Search This Blog
8.6.09
இந்திய அரசு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் துணை போகலாமா?தமிழர்கள் மறக்க - மன்னிக்க மாட்டார்கள்!
இந்திய அரசு ராஜபக்சேவுக்குத் துணை
தமிழர்கள் மறக்க - மன்னிக்க மாட்டார்கள்
மத்திய அரசுக்கு
தமிழர் தலைவர் எச்சரிக்கை
இந்திய அரசு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் துணை போகலாமா?
அதனைத் தமிழர்கள் மறக்கமாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள் என்றார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை சைதை தேரடியில் நேற்று (7.6.2009) இரவு ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கப் பொதுக் கூட்டம் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
ஈழத்தமிழர் பிரச்சினையை மக்களுக்கு விளக்க.....
நாங்கள் உருவாக்கிய ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு உண் மைகளை எடுத்துச் சொல்லவேண்டும். மக்களுக்கு உண்மையான உணர்வுகளை உணர்த்த வேண்டும் என்பதற்காக சென்னையில் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகின்றோம். நாங்கள் அன்றாடம் மக்களை சந்திக்கக்கூடியவர்கள்; எனவே நாடு முழுக்க பல்வேறு பகுதி களில் ஈழத்தமிழர் பிரச்சினைகளை மக்களுக்குத் தொடர்ந்து எடுத்துச் சொல்லவிருக்கின் றோம்.
இனி ஒரே முழக்கம் - தமிழா இன உணர்வுகொள்
நமக்குத் தேவை ஒரே ஒரு முழக்கம்தான்! தமிழா இன உணர்வு கொள் என்ற அந்த முழக்கம் தான் எங்கும் இனிஎதிரொலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் முழங்கவேண்டும். ஒவ்வொரு தமிழரிடையேயும் இந்த உணர்வு தான் முழங்க வேண்டும். தமிழன் இடையிலே இந்த உணர்வை மறந்தான். விளைவு? தன்னுடைய அடையாளத்தை மறந்தான். சரியான தமிழனை அடையாளம் காணத்தவறினான். துரோகிகளுக்குத் துணைபோய் தோள் கொடுத்து நின்றான். அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று அழைக் கப்பட்ட வ.ரா ஒரு முறை சொன்னார். இராமாயணத்தில் விபீஷ்ண ஆழ்வார் போற்றப்பட்டான்.அண்ணனைக் காட்டி கொடுத்தவனுக்கு ஆழ்வார் பட்டம் சூட்டப்பட்ட இத்தகைய நாட்டில் சகோதரப் பாசம் எப்படி நிலவும் என்று கேட்டார்.
இழந்தது களங்களைத் தானே தவிர யுத்தங்களை அல்ல-
நம்முடைய தமிழினத்திற்குப் பாதுகாவலன் யார் என்று தெரியாத நிலையில் தமிழன் இருக்கிறான். மீண்டும் தமிழர்களுக்கு அந்த உணர்வை ஊட்ட வேண்டும்.
விடுதலைப் புலிகள் களங்களை இழந்திருக்கலாம் ஆனால் யுத்தத்தை அவர்கள் இழக்க வில்லை.
இங்கே சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசியதை முன்மொழிகின்றேன். சகோதரர் தொல். திருமாவளவன் பேசியதை அப்படியே வழி மொழிகின்றேன்.
பிரபாகரன்இருக்கிறார்
பிரபாகரன் இருக்கி றாரா? இல்லையா? என்பது பிரச்சினையல்ல. கடைசி தமிழனின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கின்ற வரையிலே, அந்த ரத்தத்தில் கடைசி அணு இருக்கின்ற வரையிலே பிரபாகரன் இருந்து கொண்டுதான் இருப்பார்.
இராமாயணத்தில் வாலிவதம் - மரத்திற்குப் பின்னாலே ஒளிந்து இருந்து இராமன் வாலி யைக் கொன்று வாலி வதம் செய்ததைப் போல இன்றைக்கு ஈழத்தமிழருடைய வாழ்வுரிமை யும் வதம் செய்யப்பட் டிருக்கிறது.
குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சே நிறுத்தப்படுவார்
எந்த நாட்டிலாவது இப்படி ஒரு காட்சியைக் காண முடியுமா? சொந்த நாட்டு மக்களை அந்த நாட்டில் அகதிகளாக வைத்திருக்கின்ற ஒரே நாடு இலங்கை தான். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு போட்டு அழித்தவர் தான் ராஜபக்சே.
இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ராஜபக்சே உலக நாட்டின் குற்றவாளிக் கூண் டிலே ஏற்றப்பட்டே தீருவார். இன்றைக்குப் பொது மக்களுக்குக்கே அந்த உணர்வு வந்து விட்டது.
இந்திய அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்
6 கோடி தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக் கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு அவசரமாக ஒரு கடிதத்தை எழுதினார். உலக நாடுகள் அரங்கில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டால் அது தமிழர்களுக்கு விரோதமான செயல் என்று எச்சரிப்பது போல உணர்த்தியிருக்கிறார்.
இந்திய அரசு இதை அலட்சியப்படுத்திவிட்டது. அதிகாரம் இன்றைக்கு இந்திய அரசுக்கு இருக் கின்றது என்ற காரணத்தால் அலட்சியப்படுத்தி விட்டார்கள். தமிழர்கள் இதை மறக்க மாட் டார்கள்.
நமக்கு எதிரிகள் யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
பிரபாகரன் தான் கொல்லப்பட்டு விட்டார் என்று அறிவித்த இலங்கை அரசே! ராஜபக்சேவே! பிரபாகரன் தான் இறந்துவிட்டார். விடுதலைப்புலிகளுடன் போர் முடிந்து விட்டது என்று அறிவித்தீர்களே? அதன் பின் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வாழ்வுரிமை மீட்புக்கு என்ன செய்தீர்கள்?
முள்வேலிக்குள் அடைத்திருக்கின்ற அப்பாவித் தமிழர்கள் அவரவர்களுடைய இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டாமா? அவர்களுடைய உறவினர்கள் இருக்கிறார்களா - இல்லையா? என்பது தெரிய வேண்டாமா? விசாரணை என்ற பெயரில் அவர்களை கொடுமைப்படுத்துகின்றீர்களே - பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வருகிறீர்களே? அங்குள்ள மக்களுக்கு உணவு, மருந்து, உடை இல்லை.
இந்தக் கொடுமை உலகம் கண்டும் காணாமல் இருக்கலாமா? மத்திய அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா? நாம் இதற்குத் துணை போனால் நம்முடைய கல்லறை மீது கண்ணீர் சிந்தமாட்டார்கள். காறித் தான் துப்புவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!
ஒரே நாளில் 25 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அய்.நா அமைப்பு இதைப் பற்றி இலங்கை அரசிடம் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா?
இந்திய அரசு ராஜபச்சேவுக்குத் துணை போவதா?
இந்திய அரசு இன்னமும் ராஜபச்சேவுக்கு துணை போய்க் கொண்டிருப்பதா?
நானோ, தொல். திருமாவளவனோ, சுப. வீரபாண்டியனோ பேசினால் இந்திய இறை யாண்மைக்கு எதிராக இவர்கள் பேசலாமா? என்று கருதுவீர்களேயானால்? இந்தியாவி னுடைய இறையாண்மைக்கு ஆபத்து எங்களிடம் இல்லை. உங்களுக்கு ஆபத்தே இலங் கைக் காரனிடமிருந்து தான் வரப்போகிறது என்பதை மறந்துவிடா தீர்கள்!
முதலில் நம்மிடம் போர் நிறுத்தம் வேண்டும்
இலங்கைக்கு ஆதரவாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்று சீனா சொல்லலாமா? இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் துணைநிற்கிறது. வெளி நாடுகள் இலங்கைக்கு நிதியுதவி செய்தால் அதன்மூலம் போரினால் ஏற்பட்ட இழப்பு இலங்கையின் காலியான கஜானா தான் நிரப்பப்படும். ஆகவே எந்த நாடும் இலங்கைக்கு நிதியுதவி அளிக் கக் கூடாது. உதவக் கூடாது!
தமிழ்நாட்டிலே ஈழப்பிரச்சினையில் இரண்டு அணிகள் இருந்தாலும் முதலில் நம்மிடையே போர் நிறுத்தம் வரவேண்டும். நீரும், பாலும் கலக்கலாம். பெட்ரோலும், பாலும் கலக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். நமக்குப் பொது எதிரி தமிழினப் படு கொலையை செய்த ராஜபக்சேதான். அதை திசை திருப்பிக் காட்டாதீர்கள்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
மலையேறிவிட்டார் ஜெயலலிதா!
தமிழ் ஈழத்தை மீட்போம் என்று சொன்ன ஜெயலலிதா அம்மையார் தேர்தலுக்காக ஒரு நாள் கூத்தாடினார். தேர்தலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க இப்படி ஒரு நாடகத்தை ஆடினார். மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். புலிகளையும் தெரியும்; புலி வேடதாரிகளையும் அடையாளம் காணத் தெரியும்.
அந்த அம்மையார் தேர்தலுக்கு பிறகு ஈழப்பிரச்சினையைப் பற்றி பேசமாட்டார். என்று அன்றைக்கே தேர்தல் நேரத்திலேயே சொன்னோம். அந்த அம்மையார் கொடநாடு எஸ்டேட்டிற்கு மலை ஏறிவிட்டார். ஈழவிடுதலை பற்றி அவர் சொன்னவைகளும் தேர்த லோடு மலையேறிவிட்டன. மலையேறியவர் இறங்கமாட்டார் (பலத்த கைதட்டல்).
அவரை நம்பியவர்களுக்கு போயஸ் தோட்டக் கதவு சாத்தப்பட்டதுதான் மிச்சம். அவர்களுக்கு போயஸ் தோட்டம் கதவே திறக்கவில்லை. போயஸ் கதவே திறக்காது என்கிற போது கொட நாடு கதவா திறக்கும்?
சென்னை சைதை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர்
-------------------------"விடுதலை" 8-6-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//தமிழ்நாட்டிலே ஈழப்பிரச்சினையில் இரண்டு அணிகள் இருந்தாலும் முதலில் நம்மிடையே போர் நிறுத்தம் வரவேண்டும். நீரும், பாலும் கலக்கலாம். பெட்ரோலும், பாலும் கலக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். நமக்குப் பொது எதிரி தமிழினப் படு கொலையை செய்த ராஜபக்சேதான். அதை திசை திருப்பிக் காட்டாதீர்கள்.//
ஓரணியில் திரள்வார்களா? ஓட்டுப் பொறுக்குவதற்கு எதையும் விட்டுக் கொடுப்பார்கள். அனால் இன உணர்வில் ...பல அணிகளாக பிரிந்து ஆழ்வார்களாக அடையாளப்படுத்திக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வார்கள் வெட்கமில்லாமல். அது தான் இப்போது நடந்து வருகிறது. இதையும் மீறி ஓரணியில் அவர்களை யெல்லாம் இணைத்தால் அது சாதனையே.
கேட்க நல்லா இருக்கு ஆனா இந்த கேள்வியை நாம நமக்குள்ளே கேட்டுக்கனும்,
அதாகப்பட்டது இலங்கை அரசுக்கு துணை போகும் இந்திய அரசுக்கு கருணாநிதி துணைபோகலாமா ? அப்படி துணை போகும் கருணாநிதிக்கு வீரமணி வா(ல்)ள் பிடிக்கலாமா ? னு கேட்டுப் பாருங்க
//இந்திய அரசு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் துணை போகலாமா?//
இது வரைக்கும் கலஞரும், சோனியாவும் செய்தது என்ன? 35,000 பேர் செத்தது வீரமணியார் அறியாததா?
//அதனைத் தமிழர்கள் மறக்கமாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள் //
தமிழர்கள் காசுக்கு மடி விரித்து ரொம்ம்ப நாளாச்சு தலைவா.
//ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.//
மக்களுக்கு பொழுது போகலைன்னா இப்படித்தான் பொதுக் கூட்டத்திற்குப் போவாங்க.
//நாங்கள் உருவாக்கிய ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு உண் மைகளை எடுத்துச் சொல்லவேண்டும்.//
இது வரைக்கும் நீங்க சொல்லிச் சொல்லியே 50,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். பெரியார் மாதிரி நீங்க சொன்னாலும் யாரும் கேக்க மாட்டாங்க வுடுங்க.
//இனி ஒரே முழக்கம் - தமிழா இன உணர்வுகொள்//
நீங்க இப்படி நீட்டி முழங்குவதை நிறுத்தினாலே போதும். ஈழத்தமிழர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
//அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று அழைக் கப்பட்ட வ.ரா ஒரு முறை சொன்னார். இராமாயணத்தில் விபீஷ்ண ஆழ்வார் போற்றப்பட்டான்.அண்ணனைக் காட்டி கொடுத்தவனுக்கு ஆழ்வார் பட்டம் சூட்டப்பட்ட இத்தகைய நாட்டில் சகோதரப் பாசம் எப்படி நிலவும் என்று கேட்டார்.//
அந்த வ.ரா வின் மனைவியை அவன் அண்ணன் தள்ளிக் கொண்டு போயிருந்தால், இப்படிப் பேசி யிருக்க மாட்டார்.
//இழந்தது களங்களைத் தானே தவிர யுத்தங்களை அல்ல-//
உங்க பெண்டு பிள்ளைகள் கொல்லப்படாத வரைக்கும் எல்லாம் களங்கள்தான்.
//பிரபாகரன் இருக்கி றாரா? இல்லையா? என்பது பிரச்சினையல்ல. கடைசி தமிழனின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கின்ற வரையிலே, அந்த ரத்தத்தில் கடைசி அணு இருக்கின்ற வரையிலே பிரபாகரன் இருந்து கொண்டுதான் இருப்பார்.//
ஆக மொத்தம் பிரபாகரனைப் பேசிப் பேசி உசுப்பேத்தியே கொன்னுட்டீங்க.
//இராமாயணத்தில் வாலிவதம் - மரத்திற்குப் பின்னாலே ஒளிந்து இருந்து இராமன் வாலி யைக் கொன்று வாலி வதம் செய்ததைப் போல இன்றைக்கு ஈழத்தமிழருடைய வாழ்வுரிமை யும் வதம் செய்யப்பட் டிருக்கிறது.//
இன்று ராஜ பக்சேக்குத் துணை போனவர்கள் கலஞரும், காங்கிரசாரும் என்று உங்களுக்குத் தெரியாமல் போனதுதான் பரிதாபம்.
//குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சே நிறுத்தப்படுவார்//
என்னது? அவரை வெச்சும் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?
கடவுளே, கடவுளே!
//சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு போட்டு அழித்தவர் தான் ராஜபக்சே.//
குண்டை வழங்கியவர்கள் இந்தியா தான்.
//இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ராஜபக்சே உலக நாட்டின் குற்றவாளிக் கூண் டிலே ஏற்றப்பட்டே தீருவார். //
மன்னிப்பா? தமிழர்களுக்கு அது பிடிக்காத வார்த்தை. அதான், காங்கிரசையும், தி.மு.க வையும் வெற்றி பெறச் செய்தார்கள்.
//6 கோடி தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக் கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு அவசரமாக ஒரு கடிதத்தை எழுதினார்.//
கலஞர் இலங்கைப் பிரச்சனைக்குக் கடிதம் மட்டும் தான் எழுதுவார். ஆனால் கேபினெட் அமைச்சர்கள் பதவி கேட்க மட்டும் தானே, தன் மனைவியருடன் டெல்லி பறந்து செல்வார்.
//நமக்கு எதிரிகள் யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்//
நீங்கள் தான் மக்களின் எதிரிகள்.
//அதன் பின் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வாழ்வுரிமை மீட்புக்கு என்ன செய்தீர்கள்? முள்வேலிக்குள் அடைத்திருக்கின்ற அப்பாவித் தமிழர்கள் அவரவர்களுடைய இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டாமா? அவர்களுடைய உறவினர்கள் இருக்கிறார்களா - இல்லையா? என்பது தெரிய வேண்டாமா? விசாரணை என்ற பெயரில் அவர்களை கொடுமைப்படுத்துகின்றீர்களே - பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வருகிறீர்களே? அங்குள்ள மக்களுக்கு உணவு, மருந்து, உடை இல்லை.
இந்தக் கொடுமை உலகம் கண்டும் காணாமல் இருக்கலாமா? ஒரே நாளில் 25 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அய்.நா அமைப்பு இதைப் பற்றி இலங்கை அரசிடம் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா?//
உங்க பருப்பு இங்கே பார்ப்பன எதிர்ப்புக் காட்டத்தான் வேகும். ராஜ பக்சே விடமோ, ஐ.நா விடமோ, சீனாவிடமோ வேகாது.
//இந்திய அரசு ராஜபச்சேவுக்குத் துணை போவதா?இந்தியாவி னுடைய இறையாண்மைக்கு ஆபத்து எங்களிடம் இல்லை. உங்களுக்கு ஆபத்தே இலங் கைக் காரனிடமிருந்து தான் வரப்போகிறது என்பதை மறந்துவிடா தீர்கள்!
முதலில் நம்மிடம் போர் நிறுத்தம் வேண்டும்//
கலைஞரைப்போல் பிழைக்கும் வழியைப் பாருங்கள். இந்திய இறையாண்மைக்கு ஒரு குறைவும் வராது.
குத்தியது ராஜ பக்சே. ஆனால் கத்தி கொடுத்தது கலைஞரும், காங்கிரசாரும் தான்.
//மலையேறிவிட்டார் ஜெயலலிதா!
தமிழ் ஈழத்தை மீட்போம் என்று சொன்ன ஜெயலலிதா அம்மையார் தேர்தலுக்காக ஒரு நாள் கூத்தாடினார். போயஸ் கதவே திறக்காது என்கிற போது கொட நாடு கதவா திறக்கும்?//
எரியிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
கோவி. கண்ணன் அவர்களின் நடுநிலையான தெளிவான பார்வைக்காக ......
ஈழத்தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன் அவர்களின் அறிக்கையை அப்படியே தருகிறேன்...
படியுங்கள்! தெளியுங்கள்!!
ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு
மத்திய அரசின்மூலம்
கலைஞர் பக்குவமான நடவடிக்கை
தந்தை செல்வா புதல்வர் பாராட்டு
ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண மத்திய அரசின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் பக்குவமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஈழ சுதந்திரன் பத்திரிகையில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களின் தேசத் தந்தை என்று போற்றப்படும் தந்தை செல்வாவின் புதல்வர் சா.செ.சந்திரகாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
தமிழர்கள் உலகில் எங்கு வாழினும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். ஆனால், உணர்ச்சி மட்டுமே வெற்றியைத் தேடித் தருவதில்லை. அடுத்து அறிவூப்பூர்வ மானவர்களுக்கும் தமி ழர்களில் குறைவில்லை. அந்த உணர்ச்சியும், அறிவும் நடைமுறைச் சாத்தியமான வழியில் முன் னெடுக்கப்படும்போது தான் வெற்றியை விளைவிக்க முடிகிறது.
இந்த மூன்றுடன் கடும் உழைப்பையும் சேர்த்து தமிழினத்தைக் கரையேற்ற- தமிழினத் துக்குள்ள குறை முடிக்க தமிழக முதலமைச்சர் கலைஞர் மேற்கொண்டு வரும் முயற்சிகளே திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. 1996-ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானவுடன் முதல் நடவடிக்கையாக தடைப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களின் கல்வி அனுமதிகள் கிடைக்க முதல் உத்தரவு போட்டார்.
அப்படி இந்த 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் அறிக்கையாக இலங்கைத் தமிழர் சிக்கலில் உடனடி நடவடிக்கை எடுங்கள் எனத் பிரதமர் மன்மோகன்சிங் சோனியா காந்திக்கும், மடல் எழுதினார். இது இலங்கைத் தமிழர் நெஞ்சில் பால் வார்ப்பதாக உள்ளது. அதிலும், இந்த துயரமான சூழ்நிலையில் இலங்கையில் மேலும் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தவும், ஒரு நிலையான அரசியல் தீர்வைக் காணவும் இந்திய அரசு இன்னும் தகுந்த முறையில் தலையிடுவது பொருத்தமாக இருக்கும் என்று சுட்டிக் காட்டியிருப்பது போற்றத்தக்கது.
இலங்கை நோய்க்கு மருந்து, நிலையான அரசியல் தீர்வேயாகும். அதை முன் வைத்ததற்காக ஈழத் தமிழர்கள் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.
தாங்கிக் கொள்ள முடி யாத இழப்புகளால் பரிதவித்து நிற்கும் ஈழத் தமிழினத்திற்கு கலை ஞரின் நடவடிக்கை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. அவருடைய நன் முயற்சிகள் தொடர வேண்டும். மேலும் கலைஞர் எடுத்த நன் முயற்சியின் காரணமாக இந்தியா கொடுத்த அழுத்தத்தால், இலங்கையில் இருமுறை போர் நிறுத் தம் செய்யப்பட்டதாலேயே லட்சக்கணக்கான தமிழ்மக்கள் படு கொலைக்கு ஆளாகும் பயங்கர ஆபத்து தவிர்க் கப்பட்டது என்பது சரித்திரத்தில் பதியப்பட வேண்டிய செய்தி. உண்ணாவிரதம் மேற் கொண்டு, அப்பாவி மக்களைப் பலிகொள்ளும் ஆயுதப்பிரயோகம் நிறுத்தப்படும் நிலையை கலை ஞர்தான் உருவாக்கினார். இவை மனிதாபிமான வரலாற்றில் மகத்தான அத்தியாயங்களாகும்.
அடுத்தபடியாக இலங்கையில் போர்ப்பகுதியில் சிக்கிக் கொண்ட தமிழ் மக்கள் ஒருபுறம் குண்டடிப்பட்டுச் சாக, மறுபுறம் பசியாலும், நோயாலும் சாவதைத் தடுக்க உணவுப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் அனுப்பி வைத்து அந்த மக்களை கலைஞர்தான் காப்பாற்றினார்.
முதலில் இதை இந்திய ஊடுருவல் என்று எதிர்த்தவர்கள்கூட இப்போது வரவேற்பதைப் பார்க்கும் போது மனிதாபிமான உதவிகளில் தாங்கள் புரிந்துள்ள மகத்தான சாதனையாக அது உயர்ந்து நிற்கிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற மணிமேகலை வாக் கியத்திற்குச் சான்றாகவும் திகழ்கிறது. காப்பாற்றப்பட்ட அப்பாவித் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று இயல்பு நிலைக்கு வரும் வரை இதைத் தொடர வேண்டும். கலைஞர் அவர்களின் உடல் நலம் இன்றியமையாதது. அந்த நலம் தமிழினத்தின் நலம் காக்கவும் மிகவும் முக்கியமானது. தமிழினத்தின் வெற்றி கலைஞரையே சார்ந்திருக்கிறது. அதனால் அவருடைய உடல் நலத்தையும் பேணிக் கொண்டு, தமிழின நலத்தை முன் னெடுக்க வேண்டும். - இவ்வாறு சா.செ.சந் திரகாசன் ஈழ சுதந்திரன் இதழில் கூறி யுள்ளார்.
----"விடுதலை" 8-6-2009
புலவர்கள் இரண்டு வகை : 1.குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர்கள்
2.பாட்டு பாடி பெயர் வாங்கும் புலவர்கள் .
இதில் முதல் வகையை சேர்ந்த புலவர்தான் ரங்குடு என்று நினைக்கிறன் ....
வீரமணி கலைஞர் தான் ஈழ தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பது உங்கள் கருத்து....நீங்களும் உங்கள் இயக்கமும் மத்திய அரசை எதிர்த்து ஈழ தமிழர்களுக்கு நீங்கள் என்ன என்ன புடிங்கி இருகிறிர்கள் என்று பட்டியலிட்டு அப்புறம் அடுத்தவரை பற்றி குறை கூற வாருங்கள் ....அவ்வாறு ஒன்றும் முடியவில்லை என்றால் பொத்தி கொண்டு போங்கள் .....
Blogger ரங்குடு said...
//இது வரைக்கும் கலஞரும், சோனியாவும் செய்தது என்ன? 35,000 பேர் செத்தது வீரமணியார் அறியாததா?//
இதுவரைக்கும் இங்கிருப்பவர்கள் சொன்னவற்றை எதை உருப்படியா கேட்டிருக்கிறீர்கள்...இல்லை இங்கிருப்பவர் விருப்பப்படி தான் எல்லாவற்றும் இலங்கையில் நடைபெறுகிறதா...? இங்கிருப்பவர்கள் விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெற்றது தான் மிச்சம். சரி அங்கிருக்கும் தமிழர்கள் திருப்தி படும் அளவுக்காவது நடந்தது உண்டா...?
அப்படியிருந்தால் எத்தனை சதவீதம்...?
அப்புறம் எப்படி தமிழர்கள் அங்கே ஆட்சியில் பங்கேற்று இருக்கிறார்கள்...?
இதை இங்குள்ள மக்கள் கேட்கிறார்கள்!.
Blogger ரங்குடு said...
//கலஞர் இலங்கைப் பிரச்சனைக்குக் கடிதம் மட்டும் தான் எழுதுவார். ஆனால் கேபினெட் அமைச்சர்கள் பதவி கேட்க மட்டும் தானே, தன் மனைவியருடன் டெல்லி பறந்து செல்வார். //
அப்புறம் எப்படி டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில தமிழர்கள் இவ்வளவு நாள் அமைச்சர் பதவி வகித்து வருகிறார்கள்?
ஓ அது இலங்கையா...? நம்ம நாடு இல்லை...சரி விட்டுறலாம்.
ஆமாம், அதை எல்லாம் இங்குள்ள மக்கள் பார்க்கக் கூடாது...நமக்கு என்ன தெரியப்போகுது...?
இது இந்தியாவின் மாநிலமான தமிழ் நாடு...இதை மட்டும் தான் நாங்க அங்குருந்து கொண்டு பார்ப்போம் எங்களுக்கு வேறவேலை என்ன இருக்குது?
எங்களுக்கு வேண்டியது வெளிநாட்டிலேயே கிடைச்சு போச்சு...நமக்கு என்ன? அகதிகளை பற்றி கவலையா? என்ன?
இல்லை! இங்கு வாழ்கிற மக்களை பத்தி கவலையா? அங்கேயும் கவலை கிடையாது...இங்கேயும் கவலை கிடையாது...? சும்மா பாவ்லா காட்டுவோம்...எங்களுக்கு அது மட்டும் தான் தெரியும்.
இது தான்... தொலைநோக்குப் பார்வை..எப்படி?
Blogger ரங்குடு said...
//நீங்கள் தான் மக்களின் எதிரிகள்.//
என்ன பண்ணுவது, தமிழக மக்களின் எதிரிகளாக மாறி ரொம்ப நாளாயிடுச்சே! இத்தனைக்கும் தமிழக மக்கள் விருப்பபடாமலே... சரி இலங்கை தமிழ் மக்களாவது நண்பர்களா? அது தெரியலியேப்பா...
ராஜபக்சேவுக்கு...சரத் பொன் சேகா எவ்வளவோ மேல!...ராஜபக்சேவுக்கு வாக்களித்தவர்கள் பீமேலா?
அது சரி சமூகம் என்றால் மேல் பீமேல் இருவரும் சமம் தானே...! இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கா?
Blogger ரங்குடு said...
//உங்க பருப்பு இங்கே பார்ப்பன எதிர்ப்புக் காட்டத்தான் வேகும். ராஜ பக்சே விடமோ, ஐ.நா விடமோ, சீனாவிடமோ வேகாது.//
நல்லாவே வேகுது, வேகட்டும்...இங்க இது தான் தேவை.
Blogger ரங்குடு said...
//குத்தியது ராஜ பக்சே. ஆனால் கத்தி கொடுத்தது கலைஞரும், காங்கிரசாரும் தான்.//
அப்ப டெலோ போராளிகள் 984 பேர்கள்...அப்பாவிகள்...மாத்தளை கொடூரங்கள்...இதற்கெல்லாம் யார் கத்தி கொடுத்தது...கொடுத்துவிட்டு யார் கத்திக் கொண்டிருப்பது.
ஓ அவர்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாது...நம்ம கண்ணுக்கு யார் தெரியறாங்களோ...? அவங்க மட்டும் தானை தமிழர்கள்...என்ன சரிதானே!?
Blogger ரங்குடு said...
//எரியிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?//
அதை தான் இலங்கை தமிழ் மக்களே தீர்மானிச்சுட்டாங்களே!...
இங்கிருக்கிற மக்கள் என்ன பண்ண முடியும்...?
நாங்க இங்கிருக்கிறவங்களுக்குத்தான் ஒட்டு போடமுடியும்!
அங்கேயிருக்கிறவக்கிறவக்களுக்கு இங்கேயிருந்து வாக்களிக்க முடியாது.
அங்கேயே மெஜாரிட்டி இல்லை????????
Post a Comment