Search This Blog

24.12.09

சிவனைப் பூஜிப்பதன் மூலம் கடன் தொல்லை நீங்குமா?


‘கடன்-சிவன்’

நாளிதழ்கள் வாரந்தோறும் ஆன்மிகச் சிறப்பு இதழ்களைப் போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன. பண்டிகைகள் வந்துவிட்டால் அவற்றின் பெயராலும் சிறப்பிதழ்கள் வந்துவிடும். புத்தாண்டு பிறக்கிறதா? உடனே “புத்தாண்டுப் பலன்கள்’’ என்ற தலைப்பில் தலைகாட்டும்.

இதில் என்ன வேடிக்கை என்றால், ஆங்கிலப் புத்தாண்டுக்கும்கூட இதுபோன்ற சிறப்பிதழ்கள்; ஆங்கிலப் புத்தாண்டுக்கும், இந்து மத ராசி பலன்களுக்கும் என்ன சம்பந்தம்?

சங்கராச்சாரியார்கள்கூட சொல்லிப் பார்த்தார்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்காக கோயில் நடையைத் திறக்காதீர்கள்; இரவில் இந்து மதக் கோயில்களைத் திறந்து வைப்பது, சாஸ்திர விரோதம் - ஆகம விரோதம் என்று அவர்கள் கத்திப் பார்த்து என்ன பிரயோசனம்?

கோயில் நடைகள் திறக்கப்பட்டன; பட்டர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் வருவாய்க் குவியல்; சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவார்களா, என்ன?

ஆன்மிக இதழில் கை சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுபவர்கள் சர்வ ஜாக்கிரதையாக சில வார்த்தைகளைப் பயன்படுத்து-வதைக் கவனிக்கவேண்டும்.

மக்கள் நம்பிக்கை; .... என்பது புராணம்; ..... என்பது அய்திகம்; .... என்பது புராணம் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக வார்த்தைகளைக் கையாளுவார்கள்.

இவர்கள் எழுதுவதை நம்பி பக்தர்கள் கடைபிடித்து காரியம் ஆகாவிட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே அல்லது ‘நீ வெளியிட்டதை நம்பித் தானே இந்தக் காரியத்தில் இறங்கினேன்; கடைசியில் காரியம் கெட்டுப் போய்விட்டதே’ என்று பக்தர்கள் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது? அதற்காகத்தான் இத்தகைய ஏமாற்று வார்த்தைகள்.

ஒரு மாலை ஏட்டின் புத்தாண்டு சிறப்பிதழில் ஒரு செய்தி:

கடன் வாங்கி திரும்பக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கென்றே தஞ்சை மாவட்டம் திருச்சேறையில் சாரபரமேஸ்வர் கோயில் உள்ளது. இவர் ரண ருண ஈஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ரணம் என்றால் நோய், ருணம் என்றால் கடன் என்று பொருள்.

இந்த சிவனைப் பூஜிப்பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இப்படியாக எழுதுகிறது அந்த இதழ்.

கடன் தொல்லை எப்படி நீங்கும்? கடன் கொடுத்தவன் கேட்கமாட்டானா? அல்லது கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த அவன் பீரோவுக்குள் நோட்டுக் கத்தைகளை கொண்டு வந்து சிவன் திணித்துவிட்டுப் போய்விடுவாரா? (சிவன், கள்ள நோட்டு அடிப்பாரோ!).

இன்னொரு வகையில் பார்த்தால், துணிந்து கடனை வாங்கிக்கொண்டு, திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை; சிவன் பார்த்துக் கொள்வான் என்கிற மோசடி எண்ணத்தைத்தானே இந்த ஆன்மிகம் கற்றுக் கொடுக்கிறது? மக்களை மோசடி செய்யத் தூண்டும் இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டாமா?

----------------- மயிலாடன் அவர்கள் 23-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

Sir,
if you go to this teple, the god will shower blessings so that, u can repay the loan.. that is also possible right.....

நம்பி said...

//Naan said...

Sir,
if you go to this teple, the god will shower blessings so that, u can repay the loan.. that is also possible right.....
December 24, 2009 9:09 PM //

அப்ப அனைனயும் பிதாவும் முன்ன்றி தெய்வம் என்பது எல்லாம் பொய்யா...? அதனால தான் எல்லோரும் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை சேர்த்து விட்டு கோயிலுக்கு போய் கடனை கழிச்சிடறாங்களோ...?

அப்புறம் எப்படி ''புள்ளார்'' மட்டும் அவங்க அம்மா, அப்பாவை சுற்றி வந்து ""Fruit"" வாங்கினார்...கற்பனை கடவுள் பின்பற்றியதையும் உருப்படியா பின்பற்றுவதே இல்லை...