Search This Blog

20.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -II
ஜெர்மனி - நேற்றைய தொடர்ச்சி

தனது பேராசைப் பெருந்திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தத் தொடங்கிய இட்லர், முதலில் உலக நாடுகள் மன்றத்திலிருந்து ஜெர்மனியை விலக்கிக் கொண்டார். முதல் உலகப் போரின் விளைவாக, நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட மாமன்றம் இது. 1933 அக்டோபரில் இம்மன்றத்திலிருந்து ஜெர்மனி விலகிக்கொண்டது. 1934 ஜனவரியில் போலந்து நாட்டுடன் போர் தொடுக்கா ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. 1935 ஜூன் மாதத்தில் பிரிட்டனுடன் கடற்படை ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஜெர்மனியின் கடற்படையை மீண்டும் வலுப்பெறச் செய்யத் திட்டமிட்டார். ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, பிரான்சையும் சோவியத் ரஷ்யாவையும் ரீன்லாண்டு பகுதிக்குச் செல்லச் செய்தார். 1937 இல் இத்தாலியுடனும் ஜப்பானுடனும் பிணைத்துக் கொண்டார். ஜெர்மனியை அய்ரோப்பியாவின் ஆதிக்கச் சக்தியாக்கினார்.
இப்படிப்பட்ட திட்டங்களைப் படிப்படியாகச் செய்திட வேண்டும் என்கிற தன் எண்ணங்களை மெய்ன் காம்ப் என்ற நூலாகவே அவர் எழுதிவைத்தார். அதன்படியே நடத்தினார்.

1936 இல், ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதிநாடு என்று ஆஸ்திரிய நாட்டை அறிவிக்கச் செய்தார். 1938 இல் ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. 1938 இல் செக்கோஸ்லோவேகியா பக்கம் அவரது ஆதிக்கக் கவனம் திரும்பியது. மறு ஆண்டே அந்நாட்டைப் பிடித்தார். ரஷ்யா நாட்டின் எல்லையில் இருக்க லிதுவேனியா நாட்டின் பகுதிகளை பிரஷ்யாவுக்குக் கொடுக்க வைத்தார்.

1.9.1939இல் போலந்து நாட்டின் மீது தன் படைகளை ஏவியது. போலந்து மீதான போர் தொடங்கிய இரு நாள்களில் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. முதல்உலகப் போருக்குக் காரணமான ஜெர்மனியே, இரண்டாம் உலகப் போருக்கும் காரணமாகியது.

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனியின் நாஜி ஆட்சியியும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த சர்வாதிகார நாடுகளும் சேர்ந்து 60 இலட்சம் யூதர்களைக் கொன்று கோர தாண்டவமாடினர். யூதர்கள் பற்றிய பிரச்சினைக்கு இது கடைசி முடிவு என இட்லர் இக் கொலைகளை வருணித்தார். இதைத் தான் வரலாறு ஹோலோ காஸ்ட் எனக் கூறுகிறது.

நெருப்பினால் ஏற்படும் சேதம் எப்படி எதையும் விட்டு வைக்காமல் அழிக்குமோ, அப்படிப்பட்ட அழிவை இட்லர் செய்தார் என்பதால் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
யூதர்களை மட்டுமே குடியமர்த்தி அந்தப் பகுதிகளில் எவ்வித வசதியும் தராமல் அவர் களைக் கொடுமைப்படுத்தினார். உணவு, குடிநீர் இன்றி சுகாதார வசதிகளும் இல்லாத தால் பட்டினியாலும் பசியாலும் நோயாலும் யூதர்கள் நாளும் செத்து மடிந்தனர். கொஞ்சம் கூட வெடிப் பொருள் செலவு இல்லாமலும் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட தேவைப்படா மலும் ஆயிரக்கணக் கான லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிக்க இட்லர் கையாண்ட வழிமுறை இது. கோவியத் நாட்டை நோக்கி ஜெர்மன் படை கள் நகர்ந்த போதுகூட, வழியெங்கும் உள்ள யூதர்களைக் கொன்றிட நடமாடும் கொலைக் கூடங்களை இட்லர் ஏற் படுத்தினார் என்றால் ஈவிரக்கம் அற்ற மனிதத் தன்மையற்ற ஆரிய இனத் தலைவனின்; கொடுங்கோன்மைக்கு வேறு எடுத்துக்காட்டே தேவையில்லை. தூதர்களை மட்டுமல்லாது. சோவியத் கம்யூனிஸ்ட் தோழர்களை, நாடோடிக் கூட்டத்தினரை (ஜிப்சிகள்) என எல்லா மக்களையும் - ஆரியரல்லாதார் என்றே கொன்று குவித்த கொடுமை வரலாறு என்றுமே சந்திக்காதது!


இரண்டாம் உலகப் போர் முடிந்தது. முதல் போரைப் போலவே , இப்போதும் ஜெர்மனி கேவலமான தோல்வியைத் தழுவியது. அத்துடன் சேர்ந்த இத்தாலியின் முசோலினி, ஜப்பானின் டோஜோ என எல்லா சர்வாதிகாரிகளும் அழிந்து பட்டனர். ஜெர்மனி துண்டாடப்பட்டது. மேற்கு, கிழக்கு என இரண்டாக்கப்பட்டது. மேற்கு ஜெர்மனி அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன் ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு ஜெர்மன்ஃபெட ரல் குடியரசு எனப் பெயர் சூட்டப்பட்டது.

கிழக்கு ஜெர்மனி, சோவியத் நாட்டின் கட்டுப்பாட்டில் விடப்பட்டு ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு எனப் பெயர்வைக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டின் தலைநகராக இருந்த பெர்லின் இரு பிரிவுகளாக இடையில் சுவர் வைத்துத் தடுக்கப்பட்டுப் பிரிக்கப்பட்டது. 1955 இல் மேற்கு ஜெர்மனி நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து கொண்டபோது, கிழக்கு ஜெர்மனி சோவியத் நாடுகளின் வார்சா ஒப்பந்தப்படி சேர்ந்தது.

9.11.1989 இல் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தி கிழக்கு ஜெர்மனி அரசு அறிவித்தது. இதைத் தவறாகப் புரிந்து கொண்ட மக்கள், பெர்லின் தடுப்புச் சுவரை அகற்றப் போகிறார்கள் எனக் கருதிக் கொண்டு, மேற்கு ஜெர்மனிக்குப் போக விருப்பம் தெரிவித்து செக்போஸ்ட் அருகே கூடிவிட்டனர். சரியான உத்தரவு கிடைக்கப் பெறாத கிழக்கு ஜெர்மனி காவலர்கள் அப்பெருங்கூட்டத்தை அனுமதித்துவிட்டனர். மேற்கு ஜெர்மனியர்கள் இவர்கள் திக்கு முக் காடிப் போகும் அளவுக்கு உபச்சாரம் செய்து அதனைக் கொண்டாடினர்.

1990 இல் கிழக்கு ஜெர்மனி தேர்தலை நடத்திய போது அது வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தோல்வியைச் சந்தித்து 1990 ஜூலை மாதத்தில் மேற்கு ஜெர்மனி அதிபர் ஹெல்மட் கோஹ்ல், சோவியத் அதிபர் கோபர்சேவ் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி இரு ஜெர்மனிகளும் இணைவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சோவியத் நாட்டிற்கு மேற்கு ஜெர்மனி பொருளாதார உதவி அளிப்பதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒன்றுபட்ட ஜெர்மனியின் தலைநகராக பெர்லின் அறிவிக்கப்பட்டது.
அந்நகரத்தைப் பிரித் துக் காட்டக் கட்டப் பட்ட பெருஞ்சுவர் அகற்றப்பட்டது. 3 லட்சத்து 57 ஆயி ரத்து 21 சதுர கி.மீ பரப் புள்ள இந்நாட்டின் மக் கள் தொகை 8 கோடியே 25 லட்சம் ஆகும். இவர்களில் 99 விழுக் காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர். 34 விழுக்காடு மக்கள் புரொடஸ் டன்ட் பிரிவையும் 34 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிகப் பிரிவை யும் பின்பற்றுகின்றனர். 4 விழுக்காட்டினர் முசுலிம்கள் மதம் சாராத மக்களாக 28 விழுக்காட்டினர் உள்ளனர்.

வேலை கிட்டாத மக்கள் சுமார் 12 விழுக் காடு உள்ளனர். போரின் விளைவாலும் பிளவு பட்டுக்கிடந்து ஒன்றான தாலும் பொருளாதார தொழிலாளர் பிரச் சினைகளில் இன்னும் சீரான நிலை ஏற்படவில்லை. மெல்லமெல்ல வளர்ந்து வரும் நாடாக அய்ரோப்பாவில் ஜெர்மனி உள்ளது.

-------------------"விடுதலை" 20-6-2009

0 comments: