Search This Blog

14.6.09

மாடு மேய்க்கப் போகவேண்டியதுதானே, உங்களுக்கெல்லாம் படிப்பு எங்கேயிருந்து வரும்?


கல்வி நீரோடையில் பார்ப்பன முதலைகளைப் பாரீர்!

1936 இல் விடுதலையில் வெளியிடப்பட்ட (6.5.1936) பட்டியலைப் பார்த்தால் நூற்றுக்கு 97 பேராக உள்ள பார்ப்பனர் அல்லாதார் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களின் நுகத்தடியின் கீழ் நசுங்கிச் செத்துள்ளனர் என்பதை அறியலாம்.

மாடு மேய்க்கப் போகவேண்டியதுதானே, உங்களுக்கெல்லாம் படிப்பு எங்கேயிருந்து வரும்? என்று பள்ளி கூடத்திலே பார்ப்பன ஆசிரியர்கள் கேட்பார்களாம். ஏன் கேட்கமாட்டார்கள்? கல்வி நீரோடையில் பார்ப்பன முதலைகளே ஆசிரியர்களாக இருந்தால் அப்படித்தானே கேட்பார்கள்.

1936 ஆம் ஆண்டையும் 2009 ஆம் ஆண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தந்தைபெரியாரின் தொண்டும் திராவிடர் கழகத்தின் பணியும் எத்தகையது என்பது விளங்கும்.

------------------------------------------------------------------------------
தஞ்சை ஜில்லா உயர்தரப் பள்ளிக்கூடங்கள் முற்றிலும் பார்ப்பனர் மயம்
(இக்கட்டுரை தஞ்சை ஜில்லா செகண்டரி எஜூகேஷன் போர்டு எலக்ஷன் லிஸ்டை வைத்துக்கொண்டு எழுதப்பட்டது).
(தோழர் கணபதி)

தஞ்சை ஜில்லாவிலுள்ள பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், அதில் தமிழர் இத்துணையர், பார்ப்பனர் இத்துணையர் என்ற புள்ளி விபரங்களைக் குறிப்பிட்டிருக்கின்றேன். இதைக் கொண்டு பார்ப்பனர் - தென்னாட்டுக் காங்கிரஸ்காரர்கள் ஏன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்க பெரிதும் பாடுபடுகின்றார்கள் என்பதை தோழர்கள் உணரவே இதை எழுதலானேன்.

பள்ளிக்கூடங்கள் தலைமைஆசிரியர்- மொத்தஆசிரியர்கள் - பார்ப்பனர் -தமிழர்


1. போர்டு உயர்தரப்பள்ளி அய்யம்பேட்டை பார்ப்பனர் 15 10 5
2. ஒரத்தநாடு தமிழர் 15 3 12
3. பாபநாசம் பார்ப்பனர் 14 8 6
4. குடவாசல் தமிழர் 26 13 13
5. குற்றாலம் தமிழர் 23 14 9
6. நன்னிலம் பார்ப்பனர் 22 19 3
7. திருவாரூர் பார்ப்பனர் 34 20 14
8. திருத்துறைப்பூண்டி தமிழர் 22 15 7
9. பட்டுக்கோட்டை தமிழர் 23 16 7
10. மத்தியதரப் பள்ளி இராசாமடம் பார்ப்பனர் 11 7 4
11. மத்தியதரப் பள்ளி முத்துப்பேட்டை பார்ப்பனர் 6 4 2
12. மத்திய தரப் பள்ளி கூத்தாநல்லூர் தமிழர் 11 4 7
13. முனிசிபல் உயர்தரப்பள்ளி, மாயவரம் பார்ப்பனர் 34 30 4
14. முனிசிபல் மத்தியதரப்பள்ளி, கொரநாடு பார்ப்பனர் 7 7 -
15. கல்யாணசுந்தரம் உயர்தரப்பள்ளி, தஞ்சாவூர் பார்ப்பனர் 39 31 8
16. செண்ட் பிட்டர்ஸ் உயர்தரப்பள்ளி, தஞ்சாவூர் பார்ப்பனர் 39 31 8
17. உயர்தரப்பள்ளி, திருவையாறு பார்ப்பனர் 15 13 2
18. சிவசாமி அய்யர் உயர்தரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி பார்ப்பனர் 16 15 1
19. டவுன் ஹைஸ்கூல், கும்பகோணம் பார்ப்பனர் 33 30 3
20. வாணாதுறை ஹைஸ்கூல், கும்பகோணம் பார்ப்பனர் 11 10 1
21. நேஷனல் ஹைஸ்கூல், கும்பகோணம் பார்ப்பனர் 11 11 -
22. லூதர் மிஷன் ஹைஸ்கூல், கும்பகோணம் தமிழர் 8 7 1
23. லூதர் மிஷன் ஹைஸ்கூல், கும்பகோணம் தமிழர் 15 2 13
24. சபாபதி முதலியார் ஹைஸ்கூல், சீயாழி பார்ப்பனர் 15 12 3
25. நேஷனல் ஹைஸ்கூல், நாகப்பட்டினம் பார்ப்பனர் 46 41 5
26. மிஷன் ஹைஸ்கூல், நாகபட்டினம் தமிழர் 17 8 9
27. நேஷனல் ஹைஸ்கூல், மன்னார்குடி பார்ப்பனர் 21 21 -
28. பிண்லே ஹைஸ்கூல், மன்னார்குடி தமிழர் 21 12 9
29. நாடார் ஹைஸ்கூல், பொறையார் பார்ப்பனர் 14 8 6
30. எ.வி. மிடில் ஸ்கூல், கோமல் பார்ப்பனர் 6 6 -
31. நேஷனல் செகண்டரி ஸ்கூல், மாயவரம் பார்ப்பனர் 5 5 -
32. ஆதீனம் ஹைஸ்கூல், திருவாடுதுறை பார்ப்பனர் 11 9 2
33. செண்ட் அந்தோணி ஹைஸ்கூல், தஞ்சை தமிழர் 16 7 9
34. வீரராகவ செகண்டரி ஸ்கூல், தஞ்சை தமிழர் 10 9 1
35. மத்தியதரப்பள்ளி, உமையாள்புரம் பார்ப்பனர் 8 7 1
36. ஜார்ஜ் மிடில் ஸ்கூல், விஷ்ணுபுரம் பார்ப்பனர் 5 4 1 ஆகக்கூடுதல் 632 449 183


ஆக மொத்தப் பள்ளிக்கூடங்கள் 36. இதில் ஜில்லா போர்டு முனிசிபல் பள்ளிக்கூடங்கள் 15; மானேஜ்மெண்ட் பள்ளிக்கூடங்கள் 22. ஆசிரியர்கள் தொகை 632. பார்ப்பனர் 449. தமிழர் 183 பேர்களே! இதில் ஜில்லா போர்டு, முனிசிபல் பள்ளிக்கூடங்களிலுள்ள ஆசிரியர் 253 பேர்களில் 93 பேர்களே தமிழர்கள். ஆனால், மீதி 160 பேர்கள் பார்ப்பனர்கள். என்னே! நம் நிலைமை!! நூற்றுக்கு மூன்று பேர்கள்தான் பார்ப்பனர்கள். ஆனால், தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நாம் 97 பேர்கள் இருக்கின்றோம். இருந்தும் என் செய்வது? உத்தியோகங்களில் - அதிலும் உலக முன்னேற்றத்திற்கு முன்னணியில் நிற்கும் வாலிபர் - மாணவர் உலகத்தை இவர்கள் (பார்ப் பனர்கள்) கையிலா கொடுப்பது? இவர்களாயிருப்பது? இப்பார்ப்பனர்கள், அடிமைப் புத்தியுடையவர்களாகவும், புத்தகப் பூச்சிகளாகவுமல்லவோ மாணவர்களை ஆக்குவார்கள்!!! ஆக்குகின்றார்கள்!!!!

இவை கிடக்க, மானேஜ்மெண்ட் பள்ளிக்கூடங்களை நினைத்தாலோ வயிறு எரிகின்றது. அவைகளிலுள்ள ஆசிரியர்கள் 379. பார்ப்பனர் 289. தமிழர்கள் 90 பேர்கள்தான்! முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்கள். கால்வாசிப்பேர்கள் தானா தமிழர்கள்? இதிலும் நான்கு பள்ளிக்கூடங்களில் தமிழர்களே கிடையாது. அப்படியிருப்பினும், தமிழ்ப் பண்டிதர், கீழ் வகுப்பு ஆசிரியர்கள் (எல் டி. அல்லாதவர்கள்) இவர்கள்தான் தமிழர்களா யிருக்கின்றனர். பல பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பண்டிதர்கள்கூட பார்ப் பனர்களே!! இந்த மானேஜ்மெண்ட் பள்ளிக்கூடங்களிலுள்ள ஆசிரியர்கள் - ஏன் தமிழர்கள் நிலை, மாணவர்கள் நிலை சொல்லத்தரமன்று.

இனி, இப்பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் 36. இதில் தமிழர்கள் 12 பேர்களே. மீதி 24 பேர்களும் பார்ப்பனர்கள். இதில் மானெஜ் மேண்ட் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்கள் அத்தனை பேரும் (லூதர் மிஷன், கிறிஸ்டியன் பள்ளிக்கூடங்கள் தவிர) பார்ப்பனர்களே. இதில் தமிழர்களால் நடத்தப்படும் பள்ளிகள் பலவிருந்தும் ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர்கள் பார்ப்பனர்களே! இதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!! இருப்பினும் இப்புள்ளி விவரங்களை வெளியிட்டால், இதைப் பார்த்தேனும் நம் நீதிக்கட்சித் தலைவர்கள் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்வார்கள்; நம் தமிழர்களும் உணர்ந்து ஆவன செய்வார்கள் என்னும் துணிவு பற்றியே இதை எழுதலானேன்.

---------------------நன்றி;-"விடுதலை" 13-6-2009

3 comments:

hayyram said...

பார்பனர்கள் தலைமையாசிரியர்களாக இருக்கும் போதும், பார்ப்பன ஆசிரியர்களே பள்ளிகளில் நிறைந்திருந்த அந்த கலகட்டத்தில் , பள்ளிக்கூடங்களில் மாணவர்களைக் கொன்று தண்ணீர் தொட்டியில் போட்ட சம்பவம் உண்டா? மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்களா? மாணவர்கள் ஆசிரியர்களால் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தப்பட்ட சம்பவங்கள் உண்டா? சும்மா குருட்டுத்தனமாக பார்ப்பன எதிர்ப்பு பேசாதீர்கள் சாடிஸ்ட்களே? பள்ளிக்கூடங்களும், கல்வி சொல்லிக்கொடுக்கும் விதமும் உங்கள் சாதியினரை விட பார்ப்பனர்கள் மேலாகவெ செய்து வந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
www.hayyram.blogspot.com

Anonymous said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Thamizhan said...

அறிஞர் அண்ணா அவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே பொருளாதாரம் படிக்க எடுத்த போது அவரது பேராசியர் "டேய்! நோக்கெல்லாம் இது வராதுடா,வேறு ஏதாவது பாடம் படி" என்றாராம்.
அண்ணா பல்கலைக்கழகத்திலே முதலாவதாகத் தங்கப் பதக்கம் பெற்றாராம்.
அன்றும் இன்றும் பல நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் எண்ணிக்கை விழுக்காடும் அதே போல் தான் இருக்கும்.
ஆகவே பார்ப்பன ஆசிரியர்கள் அனைவரும் நன்னா சமத்து என்று
சொல்வது மடமை.
நல்ல ஆசிரியர்கட்கு என்றும் மரியாதை உண்டு.
அண்ணா போன்றோர் ஆசிரியர்களுக்கு அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும் நல்ல மரியாதை கொடுத்தார்கள்.