Search This Blog

9.9.09

தந்தை பெரியார் கொள்கைகள் பரவிட புதிய வழிமுறை
தந்தை பெரியார் கொள்கைகள் _ சிந்தனைகள் என்பவை சமுதாயத்திற்கு மட்டுமல்ல; தனி மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அவை வாழ்வைச் செழுமைப்படுத்தக் கூடியவை! ஒரு வாழ்க்கை நெறிமுறையைக் கொடுக்கக் கூடியவை.

இல்லை இல்லை என்று சொல்கிறவர்; ஒழிக, ஒழிக என்று சொல்லக் கூடியவர்; எதிலும் எதிர்மறைப் பார்வைதான் பெரியாருடையது என்று வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று விமர்சனம் செய்பவர்கள் உண்டு.

எதை இல்லை என்றார், எதை ஒழிக என்றார் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நியாயங்களும், விளைவுகளும் என்னவென்று புரியும்.

கடவுள் இல்லை என்று அவர் சொன்னார் என்றால் - இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பு, அவனின்றி ஓர் அணுவும் அசையாது, நம்மால் ஆவது ஒன்றும் இல்லை; அவன் ஏற்கெனவே தீர்மானித்தபடி தான் எல்லாம் நடக்கும் என்றும், மனித அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும் அவமதிக்கும், அலட்சியப்படுத்தும் மோசமான நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிட இல்லாத ஒன்றின்மீது நம்பிக்கை வைத்து இழப்புக்கு ஆளாகிறார்களே மனிதர்கள் என்பதால் தான் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று அழுத்தமாகக் கூறியுள்ளார் அந்த அறிவுலக ஆசான்.

ஒழிக என்று அவர் சொன்னதற்குக் காரணம் - மதமும், சாத்திர நம்பிக்கைகளும் மனிதனின் சிந்தனையைப் பாழ்படுத்துகின்றன. வெறி கொள்ளும் ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றன. பக்தி என்னும் விலங்கைக் கொண்டு மனிதன் சிந்தனையை முடக்கி விடுகின்றன. இதனால் மனித சமூகம் சகோதரத்துவ உணர்வையும், சுயசிந்தனையையும் இழக்கும் நிலைக்கு ஆளாகிறது.

தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றுவோர் இந்த இழப்புகளிலிருந்து விடுதலை பெறுகின்றனர். அதன் காரணமாக முன்னேற்றம் என்பது மட்டுமே அவர்தம் முன் காட்சியளிக்கிறது.

101 வயது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் என்.வி. இராமசாமி அவர்கள் இன்று வரை விடுதலையைப் படிக்கிறார்; நினைவு சக்தியை இழக்கவில்லை. தனக்குத் தேவையான பணிகளைத் தானே செய்து கொள்கிறார்.

நூறு வயதைக் கடந்து புதுவை வள்ளியம்மாள் அவர்களும் இதே நிலையில் இருக்கிறார் இவர்களின் இந்த ஆயுள் இரகசியம் என்ன என்ற கேள்விக்கு, பெரியாரியல் என்னும் கொள்கையை நாங்கள் நேசிப்பது மட்டுமல்ல, சுவாசிக்கிறோம் என்கின்றனர்.

இதன் பொருள் எதையும் அறிவுப் பூர்வமாக அணுகுவது, விஞ்ஞான ரீதியானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்வது. திட்டமிடுவது, தோல்விக்கு விதியின் மீதோ, கிரகத்தின் மீதோ, பிறர் மீதோ பழிபோடாமல், அதற்கான பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்வது, அந்த அனுபவத்தின் மூலம் அடுத்து அந்தத் தவறுகளைச் செய்யாதிருப்பது என்றே ஒழுகலாற்றைக் கடைபிடிக்கும்போது வாழ்வில் செழுமை சேர்கிறது. சமூகத்தால் மதிக்கப்படும் ஒரு நிலை ஏற்படும்போது உளரீதியான உற்சாகம் அவர்களை ஊக்குவிக்கிறது.

அறிவைச் சொன்ன தந்தை பெரியார் ஒழுக்கத்தை முக்கியப்படுத்துகிறார்.

நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால், நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம். (விடுதலை, 11.10.1944, மன்னார்குடி). பொருளாதாரத்தில் சிக்கனம் தேவை என்கிறார். மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்களுக்கு உரிமை கொடுப்பதால், வாய்ப்புக் கொடுத்தால் சமுதாயம் அவர்கள் மூலம் பெரும் பலன் அடைகிறது என்று கோடிட்டுக் காட்டுகிறார்.

இப்படி எது எது எல்லாம் இதுவரை சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்தனவோ அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் தத்துவத்தைத் தங்கு தடையின்றித் தருகிறார்.

ஒரு கடவுள் மறுப்பாளர் - நாத்திகவாதி சமூகத்தில் உயர் மதிப்பீட்டை பெற முடியும் என்பதற்குத் தாமே சாட்சியமாகியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் மட்டுமல்ல; அவர் தந்த கொள்கைகளை வாழ்வில் செயல்படுத்தும் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.

கடந்த ஞாயிறன்று (6.9.2009) காரைக்காலில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி சி.மு. சிவம் அவர்களுக்கு 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவர் மறைந்து 20 ஆண்டுகள் ஆன நிலையிலும், அந்த வட்டார மக்கள் அவர்மீது வைத்திருந்த மதிப்பு, பற்று, ஈடுபாடு மெய் சிலிர்ப்பதாக இருக்கிறது. கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அந்தப் பெரியார் பெருந்தொண்டரால் பெற்ற பலன்களைப் பட்டியலிடுகிறார்கள்.

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொன்ன சங்கராச்சாரியார்களை அறிவோம்; மனிதநேயத்தால் மக்கள் மத்தியில் மதிப்புறு மாந்தர்களாகத் திகழும் பெரியார்தம் தொண்டர்களையும் பார்க்கிறோம். நம்முடைய இயக்கத் தோழர்கள் இத்தகு வீரர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து காட்ட வேண்டும். இதன் மூலம் பெரியார் கொள்கைகள் நடைமுறை சாத்தியம் என்பதையும் வெற்றிக்கான வழி முறைதான் என்பதையும் மெய்ப்பிக்கவேண்டும்.

பெரியார் கொள்கை வளர்ச்சிக்கு இயக்க வளர்ச்சிக்கு இதுவும் ஒரு புதிய அணுகுமுறை என்பதை எண்ணிடவேண்டும், எண்ணியபடி செயல்பட வேண்டும். வாழ்க பெரியார்!

--------------------"விடுதலை"தலையங்கம் 9-9-2009

3 comments:

Unknown said...

பதிலும்
நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

நாத்திகர்களின் கேள்விகள் சிலவற்றை ஒரு இனிமை என்ற சகோதரர் நம்க்கு அனுப்பி பதில் கேட்டுள்ளார். அந்தக் கேள்விகலூம் அதற்கான பதில்களும் கீழே

அஸ்ஸலாமு அலைக்கும்,
அருண்ராஜ் என்பவர் செங்கொடியின் தளத்தில் சில கேள்விகளை கேட்டு பின்னூட்டமிட்டிருந்தார்.
அவைகள் கீழே,

//1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்கமுடியவில்லை!?
2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தை சொல்ல முடியவில்லை!?
3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகை படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!?
4.இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளை படைத்தது யார்!?
5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக்கூடாது!?
இதுல அஞ்சு கேள்வி இருக்கு, பதில் சொல்லுங்க, வரிசையா கேட்டுகிட்டே இருக்கேன்!//

என்று. இதற்கு நேரடி விவாதத்திகு அவரையும் அவரைச் சேர்ந்தவங்களையும் அழைத்து வரச் சொன்னதற்கு TNTJ தலைமையகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லி முகவரியையும் கொடுத்ததற்கு நான் எந்த இயக்கத்தை சேர்ந்தவனும் இல்லை தனி ஒருவனாக வருகிறேன் என்று தன்னுடைய பெயரையும், மொபைல் நம்பர் 9994500540 யும் தந்து
//ஈரோட்டுக்கு வந்து போன் செய்தால் பொது இடத்தில் சந்திக்கலாம்!, அல்லது ஈரோட்டில் இருக்கும் உங்கள் ஜமாத்தில் கூட!

வீட்டில் தான் விவாதிக்க வேண்டும் என கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!என்று பதில் தந்துள்ளார். இது தங்கள் மேலான பார்வைக்கு.

நமது பதில்

நாத்திகர்கள் அனைவரின் கோளாறும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. அதாவது எதையும் அரை குறையாக புரிந்து கொள்வது தான் அந்தக் கோளாறு.

மேற்கண்ட கேள்விகள் அனைத்திலும் அது தான் தெரிகிறது.

இப்லீஸை அழிக்கவில்லை என்பதற்கும் அழிக்க இயலவில்லை என்பத்ற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை. நமக்கு இயலுமான் அனைத்தையும் நாம் செய்ய மாட்டோம். நமக்கு இயலுமான விஷயத்தில் நமக்கு எது விருப்பமோ அதைத் தான் செய்வோம். இப்லீஸை அல்லாஹ்வுக்கு அழிக்க முடியவில்லை என்று குர் ஆன் எந்த வசந்த்தில் கூறி இருக்கிறது என்பதற்கு அவரிடம் ஆதாரம் கேளுங்கள். நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகு. அதைத் தான் அரை குறை என்கிறோம்.

இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. ஒரே வேதப்புத்தகத்தில் என்னால் சொல்ல முடியாதத்தால் பல வேதங்களில் சொல்லி இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினால் தான் இப்படி கேட்க முடியும். இவர் ஐந்து கேள்வி கேட்டால் மக்கள் மனதில் நன்றாக பதிய வேண்டும் என்பதற்காக் வாரம் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?

இங்கேயும் அதே அறை குறை தான் வெளிப்படுகிறது. நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருலைத் தூக்க முடியும். ஆனால் தேவை கேற்ப சிறிது சிறிதாக் தூக்கினால் நம்க்கு ஐம்பது கிலோ தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐமபது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது கேட்பாரா?

நாலாவது மற்றும் ஐந்தாவ்து கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்ல்வும். அதில் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லவும்.

கடவுள் படைக்கவில்லை என்று கூறும் இவர்க்ளும் ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். ஒரு அணு வெடித்து இந்த உலகம் எப்படி உண்டானது என்று கூறுகிறார்கள். அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள். ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மேபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப் பூர்வமானது.

எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.

அவர் தனி நபராக இருந்தாலும் அவர் நமது தலைமையைச் சந்தித்து அவர் கேட்ட ஐந்து கேள்விகள் குறித்து முதலில் விவாதிக்க வரச் சொல்லுங்கள். நாம் தயாராக இருக்கிறோம்.

saivam said...

கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
evr in nokkam enna ?