Search This Blog

19.6.09

மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது எதற்கு ? - 1


மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டி- காவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை
என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

1. மச்சாவதாரம் (மீன்)

கதை: மகாவிஷ்ணு மச்சாவதாரம் எதற்கு எடுத்தானாம்?

இருக், யசூர், சாம, அதர்வணம் எனும் நான்கு வேதங்களையும் சோமுகாசூரன் திருடிக்கொண்டுபோய் கடலில் ஒளிந்துகொண்டான்.

மகாவிஷ்ணு மீன் அவதாரம் எடுத்து அவனை சங்காரம் (அழித்தல்) செய்து வேதங்களை மீட்டானாம்.

கேள்வி: வேதங்கள்தான் எழுதப்படாதவை என்கிறார்களே, அப்படி இருக்கும்பொழுது, அதனைத் திருடிக் கொண்டு எப்படி கடலில் ஒளிந்துகொள்ள முடியும்?

இந்த அவதாரத்திலிருந்து இன்னொன்றும் வெளியாகிறது. வேதங்களை அந்தக் காலத்திலேயே அசுரர்கள் எதிர்த்து இருக்கிறார்கள் என்பதுதான் அந்தத் தகவல்.

----------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

10 comments:

அப்பாவி முரு said...

ஆவ்வ்வ்வ்வ்வ்...(கொட்டாவிதான் வருது)


ஏதாவது நல்லா யோசிச்சு எழுதுங்க.

hayyram said...

தமிழ் காட்டுமிராண்டி மொழி:

”தமிழும் தமிழரும்” என்ற நூலிலே, ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.”

”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”

(அதாவது தமிழ் படித்ததால்தான் பகுத்தறிவு இல்லாமல் போய்விட்டார்களாம். உலகம் அறியாதவர்களாகி விட்டார்களாம். நூலாசிரியர்.)

”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”

”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?”

”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?”

”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.”

(தமிழ்ப்பற்றால் இந்தியை எதிர்க்கவில்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்துள்ளார் - நூலாசிரியர்.)

”தமிழ் காட்டுமிராண்டிக் காலத்துமொழி”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) குமுக எதிரிகள்”
(நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்)

”தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?”

”இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

இதுதான் தமிழைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கணிப்பு. இன்று தமிழுக்காக போராடுகின்ற தமிழறிஞர்கள் முதலில் எதிர்க்க வேண்டியவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே - அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?
”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் - முதல் தொகுதி)

என்றும்,

”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

‘நான் கன்னடியன்’ என்று சொல்லிக்கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்ப் புலவர்களை விமர்சித்த விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

தமிழ் புலவர்களைப் பற்றிய விமர்சனம்:

‘தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:

”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன்.

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

இதுதான் முக்கியத் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய பார்வை ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. தொல்காப்பியரும், கம்பனும் துரோகிகள்! சரியான பட்டம்!

தமிழுக்காக தமிழ் இலக்கியத்தை படைத்த இவர்கள் தமிழ்த் துரோகி என்றால் அதே தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் துரோகிதானே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழை எவ்வாறெல்லாம் விமர்சித்தார் தெரியுமா.
http://hayyram.blogspot.com

தமிழ் ஓவியா said...

விரைவில் இந்நூலுக்கு மறுப்பு வெளிவரும்.

பெரியர் ஒரு திறந்த புத்தகம். அவருக்கு எந்த ரகசியமும் கிடையாது.அவருக்கு மறுபக்கம் என்ற ஒன்றே இல்லை. வெளிப்படையானவர். விரிவான விளக்கம் விரைவில்

குறை ஒன்றும் இல்லை !!! said...

கண்டீப்பாக காசி மேடு குப்பத்தில் கூறு போட்டு விற்பதற்காக அல்ல...

Thamizhan said...

அய்யோராம்!
பெரியார் இதையெல்லாம் சொல்லிவிட்டு ஏன் அப்படிச் சொல்கிறேன் என்று விளக்கமாகவும் சொல்லியுள்ளார்.
மானமும்,அறிவுமில்லாமல் ஆரியத்திடம் அடிமையாக இருந்தவர்களுக்குச் சுய மரியாதை வரச் சூடாகப் பேசினார்.
வக்கீல்கள் மாநாட்டிற்குச் சென்று அவர்களைத் திட்டி,இன்னும் சட்டத்திலே சூத்திரனாகத்தானே இருக்கிறோம்,உங்களுக்கெல்லாம் அவமானமாக இல்லையா என்று கேட்டார்.
அதிகாரிகளிடத்திலே சென்று அவர்கள் அளித்தப் பாராட்டு விழாவிலேயே இத்தனை பேர் அதிகாரிகளாக இருக்கிறீர்களே,இருந்து என்ன பயன்?
என்ன செய்திருக்கிறீர்கள்.
உயர் நீதி மன்றத்திலே இன்னும் ஒரு தாழ்த்தப் பட்டவர் கூட நீதியரசர் ஆக இல்லையே என்றார்.உடனே ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதியரசராக நியமிக்கப் பட்டார்.
குருடன் யானையைப் பார்த்த மாதிரிப் பெரியாரைப் பார்க்கும்,தமிழரே பல தமிழறிஞர்களை விடப் பெரியார் தமிழுக்கும்,தமிழருக்கும் உழைத்துள்ளார் என்பது பெரும்பாலோரின் எண்ணம்.
திருக்குறள் மாநாடு முதலில் நடத்தியவர் அவர்தான்,தனித்தமிழ் இயக்கத்துக்கு ஆதரவளித்து வளர்த்தவர் அவர்தான்.
நன்கு படித்து விட்டு எழுதுங்கள்,உளராதீர்கள்.

அசுரன் திராவிடன் said...

தமிழ் மொழிக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பானே சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழ்லில் தேவாரம் பாட தடுத்த சிவாச்சாரியார்களை முதலில் தமிழிலில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்து அப்புறம் வந்து உம் உளறல்களை ஆரமியுங்கள் .
*********************************
avarice, ambition, gunning, wily, doubletongued, servile, insinuating, injustice, fraud, dishonest, oppression intrigue
***********************************
மேற்கண்ட வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தங்களை அகராதியில் பாருங்கள் .இந்த வார்த்தைகள் எல்லாம் பார்பனர்கள் பற்றி , abbe.J.A.Dubois என்ற அறிஞர் எழுதிய HINDU MANNERS CUSTOMS AND CEREMONIES என்ற நூலில் இடம் பெற்ற வார்த்தைகள் .இன்று நேற்றல்ல ;நாயரின் முரசு கேட்டு அல்ல ; வகுப்பு வாத நச்சரவு கடித்தள்ள ;கண்ணார கண்டதை கருதார உணர்ந்து நாவார உரைத்தார் 1807 இல்.அவர் முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார் நாடு முழுவதும் சுற்றினார்.ஆரிய இனத்தின் இயல்பினை உள்ளது உள்ளவாறு கண்டபிறகே ,ஏட்டில் எழுதினர் .
****************

சரி abbe.J.A.Dubois ஒரு பிரஞ்சு பாதிரியார் அவர் பிரான்சு மொழியிலே எழுதி இருப்பார் அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்து இருப்பார் என்று சாகச சித்தர்கள் கேட்பார்.இந்த நூலை ஆங்கிலமாக்கியவர் எச்.கே.பீன்ஷோப் எனும் ஆகிலர்தான் .ஆனால் அதை மேற்பார்வை செய்தவர் ,சி.வி.முனுசாமி அய்யர் .
**************************************
ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிட தோழா ! உனக்கு வேண்டம் அதனிடம் பாசம் .உன் வாழ்வை அழித்திடும் அந்த காசம் .
**********************************
ஓடி வரும் வெள்ளத்தை தடுக்க ஒரு சான் கல்லை வைத்தால் ஒரு போதும் வெள்ளம் நின்று விடாது .அது போலதான் வேகமாக பரவி வரும் பகுத்தறிவு கிளர்ச்சியை புல்லர்கள் சிலரின் எதிர்ப்பு ஒரு நாளும் பொசுக்கி விட முடியாது .

அசுரன் திராவிடன் said...

தமிழ் மொழிக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பானே சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழ்லில் தேவாரம் பாட தடுத்த சிவாச்சாரியார்களை முதலில் தமிழிலில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்து அப்புறம் வந்து உம் உளறல்களை ஆரமியுங்கள் .

avarice, ambition, gunning, wily, doubletongued, servile, insinuating, injustice, fraud, dishonest, oppression intrigue

மேற்கண்ட வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தங்களை அகராதியில் பாருங்கள் .இந்த வார்த்தைகள் எல்லாம் பார்பனர்கள் பற்றி , abbe.J.A.Dubois என்ற அறிஞர் எழுதிய HINDU MANNERS CUSTOMS AND CEREMONIES என்ற நூலில் இடம் பெற்ற வார்த்தைகள் .இன்று நேற்றல்ல ;நாயரின் முரசு கேட்டு அல்ல ; வகுப்பு வாத நச்சரவு கடித்தள்ள ;கண்ணார கண்டதை கருதார உணர்ந்து நாவார உரைத்தார் 1807 இல்.அவர் முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார் நாடு முழுவதும் சுற்றினார்.ஆரிய இனத்தின் இயல்பினை உள்ளது உள்ளவாறு கண்டபிறகே ,ஏட்டில் எழுதினர் .

சரி abbe.J.A.Dubois ஒரு பிரஞ்சு பாதிரியார் அவர் பிரான்சு மொழியிலே எழுதி இருப்பார் அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்து இருப்பார் என்று சாகச சித்தர்கள் கேட்பார்.இந்த நூலை ஆங்கிலமாக்கியவர் எச்.கே.பீன்ஷோப் எனும் ஆகிலர்தான் .ஆனால் அதை மேற்பார்வை செய்தவர் ,சி.வி.முனுசாமி அய்யர் .

ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிட தோழா ! உனக்கு வேண்டம் அதனிடம் பாசம் .உன் வாழ்வை அழித்திடும் அந்த காசம் .

ஓடி வரும் வெள்ளத்தை தடுக்க ஒரு சான் கல்லை வைத்தால் ஒரு போதும் வெள்ளம் நின்று விடாது .அது போலதான் வேகமாக பரவி வரும் பகுத்தறிவு கிளர்ச்சியை புல்லர்கள் சிலரின் எதிர்ப்பு ஒரு நாளும் பொசுக்கி விட முடியாது .

பரணீதரன் said...

ஹேராம் பார்ப்பான் நுனி புல் மேய்ந்து விட்டு இங்கு வந்து பேசுகிறார். இல்லை பெரியாரால் பார்பன சமுதாயம் எவளவு இழப்பை அடைந்துள்ளது என்ற வேதனைகள் பதிவு போடுகிறார்.

பெரியாரின் முரண்பாடு இவர் சொல்லும் தமிழில் மட்டும் அல்ல. கோவிலே கூடாது என்றார் அனால் கோவில் கருவறை நுழையும் போராட்டம் மற்றும் அணைத்து சாதியினரும் அர்சகர். இந்தி ஒழிப்பு நேர் எதி தமிழ் காட்டுமிராண்டி மொழி. இது போல ஏராளம் சொல்லலாம். ஆனால் இந்த முறைனபடுகலுக்கேல்லாம் அவரே விளக்கம் கொடுத்துள்ளார் அதனை படிக்காமல். சும்மா பார்பன புத்தியிலையே பதிவு போடா வந்து விடுவது. அனால் ஒரு மகிழ்ச்சி, பெரியாரால் இந்த அளவுக்கு நீங்கள் பாதிக்க பட்டுள்ளது மற்றும் சூத்திரர்களாகிய நாங்கள் பெற்ற நன்மை நினைத்து.

unearth.com said...
This comment has been removed by the author.