Search This Blog
20.6.09
கடவுள் மத புராண சாத்திர இதிகாசம் என்பவைகளை உதறித்தள்ளுங்கள்!
சமுதாய இழிவு நீங்க...
ஜாதி முறைகள் என்பவையெல்லாம் மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமே தான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் - மத சாத்திரங்களுக்கும் மதத்திற்கும், வேதாந்தமும் தத்துவார்த்தமும் சொல்லி இவற்றை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளையாக ஆவதற்கு முயற்சிப்பார்கள்.
இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதை அடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால், உங்களுக்கு முதலாவதாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய நிலையை சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டுமென்று உண்மையாய் ஆசைப்படுவீர்களேயானால் மதம் என்பதையும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாத்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளிவாருங்கள்.
நீங்கள் அதைச் செய்யவில்லையானால், இனியும் ஓராயிரம் ஆண்டிற்குக் கூட நீங்கள் எப்படிப்பட்ட மாநாடுகளும், சங்கங்களும், பிரசாரங்களும், கிளர்ச்சிகளும் நடத்தினாலும், எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும், பொருளாதார முன்னேற்றமும், பட்டம் பதவிகளும் பெற்றாலும், உங்கள் சமுதாயத்திலுள்ள இழிவு நீங்கப் போவதில்லை! இது உறுதி! உறுதி!
------------- தந்தைபெரியார் - "இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை" என்ற நூலிலிருந்து
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.
அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.
இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார்.
முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.
உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்...
மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!
மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!
மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!
மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!
என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.
நான் சொன்னேன்..."சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!" என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்த அவர் "அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்" என்று கேட்டார்.
நான் சொன்னேன் "சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது" என்றேன்.
மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.
கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
கண்ணமிரண்டும் கருனைவேல் காக்க!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க! .
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?
கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.
அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!
mm...very interesting...Heyraam!
The whiteman did not add a god's name in his repetitions; he just said my nose is relaxed etc. You add a god's name.
Why did your forefathers want a god's name in the relaxation technique? And, after adding that, do you concentrate on your body parts or on the god?
If the whiteman finds its possible to throw off the god, and still gets success in relaxation techniques, what is wrong with that? And, why not adopt that?
Why did not your forefathers think like that? And, why do you prefer that forefather's relaxation technique; and want others to adopt the same?
My point is: when there is a simple technique, why go for meaningless words?
In your technique, the vel is a meaningless word. Agree or not?
கந்த சஷ்டிய உம் சங்கரச்சரிய படிக்க சொல்லு ...அப்படியாவது எந்த பொம்மனாட்டி கையயாவுது புடிச்ச இழுக்க இருகுறானான்னு பாப்போம் .முதல்ல நல்லா புத்தி கொடுக்க வேண்டியது ரெண்டு சங்கராச்சரிகளுக்கும் தான்.நீ இங்க கேட்ட கேள்வியை எல்லாம் உங்கள் சங்கராச்சாரியை பார்த்து கேட்கவேண்டியவை
ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிட தோழா ! உனக்கு வேண்டாம் அதனிடம் பாசம் .உன் வாழ்வை அழித்திடும் அந்த காசம்
//கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
கண்ணமிரண்டும் கருனைவேல் காக்க!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க! .
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது.//
பிட்டம் இரண்டையும் பெருவேல் காக்க என்ற வரியை ஏன் விட்டுவிட்டீர் அய்யோராம்.
ஆமாம் பிட்டத்தை காக்கும் பெருவேல் எது?
Post a Comment