Search This Blog

11.12.09

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா?


‘சிவசேனா’

‘இஸ்லாமியர்' ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமானால், முசுலிம் சமுதாயத்து மக்கள் பொது சிவில் சட்டம் இயற்ற ஆதரவு தரவேண்டும்; குடும்ப நலத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்; வந்தே மாதரம் பாடலை ஏற்கவேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக அயோத்தியில் ராமன் கோயில் கட்ட ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

அதைச் சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை. இந்தியாவின் சர்வாதிகாரியாக இவர் எந்தத் தேதியிலிருந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றும் தெரியவில்லை.

இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டப்படக்கூடாது என்பதை ஒப்புக்கொண்டு இந்து மதத்தில் உள்ள ஜாதியை ஒழிக்க ஒப்புக்கொள்ளவேண்டும்; உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூணூலை அகற்றவேண்டும் என்ற நிபந்தனைகளை சிவசேனா, சங் பரிவார் வகையறாக்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்தியாவின் குடிமக்களாக இருக்கவேண்டும் என்கிற நியாயமான, அறிவார்ந்த, மனித உணர்வை மதிக்கும் குரலை ஏற்றுக்கொள்வார்களா இவர்கள்?

இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்த இவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் இப்படித்தான் ஒருமுறை சொன்னார். முசுலிம்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ளவேண்டும். ராமன், கிருஷ்ணன் கடவுள்களை வழிபடவேண்டும் என்று கூறினார். ‘சிவசேனா’ தலைவரோ, இதே கருத்தை வேறு சொற்களில் சொல்கிறார் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு முக்கிய கேள்வி: இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்டார்கள்?

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா? ‘வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!’ என்பதுதான் நமது முதலாவது வேண்டுகோள்!

‘இந்து’ மதம் என்ற பெயர் அதற்கு உண்டா? என்பதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும்; மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.

--------------------- மயிலாடன் அவர்கள் 11-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

3 comments:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

திரு மயிலாடன் அவர்களுக்கு

மிகவும் அருமையான கட்டுரை. இதைப் போல் சில நடுநிலைவாதிகள் இருப்பதால் தான் இந்தியாவில் மதச்சார்பின்மை இருக்கிறது என்று நம்ப முடிகின்றது.

இவர் இப்படி சொன்னால் இந்துக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று பகல் கனவு கான்கின்றார்.

மக்கள் முன் போல் இல்லை. அவர்கள் சிந்திக்கும் ஆற்றலை பெற்று இருக்கிறார்கள். அதை RSS, சங் பரிவார அமைப்புகள் தேர்தலில் மண்ணை கவ்விய போதே தெரிந்து இருக்க வேண்டும். இன்னும் தெளியவில்லை என்றால் மக்கள் மீண்டும் அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

அன்புடன்

அபு நிஹான்

பெசொவி said...

//இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்டார்கள்//

என்னைப் பொறுத்தவரை நான் நிச்சயம் அவர்களை இந்து மதத்தின் பிரதிநிதிகளாகப் பார்க்கவில்லை. இந்து மதத்தை பிறர் மனத்தில் ஒரு அரக்கனாகக் காட்டும் பயங்கரவாதிகளாகவே அவர்களை நான் பார்க்கிறேன். இந்து மதம் அஹிம்சையைப் போதிக்கும் மதம் என்பது என் கருத்து.

நம்பி said...

Blogger பெயர் சொல்ல விருப்பமில்

//இந்து மதம் அஹிம்சையைப் போதிக்கும் மதம் என்பது என் கருத்து.

December 12, 2009 1:14 PM//

அப்படி எந்த ஒரு இடத்திலும் அது போதிக்கவில்லை....மாறாக வன்முறையைத்தான் போதித்துகொண்டிருக்கிறது...இன்னும் திருட்டுத்தனத்தை நியாயப்படுத்திகொண்டேயிருக்கிறது...
பெண்களை இழிவுப்படுத்திக்கொண்டேயிருக்கிறது...
மனிதர்களை பிரித்தாளுகிறது...மனிதர்களை சோம்பேறியாக்குகிறது. மனிதநேயமற்ற செயலை ஆதரிக்கிறது.

இவை எல்லாவற்றையும் நியாயப்படுத்துகிறது.