Search This Blog

8.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- கொலம்பியா-கொமொரோஸ்-காங்கோ ஜனநாயகக் குடியரசு

கொலம்பியா

16-ஆம் நூற்றாண்டில் கொலம்பியா நாட்டை ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் பிடித்தபோது சிப்கா மொழி பேசும் மக்கள் நிறையப் பேர் அங்கே குடியிருந்தனர். அவர்களை அடக்கி ஸ்பெயின் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.

1819 இல் சைமன் பொலிவர் ஸ்பெயின் காட்டுப் படையுடன் சண்டையிட்டுத் தோற்கடித்து கிரான் கொலம்பியக் குடியரசு எனும் நாட்டை உருவாக்கினார். பொலிவியா நாட்டின் விடுதலை வீரரான இவரின் பெயரால்தான் அந்நாடு அழைக்கப்படுகிறது. தென்அமெரிக்க நாடு கள் பலவற்றின் விடுதலைக்காகப் போர் நடத்திய விடுதலை வீரர் அவர். கொலம்பியா, ஈக்வாடர், பனாமா, வெனிசுலா ஆகிய நாடுகளை இணைத்து மகா கொலம்பியாவை ஏற்படுத்தினார்.

எனினும் 1829 இல் வெனிசுலாவும் ஈக்வ டாரும் விலகிக் கொண்டதையடுத்து மகா கொலம்பியா சிதறியது. அதனால் நியூவா கிரானடா எனும் புதிய நாடு உதயமானது. தற் போதைய கொலம்பியா, பனாமா நாடுகளை உள்ளடக்கிய நாடு.

1899 முதல் 1903 முடிய நடந்த 1000 நாள் போரின் விளைவாக இந்நாடும் உடைந்தது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் மரணமடைந்த இப்போரின் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர். 1948 முதல் 1937 வரை நடந்த இப்போர் களில் சுமார் 3 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.

1978-இல் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு எடுத்தது. போதை மருந்து உற்பத்தி, கடத்தல், வணிகம் என முன்னணியில் இருக்கும் நாடு கொலம்பியா. இது தொடர்பாக கொலை, கொள்ளை இவற்றைச் செய்ய அஞ்சாத நாடு. முழுநேரமாக இத்தகு தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களைக் கொண்ட நாடு. இப் பேர்ப்பட்டவர்கள் அதிகாரிகளாக, ஆளுகின்றவர்களாக, பதவியில் அமர்ந்திருப்பவர்களாக இருக்கும் நாடு.

1975 இல் மெக்சிகோவில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளினால் இங்கே வணிகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அதற்கும் முன்னதாகக் கூட அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட மரிஜுவானா எனும் போதைப் பொருளில் 70 விழுக்காடு இங்கிருந்து போனதுதான். கடத்தல் வணிகம் பெருகப் பெருக, மாபியா கும்பல் அமைப்புகள் வளரத் தொடங்கின.

மெடல்லின் குழு என்பது பாப்லோ எஸ் கோபார் என்பாராலும் காலி குழு என்பது மற்றொன்றுமாக இயங்கின. 2000 இல் கொலம்பியா அதிபர் ஆன்ட் ரஸ் பஸ்ட்ரானா கொலம்பியா திட்டம் என்ற ஒன்றினை ஏற்பாடு செய்தார். 100 கோடி டாலர் உதவியை ராணுவ ரீதியாக அமெ ரிக்காவிலிருந்து பெற் றார். அதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஒழித்தார். அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் கூட்டத்தையும் ஒழித்தார்.
தென் அமெரிக்கக் கண்டத்தின் வட மூலையில் கரிபியன்கடலருகில் அமைந்துள்ள இந்தநாடு 11 லட்சத்து 38 ஆயிரத்து 910 ச.கி.மீ. பரப்புள்ளது. இதில் மல்பெலோ தீவுகள், ரொன்கடார்கே, செர்னா பாங்க், செர்னில்லா பாங்க் ஆகிய பகுதிகளும் அடங்கும்.
4 கோடி 36 லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 90 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிகர்கள். ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்..92 விழுக்காடு கல்வி அறிவு பெற்றவர்கள்.
அதிபரும் துணை அதிபரும் உண்டு. அதிபரே ஆட்சியின் தலைவரும் ஆவார்.

கொமொரோஸ் (Comoros)

தென்ஆப்ரிகாவின் மொசாம்பிக் கால்வாயின் முனையில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களான இந்நாட்டை 1886 இல் பிரான்சு நாடு பாதுகாக்கத் தொடங்கிற்று. 1961 இல் அதற்குச் சுயாட்சி தரப்பட்டது. 1974 இல் மூன்று தீவு நாடுகள் இணைந்து கொமொரோஸ் குடியிருப்பு ஆகி, வாக்கெடுப்பு நடத்தி, விடுதலை பெற்ற நாடாகத் திகழ முடிவு எடுத்தன. 6-2-1975 இல் அந்நாடுகளின் நாடாளுமன்றம் சுதந்திரத்தைப் பறை சாற்றின.

விடுதலை அடைந்த காலம் முதல், 19 ராணுவப் புரட்சிகள் நடைபெற்றன. நடத்திட முயற்சிகள் எடுக்கப்பட்டன. கொமொரோஸ் நாட்டிலிருந்து அஞ்சோவான், மொஹலி ஆகிய தீவுகள் பிரிந்து விடுதலை பெற்ற நாடுகளாக அறிவித்துக் கொண்டன.

1999 இல் ராணுவத் தளபதி அசாலி ஆட்சியைக் கைப்பற்றினார். நாடுகள் பிரிந்து செல் வதைத் தடுக்கும் வகையில் கூட்டாட்சி ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தீர்க்க விரும்பினார். ஃபொம்போனி ஒப்பந்தம் 2000 என்று இது அழைக்கப்பட்டது. 2001 டிசம்பரில் புதிய அர சமைப்புச் சட்டத்திற்கான ஒப்புதலை மக்கள் ஓட்டெடுப்பு மூலம் தெரிவித்தனர். அதன் படி 2002 இல் அதிபர் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு தீவு நாட்டுக்கும் ஓர் அதிபர் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிணைந்த அதிபர் ஒருவர் 2001 மே மாதத்தில் பதவி ஏற்றார். அவர்தான் அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் இருக்கிறார். தற்போதைய அதிபர் அசாலி அசுவுமனி என்பவர் 26-5-2002 முதல் இருந்து வருகிறார்.

2 ஆயிரத்து 170 ச.கி.மீ. பரப்புள்ள நாடு இது. 7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 98 விழுக்காடு சன்னி முசுலிம். மீதிப் பேர் ரோமன் கத்தோலிக்கர். அரபி மொழியும் பிரெஞ்சு மொழியும் ஆட்சி மொழிகள். ஆண்களில் 64 விழுக்காடும், பெண்களில் 49 விழுக்காடும் மட்டுமே படித்தவர்கள்.

காங்கோ ஜனநாயகக் குடியரசு (பழைய பெல்ஜியன் காங்கோ)

தற்போதைய காங்கோ நாட்டையும் உள்ளடக்கிய காங்கோ பேரரசாக 1200 களில் விளங்கியது. 15,16,17 ஆம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பியர்கள் இப்பகுதிக்கு வரத் தொடங் கினர். அடிமை வியாபாரத்தை பிரிட்டிஷ், டச்சு,பிரெஞ்ச், போர்த்துகீசியர்கள் தொடங்கினர். வந்தேறிகளாக இந்த வெள்ளைத் தோல் மனிதர்கள், உள்நாட்டுக் கறுப்பின மக்களைப் பிடித்து அடிமைகள் என்று அய்ரோப்பிய நாடு களுக்கு விற்பனை செய் யும் வியாபாரத்தைத் தொடங்கி நடத்தினர்.

பெல்ஜியம் நாட்டு மன்னர் இரண்டாம் லியோபோல்டு என்பா ரின் உத்தரவின் பேரில் ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி என்பார் 1877 இல் காங்கோ ஆற்றின் வழியே பயணம் செய்து வளர்ச்சியடையாத உள்நாட்டுப் பகுதிகளைக் கண்டறிந்தார். அப்பகுதிகளின் குழுத் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் விளைவாக நாளடைவில் அந்நாட்டு மக்களின் நிலங்களுக்கு பெல்ஜியம் மன்னர் அதிபதியானார். கடைசியில் 1885 ஆம் ஆண் டில் காங்கோ சுதந்திர ராஜ்யம் என்ற பெயரில் நாட்டை அறிவித்து தானே முடிசூடிக் கொண்ட கொடுமையும் நடந்தது.

காட்டு விலங்காண்டித்தனமான நாடுகளில் ஒன்றாக காங்கோ விளங்கியது. மக்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிக் கொழுக்க விரும்பி மன்னர் லியோபோல்டு நடத்திய கொடுங் கோன்மையின் விளைவாக மக்கள் பட்டினியாலும், கட்டாயமாக வேலை வாங்கியதாலும் இறந்துபோயினர். பலர் வெளிப்படையாகவே கொல்லப்பட்டனர்.

1960 ஜுன் மாதத்தில், பெல்ஜியம் காங்கோ சுதந்திர நாடானது. ஜோசப் கசவாடி அதிப ராகவும் பாட்ரிஸ் லுமும்பா பிரதமராக வும் பதவியேற்றனர். ஆனால் 1961 ஜனவரியில் லுமும்பா கொல்லப்பட்டார். 1965 ராணுவத் தளபதி ஜோசப் மொபுடு ராணுவப் புரட்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

1971 இல் மொபுடு நாட்டின் பெயரை மாற்றி அமைத்தார். நாட்டின் பெயரை ஜைர் என்றும் காங்கோ நதியின் பெயரை ஜைர் நதி என்றும் கடாங்கா மாநிலப் பகுதியை ஷாபா என்றும் மாற்றினார். இவை அவர்கள் மொழியில் வழங்கும் பெயர்கள். அய்ரோப்பியர் வைத்த பெயரை மாற்றி மண்மணக்கும் பெயர்களைச் சூட்டினார்.

1973, 74-ஆம் ஆண்டுகளில், வெளி நாட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி முதலாளிகளை நாட்டை விட்டு வெளியேற்றினர். நாட்டின் பொருளாதார நிலை வீழ்ந்தது. 1990 இல் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மாற்றங்களுக்குச் சம்மதம் அளித்தார். எனினும் புரட்சியில் ஈடு பட்ட ருவாண்டாவின் புரட்சியாளர்கள் 1997 மே மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தலைநகர் கின்ஷாசாவைக் கைப்பற்றிக் கொண்டனர்.
2001 ஜனவரியில் அதிபர் லாரன்ட் கபிலா அவரின் மெய்க்காப்பாளரால் சுட்டுக் கொல்லப் பட்டார். அதிபரின் மகன் ஜோசப் கபிலா பத விக்கு வந்தார். 2002 அக்டோபரில் தலை நகரிலிருந்து ருவாண்டா படைகள் திரும்பிச் செல்வது பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. டிசம்பர் மாதத்தில் பிரிட்டோரியா உடன்படிக்கை ஏற்பட்டது. இருதரப்பும் சண்டையை விலக்கிக் கொண்டன.

இடைக்கால அரசு ஏற்பட்டது. 2003 ஜூலையில் ஜோசப் கபிலா அதிபராக நீடித்த நிலையில் நான்கு துணை அதிபர் களும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். முந்தைய அரசின் சார்பாக ஒருவர், முந்தைய புரட்சி அமைப்பு சார்பாக ஒருவர், எதிர்க்கட்சிகளின் சார்பாக என்று நால்வர் அமைக்கப்பட்டனர். இவர்களைத் தவிர பிரதமர் என யாரும் கிடையாது.

மத்திய ஆப்ரிகாவில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப் பளவு 23 லட்சத்து 45 ஆயிரத்து 410 ச.கி.மீ.ஆகும். மக்கள் தொகை 6 கோடியே ஒரு லட்சம். இவர்களில் பாதிப்பேர் ரோமன் கத்தோலிக்கர்கள்.புரொடஸ்டன்ட்கள் 20 விழுக்காடு. முசுலிம்கள் 10 விழுக்காடு உள்ளனர்.
ஆட்சி மொழியாக பிரெஞ்ச் மொழி உள்ளது. வணிக மொழியாக லிங்கலா மொழி உள்ளது. கிவ்வானா, கிகோங்கோ, தஹி லுபா ஆகிய மொழி களும் பேசப்படுகின் றன. 65 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர்.


--------------------நன்றி :- "விடுதலை" 8-6-2009

0 comments: