Search This Blog

25.6.09

நல்லவர்களை அழிப்பதுதான் பார்ப்பனர்கள்(மகாவிஷ்ணு) எண்ணமா? - 5


மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டி- காவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

*****************************************************************************



5. வாமன அவதாரம் (குள்ளப் பார்ப்பான்)

கதை: மாவலி சக்ரவர்த்தி பேரும் புகழும் பெற்று விளங்கினான். அவனை ஒழிக்க விஷ்ணுவிடம் வழக்கம்போல ஆரியப் பார்ப்பனர்கள் வேண்டினார்கள். யாசகம் என்று கேட்பவர்களுக்கெல்லாம் முப்பத்திரெண்டு வகை தானங்களையும் இல்லை என்னாது கொடுக்கும் தண்ணளியானை ஒழிக்க விஷ்ணு திட்டமிட்டான்.

குள்ளப் பார்ப்பான் வேடம் கொண்டு யாகசாலைக்காக மூன்றடி மண் தானமாகக் கேட்டான் விஷ்ணு. வள்ளலாயிற்றே மாவலி - அளிப்பேன் என்றான். உடனே அந்த வாமனன் (பார்ப்பான்) ஆகாயத்திற்கும், பூமிக்கும் விக்ரம ரூபமெடுத்து பூமியை ஓரடியாகவும், ஆகாயத்தை இன்னொரு அடியாகவும் அளந்துகொண்டு, மற்றொரு அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மாவலி தன் தலையைத் தாழ்த்திக் காட்ட அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்து பாதாளம் போகுமட்டும் அழுத்தித் தீர்த்துக் கட்டினான்.


கேள்வி: நல்லவர்களாக இருப்பவர்களை அழிப்பதுதான் பார்ப்பனர்கள் எண்ணமா? அதற்குத் துணை போவதுதான் காத்தல் கடவுளாகக் கூறப்படும் விஷ்ணுவின் வேலையா?

வஞ்சனையின் வடிவம் என்பது பார்ப்பான்தான் என்பதும் இதன்மூலம் விளங்கவில்லையா?



------------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

//நல்லவர்களாக இருப்பவர்களை அழிப்பதுதான் பார்ப்பனர்கள் எண்ணமா? அதற்குத் துணை போவதுதான் காத்தல் கடவுளாகக் கூறப்படும் விஷ்ணுவின் வேலையா?

வஞ்சனையின் வடிவம் என்பது பார்ப்பான்தான் என்பதும் இதன்மூலம் விளங்கவில்லையா? //

காத்தல் கடவுளை உருவாக்கியவனே பார்ப்பனன் தானே

உலகில் உள்ள கொடூர எண்ணங்களுக்கு மூலகர்த்தாக்கள் இந்தப் பார்ப்பனர்கள் தான் என்பதை பல சந்தர்ப்பங்களில் பலரும் உணர்ந்திருக்க்கலாம். அனுபவம் மூலம் தெரிந்திருக்கலாம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி