Search This Blog
8.6.09
இது எங்கள் உள்நாட்டு விஷயம்; இதில் தலையிட முடியாது--ராஜபக்சே ஆணவக் கொக்கரிப்பு!
அவசரமான கடமை என்ன?
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இன்றைய நிலையில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் - ஆற்றப் படவேண்டிய கடமைகள் யாவை என்பதுதான் முக்கியம்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமானவர்கள் மீது போர்க் குற்றம் பற்றி விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள பொதுநலம் மற்றும் மனித உரிமை விரும்பிகளின் கருத்தாகும்.
காலந்தாழ்ந்தாலும் அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அவர்களும் இதனை வற்புறுத்தியுள்ளார்.
இது எங்கள் உள்நாட்டு விஷயம்; இதில் தலையிட முடியாது என்று ராஜபக்சே என்னும் நவீன ஹிட்லர் கூறியிருக்கிறார். இலங்கைத்தீவுக்கு சில நாடுகள் ஆதரவு அளிக்கின்றன (இந்தியா உள்பட) என்கிற துணிவில் இலங்கை அதிபர் தன் எல்லை மீறிப் போய்க் கொண்டி ருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் அளிக்கப்படவேண்டும்; நிவாரணப் பணிகள் முறையாகச் செய்யப்பட வேண்டும் என்று இந்திய தரப்பில் எடுத்துச் சொன்னால், இதனைச் சொல்ல இந்தியா யார்? இறையாண்மைமிக்க இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்வது என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருங்கள் என்று இலங்கை அரசு சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் கூறப்படுகிறது.
பல கட்டங்களிலும் இந்திய அரசு ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தாம் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யத் தவறியதாலும், இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்து வந்ததாலும் அதனைப் பலகீனமாக இலங்கை கருதியதன் விளைவே - இந்தியாபற்றிய இத்தகைய அலட்சியமாகும்.
எந்த நாட்டிலும் இனப்படுகொலை நடைபெற்றால் அதுபற்றி தட்டிக் கேட்க எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்கிற பாலபாடம் கூட இலங்கை அரசுக்குத் தெரியவில்லையா? அல்லது சீனா, ருசியா, கியூபா போன்ற கம்யூனிச நாடுகள் தங்களுக்குப் பெரும் துணையாக இருக்கின்றன என்கிற தைரியத்தினாலா?
இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே ஈழத்தில், முகாம்களில் அகதிகளாகக் கிடக்கும் தமிழர்களின் அவல நிலையை எடுத்துக் கூறிட வார்த்தைகள் போதாது என்று மனங் குமுறியுள்ளார்.
இந்த நிலையில், அய்.நா.வுக்கும், உலகில் உள்ள நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவுக்கும் சில அடிப் படையான கடமைகள் உள்ளன. ஈழத்தில் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள் அகதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் சர்வதேச நாடுகள் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படவேண்டும்.
இதனைத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானமாகவே வடித்துத் தந்துள்ளது (2.6.2009).
இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும். இதற்கு மாறாக அனைத்தையும் இலங்கைக்கு அனுப்பி, அந்த அரசின் வழியாக பாதிக் கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணப் பணிகள் நடக்கட்டும் என்றால், அது உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழர் களுக்குப் போய்ச் சேராது; மாறாக, சிங்களர்களுக்கு, சிங்கள அரசின் கஜானாவுக்குத்தான் போகும் என்பதை திராவிடர் கழகத் தலைவர் சென்னையில் செய்தியாளர் கூட்டத்திலும் (6.6.2009), சென்னை சைதாப்பேட்டையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் எடுத்துக் கூறியுள்ளார். அடுத்தகட்டமாக அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் முன்னுரிமை கொடுத்து ஆற்றப்படவேண்டிய பணிகள் இவை. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அமைப்பு முக்கியமாக வலியுறுத்துபவை காலத்தே ஆற்றப்படும் அரிய செயல் என்பதில் அய்யமில்லை.
------------------"விடுதலை" தலையங்கம் 8-6-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் அளிக்கப்படவேண்டும்; நிவாரணப் பணிகள் முறையாகச் செய்யப்பட வேண்டும் என்று இந்திய தரப்பில் எடுத்துச் சொன்னால், இதனைச் சொல்ல இந்தியா யார்? இறையாண்மைமிக்க இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்வது என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருங்கள் என்று இலங்கை அரசு சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் கூறப்படுகிறது.///
அயோக்கியனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினால் இந்தக் கதிதான் என்பதை இந்தியா உணர்ந்து கொள்ளும் காலம்ம் விரைவில் வரத்தான் போகிறது.
கலஞருக்கு ஒட்டுப் போட்டு கெலிக்க வைத்து விட்டீங்க இல்லையா?
அவரு படுத்து கொண்டே இன்னொரு 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்க.
ராஜ பக்சே பயந்து போய் தனி ஈழம் கொடுத்து விடுவார்.
//ரங்குடு said...
கலஞருக்கு ஒட்டுப் போட்டு கெலிக்க வைத்து விட்டீங்க இல்லையா?//
சரத் பொன்சேகாவுக்கு ஒட்டு போட்டு கெலிக்கவைக்க வேண்டும் என்று முயற்சித்ததை விடவா...? இது தவறான விஷயம்...?
என்ன பண்ணுவது அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது தானே நம்முடைய வாடிக்கை...!
நம்முடைய வீட்டு குப்பையை பற்றி எப்போதும் கவலைப்படுவது இல்லையே!
தமிழக மக்கள்! ம்ணைடையை சொறிஞ்சிக்கிட்டாங்க...!
யார் யாருக்கு? எதிரி...? அரசியல்ல நிரந்தர எதிரியுமில்லை நண்பணுமில்லை என்பதை சண்டைபோடறதுக்கு முன்னாடியே பின்பற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
தமிழினத் துரோகங்கள் என்ற கூக்குரலுக்கும் வேலை இல்லாமல் போயிருக்கும்!...சரி தானே!
Post a Comment