்லிம்கள். மீதிப் பேர் கிறித்துவர்கள். 68 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள்.


--------------------"விடுதலை" 11-6-2009

0 comments: