Search This Blog

16.6.09

கும்பாபிஷேகத்தின் ரகசியம் (குருக்கள், பார்ப்பனர்கள் சம்பாஷணை)





நடேசக் குருக்கள்: ஏண்டா சுப்பா, இந்த 4, 5 மாதமாய் நம்ம கோயிலுக்கு அபிஷேகம் வர்றதில்லை; பிரார்த்தனை வர்றதில்லை; முன்னைப் போல அதிக ஜனங்கள் அர்ச்சனை செய்ய வர்றதில்லையே, என்ன சங்கதி?

சுப்புக் குருக்கள்: சங்கதியா! ஈரோட்டிலே ராமசாமி நாயக்கன் இருக்கான் அல்ல, அவன் குடிஅரசு எண்ணு ஒரு பேப்பர் போட்றான்; அதில் சும்மா இதையே எழுதுறான். பாப்பானுக்கு பணம் கொடுக்காதே; பாப்பான் காலில் விழாதே; பாப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே; கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துடு; அவன் தீபார்த்தனை காட்ட நீ கும்பிடாதே; அவன்கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படியெல்லாம் எழுதியும், போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை வெச்சுகிட்டு வர்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள், தானே வர்றது; தானே கும்பிடறது; பேசாமல் போயிடறது, இப்படி பண்ணுராங்கடான்னா.

நடேசக் குருக்கள்: அப்படியா! அடடா! அவனுக்கு என்ன கேடு வந்தது? அவப்பா ரொம்ப பிராமண விசுவாசியாச்சுதே! எத்தனை சமாராதனை, எத்தனை கோயில் எத்தனை சத்திரம், சாவிடி, தண்ணிப் பந்தல், உச்சவம், உபநயனம், கல்யாணம் இதெல்லாம் செய்திருக்க, அப்படிப்பட்ட வயிற்றில் இப்படி பிள்ளையா பிறக்கனும்? அய்யய்யோ! கர்மம் உடுமா? அவன் இன்னம் கொஞ்சநாளில் என்ன கெதி ஆகப் போறான் எண்ணு பாரு. முன்னே மூணு நாலு தரம் ஜெயிலுக்குப் போயிம் அவனுக்குப் புத்தி வல்ல; இப்ப சீக்கிரத்தில் ஜெயிலுக்குப் போகப் போறானா இல்லையா எண்ணு பார்த்துகிட்டு இரு. ராஜத்து வேஷம், பிராமண துவேஷம் யாரை சும்மா விட்டது, இவனை விடுறதுக்கு? ஆனாலும், இதனாலே இப்ப நமக்கு இந்த 2, 3 மாசமாய் சுத்தமா வரும்படி இல்லையே; அதுக்கென்ன பண்ணறது? இப்ப வரவர தெவசத்துக்குக் கூட எந்த சூத்திரனும் நம்மைக் கூப்பிடறது இல்லை; நமக்கு முன்னையெல்லாம் ஒரு இடை இழுத்துவிட்டு அரிசி, பருப்பு, காசு எவ்வளவு தாராளமாகக் குடுப்பாங்கோ, இப்ப அதுகூட இல்லையே; இதென்ன சங்கதி? இந்த வருஷம் பிராமணன் மேலே சங்கராந்தி வந்துட்டதா என்ன? ஒண்ணும் தெரியவில்லையே!

சுப்புக் குருக்கள்: வரும்படியைப் பத்தி கவலைப்படாதே, நான் ஒரு வழி சொல்லுறேன்; அப்படிக் கேக்கறையா?

நடேசக் குருக்கள்: சொல்லித் தொலையப்பா! சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடி எல்லாம் கேப்பான் எண்ணு நீ கேட்டதில்லையா? சொல்லு, சொல்லு!

சுப்புக் குருக்கள்: சொல்லுகிறேன், வெளியில் சொல்லாதே!

நடேசக் குருக்கள்: இது வேறே கர்மமா? நான்தான் சுத்த சுத்தமா சோத்துக்கு சாகறேன்; இன்ன இதை வெளியில் சொல்றது வேறையா? கொஞ்சம் சொல்லப்பா சட்டுண்ணு!

சுப்புக் குருக்கள்: சுத்திமுத்தியும் பார்த்துக்கோ, ஆராவது வந்துடப் போறாங்கோ!

நடேசக் குருக்கள்
: ஒருத்தரும் இல்லை; சொல்லித் தொலை!

சுப்புக் குருக்கள்: அது என்னான்னாக்கா, கோயிலில் சாமி இருக்குதல்ல, அதை ஆட்டிப் பிடுங்கி, கீழே தள்ளி படுக்க வெச்சிடு; காத்தாலெ கோயிலைப் போய் நீ பாத்ததாகவும்," கோயில் கதவு ஒடச்சி எவனோ உள்ளே போயி சாமியை ஆட்டி கீழே தள்ளிப் போட்டு, அதிலே இருந்த தங்கம், வெள்ளி, நவரத்னமெல்லாம் எவனோ எடுத்துக்கிட்டுப் போயிட்டான்; கும்பாபிஷேகம் பண்ணவேணும், இல்லாவிட்டால் ஊருக்கு ஆகாது; தர்மகர்த்தாவுக்கு தோஷம்; கமிட்டி யாருக்கு பாவம்!" அப்படிண்ணு சொல்லிப் போடு; கமிட்டியார் கும்பாபிஷேகம் பண்ற வரைக்கும் சாமிக்குக் கீழே போட்டு இருந்த தங்கம், வெள்ளிக்காசு, நவரத்னம் இதை வித்து சாப்பிட்டுகிட்டு இரு; இது தெரியாத உனக்கு?

நடேசக் குருக்கள்: இது நல்ல யோசனை தான்! நானும் இதற்கு முன்னாலேயே சாமியை ஆட்டித் தள்ளி, அதுக்குக் கீழே இருந்ததை எடுத்துக்கிட்டு, சாமியை சும்மாதான் நிக்கவச்சி இருக்கிறேன்; அர்ச்சனை பண்ற பூ பெலமா சாமி மேலே பட்டாலே சாமி ஆடும்! அது மாத்தரமா? எங்க கோயிலில் இருக்கிற எந்த சாமியைத் தொட்டாலும் சட்டுண்ணு படுத்துக்கும்! எல்லாம் ஆட்டிப் பிடுங்கி, அதிலிருந்ததை முன்னையே எடுத்துத் திண்ணு போட்டோம். ஆனதனாலே சாமியை பாடுபட்டு ஆட்டி கீழே தள்ள வேண்டியதில்லை; தொட்டால் போதும், தானே கீழே விளுந்துடும்!

சுப்புக் குருக்கள்: அப்படியானாக்கா, இன்னைக்கு ராத்திரியே சாமியை தள்ளிப்போடு; இருட்டு காலம் தானே, யாரு பாப்பாங்கோ! கும்பாபிஷேகம் பண்ணினாக்கா உனக்கும் கிடைக்கும், எனக்கும் கிடைக்கும், இன்னம் மத்த பிராமணாளுக்கும் தச்சனை, வேட்டி, சமாராதனை இதெல்லாம் கிடைக்கும். ஒரு வாரம் எப்படியும் தாட்டிக்கிலாம். தச்சனை, வேட்டி, குடம், சொம்பு முதலானதும் மாசக்கணக்கா வரும். அப்பரம் இதை மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் பண்ணச் சொன்னாக்க இந்த வருஷத்து சங்கதி முடிஞ்சுபோகும்; மேலேக்கு பாத்துக்கலாம். அதுக்குள்ளே அவனும் ஜெயிலுக்கு போய்ட்டாக்க மத்தவனுங்கொ இந்த புத்தி வுட்டுடுவானுங்கோ.

நடேசக் குருக்கள்: சரி சரி, ராத்திரிக்குப் போய் தள்ளிப் போட்டே வந்துடுறேன்; நீ எங்கயும் போயிடாதே; தருமகர்த்தாகிட்ட சொன்ன உடனே அவன் ஒரு முட்டாளு ஆனதனாலே கும்பாபிஷேகம் உடனே பண்ண வேணும் எண்ணு சொல்ற தர்மகர்த்தா, அவன் உடனே ஏற்பாடு பண்ணராப்லெ இருந்தா உடனே உன்னை வந்து கூப்பிடுறேன் தெரியுமா!

சுப்புக் குருக்கள்: ஆமா, ஆமா, உங்க தர்மகர்த்தாகூட ஒரு பயித்தியக்காரன்தான். அவனுக்கு சும்மா மேலும் கீளும் சாம்பலைப் பூசத்தான் தெரியும். அரகரா சிவசிவ எங்கத்தான் தெரியும். மத்தபடி நீ சொல்லரதுதான் வேதவாக்கு. உடனே செய்வான். நானும் சத்திரத்திலேயே படுத்திருக்கிறேன். காலமே நேரத்திலேயே வந்து சொல்லு தெரியுமா!

நடேசக் குருக்கள்: சரி போயிட்டு வா; நீ நல்லா இருக்கணும். நல்ல கஷ்ட காலத்திலே சரியான யோசனை சொன்னே; சரி, சரி.

------------------- சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,"குடிஅரசு" 29.5.1927

10 comments:

hayyram said...

ஏன்யா! பார்பனன் என்ற செத்த பாம்பை அடிப்பதிலேயே வீரம் காட்றீங்களே, நீங்கள் எல்லாம் நல்ல தாய்க்கு பிறந்திருந்தால் எல்லா மத மூட நம்பிக்கை பத்தியும் பேசுங்களேன் பாக்கலாம். பாதிரியார்கள் எல்லாம் மக்களிடம் வானத்திலிருந்து ஏசுவின் ரத்தம் வழிகிறதுன்னு சொல்லி லட்சக்கனக்கான மக்களை முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்ன்னு சொல்லி ஏமாத்தறத பாக்கலியா! மூட‌ர்க‌ளே! வேற‌ ஏதாவ‌து நாடு முன்னேற‌ உருப்ப‌டியா எழுதுங்க‌ளேன் பாக்க‌லாம்!

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு வரைக்கும் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாமல் இருப்பதற்கு தடையாய் இருப்பவர்கள் பொறுக்கித்தின்னும் பார்ப்பனர்கள் தானே!

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் கல்வி கற்க முடியாமல் தடையாய் இருப்பவன் அயோக்கியப் பார்ப்பன பதர்கள் தான் ஹேராம்.

நெய்யைத்தடவிக்கொண்டு யாருடன் வேண்டுமானாலும் உடலுரவு கொள்லலாம் என்ற விதிமுறைகளை வகுத்துக் கொண்டு வாழும் பார்ப்பன பரதேசிகள் எல்லாம் எங்கள் தாய்களைப் பற்றி விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்ற நிலை வந்தது எல்லாம் எப்படி என்பதை ஒரு முறை நிதானமாக யோசித்து பின்னூட்டம் இடவும்.

இந்த வலைப்பூவில் உள்ள கட்டுரைகளை படியுங்கள் அனைத்து மதங்களும் விம்ர்சிக்கப்பட்டுள்ள உண்மை விபரம் தெரியும்.

முதலில் பார்ப்பான் முதுகில் தொங்கும் பூணுலை அறுத்தெறிந்து விட்டு வரட்டும். அதர்கு தயாரா ஹேராம்.

பார்ப்பனிய எதிர்ப்பு ஏன்? என்ற தொடர் பதிவுகள் இந்த வலைப்பூவில் உள்ளது. அதன் தொடர்ச்சி விரைவில் பதிவு செய்யப்படும்

Gokul said...

தமிழ் ஓவியர்,

நல்ல பதிவு, 1927-இல் இதற்கான தேவை இருந்து இருக்கலாம், இப்போதும் தேவை இருக்கிறதா, எனக்கு தெரியவில்லை, கொஞ்சம் சொல்லுங்கள், ஏன் என்றால், இப்போது தமிழகத்தை பொறுத்தவரை அரசு அதிகாரிகளில் மிக மிக குறைவான அளவிலேயே பார்பனர்கள் இருக்கிறார்கள், மேலும் அரசியல்வாதிகளில் இல்லவே இல்லை என்றும் சொல்லலாம் (ஜெயலலிதாவை தவிர்த்து) அதாவது அதிகாரம் முழுவதும் non-brahmins கையில் , நான் நாட்டின் மிகப்பெரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இருக்கிறேன், அதிலும் மிக மிக உயர்மட்டத்தில் சில பார்பனர் இருந்தாலும், middle management என்று சொல்லப்படும் அளவில் மிக மிக குறைவான பார்பனர்களே இருந்தார்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பார்பனர்கள் ஒரு entity-ஆக இவ்வளவு பெரிய அதிகாரத்திற்கு எதிராக ஒரு எதிரி என்ற அளவில் இருக்கிறார்கள் என்றால்

ஒன்று , நீங்கள் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது
பெரியார் செய்த பிரச்சாரம் தோற்றதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே தவறு என்று எனக்கு தெரிகிறது, ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருந்தால் அதற்கான சுட்டியை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஒரு பொதுஜனம் என்ற முறையில் 'தேவர் குரு பூஜை' பற்றியும் முத்துராமலிங்க தேவருக்கு வேண்டிக்கொண்டு மொட்டை போடும் மக்களை பற்றியும் , அந்த பூசைக்கு வருகை தரும் அரசியல் அதிகாரிகளையும் நீங்கள் பெரியாரின் நடையிலேயே எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் செய்வீர்களா , மேலும் உத்தபுரம் சுவர் பற்றியும் நீங்கள் பெரியாரின் கடுமையான மொழியிலேயே நீங்கள் எழுத வேண்டும் என்பதும் எனது வேண்டுகோள் (ஏற்கனவே எழுதி இருந்தால் சுட்டி கொடுக்கவும்)

hayyram said...

கொஞ்சம் கூட பகுத்தறிவு மட்டுமல்ல சமூக அறிவே கூட இல்லாமல் பேசுகிறீர்களே மடையரே! ஒரு மனிதன் விஞ்ஞானியாவது முக்கியமா, அல்லது கோவிலில் பூசாரி ஆவது முக்கியமா! முட்டாள்களே, உண்மையில் நீங்கள் எதற்க்காக போராருகிறீர்கள் என்று உண்மையான விளக்க முடியுமா. அறத பழசான பார்ப்பன எதிர்ப்பு இப்போது ஒரு ஏழையின் வீட்டில் உலை வைக்க உதவுமா. அட அடி முட்டாளே! எல்லா மதத்தையும் விமர்சித்தாலும் பார்ப்பனன் மீது காட்டும் காட்டம் மற்ற மதங்கள் மீது காட்டப் படுவதில்லை என்பதே உண்மை. பார்பனன் எதற்கு பூனூலைத் துறக்க வேண்டும். ஒரு முஸ்லீமைப் பார்த்து குல்லாவைக் களைந்து வா என்று சொல்ல உமக்கு துனிச்சல் உண்டா. அவ்வளவு ஏன் குடும்ப கட்டுப்பாடு விளம்பரத்தில் முஸ்லீம்களைக் காண்பிக்க வேண்டும் என்று தெருவில் இறங்கி நீங்கள் போராடியதுண்டா. உலக புரட்சிக்காரர்கள் பலர் ஏன் சேகுவேரா கூட பாதிரியார்கள் மக்களை மயக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இவர்களை தான் முதலில் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். பிராமணன் பூனூலை அறுக்கத் துணிந்த நீங்கள் எத்தனை பாதிரியார்களை அழித்தீர்கள். நீங்கள் எல்லாம் ஒரு மனிதர்கள். தூ. நான் என்ன சொல்வது. விவேகானந்தர் சொல்கிறார் அதையாவது கேட்டு புத்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

hayyram said...

சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவு வியாதிகள் சாரி வாதிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் அவமதிப்பதில் அளவில்லாத பிரியம் கொண்டவர்களை சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவின் மூலம் சாடியதன் சாரத்தைப் பார்ப்போம்.

சென்னையில் நடந்த ஒரு சொற்ப்பொழிவின் போது சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரையாற்றுகிறார் "சிறுவர்களே, மீசைமுளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச்
செல்லாத நீங்கள் தைரியத்தோடு எழுந்து நின்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் (அந்தக்காலத்தில்) முதுகில் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்கு, சட்டத்தை அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களைக் கட்டளையிடுகிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லை. அத்தகையத் தெய்வ நிந்தனையிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியப் பாடத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

புனிதமற்ற சிறுவர்களே, நீங்கள் வெறுமனே தாளில் சில வரிகளை எழுதி அதை வெளியிட சில முட்டள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவதாலேயே நீங்கள் இந்த உலகத்தின் கல்வி கற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் தான் இந்தியாவின் பொதுமக்களின் கருத்து என்று நினைக்கின்றீர்களா?

நீங்க‌ள் தான் இந்தியாவின் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் என்று நினைத்துக் கொண்டீர்க‌ளா? இந்தியாவில் எந்த‌க் கால‌த்திலாவ‌து சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌துண்டா? இந்தியாவின் வ‌ர‌லாற்றை நீங்கள் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? ச‌ங்க‌ர‌ர் யார்? ராமானுஜ‌ர் யார்? நான‌க் யார்? சைத‌ன்ய‌ர் யார்? க‌பீர் யார்? தாது யார்? ஒளிமிகுந்த‌ ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளின் வ‌ரிசைக‌ள் போல் ஒருவ‌ர் பின்னால் ஒருவ‌ராக‌ வ‌ந்த‌ இந்த‌ ம‌க‌த்தான ஆச்சாரிய‌ர்க‌ள் எல்லாம் யார்?

ராமானுஜ‌ர் தாழ்ந்த‌ குல‌த்த‌வ‌ர்க‌ளுக்காக‌ வேத‌னைப் ப‌ட‌வில்லையா? த‌ன் வாழ்நாள் முழுவ‌தும் ப‌றைய‌னைக் கூட‌ வைண‌வ‌ ச‌ம‌ய‌த்தில் அனும‌திக்க‌ப் பாடுப‌ட‌வில்லையா? த‌ன்னுடைய‌ ச‌ம‌ய‌த்தில் முக‌ம‌திய‌ர்க‌ளைச் சேர்த்துக்கொள்ள‌ அவ‌ர் முய‌ல‌வில்லையா? இந்துக்க‌ளோடும் முக‌ம‌திய‌ர்க‌ளோடும் உற‌வாடி ஒரு புதிய‌ நிலையைக் கொண்டுவ‌ர‌ நான‌க் முய‌ல‌வில்லையா? அவ‌ர்க‌ள் எல்லாம் முய‌ன்றார்க‌ள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி இன்னும் ந‌ட‌ந்து கொண்டே தானிருக்கிற‌து. வித்தியாச‌ம் இது தான். அவ‌ர்க‌ள் இன்றைய‌ச் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல‌ எக்காளமிட‌வில்லை. இன்றைய‌ச் சீர்திருத்த‌க் கார‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளின் வாய்க‌ளில் சாப‌மே இல்லை. அவர்கள் யாரையும் இழிவு படுத்திப் பேசியதில்லை.

அவ‌ர்க‌ளுடைய‌ உத‌டுக‌ள் வாழ்த்துக்க‌ளை ம‌ட்டுமே கூறின‌. அவ‌ர்க‌ள் எந்த‌க் கால‌த்திலும் நிந்திக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் "இந்துக்க‌ளே, நீங்க‌ள் இதுவ‌ரை செய்த‌வை எல்லாம் ந‌ல்ல‌தே. ஆனால் என் ச‌கோத‌ர‌ர்க‌ளே, அதை விட‌ ந‌ல்ல‌தை நாம் செய்வோம்"
என்றே கூறின‌ர். இன்றைய‌ சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல் "நீங்க‌ள் எல்லாம் கெட்டுப் போன‌வ‌ர்க‌ள். இப்போது நாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ முய‌ற்சிப்போம்" என்று சொல்ல‌வில்லை. அவ‌ர்க‌ள், "நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருந்தீர்க‌ள். இப்போது மேலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாவோம்" என்றே கூறினார்க‌ள். இதுதான் இர‌ண்டு பேரிடையே அமைந்துள்ள‌ மிக‌ப் பெரிய‌ வித்தியாச‌ம்." என்றார் சுவாமி விவேகான‌ந்த‌ர்.

ராம‌சாமி நாய‌க்க‌ர் தோற்றுவித்த‌ இந்து ம‌த‌ ஒவ்வாமையை அது என்ன‌வென்றே ஆராயாம‌ல் அது தான் ப‌குத்தறிவு என்று மூட‌ந‌ம்பிக்கை கொண்டிருக்கும் த‌ற்க்கால‌ போலி சீர்திருத்த‌வியாதிக‌ள் சாரி வாதிக‌ள் இந்த‌ ப‌குதிய‌ப் ப‌டித்தால் அல்ல‌து சுவாமி விவேகான‌ந்த‌ர‌து புத்த‌க‌த்தை யாரிட‌மாவ‌து ஓசிக்கு வாங்கி ப‌டித்தாவ‌து கொஞ்ச‌ம் உண்மையான ப‌குத்த‌றிவு‌ பெறுவ‌ர்க‌ளா என்று பார்ப்போம்.

பரணீதரன் said...

ஹேராம் பார்ப்பான் ரொம்பவும் பார்பன வெறியுடன் பின்னூட்டம் இட்டுள்ளார். பார்ப்பான் திருந்தி விட்டான் என்றும் சொல்லுபவர்களுக்கு இந்த வெறியனின் பின்னுட்டமே ஒரு உதாரணம்.

உங்களை பூணூலை அறுக்க சொல்லுவதற்கு காரணம் நீ அதனை போட்டுக்கொண்டு நான் தான் உயர்ந்தவன் மற்றவனெல்லாம் சூத்திரன், நீ ஏன் அடிமை என்று சொல்லி கொண்டு இருபதினல்தான். அனால் மற்ற எவரும் அதுபோல செய்வது கிடையாது. அப்படி இருந்தாலும் அதனையும் நாங்கள் சாடிகொண்டுதன் இருக்கிறோம். நீ முதலில் விவேகன்தரை படித்த அளவுக்கு பெரியாரை படிக்க்கவில்லை ஹேராம் பார்ப்பான்.

தமிழ் ஓவியா said...

//ஒரு மனிதன் விஞ்ஞானியாவது முக்கியமா, அல்லது கோவிலில் பூசாரி ஆவது முக்கியமா!//

அட முட்டாள் பார்ப்பானே நாங்கள் எத்தனையோ பேர் விஞ்ஞானி ஆகிவிட்டோம். ஆனால் கோவிலில் பூசாரி ஆகமுடியவில்லை.
விஞ்ஞானியை விட என்ன பெரிய வேலையா? அது. ஆனால் ஆக விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பது நாங்களல்ல உன்னைப் போன்ற அயோக்கிய பார்ப்பனர்கள் தான்.

அந்த அயோக்கியப் பார்ப்பனர்களிடம் சொல்லுங்கள் உங்கள் அறிவுரையை.

விவேகானந்தர் மற்றும் மேற்குறிப்பிட்ட வர்களின் யோக்கியதைகளை அறிந்து தான் வைத்துள்ளோம்.

விவேகானந்தர் பற்றிய பதிவு இவ்வலைப்பூவில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மீள்பதிவு செய்யப்படும்.

தமிழ் ஓவியா said...

கோகுல் ஒரு முறை இவ்வலைப்பக்கத்தில் உள்ள கட்டுரைகளை ஒரு முறை ஊன்றிப் படிக்க வேண்டுகிறேன். உங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்

நன்றி கோகுல்

Unknown said...

Mr Oviya,Who is that son of a bitch in the photograph,who looks like a taliban terrosrist and a bearded swine with flu?Is he a typical dravidian tamil swine?

Unknown said...

idhu ellam un appan vecha sotha enna nee mattum thinga. ella madhathukararum samama irukkura kudumbathila kuzappam pannadhe. adhu unkudumbathuku agadhu.