Search This Blog

21.12.09

பேய் இல்லை, இல்லவே இல்லை சூடான விவாதம்


‘பேய்’

கலைஞர் தொலைக்காட்சிக்கு முதலில் ஒரு பாராட்டு! கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 10 மணிமுதல் 11 மணிவரை என்பது ரோஸ் நேரம்!

ஆவி, ‘பேய்’ இருக்கிறதா என்கிற சூடான விவாதம் சில வாரங்கள்!

பொதுமக்களும் மிக ஆர்வமாக பார்த்துச் சுவைத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த விவாதம் ஒரு திருப்பு முனையை எட்டியது. ‘பேய்’ இருப்பது உண்மையானால், அதை எங்கள்மீது ஏவிவிட உங்களால் முடியுமா என்று ‘பேய்’ நம்பிக்கையாளர்களைப் பார்த்து கேள்வி அணுகுண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டனர். ‘பேய்’ மூட நம்பிக்கை மறுப்பாளர்கள். ஒரு நிமிடம் எதிர்தரப்பினர் ஆடிப் போய் விட்டனர். தோழர் சுரேந்தர்தான் அந்தச் சவாலை விட்டவர்.

இதில் இன்னும் கூடுதல் திருப்பத்தை ஏற்படுத்தியவர் கழகத் தோழர் திருநாவுக்கரசு. ஒரு மாதத்திற்குள் அப்படியே ‘பேயை’ தோழர் சுரேந்தர்மீது ஏவிவிட்டு அவர் உடலுக்குக் கேட்டை உண்டாக்கி அதன்மூலம் ‘பேய்’ இருக்கிறது என்று நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கையெழுத்திட்டுக் காசோலையையும் அதே இடத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க முன்வந்தவர்!

இந்தச் சவாலை சசிகுமார் என்பவர் ஏற்று ஒரு மாதத்திற்குள் பேயை ஏவி காட்டுகிறேன் என்று சூளுரைத்தார்.

மிகமிக விறுவிறுப்பான கட்டத்திற்கு எகிறிக் குதித்தது இந்தப் பிரச்சினை.

ஒரு மாதம் ஓடிவிட்டது. என்ன ஆனார் தோழர் சுரேந்தர்? அவர் உடல்நலத்துடன் இருக்கிறாரா? ‘பேய்’ அவரைப் பிடித்திருக்குமா என்பது போன்ற பரபரப்பான எதிர்பார்ப்புகள்!

அந்த வகையில், நேற்று இரவு ரோஸ் நேரம் மிகமிக முக்கியமானது. அனைவரும் தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து வைத்து ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடந்தனர்.

சவால் விட்ட தோழர் சுரேந்தர் தம் துணைவியாருடன் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்தார்.

சவாலை ஏற்றுக்கொண்ட சசிகுமாரும் வந்தார் (அய்யப்ப பக்தர் கோலத்தில்). இரு தரப்பினரையும் தாராளமாகப் பேசவிட்டார் மேடம் ரோஸ்.

வேறு வழியின்றி தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம் என்றனர் ‘பேய்’ தரப்பினர்.

‘பேய்’ இல்லை, இல்லவே இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார் ஒருங்கிணைப்பாளர். ஆற்றல் வாய்ந்த ஒரு ஊடகத்தின் மூலம் ஒரு பெரிய மூட நம்பிக்கைக்கு மரண அடி கொடுத்த கலைஞர் தொலைக்காட்சிக்கும், ஒருங்கிணைப்பாளர் ரோஸ் மேடத்துக்கும், தோழர்கள் திருநாவுக்கரசு, சுரேந்தர் ஆகியோருக்கும் பகுத்தறிவாளர்கள் ஒரு-முறை கைதட்டிப் பாராட்டலாமே!

----------------- மயிலாடன் அவர்கள் 21-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

சிந்திப்பவன் said...

பேய் போட்டோ நீங்க இதுவரையில் பார்த்தது இல்லையா? கூகிள் படங்கள் மற்றும், YOU TUBE VIDEO பாருங்க.பேய் இருப்பது உண்மைன்னு தெரிய வரும்.பேய் விசயத்த கொஞ்சம் அடக்கி வாசிங்க .இன்னும் கொஞ்சம் வருசத்துல பேய் இருப்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்டுவிடும்.இப்பவே அமேரிக்கா போன்ற நாடுகளில் பேயை போட்டோ, வீடியோ எடுப்பது,மற்றும் மின்காந்த கதிர்களின் மூலம் பேயின் இருப்பிடங்களை கண்டறியும் அளவுக்கு முன்னேறி உள்ளனர்.இந்த பேய் விசயத்தில் உங்களுக்கு தோல்வி நிச்சயம்.

நம்பி said...

//Blogger SRIVI BLOG said...

பேய் போட்டோ நீங்க இதுவரையில் பார்த்தது இல்லையா? கூகிள் படங்கள் மற்றும், YOU TUBE VIDEO பாருங்க.பேய் இருப்பது உண்மைன்னு தெரிய வரும்.பேய் விசயத்த கொஞ்சம் அடக்கி வாசிங்க .இன்னும் கொஞ்சம் வருசத்துல பேய் இருப்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்டுவிடும்.இப்பவே அமேரிக்கா போன்ற நாடுகளில் பேயை போட்டோ, வீடியோ எடுப்பது,மற்றும் மின்காந்த கதிர்களின் மூலம் பேயின் இருப்பிடங்களை கண்டறியும் அளவுக்கு முன்னேறி உள்ளனர்.இந்த பேய் விசயத்தில் உங்களுக்கு தோல்வி நிச்சயம்.//

அப்படியே சிங்கம், புலிர கோழி, நாய்..... இவைகளின் பேய் போட்டோவையும் சேர்த்து போட சொல்லுங்க...அமீபாவோட ஆவியை கூட போட்டோ எடுத்து போடலாம்...ஏன் பாக்டீரியா...தாவரப் பேய் இருக்குதா அதையும் கண்டு பிடிங்க....

அது என்ன எப்ப பார்த்தாலும் மனிஷனோட ஆவியை மட்டும் எடுத்து போடறீங்க....சரி அப்படியே இருந்தாலும் ஏன்? பயப்படனும்...கூட கூட்டிட்டு போய் தண்ணி அடிங்க..டிபன் சாப்பிடுங்க.

சிங்கம் புலி ஆவிங்க வந்தா மட்டும் பயப்படுங்க போதும்..அப்பக்கூட அதற்கு பல்லு இருக்காது பயப்படத்தேவையில்லை...அது கர்ஜிப்பதை பார்த்து பயப்படலாம்.

அதுங்களும் வர்ணாசிரமம் பார்க்குதா? இல்லை நிறவெறி பார்க்குதா என்றும் பார்த்து தெளிவா போடச்சொல்லுங்க...இல்லை அங்கேயும் பார்ப்பன ஆவி இருக்குதா...அது பூணூல் ஏதாவது போட்டிருக்குதா என்று நல்லா தெளிவா படம் பிடிச்சு போடச்சொல்லுங்க..அங்கையும் அதுகள் மணியாட்டிட்டு இருக்குதா என்றும் முடிவாப்போடச்சொல்லுங்க....முதல்ல எல்லாம் டிரஸ் போட்டிருக்குதா, இல்ல அம்மணமா திரியுதா என்றும் பார்க்க சொல்லுங்க...

இங்கேயே இத்தனை பேய்களுடன் இருக்கும் பொழுது அந்த பேய் என்ன பெரிய பேயா...தொலைச்சுப்புடுவேன்...இல்லை அங்க வரும்பொழுது செமத்தியா கவனிப்பேன் என்றும் சொல்லுங்க..இதிலேயும் நாஈங்க தான் பர்ஸ்ட் என்பதனையும் சொல்லுங்க....முதல்ல எங்க தங்குதுங்க. கல்யாணம் பண்ணிக்குதுக்கங்களா...புள்ளை குட்டி ஏதாவது பெத்துக்குதுங்களா...என்பதையும் போடச்சொல்லுங்க....

எல்லார் முன்னாடியும் வந்தா தான் ஓட்டு இல்லையேன்றால் வேட்டு தான்.