Search This Blog
19.6.09
உலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -I
ஜெர்மனி
இன்றைய ஜெர்மனியில் அன்று வாழ்ந்தவர்கள் கெல்ட் இனத்தைச் சேர்ந்த மக்கள். பின்னர் தான் ஜெர்மனிய இனக்குடிகள் இப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
ஒன்பதாம் நூற்றாண்டில் டியிடோபர்க் போரில் ஜென்மானிய வீரர்கள் ரோமானியப் படையு டன் மோதித் தோற்கடித்து ரோமானியர்களை விரட்டியடித்தனர். நான்காம் நூற்றாண்டு வாக்கில் இரு ஜெர்மன் கூட்டரசுகள் அப்பகுதியில் முகிழ்த்தெழுந்தன. ரைன் நதிக்கரையில் இருந்த அலெமான்னி ராஜ்யமும் டான்யூப் நதிக்கரையில் இருந்த கோத்ராஜ்யமுமே அவை.
நாடோடிகளான குதிரைவீரர்களின் கூட்டமொன்று கிழக்குப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தி, ஜெர்மானியர்களை ரோம் சாம்ராஜ்யப் பகுதிக்குள் துரத்திவிட்டனர்.
மேற்குப் பதிவில் இருந்த ஹூன் வமிசத்தினரின் தாக்குதல் ரோம ராஜ்யத்தைக் கடும் சங்கடத்திற்குள்ளாக்கியது. ஹூன்களின் தலைவனான அட்டிலா 453ஆம் ஆண்டில் இறந்த பிறகு, ரோம ராம்ராஜ்யத்தின் முழு அழிவிற்குப் பிறகு, ஜெர்மனி அய்ரோப்பியப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. நாளடைவில் கண்டம் முழுவதும் ஜெர்மானிய ராஜ்யங்கள் பரவத்
தொடங்கின.
மொழி, இனம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் ஒரே தன்மை கொண்டவையாக இருந்த போதிலும் அவர்களிடையே அரசியல் ரீதியான ஒற்றுமை இல்லாமல் போனது. அதே சமயத்தில் பிராவ்க் இனத்தவரும் ஆஸ்ட்ரோ கோத் இனத்தவரும் மோதிக்கொண்டனர், சாம்ராஜ்ய விஸ்தரிப்பின் மீது இருந்த பேராசையின் காரணமாக! முடிவில் பிராங்க் இனத்
தவரின் கைஓங்கிற்று.
476 ஆம் ஆண்டிலிருந்து 750 ஆம் ஆண்டு வரை பிராங்க் இனத்தைச் சேர்ந்த மெரோலிங்கன் வம்சம் வலுவானதாக அமைந்திருந்தது. இவர்களைத் தொடர்ந்து அமைந்திருந்தது. இவர்களைத் தொடர்ந்து கரோலிங்க வம்சத்தினர் ஆண்டனர். இவர்களில் சிறந்த மன்னராக விளங்கி எல்லா நாடுகளையும் ஒன்றாக இணைத்து கிறித்துவ நாடாக மேற்கு அய்ரோப்பா வில் உருவாக்கினார். போப் அவரை 800 ஆம் ஆண்டில் நாட்டின் பேரரசராக அறிவித்து முடி சூட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு இவர்களின் வமிசவழி ஆட்சியே நடந்தது. 1806 ஆம்
ஆண்டுவரையிலும்!
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மகா ஃபிரெடெரிக் மன்னரின் தலைமையில் பிரஷ்யா மாபெரும் சக்தியாக உருவெடுத்தது. 1867 இல் மெய்ன் ஆறுக்கு வடக்கே உள்ள பகுதிகள் ஒன்றிணைந்து வடஜெர்மன் கூட்டாட்சி எனப் பெயர் சூடிக் கொண்டன. இந்நாட்டில் பிரஷ்யப் படைகளின் ஆதிக்கம்தான். அதே காலகட்டத்தில் 1860 இல் ஓட்டோவான் பிஸ்மார்க் வலு வானவராக உருவெடுத் தார். 1862 இல் அவர் பிரஷ்யாவின் பிரதமரானார். ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகளின் மீது படை யெடுத்து அவற்றை வென்றார். இப்போர்கள், ஜெர்மனி நாட்டை வலுவானதாக உருவாக்கின. ஜெர்மனிப் பேரரசு 18.1.1871இல் உருவாக்கப் பட்டது. பிரஷ்யாவின் முதலாம் வில்ஹெம் அரசர் ஜெர்மனி நாட்டின் பேரரசராக பிரான்சின் வர்கேல்ஸ் நகரில் முடிசூடிக் கொண்டார். பிஸ்மார்க் அதிபரா னார்.
1890 இல் மாமன்னர் இரண்டாம் வில்ஹெம் அதிபரை பிஸ்மார்க்கைப் பதவியை விட்டு விலகச் செல்லவே, அவரும் விலகினார். அதன் பின்னர் ஜெர்மனியின் போக்கைப் புதிய பாதையில் மன்னர் செலுத்தினார். விளைவு, எதிர்மறையாகியது. அயலுறவுக் கொள்கை பின் விளைவாக ஜெர்மனி தனித்து விடப்பட்ட நாடாகியது.
28.6.1914 இல் போஸ்னிய செர்ப் இனத் தலைவன் கேவ்ரிலோ பிரின்சிப் ஆஸ்திரிய இளவர சர் பிரான்சிஸ் பெர்டினான்டைக் கொலை செய்து விட்டான். ஆஸ்திரிய மன்னராக வேண் டிய பெர்னான்டையும் அவன் மனைவி சோபியாவையும் கொன்றதால் ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் சேர்ந்து செர்பியா மீது 28.7.1914 இல் போர் தொடுத்தன. ரஷ்யாவும் தன் நாட்டுப் படைகளை ஆயத்தப்படுத்தியது. அந்த ஆண்டு ஆகஸ்ட் முதல்நாள் ரஷ்யா மீது ஜெர்மனி போர் தொடுத்தது. பின்னர் பிரான்சு, பெல்ஜியம் நாடுகள் மீதும் போர் தொடுத்தது. பெல்ஜியம் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி அளித்திருந்த பிரிட்டன் அதனைக்காப்பாற்ற ஜெர் மனி மீது போர் என 4.8.1914 இல் அறிவித்தது.
இதுதான் முதல் உலகப்போர் என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜெர்மனியைத் தோற்கடித்து 1918 இல் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த முடிவின் விளைவாக ஜெர்மனி பல இழப்புகளைச் சந்திக்க நேரிட்டது. ஜெர்மனி நாட்டின் (காலனி) குடியேற்றப்பகுதிகளை அய்ரோப்பிய நாடுகளுக்குத் தர நேரிட்டது. தன் நாட்டுப் பகுதிகளைப் பக்கத்து நாடுகளுக்குத் தரவும், போரினால் ஏற்பட்ட செலவுகளுக்கு இழப்பீடாக மிகப் பெருந் தொகையைக் கொடுக்கவுமான நிலை ஏற்பட்டது. ஆனாலும் ஜெர்மனி பாடம் கற்றுக் கொண்டதா?
போருக்குப்பின் பேரரசாக இருந்த ஜெர்மனி உடைந்து போனது. வெய்மர் குடியரசு எனும் நாடு உதயமானது. ஜெர்மனி நாட்டு வரலாற்றில் 1920கள் இருண்ட காலமாக ஆனது. பொருளாதாரம் மிகவும் சீர் குலைந்து போய், பணக்கஷ்டம் அதிகமாகி மக்கள் பெரும் சுமையைச்சுமந்து துன்பம் அனுபவிக்க நேரிட்டது.
அந்த நிலையில்தான் அடால்ப் இட்லர் நாஜிக் கட்சியின் தலைவராக வந்தார். தேசிய சோஷலிசக் கட்சி என்பதன் சுருக்கமே நாஜி (ZAZI)என்பது, அவரே ஜெர்மனியின் அதிபராக 30.1.1933 இல் வந்தார். 19434 இல் அதிபர் பால்வான் ஹின்டன் பெர்க் இறந்தபிறகு இட்லரே அதிபராகவும் ராணுவத் தலைவராகவும் இருபதவிகளையும் வகிப்பவராக ஆக்கிக் கொண்டார். இதனால் போர்ப்படைகளின் மாபெரும் தளபதியாகி விட்டார்.
ஆட்சியின் அதிகாரத் தலைமையைக் கைப்பற்றிக் கொண்ட இட்லர், மிகக் கடுமையான ஒடுக்குமுறை ஆட்சியை நடத்தினார். ஜெர்மனியர்களின் தந்தையர் நாடு என உசுப்பி அதன் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும் என மக்களைத் திரட்டி மலிவான உணர்ச்சி களைத்தூண்டினார். வர்செய்ல்ஸ் உடன் படிக்கையை ரத்து செய்ய வேண்டும், ஜெர்மனி நாட்டை விஸ்தரிக்க வேண்டும், படை பலத்தைப் பெருக்கி ஜெர்மனியின் இழந்த பெரு மைகளைப் பெற்றிட வேண்டும் என்று மக்கள் மனதில் ஆதிக்க வெறியை வளர்த்தார்.
ஜெர்மனியர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆரிய இனம் ஆளப் பிறந்த இனம் என்றும், ஜெர்மனியர் கலப்பில்லாத தூய ஆரியர்கள் என்றும் பெருமை பேசி யூதர்கள் மீது வெறுப்பை வளர்த்துத்தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார். அதன் விளைவாக 30.6.1934இல் தன் சொந்த நாஜிக் கட்சியிலிருந்த தனக்கு வேண் டாதவர்களைக் கொன்று குவித்தார். தனக்கு மிகவும் ஆதரவானதாக வளர்க்கப்பட்ட எஸ் எஸ் படை வீரர்களைக் கொண்டு இக்கொலை பாதகத்தைச் செய்து முடித்தார்.
நீள வாள்களின் இரவு (NIGHT OF THE LONG KNIVES) என வரலாறு இக்கொடிய நாளைப் பதிவு செய்துள்ளது.
--------------------------(ஜெர்மனி நாளை தொடரும்)- "விடுதலை" 19-6-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment