Search This Blog

19.9.09

தலித் விடுதலை முன்னோடி – பெரியார்


இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் http://www.tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************
தலித் விடுதலை முன்னோடி – பெரியார்

“உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள், பெரியாரின் கருத்தை திரித்தும், அவதூறு பரப்பியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதில் பல கேள்விகளை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார். இதற்கெல்லாம் பெரியார் தொண்டர்களால் ஏற்கனவே தெளிவாக பதில் கூறப்பட்டுள்ளது.. அவைகளையெல்லாம் படித்திருந்தால் இது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்டிருக்கமாட்டடார். இவரின் கட்டுரையை வரிக்கு வரி நம்மால் ஆதாரங்களுடன் மறுக்க முடியும். இருப்பினும் அவசியம் கருதி ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

“பெரியார் பார்ப்பனர்களை மட்டுமே ஒழிக்கப் பாடுபட்டார், பார்ப்பனீயத்தை அல்ல, தலித்துகள் இதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் பார்ப்பனியத்தை ஒழிக்க பாடுபட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டில் இந்துத்துவம் இப்படி செழிந்து வளர்ந்திருக்குமா? என்கிறார் டாக்டர் வேலு அண்ணாமலை.

பெரியாரின் கருத்துக்கள் “பெரியாரியம்”, அம்பேத்கரின் கருத்துக்கள் “அம்பேத்கரியம்” மார்க்சின் கருத்துக்கள் “மார்க்சியம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆதேபோல் பார்ப்பனர்களின் கருத்தியல்கள் “பார்ப்பனியம்” என்று அழைக்கப்படுகிறது. ‘பார்ப்பனர் எதிர்ப்பு என்பேத ‘பார்ப்பனிய எதிர்ப்பு‘த்தான். இதை பின்வரும் பெரியாரின் மேற்கோள் தெளிவுபடுத்துகிறது.

“பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களை கொன்றழிப்பது என்பதல்ல, நாலு பார்ப்பனர்கள் போனால் நாளைக்கு வேறு நாலு பார்ப்பனர்கள் வருகிறார்கள். மலேரியா வந்தால் கொயினா கொடுத்தால் மலேரியா எப்படி ஒழியும்? எனக்கு தோன்றுவதெல்லாம் பார்ப்பனர் செல்வாக்குக் காரணம் கடவுள்கள், கோயில்கள், இராமாயண, பாரத இதிகாசங்கள், மதம், சாஸ்திரங்கள் இவைதான். இவைகளெல்லாம் ஒழிக்கப்பட்டால் பார்ப்பான் ஒழிந்து விடுவான். சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ,அப்படி இந்துமதம், கடவுள், கோயில், புராணங்கள் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்” - “விடுதலை” 13.10.1953.

கடவுள், மதம், இதிகாசங்கள், சாஸ்திரங்கள் இவைகள் ஒழிந்தால் பார்ப்பான் தானாகவே ஒழிந்து விடுவான் என்கிறார் பெரியார். ஆக பெரியாரின் ‘பார்ப்பன ஒழிப்பு’ என்பது தெளிவானது. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு அவசியமானது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது..

------------------------------தொடரும்

0 comments: