Search This Blog
22.6.09
உலக நாடுகள் -தூரப்பார்வை-ஹங்கேரி-அய்ஸ்லாந்து-இந்தோனேசியா
ஹங்கேரி
பழைய ரோம சாம்ராஜ்யத்தின் ஓர் அங்கமாக இருந்த நாடு ஹங்கேரி. 896 ஆம் ஆண்டில் மாக்யர்கள் இந்நாட்டை வென்று தம் ஆட்சியை அமைத்தனர். 1241 இல், மங்கோலியர்கள் படையெடுத்து வந்து தாக்கி, பாதியளவு மக்களைக் கொன்று குவித்தனர். 1342 முதல் 1382 வரை ஆண்ட முதலாம் லூயி மாமன்னரின் ஆட்சியில் ஹங்கேரியின் எல்லை பால்டிக் கடல் கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகள் வரை பரவியது.
1389 இல் ஹங்கேரிக்கும் துருக்கிக்கும் இடையே போர் மூண் டது. 16 ஆம் நூற்றாண் டில் ஹாப்ஸ்பர்க் ஆட்சியை ஏற்றுக் கொண்ட ஹங்கேரி நாடு துருக்கியால் சிறுமைப் படுத் தப்படுவதைத் தவிர்த்துக் கொண்டது. ஆஸ்திரிய - ஹங்கேரி இரட்டை முடியாட்சி 1867 இல் உருவானது.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மனியுடன் ஹங்கேரி சேர்ந்து கொண்டது. 1941 இல் இரு நாடு களும் ரஷியாவைத் தாக்கின. 1945 இல் ரஷி யப் படைகள் ஹங்கேரி யிலிருந்து ஜெர்மன் படையைத் துரத்தி அடித்தன. 1946 இல் ஹங்கேரி நாடாளுமன்றம் முடியாட்சியை ஒழித்து, குடியரசை நிறுவியது - 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதன் பின் ஒரே கட்சி நாடாகியது. சோவியத் யூனியன் பாணியில் ஆட்சி நடந்தது.
1989 இல் ஹங்கேரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தாமாகவே முன்வந்து ஒரு கட்சி முறையை ஒழித்து, பல கட்சி அர சாக ஆக்கினர். 1999 இல் ஹங்கேரி நாட்டோ அமைப்பில் உறுப்பின ரானது. 2004 இல் அய்ரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடானது.
93 ஆயிரத்து 30சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் ஒரு கோடிப் பேர் வாழ்கின்றனர். இவர் களில் 15 விழுக்காட்டினர் மதமற்ற மக்கள். மீதிப் பேர் கிறித்துவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஹங்கேரி மொழி பேசும் மக்கள் அனை வருமே கல்வியறிவு பெற்றவர்கள். 9 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள். 7 விழுக்காட்டினர் வேலை கிட்டாதவர்கள்.
நாட்டின் தலைவராக அதிபரும் ஆட்சித் தலைவராக பிரதமரும் உள்ளனர்.
அய்ஸ்லாந்து
அயர்லாந்து நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த மத குருக்கள்தான் அய்ஸ்லாந்தில் கால் வைத்த முதல் குடிகள். இது நடந்தது 9 ஆம் நூற்றாண்டில்தான். 930 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டு ஜனநாயக ஆட்சி முறை ஏற்பட்டது. உலகின் முதல் ஜனநாயக நாடு எனும் பெருமையை அய்ஸ்லாந்து பெறுகிறது. அந்நாட்டுச் சட்ட மன்றம்தான் உலகிலேயே பழமையானது. அதன் பெயர் அல்திங். (ஹடவாபே) 930 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
1000 ஆம் ஆண்டில் நாடே கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டது. 1262 இல் நார்வேயின் ஆட்சியின் கீழ் வந்தது. பிறகு டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 1397 இல் ஏற்பட்ட கல்மார் ஒன்றியமானது நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ராஜ்யங்களை ஒன்றிணைத்தது. ஒரே மன்னர் இம்மூன்று நாடுகளையும் ஆண்டார். அந்நிலை 1523 வரை நீடித்தது.
1402, 1494 ஆகிய ஆண்டு களில் அய்ஸ்லாந்து பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட் டது. நோய்க்கு மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இறந்து போயினர். 1602 ஆம் ஆண்டில் டென்மார்க் நாடு அய்ஸ்லாந்தின் வர்த்தகம் முழுவதையும் தன்கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது. அந்த நிலை 200 ஆண்டுகளுக்கு நீடித்தது.
1904இல் அய்ஸ்லாந்து சுயாட்சி அடைந்தது. 1918 இல் டென்மார்க் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் முழு தனியாட்சி பெற்றது. அயலுறவு விவகாரங்களை மட்டும் டேனிஷ் மன்னர் கவனிப்பார் என்பது நிபந்தனை.
1944இல் நடைபெற்ற பொது வாக்கெடுப்பின் முடிவுப்படி அய்ஸ்லாந்து குடியரசு நாடானது. அந்நாள் 17-6-1944.
பிரிட்டன் நாட்டுக்கு வடமேற்கே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பு ஒரு லட்சத்து 3 ஆயிரம் சதுர கி.மீ. மலைகளும், பனி படர்ந்த மலைகளும் நிறைந்த நாடு. இதன் மக்கள் தொகை 3 லட்சம் ஆகும். கிறித்துவத்தின் பல்வகைப் பிரிவுகளையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கென்று தனி மொழி அய்ஸ்லான்டிக் எனப்படுகிறது. அது தவிர இங்கிலீசு, ஜெர்மன் மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர்.
இந்தோனேசியா
இந்தோனேஷியாவில் முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் இந்து மதம் பரவியிருந்த அடை யாளங்கள் தென்படுகின்றன. 13 ஆம் நூற்றாண்டில் முசுலிம்கள் வந்துள்ளனர். 16 ஆம் நூற் றாண்டில் போர்த்துகீசியர்கள் வந்தனர். பின்னர் அவர்களைத் துரத்திய டச்சுக்காரர்கள் 1595இல் வந்தனர். ஜாவா தீவில் துறைமுகங்களை அமைத்தனர். மசாலாப் பொருள்களின் வணிகத்தில் இறங்கினர்.
1811இல் பிரெஞ்சுக்காரர் களிடம் டச்சுக்காரர்கள் தோல்வியடைந்த நிலையில் இந் தோனேஷியத் தீவுகளை பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்டனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1816 இல் அவர்களிடமே திருப்பித் தந்து விட்டனர். 1922 இல் இந்தோனேஷியா, டச்சு நாட்டின் ஒரு பகுதியாக்கப்பட்டது. டச்சு கிழக்கு இந்தியா எனப் பெயரிடப் பட்டு நெதர்லாண்டு நாட்டின் பகுதியாக்கப் பட்டது.
இந்த நாட்டின் பெரு மளவிலான பெட் ரோல் வளத்தைச் சுரண்டும் நோக்கில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் இந்தோனேஷியாவைக் கைப்பற்றியது. உலகப் போர் முடிந்ததும் இந்தோனேஷிய நாடு விடுதலையைப் பிரகடனப்படுத்தியது. சுகர்ணோ, முகம்மது ஹட்டா போன்ற தலைவர்கள் வழிநடத்தினர்.
1965 செப்டம்பரில் ராணுவப் புரட்சி ஒன்றில் 6 தளபதிகள் சிறைப் பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சுகர்ணோ வுக்குத் தொடர்பு இருந்தது. 11-3-1966 இல் சுகர்ணோ அவசர நிலை அதிகாரங்களைத் தளபதி சுகர்தோ என்பவருக்கு அளித்தார். அவரே இந்தோனேஷியாவின் அதிபர் ஆனார்.
1997இல் ஆசியாவில் ஏற்பட்ட பொருளா தார நெருக்கடில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேஷியா ஆனது. இதன் விளைவாக அரசியல் நெருக்கடிகளும் உருவாகின. அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடித்துக் கிளம்பின. இறுதியில், சுகர்ணோ பதவியை விட்டு இறங்கவும் துணை அதிபர் பஷாருடின் ஜூசுப் ஹபிபி என்பாரிடம் பதவியைத் தரவுமான நிலை ஏற்பட்டு விட்டது.
1999இல் சுதந்திர மான முதல் தேர்தல் நாடாளுமன்றத்திற்கு நடந்தது. அப்துல் ரஹ்மான் வாஹித் என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லோரும் எதிர்பார்த்த சுகர்ணோவின் மகள் மேகவதி சுகர்ணோ புத்ரி தோற்றுப் போனது பெரும் அதிர்ச்சியை அளித்தது. அந்த ஆண்டில் மலுக்குப் பகுதியிலும் வேறு பல பகுதிகளிலும் இனக் கலவரங்கள் வெடித்தன. அதே கால கட்டத்தில் கிழக்கு டிமோர் பகுதியில் அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடத் தப்பட்ட பொது வாக்கெடுப்பின்படி கிழக்கு டிமோர் விடுதலைக்குப் பெரும் ஆதரவு கிட்டி யது. பிரிவினைக்கு எதி ரான ராணுவம் பெரும் வன்முறை வெறியாட் டத்தில் இறங்கியது.
2001 ஜூலை மாதத் தில் அதிபர் வாஹிதைப் பதவியிலிருந்து நீக்கிய நாடாளுமன்றம், மேகவதி சுகர்ணோ புத்ரியைப் புதிய அதிபராக நியமித்தது. பின்னர் 2004 அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சுகிலோ யுதோயோவா என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏராளமான தீவுகளைக் கொண்ட இந்தோனேஷியா 19 லட் சத்து 19ஆயிரத்து 440 சதுர கி.மீ. பரப்புள்ளது. மக்கள் தொகை 25 கோடி. 88 விழுக்காட்டினர் முசுலிம்கள். இரு கிறித்துவப் பிரிவிலும் 8 விழுக்காடு. இந்து மதத்தினர் 2 விழுக்காடு. பவுத்தர்கள் ஒரு விழுக் காடு.
இந்தோனேஷியப் பாஷைதான் ஆட்சி மொழி. பெரும்பான்மையான மக்கள் ஜாவானிஸ் மொழி பேசுகின்றனர். 88 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள்.
17 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 11 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.
---------------------"விடுதலை" 21-6-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
போராட்டங்களும் வெடித்துக் கிளம்பின. இறுதியில், சுகர்ணோ பதவியை விட்டு இறங்கவும் /
அது சுகார்த்தோ நண்பரே.
***
சுகிலோ யுதோயோவா //
சுசீலோ பம்பாங் யுடேயோனோ.
மற்றபடி உங்கள் பதிவு அருமை...
தொடருங்கள் உங்கள் பணியை.
பல நாடுகளின் வரலாற்றை அறிந்து கொள்ள இத் தொடர் பேருதவியாக இருக்கிறது
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதிபாலா
நல்ல முயற்றி தொடருங்கள். உங்கள் தொடரினை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இன்னும் கூடுதல் தகவல்களோடு எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
யாரோ
கட்டுரையில் சில முக்கிய விசியங்கள் இல்லை.
ஹங்கேரியில் 1945க்க்கு பின் ரஸ்ஸியாவல் கம்யூனிச ஆட்சி திணிக்கப்பட்டது. மக்கள் புரட்ச்சி செய்து உருவாக்கவில்லை. மக்கள் ஆதரவும் பெருவாரியாக இல்லை. ராணுவத்திம் மிருக பலம் கொண்டு அது நிறுவப்பட்டது. அதன் எதிர்விளைவாக 1956இல் ஒரு பெரும் போராட்டம் வெடித்தது.
அதை எதிர் புரட்சி என்று கம்யூனிஸ்டுகள் வர்ணிப்பர். ஆனால்
உண்மையில் அதுவே மக்களின் எழுச்சி ; சர்வாதிகாரத்தையும்,
ரஸ்ஸிய ஆக்கிரமப்பையும் எதிர்த்த சுதந்திர தாகத்தின் வெளிப்பாடு அது.
மேலும் விவரங்களுக்கு பார்க்க :
http://en.wikipedia.org/wiki/People%27s_Republic_of_Hungary#History
Post a Comment