Search This Blog
26.6.09
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து சரியான நடவடிக்கையா?
பத்தாம்வகுப்புதேர்வுரத்து: நாடுமுழுவதும்ஒரேகல்வித்திட்டம்?
மத்திய அரசின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும்
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அதிரடியாக மேற்கொள்ளத் துடிக்கும் கல்வி சம்பந்தமான மாற்றங்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர் கள் அறிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வி போர்டு, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு ரத்து பற்றியும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதன் அவசியம் குறித்தும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:-
மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை கல்வி அமைச்சராகப் பொறுப்-பேற்றுள்ள திரு. கபில்சிபல் அவர்கள், கல்வித் துறையில் உடனடியாக 100 நாள் வேகத்திட்டத்தின்கீழ், பல தடாலடி மாற்றங்களைச் செய்ய எண்ணுவதாகத் தெரிகிறது. அவரது நல்லெண்ணம், செயல்வேகம் நமக்குப் புரிந்தாலும், அதிவேக ஆர்வம் தொடக்கத்தில் அவர் தனது துறையின் பற்பல பணிகளை ஆய்வு செய்யவே பல மாதங்கள் பிடிக்கும் என்ற நிலையில், அடிப்படை மாற்றங்களில் அவசரப்பட்டு ஈடுபட்டுக் கருத்துத் தெரிவித்திருப்பது, பல்வேறு புதுப் பிரச்சினைகளை, மத்திய ஆட்சிக்கு ஏற்படுத்தும்.
குறைந்தபட்சம் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி செல்லவேண்டிய குழந்தைகள், சிறார்கள் ஆரம்பக் கல்வியைப் பெறுவதே 1960 இல் முடிந்திருக்க வேண்டியது, 2010 இல் கூட முடியுமோ என்ற நிலைக்கு வந்துள்ளது! அதனால்தான் கொஞ்ச காலத்திற்குமுன்தான் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம் என்ற சட்டத்தை இதே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியது.
அதன் செயல்பாடு எந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் சென்று, எதிர்பார்த்த விளைவுகளை உருவாக்கியுள்ளதா இல்லையா என்பதை ஆராய்வது அவசர அவசியமாகும்!
இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வியா?
இந்தியா முழுவதற்கும் ஒரே கல்வி போர்டு, எஸ்.எஸ்.எல்.சி. என்ற பத்தாம் வகுப்புத் தேர்வு கட்டாயமல்ல; விரும்பியவர்கள் எழுதலாம்; விரும்பாதவர்கள் எழுதாமல் வெறும் கிரேடு வாங்கலாம் என்றெல்லாம் மத்திய அமைச்சர் கூறியதாக வரும் செய்திகள் பலவகை குழப்பத்திற்கு இடம் தந்துள்ளது.
கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் அரசியல் சட்டத்தில் 1975 வரை இருந்தது. ஆனால், நெருக்கடி காலத்தில் 1976 இல் மாநிலங்கள் எதையும் கலந்து ஆலோசிக்காமலேயே, அதைப் பொதுப் பட்டியலில் கொண்டுபோய் வைத்தது அன்றைய மத்திய (இந்திரா காந்தி) அரசு.
இந்திய யூனியன் என்பது பல மாநிலங்களின் கூட்டு அமைப்பு; பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல பகுதிகள், பன்மொழிகள் என்றுள்ள நிலையில், தாய்வழிக் கல்வி போன்று பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், அரசியல் சட்ட வரைவாளர்கள் கல்வியை மாநிலப் பட்டியலிலேயே வைத்தனர்; அது பரந்துபட்ட நாட்டின் பல்வேறு பண்பாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் கல்வி அமையவேண்டும் என்பதற்காகவே!
கல்வி - மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்
பொதுப் பட்டியலுக்கு 1976 இல் கொண்டு சென்ற கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை பல மாநிலங்கள் வைக்கும் நிலையில்,
பத்தாம் வகுப்புத் தேர்வு ஒழிக்கப்பட்டு 12 ஆம் வகுப்பில்தான் தேர்வு; நாடு முழுவதும் ஒரே போர்டு; மாநிலங்களில் தற்போதுள்ள போர்டுகள் ஒழிக்கப்பட்டு ஒரே சீர்மை கொண்டுவர யோசிக்கப்படுகிறது என்பது மிகவும் ஆபத்தான மாநில அதிகாரப் பறிப்பு போன்ற யோசனையாகும்.
இதைப் புரிந்துதான் உடனடியாக கேரளா, மேற்குவங்க முதல்வர்கள் இதனை எதிர்த்துள்ளனர். மறைமுகமாக பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை யூனியன் (மத்திய அரசு) பட்டியலுக்கே நகர்த்திக் கொண்டும் செல்லும்அடிப்படையை தகர்க்கும் முயற்சியேயாகும்.
பத்தாம் வகுப்பு அரசு தேர்வை நீக்கினால் ஏற்படும் இடையூறுகள்
மிசோராம் போன்ற மாநிலங்களில் தாய்மொழிபோல அவர்கள் கல்விக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். உ.பி., மற்றும் இந்தி பேசும் மத்திய மாநிலங்களில் பெரிதும் இந்தி வழிக் கல்வியே சொல்லித் தரப்பட்டு, ஆங்கிலத்திற்குக் கடைசி இடம்தான் என்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது!
அத்தோடு, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்றால்தான், இன்றைக்கு மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள். தேர்வில்லை என்றால், அவர்கள் அதிகக்கவனம் செலுத்தவேண்டிய வாய்ப்பே குறைந்துவிடும்.
மேலும் பாலிடெக்னிக்குகள், அய்.டி.அய். படிப்பில் சேர, குறைந்தபட்ச தகுதி, 10 ஆம் வகுப்பு என்று வைத்துள்ளதையே மாற்றிடவேண்டியிருக்கும்.
பெரும்பாலான கிராம மக்கள் இந்தத் தொழிற்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் பாதிக்கப்படக் கூடும். பொதுத்தேர்வு இல்லாவிட்டால், எதை அடிப்படையாகக் கொண்டு பாலிடெக்னிக்குகளில், அய்.டி.அய்.,க்களில் மாணவர்களைச் சேர்ப்பது?
எனவே, அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்காமல், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்காமல், தேவையான மாற்றங்களை மத்தியக் கல்வி அமைச்சர் அவர்கள் செய்யட்டும்; அதை நாம் வரவேற்கக் காத்திருக்கிறோம்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்குக் கதவைத் திறப்பதா?
அதுபோலவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இங்கே கதவு திறந்துவிடுவதும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் ஆழமாக யோசிக்கவேண்டும்!
ஏதோ வசதி படைத்த சிலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்பது வெகுக்குறைந்த சதவிகிதமேயாகும்!
அதனைக் காரணமாக்கி, அந்தப் பல்கலைக்கழகங்களையே இங்கே கொண்டு வரலாம் என்பது உலக மயம், தாராளமயம், தனியார் மயம் என்ற கொள்கையின் நீட்டிப்பே ஆகும்!
அப்பல்கலைக்கழகங்கள் நமது மனித வள மேம்பாட்டுக் கட்டுத் திட்டங்களுக்குக் உட்படுமா? என்பது அடுத்த கேள்வி.
இப்படி பலப்பல சிக்கல்கள் உண்டு. எனவே, இச்சீர்திருத்தங்களில் உடனடியாக இறங்காமல் மாநில கல்வி அமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டி விவாதித்து, அதற்குப் பிறகு கொள்கை முடிவுகளை அறிவித்தலே சிறப்பானதாக இருக்கும்.
எனவே, இதில் அவசரம் காட்டுவது விரும்பத்தக்கதாகாது.
------------------"விடுதலை" 26-6-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Dear Mr Black shirt swine Oviya,
This son of a bitch Veeramani doesn't have enough IQ to advise anyone on any subject.Infact he doesnt have even 2% of kapil Sibals IQ.Why does this son of a bitch masquerade as a know all and advise anyone and evryone.Typical black shirts arrogance and swine like behaviour.
Kapil Sibal has 2% of what veeramani's IQ. You cross belts, shut your mouth or use brain to answer the questions raised by Veeramani.
"மேலும் பாலிடெக்னிக்குகள், அய்.டி.அய். படிப்பில் சேர, குறைந்தபட்ச தகுதி, 10 ஆம் வகுப்பு என்று வைத்துள்ளதையே மாற்றிடவேண்டியிருக்கும்."
இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். இந்த மாதிரி முடிவு எடுக்கும் போது கொஞ்சம் பொறுமையா ஆலோசித்து எடுப்பது நல்லது தான்.
ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்கும் மனநிலையையும் பக்குவத்தையையும் 15 வயது சிறுவர்கள் அடைகிறார்களா என்பது தான் பிரச்சினையே ! இந்த சிறு வயதில், பொதுத் தேர்வுகள் தேவையானதா என்று கேள்வியும் எழுகிறது. அதுமட்டுமல்ல, கிட்ட தட்ட 30-40 % மாணவர்கள் தேர்வில் தோல்வியுறும் போது, அவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் மறு தேர்வு எழுதி மேலே படிக்கிறார்கள்.
எத்தனை சதவிகிதம் பேர், படிப்பதை விட வேலை செய்வது மேல் என படிப்பை கை விடுகின்றனர்.
ஆனால், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி பொதுத்தேர்வு என்பது நல்ல முடிவு தான். அனைத்து மாணவர்களையும் ஒரே அளவுகோளை வைத்து மேற்படிப்பிற்கோ, வேலைக்கோ தேர்ந்தெடுக்கு உதவியாக இருக்கும்.
நல்லதும் இருக்கும், கொஞ்சம் சிக்கலும் இருக்கு !
Post a Comment