Search This Blog

2.6.09

இலட்சியவாதிக்கு இலக்கணம்





நாளை ஜூன் 3- ஆம் தேதி மானமிகு, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள்.பிறந்தநாள் சிந்தனையாக அவர் எழுதிய "சின்னச் சின்ன மலர்கள்"- நூலிலிருந்து ஒரு சில கருத்துக்களை வெளியிடுகிறோம். படியுங்கள்!சிந்தியுங்கள்!!.....
********

பானையைத் தன்னுடைய நெருப்பு நாக்குகளால் சுட்டுப் பொசுக்குவதாகத்தான் அடுப்பு எண்ணிக் கொள்கிறது. ஆனால் அந்தச் சூட்டைத் தனது உடம்பிலே தாங்கிக் கொண்டு வெண் சோறு தருகிறது பானை!

*************************

பாதரசம் நிரம்பிய பாத்திரத்தில் இரும்புத் துண்டுகூட மிதக்குமே தவிர உள்ளே அமிழாது என்பார்கள் - அதுபோல தீயவர் நெஞ்சங்களில் என்னதான் வலிந்து நற்கருத்தை நுழைத்தாலும் புகாது!

*****************************

ஒரு நச்சுப்பாம்பு நமது காலைச்சுற்றிக் கொள்ளும்போது நாம் அசையாமல் அப்படியே கல் தூண்போல நின்றுவிட்டால்; அந்தப் பாம்பு நம்மை எதுவும் செய்யாமல் ஊர்ந்து போய்விடும். அந்தத் திடமான உறுதிதான் இலட்சியவாதிக்கு இலக்கணம்.


*********************************

ஒரு தனி மனிதரிடம் வெளிப்படுவது அவரது பண்பு! ஒரு சமுதாயம் வெளிப்படுத்துவது பண்பாடு! இரண்டுமே மனிதர்களை அளந்தறியும் வெவ்வேறு வடிவிலான அளவுகோல்கள்தான்!

***********************************

---------- கலைஞரின் "சின்னச் சின்ன மலர்கள்"- நூலிலிருந்து

6 comments:

Osai Chella said...

சாவது தமிழனென்றும் பதறவில்லை... அழுவது திராவிடனென்றும் பதைக்கவில்லை...
சுயமரியாதை உரைக்கவில்லை....
கடமை கண்ணியம் காக்கவில்லை ...
"இலட்சியம்" பற்றியெல்லாம் கவிதை ஒரு கேடா? த்தூ!

பிருந்தன் said...

நடமாடும் பிணத்துக்கு ஏது பிறந்தநாள் வாழ்த்து.

பிருந்தன் said...

ஈழத்து உறவுகளை
இரக்கமின்றி அழிப்பதற்கு
வாழ்த்தோடு ஆதரவையும்
வளமுடன் வாரிவழங்கிய எம்
தமிழக முதல்வரே!
வாழ்விழந்து நாம் போக - நீர்
வாழ்ந்திடுவீர் பல்லாண்டு
வாழ்த்துகிறோம் குருதி படிந்த கைகளால்….

- புதைகுழியிலிருந்து

இதைக் கூறியே நான் வாழ்த்துகிறேன்
என்றாலும்கூட பல்லாண்டு பல்லாண்டு
பலநூறாண்டு வாழ்க
எனினும் தமிழகூறும் நல்லுலகம் இருக்கும் வரைக்கும்
நீ வாழ்கவென நான் வாழ்த்த மாட்டேன் பரதேசியே
அது போக
நீ இப்போது மரணிக்கக் கூடாது
அம்மா ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும்
அப்போதே மரணி
காரணம்
மரீனாக் கடற்கரையில் உனக்கு நினைவிடம் அமையாது
கண்ணம்மாப்பேட்டை தான் உனக்கு

ரங்குடு said...

சொரணையற்ற ஜீவனைத் திட்டி என்ன பயன்?

இவர்களெல்லாம் எருமை மாட்டுத் தோலினால் செய்யப் பட்டவர்கள்.

இவர்களை வைதால் எம் நாவிற்கு வலி.

இவர்களை எழுதினால் என் பேனாவிற்கு அவமானம்.

எனவே வாழ்த்திவிடுவோம்.

நீர் வாழ்க.
நின் மனைவியர் பூவுடன் பொட்டுடன் நீடூழி வாழ்க.
நின் பிள்ளைகள் நின்னுடன் கூடி வாழ்க பல்லாண்டுகள்.
நின் துதி பாடும் அடிப்பொடிகளும் எல்லாம் பெற்று வாழ்க.
நீர் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் வாழ்ந்து தமிழகத்தை ஆள்க.
நின் இலங்கை தோழர் ராஜ பக்சேவும் நீடு வாழ்க.

பிருந்தன் said...

மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே

தமிழனைக் காக்கும் தலைவன் நானே
உலகத்தமிழருக்கும் தலைவன் நானே
அன்று முதல் இன்று வரை தமிழருக்காய்
குரல் கொடுக்கும் தலைவனும் நானே
தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே

எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய்
தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று
தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று
தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி
கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும்
நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன்
செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன்

நிதியின் மேல் கருணை கொண்டு
நீதிக்கு தீ வைத்தவனே
நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ
ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று
சோனியா கொடுக்கும்மென்று சொல்லி
தமிழகத்தின் காதில் பூச்செருகும் நீயா தமிழன்

ஈழப்பிரச்சனையில் தூக்கம்போல் இருந்த உன்னை
தீண்டிப் பார்த்தாள் ஜெ
ஜெ தன் வாக்கையெல்லாம் வழித்துத் துடைத்திடுவாளோ
என்று அச்சம் கொண்டு இல்லை இல்லை
எப்படிப் போட்டால் தமிழகம் வாய்பிளக்கும்
என எண்ணி கனாவொன்று நான் கண்டேன்
ஈழத்தமிழன் போரில் அல்லல் படுகின்றான்
என் கண்கள் குளமாகி கரைதாண்டிச் சென்று
ஈழத்தமிழர் துயர் துடைப்பேன்
இன்றேல் கதிரையைக் காலி செய்வேன்
நாடகத்தை அரங்கேற்றி
சங்கிலிபோராட்டமும் செய்து தமிழகத்தை
உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து
ஜெ யின் தீண்டுதலை மழுங்கடித்தபோது

தமிழரெல்லாம் கருணைக்கடல் இங்கே
கருணாநிதியாய் வந்தென்று பட்டதுயரெல்லாம்
பனிபோலக்கரையும் மென்று நம்பியுனை ஏமாந்தார்
நம்பிக்கைத்துரோகி யென்று யாரும் நினைத்ததில்லை
இனி யாரும் நம்பி உன் பின்னால் வழித்தொடருவானோ

தமிழகம் இரங்கிக் கொடுத்த மருத்துப்பொருட்களை
ஈழத்தமிழனுக்கு கிடைக்காமல் தடுத்தபோது
பழநெடுமாறனும் உண்ணாவிரதத்தால் முயற்சி கொண்டபோதும்
இதை இன்னும் அனுப்பாமல் கிடப்பில் இருக்கும்போது

காந்தி வழி வந்த கருவறைக்கூட்டம்
ஈழத்தமிழனின் கருவறை கலைத்திட நீ
பாவம் பரிதாபமென்று இழவு வீட்டிற்கு
சாப்பாடு போட்டாயோ? - அல்லது
உன் பக்கம் தமிழகத்தை திருப்ப நினைத்தாயோ

சிங்களச் சிப்பாய் சரத் பொன்சேகா - உன்னை
கோமாளியென்று ஒரு வார்த்தையில் சொன்னபோது
மொத்தத் தமிழினமும் வெகுண்டெழுந்தபோது
நீ பெட்டிப் பாம்பு போல் சுருண்டு படுத்தபோது
உறைந்தது தமிழனின் குருதிநாளம்

சீ இப்படி ஒரு தலைவனா தமிழனுக்கு
வெட்கி தலை குனிந்தது தமிழகம்
வீறு கொண்ட புலித்தலைவன் போல்
எமக்கொரு தலைவன் இல்லையே - என்று
சோகம் கொண்டது தமிழகமல்ல தமிழினமும் தான்

தமிழனைக் தாக்கும் தலை நாயே
உலகத்தமிழரைத் தாரை வார்க்கும் நாயே
அன்று முதல் இன்று வரை தமிழரின்
குரல் வளை அறுக்கும் தலை நாயே
தமிழனுக்கு ஒரே ஒரு தலை நாயே

சாகாவரம்பெற்று வாழப்பிறந்தது போல்
சொத்துக்கள் சேர்க்கும் திறன் கொண்டாய்
மதிக்குமா? உன்னை மானம் உள்ள தமிழினம்
மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே
இல்லை இல்லை இல்லவே இல்லை
குளித்து புத்தாடை அணிந்து இனிப்புப் பரிமாறி
கொண்டாடும் அந்த நாள் நாளையாக இருக்கக்கூடாதா

தமிழ் ஓவியா said...

சூரியனை என்ன செய்யும்?

என்ன பாடு
படுத்துகிறார் இவரை?
என்ன செய்து விட்டார்
அப்படி?

சூத்திரர்களின் அரசு என்றார்
சும்மா கிடப்பார்களா?

பிரபவ என்பதைப்
பிடித்துத் தள்ளி
தைமுதல் நாளுக்கு
முடி சூட்டினால்
தணலில் பூச்சியாய்த்
துடிக்க மாட்டார்களா?

அமாவாசையை அர்ச்சகராய்
ஆக்கினால்
குமாரசாமி சிண்டுகள்
குத்தீட்டியாய்ப் பாயாதா?

கபாலீஸ்வரன்
கர்ப்பக்கிரகத்தில்
கபாலி சாம்பான்
கால்பட்டால்
கொப்புளங்கள்
வெடிக்காதா
குருக்கள் ஆத்தில்?

தமிழுக்குச் செம்மொழி
கிரீடம் வைத்தால்
சமஸ்கிருத வீட்டில்
சிரார்த்தம் தானே!

தமிழ்ச்செல்வனுக்கு
இரங்கல்பாட்டா?
குமட்டில் விழுந்த
குத்தல்லவா
சோ ராமசாமி
கூட்டத்துக்கு?

ராமன் பிறப்புப்
பஞ்சாங்கத்தைப்
புரட்டிக்காட்டினால்
பூச்செண்டா கொடுப்பார்கள்?
ராமன் பிறப்பைக்
கேட்க இவர் யார்?
ராமசாமி சீடரின்
புத்தி போகுமா?
கலியுக இராவணன்
கருணாநிதியென்று
மனுவாதி கூட்டத்தார்
மண்வாரி
தூற்றுகின்றார்!

இந்துயென்றால்
திருட னென்று
திரிபாதி சொன்னால்
கருணாநிதிக்கு வந்ததென்ன?
கட்டையில் போக!
கரித்துக் கொட்டுகிறார்
காகபட்டர் ஜாதியினர்!

கருணாநிதி அஞ்சமாட்டார்
கறுஞ்சட்டை துணையுண்டு
பெரியாரின்
வயதைத் தாண்டி
பெரும்பணி ஆற்றிடுக!

நரியாரின் ஊளைச் சத்தம்
சூரியனை என்ன செய்யும்?

----------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் "விடுதலை"3-6-2009 இல் எழுதிய கவிதை