Search This Blog

1.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-பெனின்-பூட்டான்-பொலிவியா


பெனின்

தகோமி நாட்டில் அபோமி அரச வமிசம் உருவாகி 1625 முதல் ஆட்சி புரிந்த நாடு. 1893 இல் ஃபிரான்சு தன் நாட்டுடன் இந்நாட்டை இணைத்துக் கொண்டது. 1904 முதல் பிரெஞ்சு மேற்கு ஆப்ரிக்கா என்றே உருவாக்கிவிட்டது.

1960இல் விடுதலை தந்தது. ஹூபர்ட் மாகா என்பவர் முதல் அதிபர் ஆனார். ஆப்ரிக்க நாடு களுகே உரித்தான ராணுவப் புரட்சியை கர்னல் கிறிஸ்டொபர் கோக்லோ என்பவர் நடத்தி அதிப ரைக் கவிழ்த்தார்.

1975இல் ஞசுஞக்ஷ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மக்கள் புரட்சிக் கட்சி மட்டுமே ஒரே அரசியல் கட்சியாக ஆக்கப்பட்டு நாட்டின் பெயரும் பெனின் என மாற்றப்பட்டது. பல பேர் போட்டி போட்ட தேர்தலில் 1991இல் கரேகூ என்பவரைத் தோற்கடித்தார் நைஸ்லோர் கோக்லோ என் பவர். 1996இல் கரேகூ மீண்டும் அதிகாரத்திற்கு வந்து அடுத்த 2001 தேர் தலிலும் வெற்றி பெற்றார்.

நைஜீரியாவுக்கும் டோகோ நாட்டுக்கும் இடையில் உள்ள இந் நாடு 1 லட்சத்து 12 ஆயிரத்து 620 சதுர கி.மீ. பரப்பு உள்ளது. சுமார் 79 லட்சம் மக்கள் தொகை. 30 விழுக்காடு கிறித்து வர்கள், 20 விழுக்காடு இசுலாமியர்கள், மீதிப் பேர் ஆப்ரிக்க பழங்கால மதங்களைச் சேர்ந் தோர். உள்ளூர் மொழிகளான பான்யொருபா பேசப்பட்டாலும் பிரெஞ்ச் மொழிதான் ஆட்சி மொழி. மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள்.

போர்டோநோவா (பரங்கிப்பேட்டை) என்பது தலைநகரின் பெயர். அதிபர் ஆட்சி முறை. 6-4-2006 முதல் யாயிபோனி என்பவர் அதிபராக இருந்து வருகிறார்.

பூட்டான்

சமக்கிருத மொழியில் போடான்ட் என்றால் திபேத்தின் முடிவெல்லை எனப் பொருளாம். அச் சொல்லிலிருந்து பூட்டான் வந்தது என்கிறார்கள். பூ உட்டான் என்ற சமக்கிருத சொல்லுக்கு உயரமான நிலம் என்று பொருள். அந்த வகையில் பெயர் வந்தது என்றும் கூறுகிறார்கள். ஆனால், பூட்டானிய மக்கள் தங்கள் நாட்டை ட்ரக்யுல் என்கிறார்கள். அதற்கு இடி டிராகன் (விலங்கு) நாடு எனப் பொருளாம். மங்கோலிய இன மக்கள் வசிக்கும் நாடுகளில் முதலை போன்ற பெரு உருவம் கொண்டு நெருப்பு கக்கும் விலங்கு ஒன்று கற்பனையில் உண்டு. அந்த விலங்கின் பெயரில் நாட்டின் பெயர்.

1616இல் திபேத் நாட்டைச் சேர்ந்த புத்தத் துறவி (லாமா) பூட்டானுக்கு வந்தார். அவர் பெயர் ஷப்ட்ருங் நக வாங் நாம்கயான். மதம் சார்ந்தும் சாராமலும் இருக்கின்ற இரட்டை நிருவாக முறையை அவர் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டை ஒன்று படுத்தி அவரே பெருந் தலைவராக தன்னை ஆக்கிக் கொண்டார். ட்ரக்தேசி என்று அழைக்கப்படும் பதவியை ஏற் படுத்தி தான் அதில் அமர்ந்து கொண்டார். மதம் சம்பந்தப்பட்ட விசயங்களைக் கவனிக்க ஜெ கென்போ எனும் பதவியை உருவாக்கித் தந்தார். அவர்தான் பூட்டானின் தலைமை மடா திபதி.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பு கலகலக்கத் தொடங்கியது. மாகாண ஆளுநர்களாக இருந்தவர்கள் அதிகாரங்களைத் தம் வசமே வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட நிலை. எனவே ஆளுநர் (பென்லோப்) பதவிக்குத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ரோங்சா மாநில பென் லோப் ஆக இருந்த உகியென் வாங்சுக் என்பவர் 1907இல் பூட்டானின் முதல் அரசராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1865 இல் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் படை பூட்டானின் மீது படை யெடுத்தது. வெளி நாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை இங்கிலாந்து நாட்டிடம் பூட்டான் ஒப்புக் கொடுக்கும் நிலை 1910 இல் ஏற்பட்டது. 1949 இல் இந்திய நாட்டுடன் பூட்டான் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி இருநாடுகளும் நட்பும் கூட்டுறவும் கொண்ட நாடுகள் என ஆயின.

பூட்டான் அரசர் ஜிக்மே சிங்பே வாங்சுக் தம் நாட்டைக் குடியரசாக ஆக்கிவிட விரும்பினார். தாம் பதவி துறக்க விரும்பினார். இதற்கென புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டு மக்களிடம் வாக்கெடுப்பு முறையில் ஒப்புதல் பெறப்பட்டது. 2008 இல் பதவி துறக்க முடிவு செய்து அவர் மகன் ஜிக்மே கெசர் நாம்கயால் வாங்சுக் அரசரானார். நேபாள நாட்டைச் சேர்ந்த அகதிகள் என்போர் புதிய அரசமைப்புச் சட்டத்தைக் குறைகூற வரையறுக்கப் பட்ட ஜனநாயகம் மட்டுமே இருப்பதாக குறை கூறுகின்றனர்.

நாட்டின் பிரதமராக சங்கே நக்டுப் என்பார். 5-9-2005 முதல் இருக்கிறார். அதிபராக அரசர் இருக்கிறார்.

47 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள இமய மலைப் பள்ளத்தாக்கு நாடான பூட்டானில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் 75 விழுக்காடு. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மீதிப் பேர். 50 விழுக் காட்டினர் மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள்.
150 உறுப்பினர் கொண்ட தேசிய சட்ட மன்றம் உண்டு. 105 உறுப்பினர்கள் தொகு திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 10 பேர் மத நிறுவனங்களிலிருந்தும் 35 பேர் அரசரால் நியமிக்கப்பட்டும் 3 ஆண்டுக் காலம் பதவி வகிக்கின்றனர்.

பொலிவியா

நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த சைமன் பொலிவரின் பெயராலேயே அழைக்கப்படும் இந்நாடு தென் அமெரிக்காவில் உள்ளது. இன்கா வமிசத்தின் ஆட்சிக்குட் பட்ட நாடாக இருந்தது. 1824 இல் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சைமன் பொலிவர், ஸ்பெயின் நாட்டின் பிடியிலிருந்து போராடி விடுதலை பெற்றுத் தந்தார். 6-8-1825 இல் விடுதலை பெற்ற இந்நாட்டின் முதல் அதிபராக பொலிவர் ஆனார்.

19 ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியில் பொலிவியா நாட்டின் பல பகுதிகள் அண்டை நாடு களுக்குப் போய்ச் சேர்ந்து விட்டன. பொலிவியாவிலும் பல்வேறு ராணுவப் புரட்சிகளும் உள் நாட்டுக் கலவரங்களும் 1950 முதல் நடந்து வந்துள்ளன. 1967 இல் எர்னஸ்டோ சேகுவாரா வால் தொடங்கி நடத்தப் பட்ட விவசாயிகளின் எழுச்சிப் புரட்சியை நசுக்க பொலிவியா அரசுக்கு அமெரிக்கா உதவியது. விவசாயிகளாலேயே காட்டிக் கொடுக்கப்பட்ட சே கொல்லப் பட்டார். 1983 வரை பல ராணுவத் தளபதிகள் மாறிமாறி ஆட்சி புரிந்தனர். பிறகு சைல்ஸ் ஜுசாசோ என்பவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டது ராணுவம்.

18-12-2005 இல் பொலி விய நாட்டின் அதிபர் தேர்தல் நடந்தது. சோஷலிஸ்ட் கட்சி (ஆஹளு) யின் வேட்பாளர் ரோ மொரேல்ஸ் அய்மா என்பவரும் ஜனநாயகக் கட்சி (ஞடீனுநுஆடீளு) யின் வேட்பாளர் ஜோர்ஜ் குபிரோகா என்பவரும் போட்டி போட்டனர். ஈவோ மொரேல்ஸ் வெற்றி பெற்றார். 54 விழுக்காடு வாக்குகள் பெற்று நிறைவான பெரும் பான்மையுடன் 22-1-2006 இல் பதவி ஏற்றார்.

1500 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கம் பொலிவியாவின் மீது இருந்து வந்தது. 500 ஆண்டுக் கால அடிமைத்தனம் மொரேல்ஸ் பதவி ஏற்ற பிறகுதான் அகன்றது எனலாம்.

10 லட்சத்து 98 ஆயிரத்து 580 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 90 லட் சம். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் 95 விழுக்காடு. மீதிப்பேர் புரொடஸ் டன்ட்கள். ஸ்பானிஷ் மொழியுடன் உள்ளூர் மொழிகளான கியூசுவா, அய்மாரா ஆகிய வையும் (3) ஆட்சி மொழிகளாக உள்ளன. சுமார் 88 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள்.

--------------------"விடுதலை" 1-6-2009

0 comments: