Search This Blog

26.9.09

பார்ப்பனரைப் பற்றிய பழமொழிகள்


1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் என்கிற பாதிரியார் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார் (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Education Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந்நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:

241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.

744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால் தண்டு எடு, தடி எடு என்பார்கள்.

887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?

981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.

1581: அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல.

1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.

1657: பெற்ற தாய் பசித்திருக்க, பார்ப்பனப் போஜனம் செய்வித்தது போல

1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

2278: கெட்டுப்போன பார்ப்பானுக்கு செத்துப் போன பசு தானம்

14 comments:

Unknown said...

ஏன் ஓவியா உங்களுக்கு இவ்வளவு கோபம் பார்ப்பனர்கள் மேல்

ரங்குடு said...

சரியாக ஓர் இனத்தவரை வசை பாடும் பழமொழிகளை வெளியிட்டிருக்கிறீர்.

அதே புத்தகத்தை முழுதாக நானும் வாசித்தேன். அதில் பிற ஜாதியினரையும், மதத்தவரையும் கடுமையாக விமர்சித்து பல பழ மொழிகள் உள்ளனவே அதைப் பற்றற தங்கள் கருதது என்ன?

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது.அதைக்கண்டு உங்களுக்கு கோபம் வரவில்லையா?jaisankar jaganathan.

உதாரணத்திற்கு 21ஆம் நூற்றாண்டிலும் பூணூல் போட்டு தான் தான் உயர்ந்தவன் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று ஆவணி அவிட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறானே? இது போல் எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம் jaisankar jaganathan

Harish said...

Hello

Human decency is very important in one' life. Your blog shows you lack that. I really didnt want to comment your blog.

Kevalamana jenmamya neer. Do you see any brahmnins have a blog like you and writing other caste. It shows the decency. Please growup atleast now.

தமிழ் ஓவியா said...

ஹரிஸ்

வாதங்களை வைக்கும் போது நாகரிகமான சொற்களைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.

பார்ப்பனர்களை விமர்சிக்கிறோம் என்றால் அதில் உள்ள குறிப்பிட்டுள்ள செய்தி உண்மையா/சரியானதா என்று ஆய்வு செய்து பின்னூட்டம் இடவும்.

இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகளைப் படியுங்கள் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகள் புரியும். மூளைக்கு விலங்கிட்டுள்ளார்கள் பார்ப்பனர்கள். அந்த விலங்கு வெளியில் தெரியாது அதனால் அது பற்றிய சுயரூபத்தை அடையாளம் காட்டுகிறோமோ தனிப்பட்ட முறையில் யாரையும் குறைகூறுவதற்கல்ல.

இது குறித்து பின் வரும் பெரியாரின் மேற்கோள் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.

"எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!"

தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973

Unknown said...

ஓவியா உங்கள் கோபம் பார்ப்பனர்கள் மீதா, கடவுள் மீதா.

இப்போதெல்லாம் ஜாதி வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன்

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கம் ஜாதியை கடவுளை மதத்தை எதிர்ப்பது ஏன்?“சுயமரியாதை இயக்கம் - ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்தாலேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள். மனிதனுக்கு இழிவு ஜாதியால் தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத்தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாக்கி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா? ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? நான்கு ஜாதியை இந்தமத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலியவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள்கின்றன. "நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங்கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்" என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார். இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும், கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்”.

----------------- சென்னை சுயமரியாதைச் சங்கம் விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. பேச்சு, "குடிஅரசு" 19-01-1936

naadal said...

பணத்தைப் பற்றி பேசிக்கொண்டு இர்ந்தால் பணம் வராது, ஜதியைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் ஜாதி ஒழியாது. வெறுப்பை விதைத்து அன்பை வளர்க்க முடியாது.

பிராமணன் ஒரு ஜாதிதான், நீங்கள் எந்த ஜாதியோ ( ஜாதி இல்லை என்று சொல்ல வேண்டாம், ஜாதி இருபதால் தானே இவ்வளவு கோபம்) அந்த ஜாதிக்கு குறைந்த ஜாதிகளை உங்கள் முன்னோர்கள் எப்படி நடத்தினார்கள். உங்கள் ஜாதிக்கு கீழே மற்ற ஜாதிகளை உருவாக்கியவர் உங்கள் முன்னோர் தானே.
இன்றய சூழ்நிலை வேறு , நீங்கள் வளர்ந்த சூழ்நிலை வேறு. உங்கள் கோபத்தை அடுத்த தலைமுறைக்கு வெறுப்பாக கக்குகின்றீர்கள். எப்படி மதங்களில் மூட நம்பிக்கைகள் உள்ளனவோ, உங்கள் வாதங்களும், “பெரியார் மதத்தின்” மூட நம்பிக்கையாக உள்ளன. மீண்டும் உங்கள் பகுத்தறிவை பயன்படுத்த மறந்து விடுகிறீர்கள். இன்று பெரியார் தோன்றினால், உங்களைப்போல வெறுப்பை கக்கும் ஜாதியை ( உங்கள் தனிப்பட்ட்ட ஜாதி அல்ல) எதிர்த்து தான் “அன்பு மரியாதை இயக்கம் “ நடத்துவார்.

naadal said...

நான் பிறப்பால் பார்பனன் அல்ல , பகவத் கீதையைப் பொறுத்த்வரை என் தொழிலைப் பொறுத்துவரை , நான் பர்ப்பனன், உங்கள் தொழிலைப்பொறுத்து நீங்களும் பர்ப்பனனாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனது மகன் அல்லது உங்கள் மகள் நாளை நாடள்பவராக வந்தால் அவர்கள் சத்திரியர்கள், அவ்வளவே. பகவத் கீதையில் பார்பனுக்கு பிறந்தவன் பார்பனன் என்று சொல்ல வில்லை. கீதையைப் புரிந்து கொள்ளாமல் , பகுத்தறிவின்றி உங்கள் வாதம் உள்ளது. மேலும், அப்படியே ஜாதி பகவத்கீதையில் சொல்லப்படாலும், உங்கள் மற்றும் என் பகுத்தறிவுப்படி நான்ங்கு ஜாதிகள் மட்டும்தானே இருக்க வேண்டும், நாலு லட்சம் ஜாதிகள் இருகிறதே.

தமிழ் ஓவியா said...

//பிராமணன் ஒரு ஜாதிதான்,//

பிராமணன்(பார்ப்பனர்) என்பது ஜாதி அல்ல. அது ஒரு இனம். அய்யர் அய்யங்கார் என்பதுதான் ஜாதி.

//நான்ங்கு ஜாதிகள் மட்டும்தானே இருக்க வேண்டும், நாலு லட்சம் ஜாதிகள் இருகிறதே.//

பார்ப்பான், சத்ரியன்,வைசியன், சூத்திரன் என்பது வருணதர்மம். சூத்திரனில் பிள்ளை, கவுண்டர் படையாட்சி உட்பட அனைவரும் சூத்திரர்களே?

அருள்கூர்ந்து கீதையின் மறுபக்கம் நூலைப் படிக்க வேண்டுகிறேன்.naadal ]

When it is high time said...

இப்பழமொழிகள் பார்ப்பனரிடமே நின்று நிலவுகின்றன. ஒருவேளை, இக்கால பார்ப்பனர் மறந்திருக்கலாம். ஆனால், அக்காலப்பார்ப்பன்ர் சொல்வதுண்டு.

எனவே, இப்பழமொழிகள் பெரிய விடயமல்ல்.

ரங்குடு குறிப்பிட்டது போல, எல்லா இனத்தவர்மீதும் இப்படி பழமொழிகள் உண்டு.

கேள்வி: இவைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமா இப்பொது?

பார்ப்பனரின் பலபழக்கங்கள் மற்ற மக்களை இழிவுபடுத்தியது, படுத்துகிறது, டோண்டு இராக்வன் போல ஜாதி வெறிபிடித்த பார்ப்பனருண்டு என்று எடுத்துக்காட்டினால் போதுமே.

ஜய்சங்கரையும் நான் வாசித்திருக்கிறேன். சின்ன வய்திலே அவரும் டோண்டுபோல ஆகிவிடுவாரா எனப்பயத்தைத் தருகிறார். பார்ப்பன்ருக்காகவே பிளாக் எழுதி, அவர்களிடமிருந்தே பின்னூட்டங்களைப்பெற்று தாங்கள் தனி என அவர்தம் முன்னோர் சென்ற வழியில் செல்கிறார்.

இந்தச்சின்ன வயதிலேயே ஜாதிப்பற்றா?

தொடர்ந்து ஒவியாவை படித்து வாருங்கள் ஜ்ய்சங்கர் ஜய்னாதன். மாறுவீர்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Sword Fish

நம்பி said...

//jaisankar jaganathan said...

ஓவியா உங்கள் கோபம் பார்ப்பனர்கள் மீதா, கடவுள் மீதா.

இப்போதெல்லாம் ஜாதி வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன்
September 29, 2009 7:23 AM //

உங்கள் பச்சாதாபம் கடவுள் மீதா? அல்லது பார்ப்பனர்கள் மீதா? அல்லது அனைவரின் மீதா....?

கேள்வியிலே ஜாதி வித்தியாசம் இருக்கிறதே...! தெரியவில்லை...! நன்றாகத் தெரிகிறதே...

நம்பி said...

//Blogger Harish said...

Hello

Human decency is very important in one' life. Your blog shows you lack that. I really didnt want to comment your blog.

Kevalamana jenmamya neer. Do you see any brahmnins have a blog like you and writing other caste. It shows the decency. Please growup atleast now.

September 28, 2009 5:15 PM//

அப்படியா! அப்படி என்றால் என்ன? அது வீசை எவ்வளவு என்று கூறாலாமே! அனைவரும் வாங்கிக்கொள்ளலாமே!....எவ்வளவு காலமாக இந்த வியாபாரம்...?

என்றாவது உனக்காக அழுதிருக்கிறியா?...அப்படியே பிறருக்காகவும் அழுதிருக்கிறியா...?

சாப்பிடும் பொழுது இந்த சாப்பாட்டை விளைவித்தவனை பற்றியும் அவனால் இன்று ஒரு கவளச் சோற்றை வாயில் வைக்க உதவினானே...அவனுக்காக என்ன செய்தோம் என்று நினைத்திருக்கிறாயா? மனிதாபிமானியே சொல்....


பிறரை பார்ப்பனர் ஏளனப்படுத்தும் பொழுது தடுத்திருக்கிறாயா...? கோயிலின் உள்ளே போய் அனைவரையும் அனுமதி என்று சண்டை போட்டு இருக்கிறாயா...?

நீ யார்? என் சகோதரனைத் தடுக்க என்று அதட்டிக்கேட்டு இருக்கிறியா...? தீண்டாமையை வலியுறுத்துபவனை உன் உறவினாலும் தூக்கிப் போட்டு மிதித்திருக்கிறாயா..? அப்புறம் எந்த மைத்துக்கு மனிதாபிமானத்தை பற்றி பேசற...?

எவ்வளவு கேவலமாக சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை உணர்ந்திருக்கிறாயா..?


அங்கே போய் "human decency" ஐ அளந்திருக்கிறாயா?

பிறரை இழிவுப்படுத்துபவன் சட்டையை பிடித்து ஓங்கி "பளார்" என்று அறைந்திருக்கிறாயா..?

உன்னை இழிவுப்படுத்தினால் உனக்கு எவ்வளவு கோபம் வரும்? என்று என்றாவது வருந்தியிருக்கிறாயா? இப்படியெல்லாம் வருந்தியிருந்தால் "human decency" பற்றி இங்கு வந்து அளக்கமாட்டாய்.