Search This Blog

7.12.09

தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பா?


‘சிதம்பரம்’

சிதம்பரம் நடராஜன் கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுஉள்ளது.

2009 பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் அதுவரை தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்த இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்வந்துவிட்டது.

உண்டியல், பிரசாதக் கடை வருமானம் எல்லாம் இனி இந்து அறநிலையத் துறைக்குத்தான்.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தங்கள் பெயர்களை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்கிற அறிவிப்பு, தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக ‘தினமலர்’ (7.12.2009) கூறுகிறது.

இதில் பரபரப்புக்கு என்ன வேலை என்று நினைக்கலாம். இருக்கிறது, நிறையவே இருக்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டு திருவரங்கம் ரெங்கநாதன் கோயில். இக்கோயிலில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதாகப் பட்டியலில் உள்ள பல பார்ப்பனர்கள் இந்தியாவிலேயே இல்லை; அமெரிக்காவில் இருக்கின்றனர். இன்னும் சில பார்ப்பனர்கள் திருவெறும்பூர் ‘பெல்’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். கோயில் பக்கம் தலைவைத்துப் படுக்காத இந்த அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மாத சம்பளம் மட்டும் கறாராகக் கிடைத்துவிடும்.

குறிப்பிட்ட வயதுவரை தான் அர்ச்சகராகப் பணியாற்றவேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், 80 வயதைத் தாண்டியவர்கள்கூட சம்பளப் பட்டியலில் உள்ளனர்.

திருவரங்கம் கோயிலில் உதவி ஆணையராக வந்த கவிதா என்ற அம்மையார், இந்த முறைகேடுகளையெல்லாம் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக, கோயில் பார்ப்பனர்கள் அவருக்குக் கொடுத்த தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல!

கடவுளின் பக்கத்தில் இருந்துகொண்டு பூஜை செய்பவர்கள், கருவறையைக் காமக் களியாட்டத்துக்குப் பயன்படுத்துவதும், சம்பளம் பெற வேண்டும் என்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கொடுப்பதும், கோயில், பக்தி சமாச்சாரங்களின் மோசடிகளை விளக்கப் போதுமானவையல்லவா!

------------- மயிலாடன் அவர்கள் 7-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

1 comments:

மணிகண்டன் said...

***
திருவரங்கம் கோயிலில் உதவி ஆணையராக வந்த கவிதா என்ற அம்மையார், இந்த முறைகேடுகளையெல்லாம் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்தார்
***

இவங்க கோவிலை ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணினாங்க . பாராட்டுக்கள்.