Search This Blog

16.9.09

பெரியாரின் சுவீகாரப் புத்திரன் அண்ணா


அண்ணா பேசுகிறார்!

நான்கல்லூரியை விட்டு வெளியேவந்ததும் முதலில் அவரிடத்தில்தான் சிக்கிக்கொண்டேன். நான் சிக்கிக்கொண்டது வாலிபப் பருவத்தில். அதற்கு அடுத்து எங்கெங்கோ போய் சிக்கிக்கொண்டிக்க வேண்டியவன். பெரியாரிடத்தில் தான் முதன்முதலில் சிக்கிக்கொண்டேன். கல்லூரியில்படித்த படிப்பையும் அதன் மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ அவைகளையும் உதறித் தள்ளிவிட்டு ஈரோட்டில் குடியேறினேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதுபற்றி என் பாட்டியார், யாரோ ஈரோட்டிலிருந்து ஒருவன் வந்து என்னுடைய பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான் என்று பேசுவார்கள். எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1934-ஆம் ஆண்டில்தான் அப்போது நான் பி.ஏ. ஆனர்ஸ் தேர்வு எழுதியிருந்தேன். பரிட்சை முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவையை அடுத்த திருப்பூரில் ஒருவாலிபர் மாநாடு நடந்தது. அங்குதான் நான் முதலில் பெரியாரை சந்தித்தேன். அவரின் சீர்திருத்தக் கருத்துகள் எனக்குப் பெரிதும் பிடித்தன. அவர்மீது பற்றும் பாசமும் ஏற்பட்டது. பெரியார் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய்? என்று கேட்டார். படிக்கிறேன், பரிட்சை எழுதியிருக்கிறேன் என்றேன். உத்தியோகம் பார்க்க விருப்பமா? என்றார். இல்லை, பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம் என்றேன். அன்றுமுதல் நான் அவரின் சுவீகாரப் புத்திரன் ஆனேன். பொதுவாழ்வில் முதல் சந்திப்பிலேயே, மகன் தந்தை என்ற பாச உணர்வு இருவர் உள்ளத்திலும் அரும்பியது.

----------------அறிஞர் அண்ணா

*********************************************************************************

அறிஞர் அண்ணாவிற்கு தந்தைபெரியார் புகழ் மாலை

அண்ணா அவர்கள் அதிசயமானவர். இந்தியா முழுவதும் அவரைப்போல் செயற்கரிய காரியம் செய்தவர் இல்லை.சிலர்,மரியாதைகளுக்காகச் சிலரைப் புகழ்வார்கள். சிலர் பிழைப்பதற்காகக் புகழ்வார்கள்; நான் அப்படியல்ல! அண்ணாவைத் தவிர வேறு பெரிய காரியங்களைச் செய்தவர்களே இந்நாட்டில் இல்லை என்பதால் நான் புகழ்கிறேன்.

ஜாதி சமயங்களை ஏற்காமல் சமய இலக்கியங்களைத் தீயிடவேண்டும் என்று பிரச்சாரம் செய்த ஒருவர் ஆட்சிபீடம் ஏறுகிற அளவுக்கு உயர்ந்தவர் என்றால், இதைவிடப் பெரிய காரியம் என்ன இருக்க முடியும்?

அண்ணாவின் ஆட்சியைத் தவிர்த்து அல்லது அவரைச் சார்ந்தவர்களின் ஆட்சியைத் தவிர்த்து ஜாதியே இல்லை என்று ஆட்சி அமைந்ததே இல்லை!

சிலருக்கு ஜாதி பற்றிய விஷயம் தெரியும். ஆனால், சொன்னால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்று பேசாமல் இருக்கிறார்கள்.

அண்ணா ஆசிரியராக இருந்த பத்திரிகை விடுதலை நான் அவருக்கு 50 ரூபாய்தான் சம்பளம் தந்தேன்.

அதை வாங்கிக்கொண்டு அவர் ஆசிரியர் வேலையும் பார்ப்பார்; பிரச்சாரத்திற்கும் போவார். அப்படிப் பிரச்சாரத்திற்குப் போகும்போதுகூட செலவு போக மீதியை என்னிடம் தந்துவிட வேண்டுமென்று உத்தரவு போட்டேன். எதுவும் பேசாமல் அப்படியே தந்துவிடுவார் அண்ணா. இப்படிக் கொடுமைப் படுத்துகிறீர்களே என்று சிலர் கேட்டபிறகுதான் அதை விட்டுவிட்டேன்!

அண்ணாவின் ஆட்சி இல்லாமலிருந்தால் டில்லியில் நடப்பதற்கு இங்கே என்ன நடந்திருக்கும்? அதையெல்லாம் தடுத்தது இந்த ஆட்சியே!

-----------------------விடுதலை புது அச்சு இயந்திரத் திறப்புவிழாவில் பெரியார் பேசியது

----------------நன்றி:-"விடுதலை" 159-2009

3 comments:

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

பித்தனின் வாக்கு said...

இந்த இரு கடிதங்களை படிக்கும் போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது, கலைஞர் தனக்கு அண்ணா விருது, வீரமணிக்கு கலைஞர் விருது. ஒருவர் ஒருவர் மாத்தி புகழ்வது இன்னமும் இருக்கு.

நம்பி said...

//பித்தன் said...

இந்த இரு கடிதங்களை படிக்கும் போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது, கலைஞர் தனக்கு அண்ணா விருது, வீரமணிக்கு கலைஞர் விருது. ஒருவர் ஒருவர் மாத்தி புகழ்வது இன்னமும் இருக்கு.
September 17, 2009 9:17 AM //

ஹி ஹி நாட்டில ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி இகழ்வதும் இருக்கு! அது சில பேருக்கு மட்டும்தான் பிடிக்கும்....அது யாருக்கு..?

செம பின்னுட்டம்யா...