Search This Blog
8.6.09
இலைகள் என்றைக்கும் மலராது; மொட்டுகள் தான் மலரும். - சுப.வீ ரபாண்டியன்
ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பில் எழுச்சிப் பொதுக்கூட்டம்
ஈழத் தமிழர்களைக் காப்போம் என்ற தலைப்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பில் 7.6.2009 இரவு 7 மணிக்கு சென்னை சைதை தேரடி திடலில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
உரையாற்றியோர்
இப்பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மகாலட்சுமி வரவேற்றுப் பேசினார். தென்சென்னை மாவட்ட தி.க தலைவர் வில்வநாதன் தலைமை வகித்துப் பேசினார். வன்னி யரசு, மாறன், சைதை எம்.பி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், கவிஞர் தணிகைச்செல்வன், கவி ஞர் மு.மேத்தா ஆகியோர் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை விளக்கியும் அதற்கு காண வேண்டிய தீர்வு என்ன என்பதையும் விளக்கினர்.
பொன்.குமார்
தமிழ்நாடு கட்டு மான நலவாரியத்தலைவர் பொன்.குமார் தமது உரையில், இலங்கையில் நடைபெற்ற கடைசி கட்டப் போரில் 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக ராஜபக்சே உலகத்தார் முன் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் சொல்லொணாத கொடுமை நடைபெற்றிருக்கிறது. தமிழர்கள் பெரும் பாதிப் புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று இலங்கை அரசின் உச்சநீதிமன்ற நீதிபதியே சொல்லியி ருக்கின்றார்.
ஈழத்தமிழர்களை காக்க முதலமைச்சர் கலைஞர் பலமுறை போராடவில்லையா? ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் உண்மையான தமிழர்கள் கலைஞர் அவர்களைத்தான் பின் பற்றுவார்கள்.
ஒரு போர் நடை பெறும்பொழுது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது இயற்கை மரபுதான் என்று சொன்ன ஜெயலலிதாவுடன் மானமுள்ள தமிழர்கள் கைகோக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
இன்றைக்கு நாம் மகிழ்ச்சியாக இல்லை. துக்கத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலையில் தான் இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் களத்தை இழந்திருக்கலாம். ஆனால் புலிகள் ஒரு போதும் போரை இழக்கமாட்டார்கள். போரில் தோற்றிருக்கிறோம். ஒத்துக்கொள்கிறோம்.
மாடு மேய்க்கிற சிறுவன் கேட்ட கேள்வி
நாங்கள் காரில் பயணம் செய்தபொழுது தொழுப்பேடு என்ற கிராமத்தில் தேநீர் அருந் துவதற்காக ஒரு தேநீர் கடை முன்பு நின்று கொண்டு தேநீர் அருந்திக்கொண்டிருக்கின்றோம். அப்பொழுது மாடு மேய்த்துக் கொண்டு வந்த சிறுவன் என்னை அடையாளம் கண்டு கொண்டு கேட்டான். அய்யா நம்ம தலைவர் உயிரோடு இருக்கிறாரா? என்று கேட்டான்.
அந்த அளவுக்கு பிரபாகரன் அவர்களைப் பற்றியும், ஈழத்தமிழர்களுடைய நிலைபற்றியும் அறிந்திருக்கின்றார்கள். பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதரல்ல. ஈழத்தமிழர்களுக்காக புலிகள் அடுத்த கட்டப் போருக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் முடிந்து விட்டது என்று அறிவித்தான். ஆனால் இலங்கை யிலே தமிழர்களின் மரணம் இன்னும் முடியவில்லை.
இலங்கையிலே அகதிகளாக முள்வேலிக்குள் அடைக்கப்பட்ட ஆண் - பெண் இளைஞர்கள் சொல்லொணாத கொடுமைக்கு சிங்கள இராணுவத்தால் ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள். உணவு இல்லை. உடை இல்லை. மருந்து இல்லை. கழிப்பிட வசதிகள் இல்லாமல் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா? என்று ஏங்கித் தவிக்கின்றார்கள்.
வணங்கா மண் கப்பலை சிறைப்பிடித்தனர்
வணங்கா மண் என்ற கப்பல் இலங்கை துறைமுகத்தை நோக்கி வருகிறது. இங்கிலாந்து அர சாங்கம் அந்த கப்பலில் உள்ள பொருள்கள் என்னென்ன என்பதை சோதனையிட்டுப் பார்த்து 884 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அதாவது, அரிசி, பருப்பு, உணவு வகைகள், ஆடைகள் இருந்தன. இங்கிலாந்து அரசாங்கம் சான்றிதழ் வழங்கி அப்பாவித் தமிழர்களுக்காக அனுப்பியிருக்கிறது.
அதில் ஏதோ வெடி குண்டு ஆயுதங்கள் இருப்பதைப் போல சிங்களவனின் கடற்படை அந்தக் கப்பலை சீறிப் பாய்ந்து பிடித்துச் சென்று விட்டது.
22 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. என்றால் இதைவிட கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? பெரியாரால், திராவிட இயக்கத்தால் ஆதரிக்கப்பட்ட இஸ்லாமியர்கள், இஸ்லாமிய நாடுகளும், கம்யூனிசதத்துவம் கொண்ட நாடுகளும் தமிழர்களுக்கு எதிராக, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதா?
இலைகள் மலராது
நம்மைப் பொறுத்த வரையிலே நமக்கு முதல் எதிரி ராஜபக்சே. இரண்டாவது எதிரி தான் ஈழப்பிரச்சினையில் கலைஞரை எதிர்க்கும் துரோகத் தமிழர்கள்! அதே போல பார்ப்பன ஊடகங்கள்.
ஈழம் மலரும் என்று குரல் கொடுப்பேன் என்று சொன்ன அந்த அம்மையார் எங்கேபோனார்?
இலைகள் என்றைக்கும் மலராது; மொட்டுகள் தான் மலரும்.
ஈழப்பிரச்சினையிலே இலங்கைக்காரன் எதிர்ப்பும்மட்டுமல்ல, பார்ப்பன எதிர்ப்பும் சார்ந்திருக்கிறது.
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சே குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்படுவார். அந்தக் காலம் வரை நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று பேசினார்.
-----------------------"விடுதலை" 8-6-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//இலைகள் என்றைக்கும் மலராது; மொட்டுகள் தான் மலரும்.//
ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்காட் தமிழ் ஓவியா அய்யா,
இது மாதிரி உளறிக் கொட்டியே,வீரபாண்டியன் போன்ற காங்கிரசுக்கும்,மஞ்ச துண்டுக்கும் விலை போன தீவிரவாத துரோகிகளால் தான் எம் இனத் தலைவன் பலி கொடுக்கப்பட்டான்.இன துரோகி நாய்களே நீங்களெல்லாம் உருப்படவே மாட்டேங்கடா.
பாலா
Post a Comment