Search This Blog

27.9.09

இந்த சனி பகவான் என்பவர் யார்?சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?


உண்மையாக சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சனிப்பெயர்ச்சி - சனிப்பெயர்ச்சி என்று எந்த ஏட்டைப் பார்த்தாலும் சனிப்பெயர்ச்சி மயம்தான்.

சனி பகவான் - சிம்ம ராசியிலிருந்து - கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து குடிபெயர்கிறாராம்!

சரி; இந்த சனி பகவான் என்பவர் யார்?-வானமண்டலத்திலிருந்து கத்திரி - அக்னி நட்சத்திரம் என்ற பெயர்களில் நம்மையெல்லாம் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறதே சூரியன்; அந்த சூரியனுக்கும் சாயாதேவி என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்தான் இந்த சனி பகவான் என்கிறார்கள்.

சுட்டெரிக்கும் சூரியனைக் கட்டியணைத்து கர்ப்பம் தரித்து ஒரு மகனையும் பெற்றெடுத்தாள் ஒரு பெண் என்றால் எத்தனை வோல்டேஜ் - ஏ.சி. வசதி படைத்த பெண்ணாக அவள் இருந்திருக்கவேண்டும்?

வோல்டாஸ் - ஏ.சி. கம்பெனிக்காரர்களைத்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான்

தங்களது ஏ.சி. கருவிகளை எரிமலையையும் பனிமலையாக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்!

இந்த சனி என்பது பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள் என்கிறது விஞ்ஞானம். வியாழன் என்ற கோளுக்கு அடுத்தபடியாக இது ஒரு மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு மட்டுமே 73 ஆயிரம் மைல் என்று அறுதியிட்டு உறுதிபட வரையறுத்திருக்கிறது விஞ்ஞானம்.

பூமிக்கும் இந்த சனி என்கிற கோளுக்குமிடையில் உள்ள தூரம் எவ்வளவு? 75 கோடி மைலாகும்!

இந்த சனிக் கிரகத்தை - கோளைத்தான் இங்கே சனி பகவான் என்கிறார்கள்.

விஞ்ஞானம் கூறும் சனி ஒரு கோள் என்பதை நம்புவதா? நம்மூர் சோதிடர்கள் சனிபகவான் என்கிறார்களே அதை நம்புவதா?

விடை காண்பது மிக எளிது!

விஞ்ஞானம் கூறுவது - அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் எல்லாமே உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் - மக்களுக்குப் பொதுவானது!

தொலைக்காட்சி என்றால் உலகத்தின் எந்த நாட்டிலும் - எந்த வீட்டிலும் படிப்பறிவற்ற பாமரன்கூட இயக்கலாம். காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்!

செல்போன் என்றால் முதலாளியின் கையிலும் வைத்துக்கொள்ள முடியும்; அவரின்கீழ் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் பையிலும் வைத்துக் கொள்ளலாம்; அவரும் பேசலாம். இவராலும் பேச முடியும்.

இப்படி விஞ்ஞானம் கூறுவதையும் அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளின் பயன்களையும் எல்லோரும் அனுபவிக்கலாம்! ஆனால் -சோதிடம் சொல்லும் இந்த சனிபகவான் - அவரது பெயர்ச்சி பற்றியெல்லாம் - உலகில் எத்தனை நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும்? அவர்களுக்கெல்லாம் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் பற்றி எதுவும் தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் நம்ம ஊர்த் திருநள்ளாறு போல - சனீஸ்வரன் கோயில் என்று உண்டா? அங்கே எல்லாம் நளதீர்த்தக்குளங்கள்தான் உண்டா?

காக்கையின் மேல் ஓர் ஆளே ஏறி உட்காரலாம். காக்கை நசுங்காது. சனீஸ்வரர் ஏறி அமர்ந்த பிறகும் பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை போல காக்கை அப்படியே இருக்கும் என்றால் நம்புவார்களா?

நம்பமாட்டார்கள் - என்ன காரணம்?

தொலைக்காட்சிப் பெட்டி போல - செல்போன் போல எல்லோரும் சனி பகவானைக் கண்ணால் காணமுடியாது! அவன் எங்கேயிருந்து எங்கே போகிறான் என்பதை ஜோதிடர்கள்தான் கண்டுபிடித்துப் பலன் சொல்ல வேண்டும். யாரை ஏழரைநாட்டுச் சனி பிடித்துக்கொள்ளும்? யாரை விட்டுவிடும்? என்பது பற்றியெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதைத்தான் நம்பித் தொலையவேண்டும். ஆனால் -

செல்போன்களால் என்ன பயன் என்பதை ஒவ்வொருவரும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது விஞ்ஞானத்தின் சக்தி.

ஜோதிடர்கள் கூறும் சனிபகவான் சக்தி என்ன?

திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழா.

பக்தர்கள் நளதீர்த்தத்தில் நீராடும்போது அவர்களது உடைமைகள் திருட்டுப் போவதாகப் புகார்!

யாரிடம் புகார் கூறுகிறார்கள்? சனீஸ்வரரிடமா? போலீசாரிடம்தான் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துத் தரும்படி கோருகிறார்கள்.

பக்தர்களின் உடைமைகள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க கோவிலைச் சுற்றி 37 ரகசியக் கேமராக்களை போலீசார் பொறுத்தியிருக்கிறார்கள்.

பக்தர்களைப் பாதுகாக்க மொத்தம் அங்கே 1500 போலீசார்!

பக்தர்கள் சனீஸ்வரனுக்குச் சக்தி அதிகமா? போலீசாருக்கு சக்தி அதிகமா? தங்கள் உடையைக் காக்கும் சக்தி போலீசாருக்கே உண்டு என்று நம்புகிறார்கள்!

இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, -

73 ஆயிரம் மைல் குறுக்களவு கொண்ட சனி நிஜமாகவே பெயர்ந்தால் என்ன ஆகும்?

நினைத்துப் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறும்!

- நாற்பதாண்டுகளுக்கு முன்பு -

விண்ணிலே பறந்து கொண்டிருந்த சாட்டிலைட் ஒன்று பூமிப் பந்து நோக்கி வருகிறது; எங்கே விழும் என்று கணிக்க முடியவில்லை; எங்கே விழுந்தாலும் நாசம்; சர்வநாசம்தான் என்று உலகமே பயந்து நடுங்கியது!

அதுபோல சனி என்ற கோள் இடம்பெயர்ந்து பூமி நோக்கி வந்தால் என்ன ஆகும்?

சனிப் பெயர்ச்சியின் பலன் எழுதுபவர்கள், அதனை நம்புகிறவர்கள் எல்லாம் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை,

நளன்குளம் என்கிற மூடநம்பிக்கைக் குளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது உடைமைகளை சனி பகவானால் பாதுகாக்க முடியவில்லை. அதைத்தான் -

நளன்குளத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள 12 கேமராக்கள் எடுத்துக்காட்டுவனவாக இருக்கின்றன.

அதனால்தான்

இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, கோவில் நிருவாக அதிகாரி அறைக்குள்ளும், திருநள்ளாறு காவல் நிலையத்திலும் செயல்படுகிறது.

இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றும், இதனால் பொது மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் என கோவில் நிர்வாக அதிகாரி பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார் -

என்கிறது பத்திரிகைச் செய்தி!

-------------------------(நன்றி: முரசொலி 27.9.2009)

14 comments:

Unknown said...

எந்த விஷயமும் அது பார்க்கப்படும் கோணத்தில் தான் தெரியும். ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒன்றில் மற்றவர் நம்பிக்கை கொண்டிருக்காததால் அதனைப் பிழையென்று எழுதுவது கொச்சைத்தனமானது. உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் அதை விட்டுவிட வேண்டும் அதற்காக மற்றவர்களது நம்பிக்கையைப் பிழையென நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லையே?

விஞ்ஞானம் பெரிதும் வளர்ச்சியடையாத காலகட்டம் வரை தந்தை என்பவரே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் (தாய் சொல்பவரே) இருந்தார் பின்னர் விஞ்ஙான வளர்ச்சி உயிரியில் ரீதியான காரணத்தைக் கண்டுபிடித்தது. இன்று நாங்கள் பகுத்து அறிந்தவற்றை மட்டுந்தான் பகுத்தறிவு என்கின்றோம் - கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு - இன்னும் நிறைய விஷயங்கள் விஞ்ஞானம் எட்டிப்பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது - ஆக விஞஙான முறைப்படி நிரூபிக்கப் படவில்லை என்பதற்காக அதைப் பொய் என நாங்கள் கருதிவிட முடியுமா? சும்மா ஒரு கிழவன் அறளை பேந்த வயதில் அலட்டியதைப் பெரிசாக நினைத்துக் கொண்டு சும்மா பைத்தியக்காரத்தனமான விடயங்களை எழுத வேண்டாம்.

உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் நீங்கள் நம்பாதீர்கள் அதற்காக மற்றவர்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கையையும் முட்டாள்தனத்தையும் பற்றி எழுதுகிறோம். உங்கள் மூளைக்கு எப்போது புரியும் என்று எங்களுக்கு தெரியாது. இதைப் படிக்கும் மற்றவர்கள் படித்து திருந்த வேண்டும் திருத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

இப்பதிவில் என்ன குறை என்பதை தெரியப்படுத்துங்கள் Thamizh அதை விடுத்து கொச்சைப்படுத்துவது என்பது எங்கிருந்து வந்தது?

கடவுள்களின் ஸ்தல புராணங்களைப் படித்துப் பாருங்கள் எவ்வளவு ஆபாசம்? அருவருப்பு!

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

எனக்குப்பெரியாரின் பெயரில் மதிப்பு உண்டு.ஒருசிலவற்றை தவிர்த்து விட்டுப்பார்த்தால் அவரது பேச்சுகள் கூட
அறிவுடமையானதுதான்.இதில் வியப்பதற்குப் பெரிதும் இல்லை. எனெனில் கிறீஸ்த்துவிற்கு முன்னதாக 31ம் ஆண்டளவில் பிறந்ததாகச் சொல்லப்படுகிற வள்ளுவர் கூட பெரியாரைவிடவும் அதிகபட்ச பொதுவுடைக்கருத்துக்களை குழப்பமில்லாத வகையில் சொல்லியிருக்கிறார்.அதைக்கேட்டும் எவரும் திருந்தியதாக இல்லை
இப்போ பிரச்சனை அதுவல்ல.
ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒன்றில் மற்றவர் நம்பிக்கை கொண்டிருக்காததால் அதனைப் பிழையென்று எழுதுவது தகாது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ள தோழரின் கருத்து எனக்குச் சரியென்றே படுகின்றது.இதனைப் படிப்பவர்கள் திருந்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் சந்தோசம்.ஆனால் இந்தியா முழுமையையும் பகுத்தறிவாளர்கள் பலர் பிறந்து இத்தனை வருடத்தின் பின்னரும் மூடநம்பிக்கைகளே எங்கும் கோலோச்சுகிறதுஎனில் இதனைப் படிப்பவர்கள் திருந்திக் கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற வாதம் பரிதாபத்திற்குரியது. நீங்களும் திருநள்ளாற்றில் இரவு முழுக்க மறைவாக நீராடிவிட்டுப் பகலில் பகுத்தறிவு வாதம் செய்கின்றீர்களோ தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் பசப்புவாதப் பகுத்தறிவாளர்கள் இருந்தார்கள். இருந்தும் வருகின்றார்கள்.
தமிழ்சித்தன்

Unknown said...

எது ஆபாசம்? செக்ஸைசச் சொல்லுகிறீர்களா? எத்தனை காலம் நீங்கள் இந்த மூடநம்பிக்கைக்குள் இருக்கப் போகிறீர்கள்? செக்ஸ் என்பது மனித உணர்வுகளில் ஒன்று.

உங்களிடம் ஒரு விஷயம் கேட்கிறேன்... இந்து மதத்தில் என்னத்தை அறிந்து விட்டு அதையெல்லாம் நீங்கள் பிழை என்கிறீர்கள்? இந்து மதம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

சும்மா நீங்கள் நம்பாத ஒரு விடயத்தைப் பற்றி ஊருக்கு பொய் உபதேசம் செய்யாதீர்கள். எத்தனை உபநிஷதங்களைக் கற்றிருக்கிறீர்கள்? வேதங்கள் தெரியுமா உங்களுக்கு? அவற்றின் சாரம் புரிகிறதா? எதையும் ஆழ்ந்து படிக்காது சும்மா எழுதுவதற்காக எழுதாதீர்கள். அவர்கள் அரசியல் பிழைப்பு நடத்த கையாண்ட போலிக் கொள்கையை தலைமேற்கோண்டு ஏமாறுகிறீர்கள்.

முருகனுக்கும் 2 மனைவி அட உங்கள் ராமசாமிக்கும் 2 மனைவி...

கலாட்டாப்பையன் said...

\\அவர்கள் அரசியல் பிழைப்பு நடத்த கையாண்ட போலிக் கொள்கையை தலைமேற்கோண்டு ஏமாறுகிறீர்கள்.
//

அப்படி என்றால் ப்ரோகிதர்களின் வயிற்று பிழைப்பு நடத்த கையாண்ட போலிக் கொள்கையை வைத்து கொண்டு ஏமாந்து போகிறிர்கள நீங்கள்.

கே.பாலமுருகன் said...

தமிழ் ஓவியா, வணக்கம். இதுவே முதல்முறை தங்களின் வலைப்பூவைப் பார்வையுற்றேன். மூடத்தனங்களுக்கு எதிராக நீங்கள் உங்கள் எழுத்தை முன் வைப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் எழுத்துக் குறித்து உங்களுக்கு ஒரு களம் இருப்பதால்.

சமூகத்துடனும், பிறர் உடன்படுவதிலிருந்தும், முரண்படுவது தவறான ஒன்றோ அல்லது பாவத்திற்குரிய செயலோ அல்ல. பெரியார் முரண்பட்டதனாலே தனது கருத்துகளைப் பிரச்சாரம் செய்தார். அவருடன் உடன்பட்டுப் போன சமூகம் அவரின் கருத்துகளின் மூலம் விழிப்படைந்தார்கள்.

பகுத்தறிவு என்பது மனிதனின் அனுபவ/ தர்க்கத்திற்கு உட்பட்டது. ஆளுக்கு ஆள் மாறுப்படும். நல்லது கெட்டது என்பதுகூட சமூகத்திர்கு சமூகம் வித்தியாசப்படும். ஆதலால் கருத்துகள் முரண்படுவதும் உடன்படுவதும் இயல்பு. தமிழ் அன்பரும் நீங்களும் கடுமையான வாதங்களள முன்னெடுக்காமல், அறிவுப்பூர்வமான விவாதத்தில் ஈடுப்படவும்.

யாருக்கு இரு மனைவிகள் உண்டு இல்லை என்பது பகுத்தறிவு வாதங்கள் ஆகாது.

ஒட்டு ம்ஒத்த சமூகமே நம்புகிறது என்பதற்காக, அதை அப்படியே பின்பறறி சுயமிழந்த ஆட்டு மந்தையை போல இருக்க வேண்டுமமென்பதற்கல்ல. முரண்படுவதை நாகரீகமான சொல்லாடல்களுடன் முன் வைப்பதே சிறப்பு

Ram said...

Dear Tamil Oviya,

I am not read all your postings but whatever i read all are against the hindusim only, I am really surprised most of the so called Dravidan parties and peseodo secularist and the so called followers of Thanthai Periyar are only concened with hindus only,
first learn one thing, We hindus, lisen to Rajaram Mohan Roy for Sathi, Thanthai periyar, Thiru .Vika, and also Vivekananda, we accepted where ever we are at mistake. Why you guys not ready to talk on the bad issues of other religions particulary Islamism and Christianity.

Due you guys have the real guts to critise these Religions.

Or this two religions are ready to change there wrongs

In the world hindusim only calls all the people are equal, as per islam non belivers are Khabir or infedels and as per christianity non belivers are not equal.

Even the castism is explanined on nature of job not on birth, its like you stupids and some invaders of islam and europian given the angle of birth, When the Castism is explanined its part of the human body or the part of the body of the Bramha, can u tell if the any of the party is non-functional u can able to live proberly.

Stop bashing hindus, talk about real life issues for all in common, if you want to be secular and Atheis be it not to be a anti-hindu

தமிழ் ஓவியா said...

"எத்தனை உபநிஷதங்களைக் கற்றிருக்கிறீர்கள்? வேதங்கள் தெரியுமா உங்களுக்கு? அவற்றின் சாரம் புரிகிறதா?"

இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலில் அக்னிகோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் தான் புட்டு புட்டு வைத்தாரே?

நீங்கள் படிக்க வில்லையா?

உண்மையை உரத்துச் சொல்லியுள்ளாரே.

அதன் சாரம் எனக்குப் புரிந்து விட்டது உங்களுக்கு புரியவில்லையா?

தமிழ் ஓவியா said...

//நீங்களும் திருநள்ளாற்றில் இரவு முழுக்க மறைவாக நீராடிவிட்டுப் பகலில் பகுத்தறிவு வாதம் செய்கின்றீர்களோ தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் பசப்புவாதப் பகுத்தறிவாளர்கள் இருந்தார்கள். இருந்தும் வருகின்றார்கள்.//

உங்களின் தவறான பார்வைக்கு இது ஒரு சரியான உதாரணம் தமிழ் சித்தன்.

யார் பகுத்தறிவாளர் என்ற பதிவு இந்த வலைப்பூவிலேயே உள்ளது. படியுங்கள். உண்மையை உணருங்கள்.

மேலே நீங்கள் சுட்டிய வரையரக்குட்பட்டவரை பகுத்தறிவாதி என்று எப்படி சொல்ல முடியும்?

//ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒன்றில் மற்றவர் நம்பிக்கை கொண்டிருக்காததால் அதனைப் பிழையென்று எழுதுவது தகாது//

முதலில் உலகம் தட்டை என்று சொன்னார்கள் அதை பிழை என்று சொல்லாமல் வேறு என்ன வென்று சொல்வது? தமிழ் சித்தன்

இது போல் ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம் தமிழ் சித்தன்.

சிந்தியுங்கள் உண்மையை உணருங்கள்

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கம் ஜாதியை கடவுளை மதத்தை எதிர்ப்பது ஏன்?



“சுயமரியாதை இயக்கம் - ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்தாலேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள். மனிதனுக்கு இழிவு ஜாதியால் தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத்தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாக்கி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா? ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? நான்கு ஜாதியை இந்தமத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலியவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள்கின்றன. "நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங்கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்" என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார். இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும், கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்”.

----------------- சென்னை சுயமரியாதைச் சங்கம் விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. பேச்சு, "குடிஅரசு" 19-01-1936

கண்ணகி said...

அருமையான பதிவு. ஆனால் எங்கள் மூளை உங்கள் வாதத்தை உண்மை என்று சொல்கிறது. மன்மோ எங்கள் ஜோதிடர் பேச்சைக் கேட்கிறது? நாங்கள் திருந்த கொஞச நாட்கள் ஆகும்??

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி vattukozhi

மேடேஸ்வரன் said...

நாம் சரியாகத் தெரிந்து கொள்ளாததாலேயே ஒரு விஷயம் இல்லாததாகி விடாது.கோள்களையும், அவை வீசும் கதிர்களையும் , நம் மன நிலை மீதான அவற்றின் ஆளுமைகளையும் நன்கு பகுப்பாராய்ந்து , அவற்றின் சாரத்தை ஜோதிடம் என்னும் கணிதமாக்கி நமக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள். எளிதான புரிதலுக்காக கோள்களுக்குப் பெயரிட்டு கதை வடிவில் கொடுத்துள்ளனர். பரிகாரம் என்பதும் நம் மன நிலையை சமன்படுத்தும் நோக்கில் தரப்பட்ட வழி முறைகளே. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்போடு தேடினால் விடை காணலாம்.

நம்பி said...

//மேடேஸ்வரன் said...

நாம் சரியாகத் தெரிந்து கொள்ளாததாலேயே ஒரு விஷயம் இல்லாததாகி விடாது.கோள்களையும், அவை வீசும் கதிர்களையும் , நம் மன நிலை மீதான அவற்றின் ஆளுமைகளையும் நன்கு பகுப்பாராய்ந்து , அவற்றின் சாரத்தை ஜோதிடம் என்னும் கணிதமாக்கி நமக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள். //

யார்? அந்த முன்னோர்கள் யூரி காகரினா? நீல் ஆம்ஸ்ட்ராங்கா? கலிலியோவா? அரிஸ்டாட்டிலா? கோபர் நிகஸ்ஸா...? இவர்கள் எல்லாம் பின்னோர்களா?

முன்னோர்கள் ஆதாரப்பூர்வமாக நிருபித்தும், இன்னும், அதைப்பற்றி நாம் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் உளருவதின் நோக்கம் என்ன?

ஜோதிடத்தில் 9 கோள்கள் தான்...அங்கிருப்பதோ அதிகம்...இன்னும் கண்டுபிடிக்கவேண்டியவைகளும் நிறைய இருக்கின்றன...

ஆனாலும் மக்கள் நம்ப வேண்டும், இல்லையென்றால் நமது பிழைப்பு கெட்டுவிடும், என்று எண்ணும் அயோக்கியத்தனத்தை. எப்படி ஆதரிப்பார்கள்?

எதற்காக இந்த அயோக்கியத்தனம்? நாட்டின் நன்மைக்காகவா...?

இது வரை இந்த அயோக்கியத்தனத்தால் எந்த நன்மை விளைந்திருக்கிறது...எந்த பேரிடர் தடுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் எதற்காக? உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற சோம்பேறித்தனத்திற்காக?