Search This Blog

24.6.09

மூஸ்லீம்களும் - இடஒதுக்கீடும்


சல்மான் குர்ஷித் அறிவாரா?

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தேவையில்லாமல் வார்த்தைகளைவிட வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டார்.

இட ஒதுக்கீடு வழங்கிவிடுவதால் முசுலிம்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

முசுலிம்களின் பிரச்சினைகள் என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்கிற அளவில்தான் அமைச்சரின் சிந்தனை தேங்கி நிற்கிறது என்று தெரிகிறது.

முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும், சமூகத்தில் ஒரு கவுரவத்தை அளிக்கும் அரசு வேலை வாய்ப்பும்தான் என்பது வளரவேண்டிய ஒரு சமூகத்துக்குத் தேவையானவையாகும்.

இன்னொரு வகையில் பார்த்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியும் அவசியம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அதுவும் வளர்ந்துவரும் இந்த விஞ்ஞான உலகில் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி மிக அவசியமே!

முசுலிம் மக்களின் கல்வி நிலை எந்த நிலையில் இருக்கிறது என்கிற விவரம் அமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

தொடக்கப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் எண்ணிக்கையில் முசுலிம் மாணவர்களின் வீழ்ச்சி அதிர்ச்சிதரக் கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக உயர்கல்வியில் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

4.1.2009 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு புள்ளி விவரம் வெளிவந்தது. இந்தியாவில் பல பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் மேல்படிப்புச் சேர்க்கையில் அவரவர் சமூகத்தில் எவ்வளவு விகிதாச்சாரம் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் அது. இந்தக் கணக்கீட்டுக்கு கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ (ஜி.இ.ஆர்) என்று கூறுகின்றனர்.

இதன்படி பார்க்கும்பொழுது கிறித்துவர்களின் ஜி.இ.ஆர். 19-.85 விழுக்காடாகும். சீக்கியர்கள் 17.81 விழுக்காடாகும். இந்து தாழ்த்தப்பட்டவர்கள் 7.37 விழுக்காடாகும். முசுலிம்கள் 7.7 விழுக்காடாகும். கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையில்தான் முசுலிம்கள் உள்ளனர் என்பது இந்தப் புள்ளி விவரம் மூலம் அறிய முடிகிறது. முசுலிம்களில் எழுத்தறிவு பெற்ற-வர்களின் விழுக்காடு 42 தான். தேசிய சராசரியைவிட இது மிகவும் குறைவானதாகும்.
மெத்த படித்த அமைச்சராகவும் ஆகியுள்ள சல்மான் குர்ஷித் இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருந்தால் வெறும் வார்த்தைகளை கொட்டியிருக்க மாட்டார்.

முசுலிம் மக்களின் சமூக நிலையைக் கணித்துதான் சச்சார் கமிஷனும், அதனைத் தொடர்ந்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் அமைக்கப்பட்டன. முசுலிம்களுக்கு தேசிய அளவில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்த ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதுகூட அமைச்சருக்குத் தெரியவில்லை போலும்.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் முசுலிம்களின் இட ஒதுக்கீடுக்கு வகை செய்துள்ளன. அரசுப் பணிகளைப் பொறுத்தவரை முசுலிம்கள் 5 விழுக்காட்டுக்கும் கீழே உள்ளனர் என்று சச்சார் ஆணையம் கூறுகிறது.

அர்ஜூன் சென்குப்தா அறிக்கையோ, இந்தியாவில் உள்ள முசுலிம்களில் 85 விழுக்காட்டினர் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், தனி நபர் மாத வருமானம் ரூ.60-0-_க்கும் கீழ்தான் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும். உயர்கல்வி பெறவேண்டும் என்ற நினைப்பும் செயல்பாடும் எங்கிருந்து குதிக்கும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிறித்துவர்களுக்கும், முசுலிம்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு தி.மு.க. அரசு வழி செய்தது.

சில நாள்களில் கிறித்துவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிவிட்டனர். காரணம், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்த மூன்றரை சதவிகிதத்தைவிட கிறித்துவர்கள் அதிகமாகவே பலன் பெற்று வருகின்றனர். ஆனால், முசுலிம்களோ இந்த மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடுக்கும் பச்சைக் கொடிகாட்டி விட்டனர். காரணம், இவர்களின் நிலைமை அதளபாதாளத்தில் கிடப்பதுதான். இதனையெல்லாம் புரிந்துகொண்டு இனிமேலாவது அமைச்சர் நிலையில் உள்ளவர்கள் பொறுப்புணர்ச்சியோடு எதையும் அளந்து பேசுவது நல்லது.

---------------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 23-6-2009

12 comments:

hayyram said...

//முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும், சமூகத்தில் ஒரு கவுரவத்தை அளிக்கும் அரசு வேலை வாய்ப்பும்தான் என்பது வளரவேண்டிய ஒரு சமூகத்துக்குத் தேவையானவையாகும்.//

அடடடடா..என்ன பச்சாதாபம் என்ன கருனை முஸ்லீம்கள் மேல உனக்கு. ஏன் இத விட நலிந்த நிலையில் தான் பார்பனரும் இருக்கின்றனர். செட்டியார்கள் பலர் கடன் வாங்கித்தான் குடும்பம் நடத்தும் நிலையில் இருக்கிறார்கள். முதலியார்களை நீங்கள் முன்னேறவே விடவில்லை. இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையாம்! முஸ்லீம்கள் நலிஞ்சு இருக்காங்களாம். என்ன பவ்யம் என்ன பணிவு என்ன கனிவு...தூ வெட்கம் கெட்டவர்களே. இந்த எச்ச பொளப்பு பொளக்கருத்துக்கு நீ நாண்டுகிட்டு சாகலாம். இராமசாமி இருந்திருந்த முதல்ல உங்களத்தான் பெரம்பால அடிச்சிருப்பார்.

suvanappiriyan said...

மிகவும் சிந்தித்து எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

அசுரன் திராவிடன் said...

ஏர் உழும் பார்ப்பான் இருக்கிறனா?

துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?

ஆடு,மாடு,பண்ணி மேய்க்கற பார்ப்பான் இருக்கிறனா?

முடி வெட்டுற பார்ப்பான் இருக்கிறனா?

மலம் அள்ளுற பார்ப்பான் இருக்கிறனா?

சாணி அள்ளுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?

நடவு நடுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?

அடுத்தவன் வீட்ல கூலிக்காக எந்த பார்ப்பத்தியாவது பாத்திரம் கழுவுராலா?

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் இருந்தால் பார்ப்பனர்கள் இட ஒதுக்கிடு பற்றி பேச முன்வரட்டும்.
மேற்கண்ட செயல் களுக்கெல்லாம் நாம்.கோவிலில் மணி ஆட்ட பார்ப்பன் .இந்த நிலையில பார்ப்பான் கஷ்ட படுரானாம் .உண்மை யாகவே பார்ப்பான் கஷ்டப்பட்டால் மேற்க்கண்ட தொழிலில் எதாவது ஒன்றை பார்ப்பான் செய்து இருக்க வேண்டுமே ?

இதை படித்தாவது மானம் வருதாடா தமிழா உனக்கு ?உன் மானம் மீட்கதாண்டா தன்மானத்தையே இழந்தார் நம் இன தந்தை அய்யா பெரியார் அவர்கள்.

ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிட தோழா ! உனக்கு வேண்டாம் அதனிடம் பாசம் .உன் வாழ்வை அழித்திடும் அந்த காசம் .

கபிலன் said...

ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது தான் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் எண்ணம். யாரையாவது ஒரு சமயத்தவரை, சாதியினரை மற்றொருவருக்கு எதிராக பேசி பகுத்தறிவு என்கிற பெயரில் போலி அரசியல் நடத்துவது. உங்களுக்கும் வருண் காந்திக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பது போல தெரியவில்லை !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவனப்பிரியன்

தமிழ் ஓவியா said...

//ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது தான் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் எண்ணம்.//

கள்ளுக்குடித்த பைத்தியகாரனை தேளும் கடித்தால் எப்படி உளறுவானோ அப்படிப்பட்ட உளரலாகவே கபிலனின் பின்னூட்டம் அமைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளஞ்சேரன்

கபிலன் said...

"தமிழ் ஓவியா said...
//ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது தான் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் எண்ணம்.//

கள்ளுக்குடித்த பைத்தியகாரனை தேளும் கடித்தால் எப்படி உளறுவானோ அப்படிப்பட்ட உளரலாகவே கபிலனின் பின்னூட்டம் அமைந்துள்ளது."

மூக்கறுபட்ட சூர்ப்பனகை, இராவணனிடம் போய் பிதற்றுவது போல அமைந்து இருக்கிறது உங்கள் மறுமொழி!
மத்ப்பளித்து மறுமொழி கூறியமைக்கு நன்றி!

Unknown said...

1) தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு
இட ஒதுக்கீடு உள்ளது.ஆனால் அது
பிற்பட்டோர் கமிஷன் பரிந்துரையின்
அடிப்படையில் சமூக,கல்விரீதியாக
பின் தங்கியுள்ள முஸ்லீம் பிரிவினருக்கு தரப்பட்டுள்ளது.94%/95%
முஸ்லீம்களுக்குத்தான் இது பொருந்தும், அனைத்து முஸ்லீம்களுக்கும் அல்ல.ஏற்கனவே முஸ்லீம்களில் பின் தங்கிய ப்ரிவினருக்கு பிற்பட்டோர் என்ற ப்ரிவில் இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது தனியாக அவர்களுக்கு பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5% தரப்பட்டுள்ளது.அவர்கள் முஸ்லீம்கள் என்ற மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்படவில்லை.
2)சச்சார் கமிஷன் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம் முஸ்லீம்களுக்கு
தர வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.
3) ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்களுக்கு
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தர
அரசியல் சட்டத்தில் இடமில்லை.
4) அமைச்சர் கூறியிருப்பது சரிதான்.
இன்று இட ஒதுக்கீடு என்பதை ஒரே
தீர்வாக வைக்க முடியாது. 49.5%
இட ஒதுக்கீடு இருக்கும் போது
முஸ்லீம்களுக்கு என்று தனியே
இட ஒதுக்கீடு கொடுத்தால் அது 50%
என்ற வரையரையைத் தாண்டும்.
5)எதையும் எழுதும் முன் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு
எழுதுவது நல்லது. தமிழ் ஒவியாக்கள்
போன்ற கண்மூடித்தனமான வாசகர்களுத்தான் விடுதலை சொல்வதுதான் உண்மை, எல்லோருக்கும் அல்ல.
6)பிராமணர்களில் ஒட்டல்களில்
சமையல் வேலை, சர்வர் வேலை
செய்பவர்களும் இருக்கிறார்கள். பல
பிராமண குடும்பங்கள் திருமண சமையல் வேலை, அப்பளம் இட்டு
விற்பது போன்றவற்றை செய்துதான்
பிழைக்கின்றன. தொழிற்சாலைகளில்
வேலை செய்யும் பிராமணர்கள், டிரைவர்களாக உள்ள பிராமணர்களும்
இருக்கிறார்கள்.

வீரமணி எந்தக் காலத்தில் வயலில் இறங்கி உழுதார். பெரியார் எந்தக் காலத்தில் ஏர் பிடித்து விவசாயம் செய்தார். இன்று தி.க வின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் எத்தனை பேர் உடலுழைப்பு செய்து குடும்பத்தினை
காப்பாற்றுபவர்கள்.சுரண்டி,
உண்டு கொழுத்து வாழ்பவர்கள்,
கல்வியை வியபாரமாக்கி வாழ்பவர்கள்
யார் யார் என்பது எங்களுக்கும் தெரியும்.

'துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?'
அனைத்து சாதிகளிலும் பல குடும்பங்களில் இன்று வாஷிங்
மிஷின்கள் இருக்கின்றன. அது இல்லாத பிராமணக் குடும்பங்களும்
உள்ளன.அவர்கள் துணியை என்ன
தி.கவினரா துவைக்கிறார்கள் ?.

தமிழ் ஓவியா said...

//மூக்கறுபட்ட சூர்ப்பனகை, இராவணனிடம் போய் பிதற்றுவது போல அமைந்து இருக்கிறது உங்கள் மறுமொழி!//

மூக்கை அறுத்த அயோக்கியன் ராமனின் செயலைப் பற்றி, சூர்ப்பனகை ராவணனிடம் சொல்வது உங்களுக்கு பிதற்றுவது போல் தான் தெரியும்.

ஜாதியை உண்டாக்கியவனுக்கும், ஜாதியை ஒழிப்பனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் உங்களுக்கு பிதற்றுவது போல் தான் தெரியும்.

தமிழ் ஓவியா said...

தோழர் இளஞ்சேரன் பின்வரும் கேள்வியுடன் பின்னூட்டம் இட்டிருந்தார்

//ஏர் உழும் பார்ப்பான் இருக்கிறனா?

துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?

ஆடு,மாடு,பண்ணி மேய்க்கற பார்ப்பான் இருக்கிறனா?

முடி வெட்டுற பார்ப்பான் இருக்கிறனா?

மலம் அள்ளுற பார்ப்பான் இருக்கிறனா?

சாணி அள்ளுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?

நடவு நடுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?

அடுத்தவன் வீட்ல கூலிக்காக எந்த பார்ப்பத்தியாவது பாத்திரம் கழுவுராலா? //

பெரியார் விமர்சகன் என்ற பெயரில் விமர்சிக்கும ஒருவர் மேற்கண்ட இளஞ்சேரன் அவர்களின் கேள்வியிலிருந்து உருவி கீழ் வருமாறு பின்னூட்டம் இட்டிருக்கிறார்


//துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?'
அனைத்து சாதிகளிலும் பல குடும்பங்களில் இன்று வாஷிங்
மிஷின்கள் இருக்கின்றன. அது இல்லாத பிராமணக் குடும்பங்களும்
உள்ளன.அவர்கள் துணியை என்ன
தி.கவினரா துவைக்கிறார்கள் ?.//

பார்ப்பனக்குடும்பங்களின் துணியை தி.க.வினர் துவைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த ஆசை வேறு உண்டா?

ஒரு காலத்தில் கும்பகோணம் அக்கிரகாரத்தில் கக்கூஸ் சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது, பிற்படுத்தப்பட்டவர்கள் தான் வரவேண்டும் என்று தீர்மானம் போட்ட மிதப்பில் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.

நாமும் கடுமையாக விமர்சிக்க முடியும். பெரியார் எங்களுக்கு நயத்தக்க நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்துள்ளதால் கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்கொள்கிறோம்.

பார்ப்பான் திருந்தி விட்டான் என்று சொல்லும் நண்பர்களே இதற்குப் இன்னும் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கப் போகிறீகளா?

பார்ப்பனக்குடும்பங்களின் துணியை எங்கள் தோழர்கள் துவைக்கத் தயார்.
பார்ப்பனரல்லாத குடும்பங்களின் துணியை பார்ப்பனர்கள் துவைக்கத் தயாரா?

எங்கள் பெரியார் எங்களைப் பக்குவப்படுத்தியுள்ளார். பெரியாரின் பொன்மொழி,வழிகாட்டும் கருத்து இதோ

"மூட்டைதூக்குவதினால் உண்டாகும் பாரத்தினால் கஸ்டப்படுவேனே ஒழிய மூட்டை தூக்குவதை ஒரு போதும் அவமானம் என்று கருதமாட்டேன்".


முடிவாக

பார்ப்பனக்குடும்பங்களின் துணியை நாங்கள் துவைக்கத் தயார்.
எங்கள் குடும்பங்களின் துணியை துவைக்க எத்தனை பார்ப்பனர்கள் தயாரயிருக்கிறீர்கள்.

பட்டியலிடுங்கள்.

அப்படியாவது சமத்துவத்தை உருவாக்குவோம்.

சவாலுக்கு தயாரா?

நம்பி said...

வேண்டாம் பார்ப்பான் பதிலுக்கு க்கூஸ் கழுவு என்று சொல்வான்...அவன் கக்கூசை அவனே கழுவ முடியாது அவ்வளவு கப்பு...அதுக்குத்தான் அடுத்தவனை தேடுகிறான்...தேடிவிட்டு காந்திஜி கக்கூஸ் கழுவினார் அதனால் யார்வேண்டுமானாலும் கழுவலாம் என்னைத்தவிர என்று நைசாக முக்கைப்பிடித்து கொண்டு நழுவிவிடுவான். இது தெய்வத்தின் கக்கூஸ் கழுவுவதற்கு தயங்க கூடாது என்று கூட சொன்னாலும் சொல்வான். நெஞ்சம் முழுவதும் வஞ்சம்.