Search This Blog
16.9.09
முதன்முதலில் அண்ணா பதித்த முத்திரைகள் & சாதனைகள்
1. அண்ணாதான் முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டும் இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர்.
2. அரசியலில் இருந்துகொண்டே இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லா பிரிவிலும் தனி முத்திரை பதித்தவர் - முதன்முதலில்
3. தமிழக இந்தி எதிர்ப்பு வரலாற்றின் முதல் சர்வாதிகாரர் அண்ணாதான் -1938- இல் இந்தியை எதிர்த்து சிறை சென்றவர்.
4. முதன்முதலில் தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தவர்.
5. 1943- இல் முதன்முதலில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் அடுக்குமொழியைக் கையாண்டவர்.
6. ஓர் இரவு எனும் ஓர் இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அமைத்து ஒரு நாடகத்தை எழுதியவர் முதன்முதலில் 1945 இல்.
7. ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கிய காட்சிகளாக (பிளாஷ் ஃபேக்) அமைத்தவர் - முதன்முதலில்
8. வேலைக்காரி எனும் நாடகத்தில் முதன்முதலில் வழக்கு மன்றக் காட்சிகளை அமைத்தவர்.
9. தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்தரனார், அண்ணாவை பாராட்டுகிறபோது இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும் எனப் பாராட்டினார். முதன்முதலில் அந்தப் பெருமையைப் பெற்றவர் அண்ணா.
10. அண்ணாதான் முதன்முதலில் வேலைக்காரி திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துகளைச் சொன்னவர்.
11. சமகாலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர், முதன்முதலில் அண்ணாதான் _ 1946- இல்.
12. பாவலர்கள் மத்தியில் இருந்த தமிழை முதன்முதலில் பாமரர்களிடம் கொண்டு வந்தவர் அண்ணா.
13. முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ.20,000 ஊதியம் வாங்கியவர்.
14. கல்கி கிருட்டிணமூர்த்தி என்கின்ற சமகால எழுத்தாளர் முதன்முதலில் பாராட்டியது அண்ணாவைத்தான். இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று.
15. அண்ணாதான் முதன்முதலில், வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.
16. அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர்
17. கம்பராமாயணம், பெரிய புராணம் இவைகளை நன்கு கற்றுத்தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டவர் - முதன்முதலில் ஒரு புதிய கோணத்தில் திறனாய்வு செய்தவர்.
18. அந்தத் திறனாய்வுக் கருத்துகளை எளிய மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் நாடகமாக்கியவர் -நீதிதேவன் மயக்கம் எனும் பெயரில் - முதன்முதலில் அண்ணாதான்.
19. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா என்பதை முடிவெடுக்கக் கழக மாநாட்டில் வாக்குப்பெட்டி அமைத்து மக்களிடம் கருத்து கேட்டவர் முதன்முதலில்.
20. திறனாய்வு செய்கின்ற கோணத்தில், அண்ணாதான் முதன்முதலில் சில நாடகங்களை ஆக்கியவர். அவை, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம். கட்டை விரல், இளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஓமகுண்டம் ஆகிய புதினங்கள்.
21. சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் - அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.
22. முதன்முதலில் தமிழில் பல புதிய சொற்களைச் சொல்லாக்கம் செய்தவர் அண்ணாதான்.
23. தன் தொண்டர்களை தம்பி என பாசமுடன் அழைத்தது அண்ணாதான். அதேபோல் தன் தலைவனை அண்ணனாகவே பாவித்து அண்ணா என்று தொண்டர் அழைத்தது - முதன்முதலில் இவரைத்தான்.
24. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி தம்பி வா தலைமை ஏற்கவா என விளித்த முதல் அரசியல்வாதி.
25. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரை தன் தொகுதிக்கு அழைத்து தன் தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
26. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
27. அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களை புகுத்தியவர் அண்ணாதான் - முதன்முதலில்.
28. இந்த நாட்டு மக்கள் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான்.
29. அரசியல் போராட்டத்தில் கைதாகி நீதிபதி முன் தனக்காகத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான்.
30. திராவிடநாடு பிரிவினைபற்றி இந்தியத் துணைக்கண்ட பாராளுமன்றத்தில் முதன்முதலில் பேசிய தமிழர் அண்ணாதான்.
31. இன்றைய புதுக்கவிதையை முதன்முதலில் புதுப்பா என சொல்லாடல் செய்தவர்
32. அண்ணாதான் முதன்முதலில் ஆளுங்கட்சி காங்கிரசைப் பார்த்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னின்ன திட்டங்களை நிறைவேற்றுங்கள், நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த அரசியல்வாதி.
33. அண்ணாதான் முதன்முதலில் தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்தவரை அடைமொழியுடன் அழைத்தார் - அதுவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சிந்தனைச்-சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி)
34. அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் எனும் நாடகத்தில் முதன்முதலில் சிவாஜியாக நடித்த வி.சி.கணேசன் இன்றுவரை சிவாஜி என்றே அழைக்கப்படுகிறார்.
35. தன் தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தான் தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே, தலைவர் நாற்காலி இங்கு காலியாகத்தான் இருக்கும் என அறிவித்து அவ்வழியே நடந்து காட்டியவர் முதன்முதலில் அண்ணாதான்.
36. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 18 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த ஒரே மனிதர் - இவ்வுலகில் அண்ணா ஒருவர்தான் -முதன்முதலில்.
37. அண்ணாதான் முதன்முதலில் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, சுவரொட்டிகளில் மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச்சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய யுத்தியைக் கையாண்டவர்.
38. முதல்வரான பிறகு இவர்தான் முதன்முதலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களை பின்தொடராமல், தங்கள் பணியை செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியவர்.
39. முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முதல் தமிழர்.
40. முதன்முதலில் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டத்தைச் செய்தவர் இவர்தான்.
41. ஆங்கிலம், தமிழ் போதும்; - இந்தி வேண்டாம் என்று இரு மொழி திட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
42. எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகளை கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
43. முதன்முதலில் தமிழ்நாட்டில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர், தமிழ்ப் போராளிகளுக்கு கடற்கரையில் சிலை நிறுவியவர்
44. முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கியவர் ஏழைகளுக்கு.
45. முதன்முதலில் புன்செய் நிலங்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்தவர்.
46. அண்ணாதான் சீரணி என்ற அமைப்பை முதன்முதலில் தொடங்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்தப் பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. நகர் கிராமப்புறம் இரண்டிலும் தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக் கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி.
47. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன முதல் அரசியல்வாதி.
48. அமெரிக்க பல்கலைக்கழகமான யேல் பல்கலைக்கழகம் சப்_பெலோசிப் எனும் சிறப்பை வழங்கியது அண்ணாவுக்குத்தான். அண்ணாதான் இந்த சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் முதல் ஆசிரியர்.
49. உலகத்தில் வாழ்ந்த தலைவர்களின் மறைவின்போது, எவருக்கும் சேராத பெருங்கூட்டம் அண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது - முதன்முதலில் - வரலாற்றில்.
50. அரசு அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தவர். -
-------------அண்ணா பரிமளம் - நன்றி:-"விடுதலை" 15-9-2009
***************************************************************************
அண்ணாவின் சாதனைகள்
1. 1967- இல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.
2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி உளமார எனச் சொல்லி பதவி ஏற்றார்.
5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.
6. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.
7. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.
8. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.
9. 1968 இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்.
10. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
----------------"விடுதலை" 15-9-2009
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment